புதன், 4 நவம்பர், 2020

'திருநங்கை'... பிறப்பும் அந்தரங்க உறுப்பு அறுவையும்!

XX குரோமோசோம்கள் இணைந்து பெண்ணாகவும், XY குரோமோசோம்கள் இணைந்து ஆணாகவும் கருவில் உருப்பெறுகிறது. இது ஆணோ பெண்ணோ உருவாவதற்கான விதிமுறை ஆகும். 

பெண்ணுடலில் உள்ள கருமுட்டையோடு மோதி அதனுடன் இணையும் ஆண் விந்தணுவின் குரோமோசோம்[X அல்லது Y] கருவில் வளரப் போவது ஆணா, பெண்ணா என தீர்மானிக்கிறது. சில சமயங்களில் அந்தக் கரு இடைப்பட்ட பாலினமாக உருவாகுவதற்கும் வாய்ப்பு உள்ளது.

பாலினம் எதுவாயினும் அதைத் தீர்மானிப்பது ஆணின் குரோமோசோம்தான். பெண்ணுடல் எப்போதும் X குரோமோசோமை மட்டுமே கொண்டிருக்கிறது. கருவறையில் ஒரு முட்டை போல அந்தக் கரு படிப்படியாக உருப்பெறுகிறது. உள்ளுறுப்புகள் உருவாகி பின் வளர்ச்சி அடைகிறது. 7 முதல் 16 வாரங்களுக்குள்தான் அந்தக் கரு ஆணா, பெண்ணா என்பதை நாம் தெரிந்துகொள்ள முடியும்.

முட்டையின் வயிற்றுப் பகுதிக்கும் கீழ் ஒரு விதையின் முளைப்பைப் போல பிறப்புறுப்பு வெளிப்படுகிறது. ஆணாக இருப்பின் அந்தப் பகுதியில் ஆணுறுப்பு வெளியில் தண்டு போல சிறிதாக வளரத் துவங்கும். அதே பெண்ணாக இருப்பின் அந்த மொட்டு உள்வாங்கி, பெண்ணுறுப்பாக வளர்ச்சி அடையும். எக்ஸ், ஒய் குரோமோசோம்கள் இணைந்திருந்தாலும்[Xம்Yம் இணைந்தால் ஆண் குழந்தை]கூட சில சமயங்களில் முழுமையாக ஆணுறுப்பு வெளிப்படாமல் சிறிய மொட்டாக இருக்கும். பார்ப்பதற்கு ஆணாக வளர்ந்தாலும் அவர்கள் பெண்ணாக இருப்பார்கள்.

அவர்களின் ஆணுறுப்பு பெரிதாக வளர்ந்திருக்காது. பருவம் அடையும் வயதில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் பெண்ணுக்கான உணர்வுகளை மேம்படச் செய்கிறது. வளர்ந்த பின் அவர்கள் பெண்ணாக மாற விரும்பும் போது ஆணுறுப்பை இரண்டாகப் பிளந்து அதை இருபுறமும் சுருட்டி, பெண்ணுறுப்பு போல் தைத்துவிடுகின்றனர்.

இவையே பெண்ணுறுப்பில் உள்ள உதடுகள் போல மாறிடும். ஆணுறுப்பில் ஆர்கசம் என்னும் உணர்வை வெளிப்படுத்தும் கிளிட்டோரியஸ் எனும் அந்த மொட்டு பெண்ணுறுப்பில் இருப்பது போல தைத்து விடுவார்கள். 

ஆணுக்கு இப்படி அறுவைச் சிகிச்சை மூலம் மாற்றப்படும் பிறப்புறுப்பில் சிறுநீர் கழிப்பதற்கான வழி மட்டுமே இருக்கும்.

பெண்ணுறுப்பில் சிறுநீர் கழிக்கவும், கருவறையில் இருந்து மாதவிடாய் வெளியேற வேறொரு வழியும் இருக்கும். மூன்றாம் பாலினத்தவர்களான திருநங்கைகளுக்கு பெண்ணுறுப்பாக மாற்றப்பட்டாலும் சிறுநீர் வெளியேறுவதற்கான ஒரு வழி மட்டுமே இருக்கும்.

தங்களின் வருகைக்கு நன்றி.

நான் சொல்வதில் நம்பிக்கை இல்லேன்னா, குங்குமம் 'டாக்டர்' படிச்சுடுங்க! http://kungumam.co.in/DocArticalinnerdetail.aspx?id=2099&id1=117&issue=20171016