ஞாயிறு, 14 மே, 2023

ஆபாசப் படங்களும் அசிங்க மனிதர்களும்!!!

ந்தவொரு அசம்பாவிதம் நடந்தது ‘அசாம்’ மாநிலத்தில்.

ஆபாசப் படம் பார்ப்பதில் ‘அல்ப சுகம்’ காணும் அநாகரிக மனிதர் சிலர் அன்றும் ஆபாசக் காணொலிகளைத் திரையில் ஓடவிட்டுப் பார்த்து ரசித்துக்கொண்டிருந்தார்கள்.

65 வயதுப் பெரியவர்[அசாமின் ஜோர்ஹத் பகுதியைச் சேர்ந்த தீபன் கலிதா]ஒருவர், ஒரு கல்லூரிக் குமரியுடன் கலவி செய்து குதூகலிக்கும் காணொலியும் அவற்றில் இடம்பெற்றிருந்தது.

படம் பார்த்துக்கொண்டிருந்த கழிசடைப் பிறவிகள், அந்த 65 வயது வாலிப வயோதிகர் தங்களின் வசிப்பிடங்களுக்கு அருகிலுள்ள ஒரு வீட்டின் உரிமையாளர் என்பதை அறிந்து குதூகலித்திருக்கிறார்கள்; அவரின் குடும்பத்தாரிடம் அவர் சம்பந்தப்பட்ட காணொலியைக் காட்டி அவர்களைக் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறார்கள்.

இதை அறிந்த அந்தப் பெரியவர், எதிர்கொள்ள நேரிடும் அவமானங்களுக்கு அஞ்சித் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்.

மனைவியுடனான தாம்பத்தியத்தில் மனநிறைவு கிட்டாததாலோ, வேறு பயனுள்ள வழிகளில் மனதை ஈடுபடுத்தும் வழிவகைகளை அறியாததாலோ தொழில்காரியுடன் கூடித் தன் தாபம் தணித்திருக்கிறார் அந்த நம் அனுதாபத்திற்குரிய பெரியவர்.

இது வேறு எவரையும் பாதிக்கக்கூடியதும், மன்னிக்கக்கூடாததுமான குற்றச் செயல் அல்ல.

குற்றம் புரிந்தவள் அந்தப் பெண்தான். தன் நண்பனுடன் சேர்ந்து, தான் சோரம் போவதைத் அவன் உதவியுடன் காணொலியாக்கி ஆபாசத் தளங்களில் பதிவேற்றுவதை வழக்கமாக்கியிருக்கிறாள்[இதன் மூலமும் வருமானம் ஈட்டியிருக்கக்கூடும்].

இங்கே கவனத்தில் கொள்ளத்தக்கவர்கள், பெரியவரைக் காட்டிக்கொடுத்த அந்தக் கயவர்கள்தான்.

இம்மாதிரிப் படம் பார்ப்பவன்கள் எல்லாருமே ஏறத்தாழ அயோக்கியர்களே. வாய்ப்புக் கிடைத்தால் குமரியென்ன, சிறுமியென்ன, குடு குடு கிழவியைக்கூட வன்புணர்வு செய்யத் தயங்காதவர்கள்தான்.

இவர்கள் தண்டனைக்குரியவர்கள்.

இந்தத் தரங்கெட்ட மனித மிருகங்களின் அடாத செயல் ஓர் அப்பாவிப் பெரியவரின் உயிரைப் பறித்திருப்பது மிகப் பெரிய சோகம்.

* * * * *
***விரிவான செய்திக்குக் கீழ்க்காணும் முகவரியைச் சொடுக்குக.

https://www.dailythanthi.com/News/India/dig-dig-start-fun-porn-site-video-elderly-man-commits-suicide-due-to-college-students-act-959944