பக்கங்கள்

அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

சனி, 30 மார்ச், 2019

''அடப்பாவி!'' ஜோதிடரும் ''ஐயோ பாவம்!!'' பிரமுகரும்!!!

நாடறிந்த தன் ''சரவணபவன்' உணவுவிடுதியை உலகறியச் செய்யும் ஆசையாலோ என்னவோ, ஒரு ஜோதிடரை அணுகி, தன் ஜாதகம் தந்து பலாபலன்களைக் கணிக்கச் சொன்னார் சரவணபவன் உரிமையாளர் திரு.ராஜகோபால்.
சரவணபவன் ராஜகோபால் க்கான பட முடிவு
''நீங்கள் இளம்பெண் ஒருத்தியை மூன்றாவதாக மணம் புரிந்தால் உங்கள் 'ஆசை' நிறைவேறும்'' என்றார் ஜோதிடர்[எந்த ஜோதிட சாஸ்திரத்தில் இதெல்லாம் சொல்லப்பட்டிருக்கிறதென்று தெரியவில்லை] இதன் பிறகான நிகழ்வுகள் நீங்கள் அறிந்தவைதான். சுருக்கம் கீழே.....

ஜீவஜோதியை அடைவதற்காக, அவரின் கணவர் பிரின்ஸ் சாந்தகுமாரை அடியாட்கள் உதவியுடன் கொலை செய்தார் ராஜகோபால்.

இது தொடர்பாக, பூந்தமல்லி நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில், அது ராஜகோபாலுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை[உடந்தையாக இருந்தவர்களுக்கும்தான்]  விதித்தது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார் ராஜகோபால். அது குற்றத்தின் கடுமையைக் கருத்தில் கொண்டு 10 ஆண்டுத் தண்டனையை ஆயுள் தண்டனை ஆக்கியது.

உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார் பிரமுகர். அது, ஆயுள் தண்டனையை உறுதி செய்துவிட்டதாக இன்று செய்தி வெளியாகியுள்ளது[தினகரன்{30.03.2019] நாளிதழ்].

இச்செய்தியைப் பிறருடன் பகிரும் நோக்கத்துடன் இப்பதிவை நான் வெளியிடவில்லை. ராஜகோபால் அவர்கள் செய்த ஒரு மாபெரும் தவற்றைச் சுட்டிக்காட்டத்தான்.

ஜோதிடத்தில் அளவிறந்த நம்பிக்கை கொண்டவர் இவர். இந்த நம்பிக்கைதான் தொழில் தொடர்பாக ஒரு ஜோதிடரை அணுகி ஆலோசனை கேட்கத் தூண்டியது.

அப்போது 50 வயதுக்காரராக இருந்த ஓட்டல் முதலாளிக்கு யாரும் பெண் தர முன்வரவில்லை. தன்னிடம் பணியாற்றிய தொழிலாளியின் மகளான ஜீவஜோதி மீது ஆசைப்பட்டார். தடையாக இருந்த அவரின் கணவரையும் தீர்த்துக்கட்டினார். இங்கேதான் பெரும் தவறு நிகழ்ந்திருக்கிறது. அது.....

தொழில் முன்னேற்றத்திற்கான ஆலோசனை பெற்றிட எந்த ஜோதிடரை அணுகினாரோ, அதே ஜோதிடரை அணுகி.....

''சாந்தகுமாரைப் போட்டுத் தள்ளலாமா, வேண்டாமா?'' என்று கேட்டிருந்தால், மிகத் துல்லியமாக ஜாதகம் கணித்துப் பலன் சொல்லியிருப்பார் ஜோதிடர்!!! சரிதானே?

தரமான உணவகம் நடத்துவதில் மாபெரும் சாதனை நிகழ்த்தியவரும், பக்தியுள்ளம் கொண்டவருமான ஒரு பெரிய மனிதருக்கு ஏற்பட்ட   அவலம் குறித்துப் பெரிதும் வருந்துகிறேன்.
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------




வெள்ளி, 29 மார்ச், 2019

காது நோக ஒரு கதை கேட்டேன்!

பேருந்துக்காக நான் காத்திருந்தபோது அது நிகழ்ந்தது.

''சத்தமா சொல்லு'' -சற்றே அதட்டும் குரலில், என் முன்னே நைந்த கைலியும் நரையோடிய தலையுமாக நின்றுகொண்டிருந்த  ஒரு நடுத்தர வயதுக்காரர் சொன்னபோதுதான், அவருக்கு அருகே இருந்த பெண் அவரிடம் ஏதோ சொல்லியிருக்கிறாள் என்பது புரிந்தது. கவனத்தை அவர்கள் பக்கம் செலுத்தினேன்.

அவள் சொன்னாள்: ''ஒரு வாரமா புரோட்டா சாப்பிடணும்னு புள்ளைங்க சொல்லிட்டிருக்காங்க. எதுப்பால இருக்குற  ஓட்டலில் சாப்பிட்டுட்டு அடுத்த பஸ்ஸில் ஊருக்குப் போகலாங்க.''

''என்கிட்டயும் சொன்னாங்கதான். மறந்தே போய்ட்டேன்'' என்றவர் வலப்பக்கக் கைலியை இடுப்பளவுக்குத் தூக்கிப்பிடித்து அண்டர்வேர் பாக்கெட்டிலிருந்த கொஞ்சம் பண நோட்டுகளை எண்ணிப்பார்த்தார்.

''பஸ் டிக்கட்டுக்குப் போக மிச்சம் பணம் இருக்கு. பத்து புரோட்டா வங்கலாம். நீங்க மூனுபேரும் இங்கயே இருங்க. நான் புரோட்டா பார்சல் வாங்கிட்டு வர்றேன்'' என்று சொல்லி நகர முற்பட்டபோது, ''பார்சல் எதுக்கு? கடையிலியே சுடச்சுடச் சாப்பிட்டுட்டு அடுத்து வர்ற பஸ்ஸில் போயிடலாம்'' என்றாள் அவள்.

''அது வேண்டாம்.''

''ஏங்க?''

''இந்த ஓட்டல் கொஞ்சம் வசதியானவங்க சாப்பிடுற இடம். அவனவன் காடை கவுதாரி ரோஸ்ட், புறா எறா வறுவல், சிக்கன் பிரை, மட்டன் பிரியாணின்னு காசைக் கணக்குப் பார்க்காம இஷ்டப்பட்டதெல்லாம் சாப்பிடுவான். அதைப் பார்த்தா நம்ம புள்ளைங்க ரொம்பத்தான் ஏங்கிப்போயிடும். இப்போ பார்சல் போதும். அடுத்த வாரம் சம்பளம் வந்ததும் பிராய்லர் கறி சமைச்சுடலாம்'' என்று சொல்லி அவளின் பதிலை எதிபாராமல் அந்தச் 'சைவ அசைவ' உணவு விடுதியை நோக்கி நகர்ந்தார் கைலிக்காரர்.
அந்தப் பெண், நான் அவர்களின் உரையாடலைக் கேட்டுக்கொண்டிருந்ததை அனுமானித்திருக்க வேண்டும். சற்றே தலை குனிந்து எட்ட நின்றுகொண்டிருந்த தன் பிள்ளைகளின் பக்கம் பார்வையைச் செலுத்தினாள்.

நானும் என் பார்வையைத் திசை திருப்பினேன். பெருஞ்சுமையுடன் எனக்கான பேருந்து வருவது தெரிந்தது.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------


வியாழன், 28 மார்ச், 2019

தரம் தாழ்ந்த தமிழர்கள்!

தமிழ் பேசுபவரெல்லாம் தமிழர் அல்ல. இவர்களில் மிக மிகப் பெரும்பாலோர் 'நான் தமிழன்' என்று சொல்லிக்கொள்வதையே விரும்பாதவர்கள்; 'வெறுப்பவர்கள்' என்பதே பொருத்தமான சொல்.

''தமிழில் என்ன இருக்கிறது? தமிழை வைத்துப் பிழைக்க முடியுமா?'' என்றெல்லாம் கேள்விமேல் கேள்வி கேட்பவர்களும் இவர்கள்தான்.

இனவுணர்வு உள்ள சிறுபான்மைத் தமிழர்கள் கோழைகள்; இவர்களைக் கண்டித்துத் திருத்துவதற்காண துணிவு இல்லாதவர்கள். ஆனாலும்.....

தம் தாய்மொழி தமிழ் அல்லவெனினும், திருத்தமாய்த் தமிழ் பேசி, தமிழப் பற்றுடன் 100% தமிழனாய் வாழ்பவர்களை, ''இவரெல்லாம் தமிழரல்ல'' என்று வாய் கூசாமல் மேடையேறி முழங்குவார்கள்; நோகடிப்பார்கள்.

இவ்வகையில் மனம் நோகடிக்கப்பட்டவர்களில், பிரபல ஊடக இயலாளர் 'பாண்டே'யும் ஒருவர்; குமுதம் வார இதழில் வாசகருக்கான கேள்விகளுக்குப் பதிலளிக்கும் பணியைச் செய்துவருகிறார்.

இந்த வாரக் குமுதம்[03.04.2019] வார இதழில், வாசகர் எல்.சார்லஸ்[கடலூர்] என்னும் வாசகரின் கேள்விக்குப் பாண்டே அவர்கள் அளித்த பதில் கீழே.....

நன்றி: குமுதம்
==============================================================================


புதன், 27 மார்ச், 2019

எச்.ராஜா[பா.ஜ.க.] கைது செய்யப்படுவாரா???

கீழ்வரும் 'தமிழ் இந்து' நாளிதழ்ச் செய்தி வாசிப்போரைப் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கும் என்பதில் சந்தேகமில்லை.

பா.ஜ.க.வின் தேசியச் செயலாளர் என்ற வகையில் எச்.ராஜாவுக்கு எதிரிகள் இருப்பதற்கு வாய்ப்புள்ளது. எதிரிகளால் தனக்கு ஏதேனும் தீங்கு நேரும் என்று நினத்தால் காவல்துறையிடம் அவர் புகார் செய்யலாம்; கட்சித் தலைவர்களின் உதவியையும் நாடலாம். தவறில்லை. ஆனால் ராஜாவோ சிக்கல் சிங்காரவேலர் கோயிலில் யாகம் நடத்தியிருக்கிறார்.

நடக்கவிருக்கும் தேர்தலில் அவர் போட்டியிடுகிறார். போட்டியில் எதிரி வேட்பாளர்களைத் தோல்வியுறச் செய்வதற்காக/தான் வெற்றி பெறுவதற்காக அவர் யாகம் நடத்தினாரா என்றால், அல்ல...அல்லவே அல்ல. பின் எதற்காக? 

கீழ்வரும் 'தமிழ் இந்து'வின் செய்தி அவர் நடத்தியது 'சத்ரு சம்ஹார யாகம்' என்கிறது. செய்தியின் கடைசிப் பத்தியில், 'சத்ரு சம்ஹார யாகம் என்பது, எதிரிகளை அழிப்பதற்காக நடத்தப்படும் யாகம் என்பது குறிப்பிடத்தக்கது' என்று அதற்கான விளக்கத்தையும் தந்திருக்கிறது.

எதிரியால் தனக்கு நேரிடவிருக்கும் ஆபத்தைத் தடுக்கக் காவல்துறையின் உதவியை நாடலாம். பதிலாக, எதிரியை ஒழித்துக்கட்டுவதற்காக அடியாட்களின் உதவியை நாடினால் அது சட்டப்படி குற்றமாகும். ஆக.....

எதிரியானாலும் அவனைத் தன்னிச்சையாகவோ, அடியாட்களின் உதவியுடனோ அழிக்க முயல்வது [Attempted to murder] குற்றம் என்பது அறியத்தக்கது.

இச்செய்தியின்படி, எச். ராஜா தன் எதிரியை/எதிரிகளை அழிக்க அடியாட்களை நாடவில்லை. பதிலாக, கடவுளிடம் வேண்டுகோள் வைத்து, 'சத்துரு சம்ஹார யாகம்' செய்திருக்கிறார். இதுவும் ஒரு கொலை முயற்சிதான் என்பதில் எள்முனையளவும் சந்தேகமில்லை.

இக்குற்றத்தைச் செய்ததற்காக எச்.ராஜா கைது செய்யப்படுவாரா? 

கீழ்வருவது 'தமிழ் இந்து' நாளிதழின் செய்தி.

சிக்கல் சிங்காரவேலவர் கோயிலில் எச்.ராஜா நடத்திய சத்ரு சம்ஹார யாகம்


நாகை மாவட்டம் சிக்கல் சிங்காரவேலவர் கோயிலில் நேற்று அதிகாலை நடைபெற்ற சத்ரு சம்ஹார யாகத்தில் கலந்துகொண்ட பாஜக தேசிய செயலாளரும், சிவகங்கை மக்களவைத் தொகுதி வேட்பாளருமான எச்.ராஜா.
//சிக்கல் சிங்காரவேலவர் கோயிலில் பாஜக பிரமுகர்களுக்குகூட தெரியாமல் ரகசியமாக நடந்த யாகத்தில் எச்.ராஜா கலந்துகொண்டார்.
பாஜக தேசிய செயலாளரும், சிவகங்கை மக்களவைத் தொகுதி வேட்பாளருமான எச்.ராஜா, தன் குடும்பத்தினருடன் நாகை மாவட்டம் சிக்கலில் உள்ள சிங்காரவேலவர் கோயிலுக்கு நேற்று அதிகாலை வந்தார்.
அங்கு நடந்த சத்ரு சம்ஹார யாகத்தில் அவர் கலந்துகொண்டார். யாகம் முடிந்து குருக்கள் கொடுத்த பிரசாதத்தை பெற்றுக்கொண்டு அங்கிருந்து சிவகங்கைக்கு புறப்பட்டுச் சென்றார்.
ரகசியமாக நடந்த யாகம்
அவரது சிக்கல் வருகை பாஜக பிரமுகர்களுக்கு கூட தெரிவிக்கப்படவில்லை. கோயிலில் நடைபெற்ற யாகம் குறித்தும் கட்சிப் பிரமுகர்களுக்கு தகவல் எதுவும் தெரிந்துவிடாமல் வெகு ரகசியமாக நடத்தப்பட்டது. சிக்கலைச் சேர்ந்த வெகு சிலர் மட்டுமே கோயிலுக்கு வந்திருந்தனர். ஆனால்,அவர்களும் யாகத்தில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படவில்லை.
சத்ரு சம்ஹார யாகம் என்பது, எதிரிகளை அழிப்பதற்காக நடத்தப்படும் யாகம் என்பது குறிப்பிடத்தக்கது//

செவ்வாய், 26 மார்ச், 2019

ஒரு ஓட்டுக்கு ரூபாய் 2 லட்சம்!!!

ஒரு ஓட்டுக்கு வெறும், 500 ரூபாய், 5,000 ரூபாய் என்று விலை பேசப்படும் தமிழக வாக்காளர்களே! உங்கள் ஓட்டின் உண்மையான விலை என்ன தெரியுமா? வெறும் 500 ரூபாயோ, 5,000 ரூபாயோ அல்ல; 2 லட்சம் ரூபாய். என்ன ஆச்சரியமாக இருக்கிறதா? 

இப்படி ஒரு கணக்கை துாக்கிப் போடுகிறது, ஒரு, 'வாட்ஸ் ஆப்' புள்ளி விவரம்.....  

தமிழக மக்கள் தொகை குத்துமதிப்பாக 7.50 கோடி; இதில், 1.75 கோடி பேர் குழந்தைகள். மீதமுள்ள, 5.75 கோடி பேர் வாக்காளர்கள். இதில், ஆண்கள், 3.50 கோடி. இவர்களில், 30 சதவீதம் பேர், 'குடிமகன்'கள் என, வைத்துக் கொண்டால், 1 கோடி பேர் குடிக்கின்றனர்.

ஒரு குவார்ட்டர் பல விலைகளில் விற்றாலும், 50 ரூபாய் லாபம். ஒரு கோடி பாட்டிலுக்கு, 55 கோடி ரூபாய் லாபம். இது, ஆண்டுக்கு, 20,075 கோடி; ஐந்து ஆண்டுகளுக்கு, 1 லட்சம் கோடி ரூபாய் லாபம். இது, உன் பணத்தில் இருந்து, உன்னிடம் கொள்ளை அடித்தது. மணல் கொள்ளைஇதில், ஆண்டுக்கு, 25 ஆயிரம் கோடி ரூபாய்; ஐந்து ஆண்டுக்கு, 1.25 லட்சம் கோடி ரூபாய்; தாது மணல் கொள்ளை, கிரானைட் கொள்ளைகளிலும் தலா, ஆண்டுக்கு, 25 ஆயிரம் கோடி ரூபாய்; ஐந்தாண்டுகளுக்கு, 1.25 லட்சம் கோடி ரூபாய். ஆம் இது, உன் தாய் மண்ணில் அடித்த கொள்ளை. இன்னும்.....

நாள் ஒன்றுக்கு, 4,000 மெகாவாட் மின்சாரக் கொள்முதலில், யூனிட்டுக்கு, 22 காசுகள் கமிஷன் பெறுவதாகக் குற்றச்சாட்டு உள்ளது. மொத்தம், 30 ஆயிரம் மெகாவாட்டிற்கும் கணக்கிட்டால், 66 கோடி ரூபாய்; ஆண்டுக்கு, 24 ஆயிரம் கோடி ரூபாய்; ஐந்து ஆண்டுகளுக்கு, 1.20 லட்சம் கோடி ரூபாய் கமிஷன் போகிறது. இது, உன் பணத்தில் இருந்து, உன்னிடமே கொள்ளை அடித்தவை.

அரசுக் கட்டுமான ஒப்பந்தங்கள் மூலம், அரசுக்கு மறைமுக இழப்பு, 5 லட்சம் கோடி ரூபாய்; போக்கு வரத்து, பணி நியமனம், பொது வினியோகம் என்ற வகையில், தலா, ஒரு லட்சம் கோடி ரூபாய்; இலவசங்கள் என்ற பெயரில், மறைமுக இழப்பு 2 லட்சம் கோடி ரூபாய்; என, 10 லட்சம் கோடி ரூபாய் கொள்ளை நடந்துள்ளது.

மொத்தம், பத்து இனங்களிலும், 15 லட்சம் கோடி ரூபாய் வரை, மக்கள் வரிப்பணம் மறைமுகமாக கொள்ளை அடிக்கப்படுகிறது. 

இவற்றையெல்லாம் கணக்கிட்டால், தமிழகத்தில் உள்ள, 5.75 கோடி ஓட்டுகளுக்கும், சராசரியாக, தலா, 2 லட்சம் ரூபாய் தரலாம். குறுக்கு வழிகளில் கோடிகோடியாய்ச் சம்பாதித்த பணக்கார வேட்பாளர்கள் தேர்தல் நேரத்தில் மக்களுக்குத் தருகிறார்கள். அதை அவர்கள் பெற்றுக்கொள்வதில் தவறே இல்லை எனலாம்.
--------------------------------------------------------------------------------------------------------------------------------
நன்றி: தினமலர் 04.05.2016

திங்கள், 25 மார்ச், 2019

'கிலி' ஜோதிடம்!!

''ஜோதிட சிம்மம் சுந்தரேசன்தானே?[பெயர் மாற்றப்பட்டுள்ளது]''

''ஆமா. நீங்க யாரு?''

''நான் சேலத்திலிருந்து குப்புசாமி பேசுறேன்.''

''சொல்லுங்க.''

''உங்களண்ட ஜோசியம் பார்க்க வரணும். நேரம் ஒதுக்க முடியுமா?''

''மன்னிக்கணும். இன்னும் ஆறு மாசத்துக்கு என்னால அப்பாய்ன்மெண்ட் தரமுடியாது.''

''தயவு பண்ணுங்கய்யா. நாங்க பத்துப்பேர் சேர்ந்து பத்து வருசத்துக்கு முந்தி 'சமதர்ம ஜனநாயக் கட்சி'[ஏதேனும் கட்சி இருந்தால் மன்னித்திடுக] ஒரு அரசியல் கட்சியை ஆரம்பிச்சோம். இன்னிக்கும் பத்துப்பேர்தான் உறுப்பினரா இருக்கோம். ரொம்பக் கவலையா இருக்கு. அதனாலதான் இதோட எதிர்காலத்தை நீங்க கணிச்சிச் சொல்லணும்னு வேண்டிக்கிறேன்.''

''பத்துப்பேர் உள்ள ஒரு அரசியல் கட்சிக்குப் பலன் சொல்லணுமா? விளையாடாதீங்க. ஃபோனை வையுங்க.''

''கொஞ்சம் பொறுங்க ஜோதிடரே. பா.ஜ.க., காங்கிரஸ்னு பெத்த பெரிய அரசியல் கட்சிகளுக்கெல்லாம் ஜோசியம் சொல்லுற நீங்க எங்க சின்னக் கட்சிக்கெல்லாம் சொல்ல மாட்டீங்களா?''

''என்ன சொல்லுறீங்க?''

''ராகுலின் ஜாதகப்படி அவருக்குப் பிரதமர் ஆகும் வாய்ப்பு இல்லேன்னாலும், அவர் சார்ந்திருக்கிற காங்கிரஸ் கட்சிக்கு இப்போ நல்ல நேரம்கிறதால அவர் ஆட்சியைக் கைப்பற்றுவார்னு சொல்லியிருக்கீங்க. பா.ஜ.க.வுக்கு இப்போ நல்ல நேரம் இல்லேன்னும் சொல்லியிருக்கீங்க. இது முந்தா நாள் பத்திரிகைச் செய்தி.''

''அது வந்து... அந்தக் கட்சிகளோட ராசியை வைத்துக் கணிச்சிச் சொன்னேன்.''

''மனுசங்களுக்குப் பிறந்த நேரத்தைக்கொண்டு ராசி, நட்சத்திரம்னு கணக்குப் போட்டு, நல்ல நேரம் கெட்ட நேரம்னு அடிச்சி விடுறீங்க. கட்சிகளுக்கெல்லாமும் பிறந்த நேரம் இருக்கா? கட்சியை ஆரம்பிச்சவங்க அது ஆரம்பிக்கப்பட்ட நேரத்தைப் பதிவு பண்ணியிருக்காங்களா? அப்படியே பதிவு பண்ணியிருந்தாலும் அதுதான் கட்சி பிறந்த நேரம்னு சொல்லிப் படிச்சவன் படிக்காதவன்னு அத்தனை பேரையும் முட்டாள் ஆக்குறீங்களே, உங்களைக் கண்டிப்பாரில்லையா? தண்டிப்பாரில்லையா?''

பேசி முடித்து ஜோதிடரின் பதிலை எதிர்பார்த்துக் காத்திருந்தான் குப்புசாமி.

பேசிகளுக்கிடையேயான இணைப்பு துண்டிக்கப்பட்டிருந்தது!




நாட்டுக்குத் தேவை நடமாடும் சாமிகள்!

திருவண்ணாமலை மாவட்டம் கொரக்கோட்டையில் ஒரே கல்லில் செதுக்கப்பட்ட பிரம்மாண்டப் பெருமாள் சிலை, பெங்களூரு ஈஜிபுரா எனுமிடத்தில் பீடத்துடன் இணைத்து 108 அடி உயரத்தில் நிறுவத் திட்டமிடப்பட்டது. இதற்காக 64  அடி உயரம், 24 அடி அகலம் கொண்ட பெருமாள் சிலை ராட்சத லாரியில் பயணிக்கத் தொடங்கி நான்கு மாதங்கள் ஆகிவிட்டன.

வழியில் பல்வேறு தடைகள் காரணமாக அதன் பயணம் இடைவெளிவிட்டு விட்டுத் தொடர்ந்த நிலையில்.....

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே சாமல்பள்ளத்தில் இச்சிலை  சுமார் 2 மாதமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

தென்பெண்ணை ஆற்றில் தற்காலிகப் பாலம் அமைக்கும் பணி நடைபெறுகிறது. அது முடிந்தவுடன் சிலையின் பயணம் மீண்டும் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பெருமாள் சிலையின் இந்தப் பயணத்திற்காக நிறையப் பணமும் மனித உழைப்பும் செலவழிக்கப்பட்டுள்ளன எனினும், இதன் மூலம் பக்தியுள்ளம் கொண்ட பல்லாயிரக்கணக்கான கிராமப்புற ஏழை மக்கள் பெரும் பயன் அடைந்துள்ளார்கள் என்பது மறுக்க இயலாத உண்மை. அதாவது.....

நடமாடும் மருத்துவமனைகள், நடமாடும் வணிக வாகனங்கள், நடமாடும் உணவுக்கூடங்கள் போல நடமாடும் சாமிகளும் இந்நாட்டுக்குத் தேவை!

பெருமாளை வழிபட்டுப் பாவம் போக்கிப் புண்ணியம் சேர்ப்பதற்காக, திருப்பதி, திருவரங்கம் என்றெல்லாம் நிறையப் பணம் செலவழித்து நெடும்பயணம் மேற்கொள்வது தவிர்க்கப்பட்டது.

இதைக் கருத்தில்கொண்டு சிந்திக்கும்போது, கருணைக்கடலான பெருமாளை[கோதண்டராமர்] ஒரு நடமாடும் கடவுளாகவே ஆக்கி, நாட்டில் ஏழை மக்கள் வாழும் கிராமங்களில் நடமாடவிடுவது அவர்களுக்குச் செய்யும் ஆகச் சிறந்த தொண்டாக அமைந்திடும் என்பது அடியேனின் தாழ்மையான கருத்தாகும். 

இந்த எளியேனின் அடிமனதில் இவ்வெண்ணம் உருவாவதற்கு, நாட்டில் நடமாடும் மருத்துவமனைகள், நடமாடும் வணிக வாகனங்கள், நடமாடும் உணவுக்கூடங்கள் போன்றவை தூண்டுதலாக அமைந்தன எனலாம்.

இது சாத்தியமானால், காலப்போக்கில் பல்வேறு மதம் சார்ந்த சாமிகளும் ஊர்தோறும் பயணித்து ஏழை எளிய மக்களுக்கு அருள்பாலித்திட வாய்ப்பு அமையும் என்பது திண்ணம்.
கோதண்டராமர் சிலை க்கான பட முடிவுகோதண்டராமர் சிலை க்கான பட முடிவுகோதண்டராமர் சிலை க்கான பட முடிவுகோதண்டராமர் சிலை க்கான பட முடிவு





ஞாயிறு, 24 மார்ச், 2019

அ.தி.மு.க.வுக்கே என் ஓட்டு!!!

ஆவி அடிக்குமா? அடிக்கும்!... கடிக்குமா? கடிக்கும்!... இறுக்கிக் கட்டிப்பிடிச்சிட்டுக் கூரிய பற்களால் குரல்வளையைக் கீறிக் குருதி குடிக்குமா? குடிக்கும்!

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் நடைபெற்ற, மானாமதுரைத் தொகுதி நாடாளுமன்ற வேட்பாளர் ஹெச்.ராஜாவுக்கான அறிமுகக் கூட்டத்தில் கலந்துகொண்ட அமைச்சர் பாஸ்கர் அவர்கள் ஆற்றிய உரையில்.....

''சீட் கிடைக்காமல் வேறு கட்சிக்குச் சென்றவர்களை அம்மாவின் ஆவி சும்மா விடாது'' என்று எச்சரித்தது தமிழக வாக்காளர்கள் கவனத்தில் கொள்ளத்தக்கது.

'கடந்த காலங்களில் அம்மாவின் இரட்டை இலைக்கு ஓட்டுப் போட்டுவிட்டு, இப்போது வேறு கட்சிக்கு ஓட்டுப் போடுபவர்களையும் அம்மாவின் ஆவி சும்மா விடாது' என்பதை அவர்கள் உய்த்துணர்வார்களாக.

அம்மாவின் ஆவி மிக மிக மிகவும் சக்தி வாய்ந்தது. அதனினும் மேலான சக்தி வேறு எங்கும் இல்லை. கட்சி மாறி ஓட்டுப் போடுபவர்களை அது கண்டிப்பாகத் தண்டிக்கும். எனவே.....

இந்தத் தேர்தலிலும் என் ஓட்டு அ.தி.மு.க.வுக்கும் அதன் கூட்டணி வேட்பாளர்களுக்கே என்பதை உறுதிபட அறிவிக்கிறேன்...கூவுகிறேன்!
==================================================================================
நன்றி: தினகரன்[24.03.2019]

சனி, 23 மார்ச், 2019

கூவுங்க...கூவுங்க! ஓட்டுக்கு 'ரேட்' கேட்டுக் கூவுங்க!!

இது தேர்தல் நேரம்.

உங்களிடம் ஓட்டுக் கேட்க வரும் வேட்பாளர்கள் ஓட்டுக்குப் பணம் கொடுக்கவும் செய்வார்கள். தேர்தலில் வெற்றிபெறும் நோக்கம் இன்றி வேறு காரணங்களுக்காகப் போட்டியிடுபவர்கள் இதற்கு விதிவிலக்கு.

வேட்பாளரின் பொருளாதாரம், அவர் சார்ந்துள்ள கட்சியின் பணபலம் போன்றவற்றிற்கேற்ப வாக்குக்கான தொகை மாறுபடக்கூடும்.

ஓட்டுக்குப் பணம் தருவது குற்றமாகும் என்று ஓவ்வொரு தேர்தலிலும் தேர்தல் ஆணையம் வெளிடும் எச்சரிக்கையும் மீறி,  ஓட்டுக்குப் பணம் தருவதும் பெறுவதும் நடைமுறையில் உள்ளது.
ஓட்டுக்குப் பணம் க்கான பட முடிவு
இது தேர்தல் ஆணையத்துக்குத் தெரியும். ஆட்சியாளர்களும் அறிவார்கள். ஆனால், தடுப்பதற்கான தீவிர நடவிடிக்கை இல்லை. அவர்கள் கண்டும் காணாமல் இருப்பதற்கான காரணமும் புரியவில்லை.

இந்நிலையில்.....

ஓட்டுக்கான தொகையை ஆணையமே நிர்ணயம் செய்து, தேர்தல் நடைமுறை விதிகளில் இதையும் ஒன்றாக மாற்றியமைப்பதன் மூலம் தொடரும் இந்தக் குற்றச் செயலைத் தடுத்து நிறுத்தலாம். குற்றத்தைக் குற்றமற்றதாக்கிவிடலாம்.

போட்டியிடும் வேட்பாளரின் பொருளாதாரப் பின்புலத்தையும், அவர் சார்ந்துள்ள கட்சியின் நிதி இருப்பையும் கருத்தில்கொண்டு ஒட்டுக்கான தொகையை நிர்ணயம் செய்யலாம்.

மே 2020இல் நடைபெறவுள்ள தேர்தலிலேயே இதற்கான ஆணையை வெளியிட்டு நடமுறைப்படுத்துமாறு வாக்காளப் பெருமக்கள் ஆணையத்திடம் கோரிக்கை வைக்கலாம். கோரிக்கையை நிறைவேற்றுமாறு ஒருங்கிணைந்த ஓங்கிய குரலில் முழங்கலாம்.

முழங்குவார்களா?!

வெள்ளி, 22 மார்ச், 2019

தமிழில் அதிகம் விற்பனையாகும் இதழ்களும் ஒரே ஒரு கேள்வியும்!!

கீழ்க்காண்பது, 'இனிது' இணைய இதழில் வெளியான தமிழ்ப் பருவ இதழ்களின் விற்பனை[2017 கணக்கெடுப்பின்படி] குறித்த ஒரு புள்ளிவிவரம்.

இனிது

இணைய இதழ்

தமிழ் நாளிதழ்க‌ள்

இந்திய அளவில் அதிக வாசகர்களைக் கொண்ட முதல் பிராந்திய நாளிதழ் தினத்தந்தி ஆகும்.
வ. எண்தமிழ் நாளிதழ்வாசகர் எண்ணிக்கை 
1தினத்தந்தி2,31,49,000
2தினகரன்1,20,83,000
3தினமலர்1,16,59,000
4மாலை மலர்30,74,000
5தி இந்து (தமிழ்)28,90,000
 தமிழ் வார இதழ்கள்
இந்திய அளவில் அதிக வாசகர்களைக் கொண்ட இரண்டாவது பிராந்திய வார இதழ் ஆனந்த விகடன் ஆகும்.
வ. எண்தமிழ் வார இதழ்வாசகர் எண்ணிக்கை 
1ஆனந்த விகடன்27,08,000
2குமுதம்22,69,000
3குங்குமம்21,72,000
4புதிய தலைமுறை16,23,000
5அவள் விகடன்11,04,000
'இனிது' இணைய இதழுக்கு நன்றி சொல்லி, தமிழ் இதழ்களுக்கான ஒரு கேள்வியை முன்வைக்கிறோம்.
லட்சம் லட்சமாய் விற்பனையாகும் மேற்கண்ட இதழ்கள் 'ஆன்மிகம்' என்னும் தலைப்பில் [இணைப்புகள் வெளியிட்டு], அளவில்லாமல் மூடநம்பிக்கைகளைப் பரப்பும் பழம் பொய்க்கதைகளைத் தொடர்ந்து வெளியிடுவது அநியாயம் அல்லவா?!?! 

பத்திரிகை [அ]தர்மம்!!!

//வெற்றியைத் தீர்மானிக்கும் சமூகங்கள்: இத்தத் தொகுதியில்[திருநெல்வேலி] நாடார் சமூகத்தினர் பங்கு 25% என்பதால், அந்தச் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களையே பல்வேறு கட்சிகளும் வேட்பாளர்களாகக் களமிறக்கப்பட்டுள்ளனர்.

பட்டியலினச் சமூகத்தினர் 18% இருக்கும் நிலையில் அவர்களின் வாக்குகளும் மிகுந்த முக்கியத்துவம் கொண்டவை. முக்குலத்தோர், வெள்ளாளர்கள், யாதவர்கள் போன்றோரும் கணிசமான எண்ணிக்கையில் இங்கு உள்ளனர்.//

-மேற்கண்டது இன்றைய[22.03.2018] 'தமிழ் இந்து' நாளிதழ்ச் செய்தியாகும்.

இந்த இதழ் என்றில்லை, வேறு பிற நாளிதழ்களும்கூட, கட்சிகளின் வெற்றி - தோல்வியைக் கணிக்கும்போது, தொகுதியில் இடம்பெற்றுள்ள சாதிகளைப் பட்டியலிடுகின்றன.

எந்தவொரு சாதியையும் 'சாதி' என்று குறிப்பிடாமல், 'சமூகம்' என்றே பதிவு செய்கின்றன.

நமக்குள்ள சந்தேகம் என்னவென்றால்.....

சமூகம் என்று குறிப்பிடுவதால், பிறப்பில் வேறுபாடு இல்லை என்பதை மறந்து, நான் இந்தச் சாதியைச் சார்ந்தவன் என்று கருதும், அல்லது சொல்லிக்கொள்ளும் இழிதகைமை  அகன்றுவிடுமா?

எதன்பொருட்டு இந்தப் பத்திரிகைகள் சாதியைச் சமூகம் ஆக்குகின்றன?

துணிந்து, சாதிகளைச் சாதிப் பெயருடனேயே பட்டியலிடுவதுதான் பத்திரிகைகளின் கடமையாகும். இன்னும் ஒரு படி மேலே சென்று.....

இத்தொகுதியில் இன்ன இன்ன சாதியைச் சார்ந்த மூடர்கள்[சாதிப்பற்று உள்ளவர்களை வேறு என்ன பெயரில் சுட்டுவது?] இடம்பெற்றுள்ளார்கள் என்று எழுதினால் அவ்வாறு எழுதும் பத்திரிகைகளை 'முற்போக்கு இதழ்கள்'' என்று பாராட்டலாம்.
===================================================================================

வியாழன், 21 மார்ச், 2019

பேய்களை நம்பாத ஊர் மக்களுக்கு ஓர் உபதேசம்!

ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே ஒரு கிராமம்..

இங்கு, சிமெண்டு ஓடு போர்த்த ஏழு விவசாயிகளுக்குச் சொந்தமான வீடுகளின் மீது இரவு நேரத்த்இல் கற்கள் விழும் ஓசை கேட்டது.

வீட்டுக்காரர்களுடன் ஊர் மக்களும் திரண்டு சுற்றுவட்டாரம் முழுக்கத் தேடியதில், கற்கள் வீசியதாகச் சந்தேகப்படும் மனிதர்கள் எவரையும் கண்டுபிடிக்க இயலவில்லை.

பின்னர், பகல் நேரத்திலும் இதே மாதிரிச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. சம்பந்தப்பட்டவர்களைக் கண்டுபிடிக்கும் முயற்சி தோல்வியில் முடிந்தது.

சிவகிரி காவல்துறை ஆய்வாளரை அணுகி, மர்ம நிகழ்வு குறித்து புகார் செய்ததோடு, தங்களுக்குப் பாதுகாப்புத் தர வேண்டும் என்று விண்ணப்பம் செய்திருக்கிறார்களாம்.

கும்பல் சேர்ந்து சாதிக்க முடியாத காரியத்தை நாலு போலீஸ்காரங்க வந்து சாதிக்க முடியுமா?

கல்லெறிவது மனுசங்க வேலை அல்ல; பேய் பிசாசுகளின் கைங்கரியம்தான் என்பதை இந்த மக்கள் புரிஞ்சுக்கத் தவறிட்டாங்க. அதுகளின் கொட்டத்தை அடக்கச் சில வழிமுறைகள்.....

கோயில் கோயிலாகப் போய் உண்டியல்களில் கட்டுக்கட்டா பணத்தையும் தங்க நகைகளையும் போடலாம்.

சாமிகளுக்குச் சிறப்பு அர்ச்சனைகள் அபிஷேகங்கள் செய்யலாம்.

ஒட்டுமொத்த ஊர் மக்களையும் பீடித்திருக்கும் பொல்லாத தோஷத்தைப் போக்க வேத விற்பன்னர்களக் கொண்டு மகா மகா பெரிய யாகங்கள் நடத்தலாம்.

கில்லாடி மாந்திரவாதிகளை வரவழைத்து மாந்திரீகம் பண்ண வைக்கலாம்.

வி.ஐ.பி. ஜோதிடர்களை அணுகி செலவைப் பொருட்படுத்தாமல் பரிகார பூஜைகளும் யாகங்களும் நடத்தலாம்.

இவற்றில் ஏதாவது ஒன்றையோ அனைத்தையுமோ நிறைவேற்றினால் ஊரில் முகாமிட்டிருக்கும் அத்தனை பேய்களும் பிசாசுகளும் காணாமல் போகும்; கல்லெறிதலும் நடவாது.



செவ்வாய், 19 மார்ச், 2019

மாவலி மரத்தில் அம்மன் முகம்!!!

கீழே உள்ள நகல் படிவத்தில் இடம்பெற்றிருப்பது அண்மைச் செய்தி[தினத்தந்தி, 17.03.2018].

நாமக்கல்லிலிருந்து துறையூர் போற வழியில்  ஒரு கிராமம்[பேரு வேண்டாம்.படை திரட்டிட்டு உதைக்க வருவாங்க]. அங்கே ஓர் அதிசயம் நிகழ்ந்திருக்கு. அது பேரதிசயமாக்கும். 

ஊர்ப் பள்ளிக்கூடத்துக்குப் பக்கத்தில் இருக்கிற 'மாவலி' மரத்தில்  அம்மன் முகம் போல ஒரு வடிவம் இருந்ததை ஊர் மக்கள் பார்த்திருக்காங்க. போல என்ன போல, அது அம்மனின் முகமேதான்னு[முகத்தைக் காணலையேன்னு தேட வேண்டாம். அது மரத்துக்குள்ளே மறைஞ்சிருக்கு] அவங்க முடிவு பண்ணினாங்க. ''இது கருப்பண்ணசாமி கண்ணு''...''ஐயனாரப்பன் கண்ணு'' சொல்லி யாரும் பிரச்சினை பண்ணல.

நெத்தியில் சந்தனப்பட்டை போட்டு, குங்குமம் வெச்சி அம்மன் முகத்தை அழகுபடுத்தினாங்க; ஆட்டம் பாட்டம்னு ஊரே சந்தோசத்தில் மூழ்கிடிச்சி.

இப்படி, ஒரு மரத்துக்குள்ள ஒளிஞ்சிருந்து அம்மன் சாமி முகம் காட்டினது எனக்கு உலக அதிசயமா பட்டுத்துடூடனே புறப்பட்டு அந்தக் கிராமத்துக்குப் போனேன். நான் போனபோது மரத்தைச் சுத்தி ஜே ஜேன்னு மக்கள் கூட்டம்.

உத்து உத்துப் பார்த்தேன். கண் மாதிரியான வடிவம் மட்டும் தெரிஞ்சிது[மரங்களின் கிளை பெயர்ந்த கணுக்களில் இப்படியான உருவங்கள் தெரியறது உண்டு] 

கூடியிருந்த மக்களை ஒரு தடவை நோட்டம் விட்டுட்டு, சாதுவாகத் தெரிந்த ஒரு பெரியவரிடம், ''அம்மன் முகம் உங்க கண்ணுக்குத் தெரியுதா''ன்னேன்.

''ஆகா, நல்லாத் தெருதே''ன்னாரு அவரு.

''எனக்குத் தெரியலையே''ன்னேன் கிசுகிசுப்பான குரலில்.

பெரியவர் என் முகத்தைச் சில வினாடிகள் கூர்ந்து பார்த்துவிட்டுச் சொன்னார்: ''அது வந்து தம்பி, மரத்தில் தெரியறது அம்மன் கண்தானான்னு கேள்வியெல்லாம் கேட்டா அம்மன் கோபப்படுவா. பக்தி நிறைஞ்ச மனசோட பார்த்தா அம்மன் முகம் உன் கண்ணுக்குத் தெரியும்''னாரு.

பக்திமானாகவும் இல்லாம பகுத்தறிவாளனாகவும் இல்லாம, ரெண்டுங்கெட்டானா இருந்த நான் இப்போ கோயில் கோயிலா அலைய ஆரம்பிச்சுட்டேன். 

ஆறு மாசம் கழிச்சி மாவலி மரத்தில் அம்மன் முகம் தெரியுதான்ன்னு போய்ப் பார்க்கணும்!