உலக அளவில், ஆபாசத் தளங்களின் எண்ணிக்கையும், அவற்றில் உலா வருவோரின் எண்ணிக்கையும் அசுர வேகத்தில் அதிகரிக்கிறது.
இந்நிலை தொடருமேயானால்.....
உலக அளவில், ஆபாசத் தளங்களின் எண்ணிக்கையும், அவற்றில் உலா வருவோரின் எண்ணிக்கையும் அசுர வேகத்தில் அதிகரிக்கிறது.
இந்நிலை தொடருமேயானால்.....
“வாழ்க்கை வாழ்வதற்கே” என்றார்கள்.
வாய்க்கு ருசியாய் உணவுண்டு மகிழ்வதும், ஆசைப்பட்டபடியெல்லாம் சுகபோகங்களை அனுபவிப்பதும் வாய்க்கும் என்றால் வாழ்க்கை வாழ்வதற்குத்தான்.
வறுமையில் சிக்கி வாடி வதங்குவதும், கட்டுப்படுத்த இயலாத கெட்ட உணர்ச்சிகளாலும், தீராத நோய்களாலும் பிறவற்றாலும் வதைபடுவதும் தொடருமேயானால், பிறந்தது வாழ்வதற்கல்ல, சாவதற்கே என்று எண்ணத் தோன்றும்.
அது தவறு.
தற்கொலை கோழைத்தனம் என்பதல்ல காரணம்.
மீண்டும் பிறப்பது நிச்சயமில்லை[மிக மிக மிக அரிய நிகழ்வு இது] என்பதால், இயன்றவரை மனதைத் திடப்படுத்திக்கொண்டு, நாட்டு நடப்பை வேடிக்கை பார்த்துக்கொண்டேனும் வாழ்ந்துமுடிப்பதே ஏற்கத்தக்கதாகும்.
* * * * *
//பிரதமர் மோடி திருவனந்தபுரத்திலிருந்து விமானம் மூலம் இன்று மதியம் 2.05 மணிக்கு, கோவை மாவட்டம் சூலூர் விமானப் படைத் தளத்திற்கு வருகிறார். பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் மாதப்பூருக்கு[பல்லடம்]ச் செல்லும் மோடி பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்கிறார்.
மாலை 5 மணிக்குப் புறப்பட்டு மதுரை செல்கிறார்.
7 மணிக்குத் தனியார் விடுதி ஒன்றில் தங்கும் அவர், இரவு 9.10 மணி அளவில் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நடைபெறும் பள்ளியறைப் பூஜை நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்கிறார்//
இது இன்று ஊடகங்கள் பலவற்றிலும் வெளியாகியுள்ள செய்தி.
ஒரு பிரதமராக, நாடெங்கும் நாட்கணக்கில் பயணம் செய்வதும், நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதும் வழக்கமானதே என்பதால், காவலர் பாதுகாப்புக் குறித்துக் கருத்துச் சொல்வது தேவையற்றது.
ஆனால், ‘மதுரை மீனாட்சி அம்மன் கோயிலிலுக்குப் பிரதமர் நரேந்திர மோடி வருவதால், இன்று மாலை 4.30 மணியிலிருந்து நாளைவரை பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்கும், மதுரை மீனாட்சி அம்மன் கோயில் வீதிகளில் கடைகளைத் திறப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது[இவர் அம்மனின் செல்லப்பிள்ளை?!].
கோயில் கோபுரங்களில் ஏறி நின்று, தூக்கிப் பிடித்த துப்பாக்கிகளுடன் படை வீரர்கள் காவல் காக்கிறார்கள் என்பதோடு, மோப்ப நாய்களுடன் பலத்த பாதுகாப்பும் செய்யப்பட்டுள்ளது’ என்னும் இந்தக் கூடுதல் செய்திதான் நம் அடிமனதை உறுத்துகிறது.
தலைமைப் பொறுப்பிலுள்ள இவருக்கும் இவரைப் போன்றவர்களுக்கும் நாள் முழுக்க இம்மாதிரி ஆயுதப் படையின் பாதுகாப்பு தேவைதான், இவர்கள் முழுக்க முழுக்க கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களாக இருந்தால்.
மோடி மிக மிக மிக மேலான அதிதீவிரக் கடவுள் பக்தர்.
கோயில் கோயிலாகச் சென்று குனிந்து குனிந்து கும்பிடுவதையும், நெடுஞ்சாண்கிடையாகத் தரையில் கவிழ்ந்து சாமி தரிசனம் செய்பவதையும் வழக்கமாக்கியவர்.
இவர் வழிபடும் கடவுள்கள் இவரையும் இவரைப் போன்ற உயர் மட்டத் தலைவர்களையும், காலமெல்லாம் கண்ணுங்கருத்துமாய்ப் பாதுகாப்பது அவசியம்.
அந்தக் கடவுள்கள் இதைச் செய்வதில்லை என்பதால்தான் இவர்களுக்குக் காவல் படைகளின் கட்டுக்காவல் தேவைப்படுகிறதா?
“ஆம்” என்றால்.....
நம் கேள்வி:
இவர்கள் கடவுள்களைத் தொழுவது மரணத்திற்குப் பிறகு சொர்க்கத்தில் இடம் பெறுவதற்கு மட்டும்தானா?
மோடியையும் இன்ன பிற பக்தியுள்ளம் கொண்ட பிரபலங்களையும் நக்கலடிப்பது நம் நோக்கமல்ல. நம் உள்மனதிலிருந்து எழுந்த 100% உண்மையான கேள்வி இது.
குஜராத்தில் முதல்வராக நரேந்திர மோடி தொடர, அவருக்கு வியூகம் அமைத்தவர் இவர்.
2014 மக்களவைத் தேர்தலில், வெற்றி பெறுவதற்கான வழிவகைகளைப் பாஜகவுக்கு வகுத்துத் தந்தவரும் இவரே.
பிஹாரில் ஐக்கிய ஜனதா தளம், மேற்குவங்க மாநிலத்தில் திரிணமூல் காங்கிரஸ் ஆகியவை வெற்றிகளை ஈட்டுவதற்குக் காரணமாக இருந்தவரும் இவரே என்பதால், இவரின் ஆலோசனையைப் பெற்றால் வெற்றி நிச்சயம் என்னும் நம்பிக்கை அரசியல் தலைவர்களின் மனங்களில் ஆழமாக வேரூன்றியுள்ளது.
இவர் மீதான நம்பிக்கையால்தான் மு.க. ஸ்டாலின் கடந்த சட்டமன்றத் தேர்தலில், இவர் வகுத்தத் தந்த வியூகத்தை நடைமுறைப்படுத்தி, வெற்றி பெற்றுத் தமிழ்நாட்டின் முதல்வராகவும் ஆனார்.
ஆக, ‘தேர்தல் முடிவுகள் பற்றிய பிரசாந்த் கிஷோரின் கணிப்புகள் பெரும்பாலும் பலிக்கும் என்பது உறுதி’ என்னும் நிலையில்.....
நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில், தமிழ்நாட்டில் எட்டு முதல் 12 சதவித அளவில் வாக்குகளைப் ‘பாஜக’ பெறும்[இதுவரை பாஜகவுக்கு இங்கு ஐந்து சதவிகிதம்வரை மட்டுமே வாக்குகள் கிடைத்துள்ளன]’ என்று இவர் கணித்துச் சொல்லியிருப்பது[https://www.hindutamil.in/news/india/1206165-double-digit-vote-percentage-for-bjp-in-tamil-nadu-prashant-kishor-prediction-2.html] நம்மைப் பெரும் கவலையில் ஆழ்த்துகிறது.
தமிழ்நாட்டில் செல்லாக் காசாக இருந்த... இருக்கும் பாஜக பெறவுள்ள வாக்குகள் அதிகமானால், மூடநம்பிக்கையாளர்கள் மிகப் பெருவாரியாக உள்ள வட மாநிலங்களில் அது பெறும் வாக்குகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் என்பது உறுதி.
தொடர்ந்து இந்தியாவைப் ‘பாஜக’வே ஆளும் என்றும் உறுதிபடச் சொல்லலாம்.
அதன் விளைவு.....
நம் மாநில அரசுக்குரிய பல உரிமைகளைப் பறித்தததால் நாம் வடவர்களின் 90% அடிமையாக உள்ளோம்[பிற தென்னிந்திய மாநிலத்தவர் பற்றி நமக்குக் கவலையில்லை]. இனி, 100% அடிமைகளாக மாற்றப்படுவோம் என்பதில் சந்தேகத்துக்கு இடமே இல்லை.
ஆகவே, தமிழ்நாட்டிலுள்ள அரசியல்வாதிகளுக்கு நாம் மிக மிகப் பணிவுடன் முன்வைக்கும் வேண்டுகோள்:
“உங்களுக்கிடையேயான கருத்து வேறுபாடுகளையும், காழ்ப்புணர்ச்சிகளையும் தற்காலிகமாகவேனும் ஒதுக்கிவைத்து, ‘பாஜக’வின் வாக்குச் சதவீதம் எவ்வகையிலும் அதிகரித்துவிடாமல் தடுப்பதில் முழு மனதுடன் ஈடுபடுங்கள்.”
தவறினால்.....
உண்மைத் தமிழர்கள் ஒருபோதும் உங்களை மன்னிக்கமாட்டார்கள் என்பதை மறந்துவிடாதீர்கள்!
இப்போதுள்ள நடிகைகளைப் பற்றி நான் எப்போதுமே பாராட்டியோ பழித்தோ எழுதியதில்லை; அதில் சற்றேனும் விருப்பமும் இல்லை[நான் அந்தக் காலத்து அஞ்சலிதேவி, பத்மினி, பானுமதி... களின் ரசிகன்[ஹி... ஹி... ஹி!!!].
பொறுமையுடன் கீழ்க்காணும் https://tamil.filmibeat.com[23.02.2024] செய்தியை வாசியுங்கள்.
//நடிகை நயன்தாராவுக்கு, சமீபத்தில் தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது. விருதை ஷாருக்கானிடமிருந்து பெற்றுக்கொண்ட அவர் முதலில் ஆங்கித்திலும் ஹிந்தியிலும்[?] பேசினார். பிறகு தமிழில் பேசிய அவர், “என்றைக்கும் என்னுடன் இருக்கும் உறவுக்கும், உலகுக்கும், உயிருக்கும் என்னுடைய எல்லாமுமான விக்கிக்கும்[கணவர்] ஆயிரம் கோடி லவ்யூக்கள். கலைக்கும், காதலுக்கும், அன்புக்கும், ஆண்டவனுக்கும் நன்றி” என்று பேசினார். விருது பெற்ற வீடியோவை நயன்தாரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். இந்த வீடியோ இப்போது இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது//
திரையுலகில், மிகப் பல ஆண்டுகளாக முன்னணி நடிகையாக மட்டுமல்லாமல், ஏராளமான ரசிகர்களையும் பெற்றுள்ள அவர், நம் தாய்மொழியான தமிழில் பேசியதால் அவரின் ரசிகர்களிடையே, தமிழின் மதிப்பு ஓரளவுக்கேனும் உயரும் என்பதில் சந்தேகமில்லை.
மில்லியன் கணக்கான அவரின் ரசிகர்களைப் போலவே விருது பெற்றதற்காகவும், தமிழில் பேசியதற்காகவும் அவரைப் பாராட்டுவோம்!
“நிலைத்த புகழுடன் நயன் நீடூழி வாழ்க” என்று வாழ்த்துவோம்!!
* * * * *
https://tamil.filmibeat.com/heroines/nayanthara-shares-a-dada-saheb-phalke-award-video-in-her-instagram-127981.html?story=2‘ஸ்ரீ’ என்பதன் பொருள், ‘நன்மதிப்பிற்குரிய’ என்பதாகும்; ‘வணக்கத்திற்குரிய’ என்றும் சொல்லலாம்.
இந்த ரவிசங்கர் மதிக்கத்தக்க நபர் என்று வைத்துக்கொண்டாலும், பெயருக்கு முன்னால் ஒரு ‘ஸ்ரீ’ போதும். இரண்டு ஸ்ரீ[ஸ்ரீஸ்ரீ] தேவையா?
தேவைதான் என்றால், காசா பணமா ஐந்தாறு போட்டுக்கொள்ளலாமே?
கடவுளின் குரு என்னும் பொருள்பட ‘சத்குரு’ என்று அடைமொழி சேர்த்து ஒட்டுமொத்த உலகையும் ஏமாற்றும் சாமியாரும், இந்தச் சாமியாரும் ஒரு குட்டையில் ஊறும் மட்டைகள்.
‘வாழும் கலை’ ரவிசங்கராம். இந்தக் கலை இந்தச் சாமியாருக்கு அத்துபடி. இல்லையென்றால் கோடி கோடியாச் சம்பாதித்திருக்க முடியுமா?
இந்தக் கோடீஸ்வரச் சாமியாரின் தலைமையில்.....
மார்ச் மாதத்தில்[2, 3 ஆகிய தேதிகளில்] கோவையில் பிரமாண்ட நிகழ்ச்சி நடக்கவுள்ளதாம்.
நான் ஏற்கனவே கேட்ட கேள்வியைத்தான் மீண்டும் கேட்கிறேன்.....
அதென்ன தியானம்?
தியானம் செய்பவர்கள் சப்பணமிட்டு அமர்ந்து, கைகளை முழங்கால்கள் மீது வைத்து, கண்களை மூடி என்னவெல்லாமோ முணுமுணுக்கிறார்கள்.
‘சிவ சிவ’ என்றோ, ‘ராம் ராம்’ என்றோ, ‘கந்தா கந்தா’ என்றோ, ‘சமந்தா சமந்தா’ என்றோ முணுமுணுப்பதால் என்ன பயன்?[தன்னம்பிக்கையை வளர்க்கும் விதத்தில் ‘இதைச் செய்துமுடிப்பேன், செய்தே தீருவேன், சாதிப்பேன் என்று சிறிது நேரம் உள்ளுக்குள்ளே சொல்லிக்கொள்வதால் பயன் விளையக்கூடும். யோகாவில் ஒரு பிரிவான மூச்சுப் பயிற்சியால் நல்ல பலன்கள் கிட்டும்].
ஒருவேளை, சாமிகளின் பெயர்களை மனதுக்குள் உச்சரிப்பதால் பயன் உண்டு என்றாலும், இதற்குப் பயிற்சி கொடுக்க ஸ்ரீஸ்ரீ போன்ற கபட சன்னியாசிகள் தேவையில்லை. தனிப்பட்ட முறையில் இதைத் தினசரிப் பயிற்சியாகச் செய்யலாம்.
தியானம் கற்றுத் தருவது இருக்கட்டும், ‘மகா ருத்ர பூஜை’[இப்படிப் புரியாத பூஜைகளின் பெயரால்தான் மக்களை மீள இயலாத மன மயக்கத்தில் ஆழ்த்துகிறார்கள்] வேறு நடக்கவிருக்கிறதாம். 5 ஆயிரம் பேர் பங்கேற்பார்களாம்[கூடுதலாக வருபவர்களுக்கு அனுமதி தரமாட்டார்களா?] அதற்கு நன்கொடை[வரி ஏய்ப்புச் செய்ய] வேறு. லட்சக்கணக்கில் கொள்ளையடிக்க ஆகச் சிறந்த வழி இது.
போலிச் சாமியார்கள் அடிக்கும் கொட்டத்தையோ கொள்ளையையோ தடுத்து நிறுத்த... தேவைப்பட்டால் கைது செய்து கம்பி எண்ணவைக்க ஆட்சியாளருக்குத் ‘தில்’ இல்லை.
மூடநம்பிக்கைகளைச் சுமந்து திரிவதில் கொள்ளை இன்பம் காணுகிற மக்களும் கண்டுகொள்வதாகத் தெரியவில்லை.
நல்ல மனம் கொண்ட நாத்திகர் எவரேனும் இந்த நாட்டின் சர்வாதிகாரி ஆவது பெரிதும் வரவேற்கத்தக்கது!
நரம்பியல் கோளாறுகளோ ஆழமான காயங்களோ உள்ள மனிதர்களின் மூளைக்குள் 'சிப்' பொருத்தி, அவர்களை அந்தப் பாதிப்பில் இருந்து மீட்க எலான் மஸ்க், 'நியூராலின்க்' என்ற நிறுவனத்தைத் தொடங்கினார்.
கழுத்துப் பகுதியில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாகப் பக்கவாதப் பாதிப்புக்கு ஆளான நோயாளிகளின் மூளையில் சிப் பொருத்தினால், அதன் மூலம் அவர்களின் எண்ணங்களின் மூலமாகக் கம்ப்யூட்டரின் கர்சர், கீபோர்டு உள்ளிட்டவைகளைக் கட்டுப்படுத்த முடியும் என்பது அவரின் நம்பிக்கை.
கடந்த 2016ஆம் ஆண்டு இதற்கான பணிகள் தொடங்கப்பட்டன. இதற்காக எலான் மஸ்க் அமெரிக்க அரசிடம் அனுமதி பெற்றிருந்தார்..
இந்தச் சோதனையில் ஈடுபடுத்தத் தேர்வு செய்யப்பட்ட முதல் நபரின்[பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்] மூளையில், சில நாட்களுக்கு முன்பு ‘சிப்’ பொருத்தப்பட்டது.
சிப் பொருத்தப்பட்ட அவர் குணமடைகிறார் என்றும், அவர் தன் எண்ணங்களைப் பயன்படுத்திக் கம்ப்யூட்டர் மவுசைக் கட்டுப்படுத்துகிறார் என்றும் ‘எலான் மஸ்க்’ தெரிவித்துள்ளார்[Maalaimalar .21 பிப்ரவரி 2024 12:32 PM].
இது உலக அளவில் பெரும் பாராட்டுதலைப் பெற்றுள்ளது.
* * * * *
மு.கு: அடியேனுக்குள்ள அறிவியல் அறிவின் அளவு 005%கூடத் தேறாது என்பதால், மேற்கண்ட செய்தி குறித்த விளக்கவுரைகளையும் விமர்சனங்களையும் தவிர்த்துள்ளேன் என்பதைத் தன்னடக்கத்துடன் தெரிவிக்கிறேன்.
‘யூடியூப்’இல் பெரிதும் சிறிதுமான[short, video] காணொலிகளை வெளியிட்டு, சிலரோ பலரோ லட்சக்கணக்கில்[கோடிக்கணக்கில்?] சம்பாதிப்பதாக அறிந்திருந்தேன்.
ஆயிரக்கணக்கிலாவது சம்பாதிக்க வேண்டும் என்பது என் பல நாள் கனவாக இருந்தது.
கனவை நனவாக்கும் முயற்சியில், ஊனுறக்கம் இல்லாமல் சில நாட்கள் ஈடுபட்டேன். முயற்சி முழுத் தோல்வியில் முடிந்தது.
அடியேன் தயாரித்த சிறு சிறு காணொலிகளில் கீழ்க்காண்பதும்[யூடியூப் இதையும் நிராகரித்தது] ஒன்று.
மனதைச் சற்றே தேற்றிக்கொள்ள அதை இங்கு வெளியிடுகிறேன்.
‘ஈ.வி.எம். பிரதமர் மோடி’ என்பது வட இந்தியர்கள் மோடிக்கு வைத்துள்ள 'நிக் நேம்' என்றும் சொல்லியிருக்கிறார் அவர்.
‘நிக் நேம்’ என்பதைத் தமிழில் ‘புனைப் பெயர்’ என்பார்கள்.
மோடியைப் பொருத்தவரை, இது[ஈ.வி.எம்] அவர் புனைந்துகொண்ட பெயர் அல்ல என்பதால், இதைச் ‘செல்லப் பெயர்’[மக்கள் செல்லமாக அழைக்கும் பெயர்] என்பதே சரி.
ஈ.வி.எம்.'ஐ எதிர்த்து வட இந்தியாவில் போராட்டம் வலுக்கிறதாம். தன் கட்சியும் மிகப் பெரும் போராட்டம் நடத்தவிருப்பதாக அறிவித்திருக்கிறார் திருமா.
வரவேற்கிறோம்! போராட்டம் வெற்றி பெற்றிட வாழ்த்துகிறோம்!!
விரைவில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு, ’ஈ.வி.எம்.பிரதமர் மோடி’, ‘மாஜி ஈ.வி.எம்.மோடி’ ஆவார் என்பது நம் அசைக்க முடியாத நம்பிக்கை!!!
* * * * *
உலகில் அதிகம் படித்தவர்களைக் கொண்ட நாடு எது என்று கேட்டால் பலரும் அமெரிக்கா, இங்கிலாந்து என பதிலளிப்பார்கள். ஆனால் அது முற்றிலும் தவறு. பல நாடுகள் அமெரிக்காவையும், இங்கிலாந்தையும் பின்னுக்குத் தள்ளி கல்வி அறிவில் முன்னிலை வகிக்கின்றன.
பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டிற்கான அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, உலகின் அதிகம் படித்தவர்களைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் கனடா முதலிடத்தில் உள்ளது. அதன்படி கனடாவில் 59.96% படித்தவர்கள். 52.68% கல்வி அறிவுடன் ஜப்பான் இரண்டாவது இடத்தில் உள்ளது.
லக்சம்பர்க் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ள நிலையில் அமெரிக்க, பிரிட்டன் ஆகிய முன்னணி நாடுகள் 6 & 8ஆவது இடங்களைப் பெற்றுள்ளன.
இந்தப் பந்தயத்தில் தென் கொரியாகூட அமெரிக்காவைப் பின்னுக்குத் தள்ளி, கல்வித் தகுதி மிகுந்த நாடுகளின் பட்டியலில் 4ஆவது இடத்தில் உள்ளது.
இஸ்ரேல் 5ஆவது இடத்தைப் பிடித்துள்ள நிலையில், அயர்லாந்தை முந்திக்கொண்டு பிரிட்டன் 8ஆவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தியா?
உலகின் கல்வி அறிவு மிகுந்த நாடுகளின் பட்டியலில் முதல் 10 இடங்களில் இந்தியா இடம் பெறவில்லை.
அதாவது, இந்தியாவில் கல்வி அறிவு மிகவும் குறைவாக உள்ளது. இந்திய மக்கள் தொகையில் 20.4% பேர் மட்டுமே உயர்கல்வி பெற்றுள்ளனர்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தேசியப் புள்ளியல் கழகம் கல்வி அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில் இந்தியாவில் உள்ள 7 மாநிலங்களின் கல்வித் தகுதி மிகவும் பின்தங்கி இருந்ததாகக் குறிப்பிட்டிருந்தது.இந்தியாவில் உள்ள 7
இவை ஒருபுறம் இருக்க, அதிகக் கல்வி அறிவு கொண்ட மாநிலங்களின் பட்டியலில் கேரளா முதலிடத்தில் உள்ளது. இந்தியா மட்டுமன்றி உலக அளவிலும் கேரளா முன்னிலை வகிப்பது[தமிழ்நாடு 2ஆவது இடம்?] குறிப்பிடத்தக்கது. அதன்படி, அம்மாநிலத்தின் மொத்த மக்கள் தொகையில் 39% பேர் பல்கலைக்கழகப் பட்டப்படிப்பை முடித்தவர்கள் என்பது அறியத்தக்கது.
***அதிகம் படித்தவர்கள் இடம்பெற்றுள்ள நாடுகளான கனடா, ஜப்பான், தென்கொரியா, அமெரிக்கா, பிரிட்டன், அயர்லாந்து போன்ற நாடுகள் முன்னேறிய நாடுகளாகவும் இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதன் மூலம், ஒரு நாடு அறிவியலிலும் பொருளாதாரத்திலும் வளர்ச்சி பெற்று விளங்குவதற்கு, உயர் கல்வியறிவு தேவை என்பது தெரிகிறது.
கவனியுங்கள்.....
வளரும் நாடாக உள்ள இந்தியா கல்வியறிவு மிக்க நாடுகள் பட்டியலில் பின்னுக்குத் தள்ளப்பட்டிருக்கிறது.
போதுமான உயர் கல்வியறிவு இல்லாத காரணத்தால் இங்கு மூடநம்பிக்கைகளைச் சுமந்து வாழ்வோர் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது.
இவர்களால், நாட்டின் முன்னேற்றம் வெகுவாகப் பாதிக்கப்படுகிறது என்பது என் எண்ணம்.
இவ்வெண்ணம் சரியானதா, தவறானதா?
சிந்திக்கலாமே!
* * * * *
சேலம் மாவட்டத்தில் மனிதர்கள் வாழும் ஊர் ‘மணியனூர்’.
அவர்களில் ஒரு சாரார் பொது இடத்தில் குப்பை கொட்டினார்கள். இன்னொரு சாரார், பிள்ளையார் படத்துடன் குப்பை மேட்டருகே பேனர் வைத்தார்கள்[குப்பை கொட்டுவதைத் தடுக்கப் பல உத்திகளையும் தந்திரங்களையும் கையாண்டு தோற்றிருக்கக்கூடும்].
பெரும்பான்மைப் பக்தர்களால் தொழப்படும் நம்பர் 1 சாமியான பிள்ளையாரைக் ‘குப்பை’ மனிதர்கள் மதிக்கவில்லை. அம்மை[பார்வதி] குளிக்கும்போது தேய்த்தெடுத்து உருவாக்கிய அழுக்குச் சாமி அது என்பதை அவர்கள் புரிந்துகொண்டிருக்க வேண்டும்]; தொடர்ந்து குப்பை கொட்டினார்கள்.
ஒத்தைச் சாமிக்குப் பயப்படாத அவர்கள், அவரின் அப்பன், அம்மை, மாமன்[விஷ்ணு பகவான்], மனைவிகள்[பிள்ளையார் இரண்டு பெண்டாட்டிக்காரர்] தம்பி[முருகன்] என்று பத்துச் சக்தியுள்ள சாமிகளின் படங்களைக் குப்பை மேட்டருகே அணிவகுக்கச் செய்தார்கள்.
ஒத்தைச் சாமிக்குப் பயப்படாதவர்கள் பத்துச் சாமிகளைக் கண்டதும் அஞ்சி நடுங்கினார்கள்.
காவல்துறைக்குத் தகவல் போனது.
சாமி படங்களைக் கைப்பற்றிச் சென்றார்கள் காவல்துறையினர்.
படம் வைத்தவர்கள் குறித்து விசாரணை நடத்துகிறார்களாம்.
தீர விசாரித்து.....
படம் வைத்தவர்களைக் கைது செய்து நீதிபதி முன்னால் நிறுத்தினால், பத்துச் சாமி[யார்]களும் நீதிமன்றத்தில் ஆஜராகிச் சாட்சி சொல்லுவார்களா?!
எது எப்படியோ, குப்பை கொட்டுவதைத் தடுக்கச் சாமிகளின் படங்களை வைத்த மணியனூர் வாசிகளை அதி புத்திசாலிகள் என்று பாராட்டுவதா, அல்லது, அடி.....?
வேண்டாம். ஏடாகூடமாக எதையும் சொல்லிவைத்தால், அண்டை மவட்டத்துக்காரர்களான அவர்கள் அணி திரண்டு வந்து தாக்கினால், அடியேனின் 60 வயதைக் கடந்த உடம்பு[உண்மை வயது?... ஊஹூம்!] தாங்காது! ஹி... ஹி... ஹி!!!
காலரா:
‘விப்ரியோ காலரா’ என்னும் பாக்டீரியத்தால் ஏற்படும் குடல் நோய் இது. கிமு 5ஆம் நூற்றாண்டுவரையிலான நூல்களில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தத் தொற்றுநோய்ப் பாதிப்பு இந்தியாவில் 19ஆம் நூற்றாண்டுவரை ஏற்படவில்லை. அசுத்தமான உணவு அல்லது தண்ணீரால் பரவுவது இந்த நோய்.
ஏமன் மற்றும் சோமாலியா போன்ற ஏழை மற்றும் வளர்ச்சியடையாத நாடுகளில் காலரா இன்னும் உள்ளது என்றாலும், நோயைக் குணப்படுத்த இப்போது தடுப்பூசிகள் மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பிகள் உள்ளன.
நிமோனியா:
மருத்துவர் ஹிப்போகிரட்டீஸ் முதன்முதலில் நிமோனியாவின் அறிகுறிகளை கிமு 4ஆம் நூற்றாண்டில் கண்டறிந்து சொன்னார். இது ஒரு நுரையீரல் தொற்று என்று கருதப்பட்டது. ஆனால், பாக்டீரியா, வைரஸ்கள், பூஞ்சைகள் ஆகியவற்றால் உருவாகிறது இது என்பதே உண்மை.
1900 வாக்கில், இந்த நிமோனியா நோய் உலகளவில் இறப்புக்கான மூன்றாவது முக்கிய காரணியாக இருந்தது.
தொழுநோய்:
கிமு 600க்கு முற்பட்ட பழம் பெருமை வாய்ந்த நோய் இது. பாவிகளுக்குத் தெய்வம் வழங்கும் தண்டனையாக இது கருதப்பட்டது.
நோயாளிகளைக் கட்டாயமாகத் தனிமைப்படுத்தியதன் காரணமாக 14ஆம் நூற்றாண்டில் தொழுநோயின் பரவல் குறையத் தொடங்கியது.
ரேபிஸ்:
விலங்கு கடித்தால் பரவும் ரேபிஸ் என்பது 4,000 ஆண்டுகளுக்கும் மேலாக அறியப்பட்ட ஒரு வைரஸ் நோயாகும் இது; ஆபத்தானது. இது பல நரம்பியல் அறிகுறிகளை ஏற்படுத்துகிறது.
ரேபிஸ் இன்றளவில் ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கானவர்களைத் தாக்குகிறது. அவர்களில் 40% பேர் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள்.
காசநோய்:
கிமு 7000இல் புதைக்கப்பட்ட தாய் மற்றும் குழந்தையின் உடல்களில் இதற்கான ஆதாரங்கள் கண்டறியப்பட்டன.
இந்த நுரையீரல் தொற்று என்னும் சுவாச நோய் 3 மில்லியன்[?!] ஆண்டுகளுக்கும் மேலாக உள்ளது. 1940களில் இதற்கு நுண்ணுயிர் எதிர்ப்பிகள் கண்டுபிடிக்கப்பட்டன.
ஒவ்வொரு ஆண்டும் கிட்டத்தட்ட 1.5 மில்லியன் மக்கள் இந்த நோயால் இறக்கின்றனர்.
பெரியம்மை:
பெரியம்மை முதன்முதலில் கிழக்கு ஆப்பிரிக்காவில் 3,000 முதல் 4,000 ஆண்டுகளுக்கு முன்பு உருவானது.
இதனால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு அதிகக் காய்ச்சல், தலைவலி, குமட்டல், வாந்தி, சொறி போன்ற அறிகுறிகள் தோன்றும்.
மே 8, 1980இல் இது அழிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டாலும், வைரஸ் ஆராய்ச்சி நோக்கங்களுக்காக இன்னும் ஆய்வகங்களில் வைக்கப்பட்டுள்ளது. .
புற்றுநோய்:
பாதிரியாரும் கட்டிடக் கலைஞரும் மருத்துவரும் ஆன ‘இம்ஹோடெப்’ என்பவர் முதன்முதலில் பண்டைய எகிப்தியப் பேரரசின் ஆட்சிக் காலத்தில் இந்த நோய் பற்றி விவரித்தார்.
இந்த நோய் இப்போது உலகின் முக்கிய உயிர்கொல்லி நோய்களில் ஒன்றாக உள்ளது.
மலேரியா:
மலேரியா என்பது ஒரு ஆபத்தான நோயாகும். காய்ச்சல் இதன் முக்கிய அறிகுறியாகும்.
இது வரலாற்றுக்கு முந்தைய காலங்களிலிருந்து இருந்திருக்கலாம்.
எனினும், 4,700 ஆண்டுகளுக்கு முன்பு சீனா, இந்தியா, மெசபடோமியா ஆகிய நாடுகளில் காணப்பட்டது.
வெப்பத்தை விரும்பும் ஒட்டுண்ணிகளால் பாதிக்கப்பட்ட கொசுக்கள் கடித்தால் மனிதர்களுக்குப் பரவுகிறது இது.
2021ஆம் ஆண்டு நிலவரப்படி, உலக மக்கள் தொகையில் கிட்டத்தட்டப் பாதிப் பேர் மலேரியா பரவும் அபாயம் உள்ள பகுதிகளில் வாழ்கின்றனர்.
டிராக்கோமா:
‘கிளமிடியா ட்ரக்கோமாடிஸ்’ என்பது டிராக்கோமாவை ஏற்படுத்தும் ஒரு பாக்டீரியா ஆகும். இது ஒரு கண் தொற்று.
இது 10,000 ஆண்டுப் பழைமையானது எனினும், 20ஆம் நூற்றாண்டில்தான் கண்டுபிடிக்கப்பட்டது.
கிமு 500இல், ‘ஹிப்போகிரட்டீஸ்’ என்பவர் இந்த நோய்க்குச் சிகிச்சையளித்தார்.
இன்று, உலகளவில் சுமார் 1.9 மில்லியன் மக்களின் குருட்டுத்தன்மை அல்லது பார்வைக் குறைபாட்டிற்கு இந்த டிராக்கோமா காரணமாக உள்ளது.
வூப்பிங் இருமல்:
நீண்ட காலமாக குழந்தைப் பருவ நோயாக இது கருதப்படுகிறது, ஆனால், இது உண்மையில் எந்த வயதினரையும் தாக்கலாம்.
மூன்று மாதங்களுக்கும் குறைவான குழந்தைகளுக்கு இது மிகவும் ஆபத்தானது.
இந்தச் சுவாசத் தொற்று போர்டெடெல்லா பெர்டுசிஸால் ஏற்படுகிறது.
இந்தப் பாக்டீரியா தொற்று 2.5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியதாக விஞ்ஞானிகள் நம்புகிறார்கள்.
முதன்மை அறிகுறிகளில் தொடர்ச்சியான இருமல், கடினமான மூச்சுத்திணறல் ஆகியவை அடங்கும். தடுப்பூசிகள் 1940களில் அமெரிக்காவில் உருவாக்கப்பட்டன. தடுப்பூசி அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து, இதன் தாக்குதல் விகிதம் 75% குறைந்துள்ளது.
* * * * *
***மனிதர்கள் அறிந்த பழமையான நோய்கள்©லூயிஸ்-லியோபோல்ட் பொய்லி / விக்கிமீடியா காமன்ஸ்
***இயன்றவரை நம் தாய்மொழி மரபு பிறழாமல், ஆங்கிலத்திலான கட்டுரையின் வடிவம் மாற்றியமைக்கப்பட்டும் ஓரளவு சுருக்கியும் வெளியிடப்பட்டுள்ளது.
* * * * *
சேலத்தில், ஒரு தனியார் மருத்துவமனையிலிருந்த நண்பரைப் பார்க்க ஸ்கூட்டரில் சென்றுகொண்டிருந்தேன்.
பெரும்பாலான இந்து _ இஸ்லாமிய காதல் திருமணங்களில் பாதுகாப்புக் கொடுக்கும் அளவிற்குப் பிரச்சினைகள் வருவதில்லை.
என் உறவு வட்டத்திலேயே இந்து_இஸ்லாமியத் திருமணம் 5 ஜோடிகளுக்கு நடந்துள்ளது.
அதில் ஒரு தூரத்துச் சொந்தமான ஒரு பெண்ணின் திருமணம் சென்ற மாதத்தில் நடந்தது.
இதுவரை அந்த 5 ஜோடிகளுக்கும் யாராலும் ஆபத்து வரவில்லை.
இந்து மதத்தில் அதிகம் காணப்படும் ஆணவக் கொலைகள் இஸ்லாமியர்களிடம் காண்பது மிக அரிது.
4 நாட்களுக்கு முன்பு, ஒரே மதத்தில் ஒரே ஜாதியில் திருமணம் செய்த ஜோடிகளை, திருமணம் முடிந்து மூன்றே நாளில் கொலை செய்த சம்பவம் உங்களுக்கு நினைவு இருக்கலாம்[படம் கீழே].
ஒரே மதமாக இருந்தால் ஜாதியைப் பார்த்துக் கொலை செய்வது, ஒரே ஜாதியாக இருந்தால் பொருளாதாரத்தைப் பார்த்துக் கொலை செய்வது என்னும் அவலம் இருப்பதால், நியாயமாக அரசு பாதுகாக்க வேண்டியது இந்துத் தம்பதிகளையே.
இதுல காமெடி என்னன்னா சங்கிகள், முஸ்லிம் கிறிஸ்த்தவர்களை மதவெறியர்கள்னு சொல்றது…😂😂😂
நான் பணி புரியும் வங்கிக் கிளையில் அமீதாபேகம் ரமேஷின் மனைவியாகப் பூவும் போட்டும் வைத்துக்கொண்டு வருகிறார்.
ஷகீரா, வெங்கடேஷின் மனைவியாக அதே போல் வருகிறார்.
யாரும் எதிர்த்தார்களா, இல்லையா என்று தெரியவில்லை.