எனது படம்
“எல்லாம் அவன் செயல்” என்பவர்கள் ஆறறிவின் வளர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பவர்கள். இவர்களின் எண்ணிக்கை பெருகப் பெருக மூடநம்பிக்கைகளின் அளவும் அதிகரிக்கிறது. நாட்டை ஆள்வதற்கான தகுதியே இல்லாத சுயநலவாதிகள் இதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துகிறார்கள். மூடத்தனங்களிலிருந்து மக்கள் முற்றிலுமாய் விடுபடும்போதுதான் நாடு உண்மையில் சுதந்திரம் பெற்றதாக ஆகிறது.

புதன், 15 ஜூன், 2022

அந்தரங்க உறவில் அதிசயம் நிகழ்த்தும் ஆண் வெட்டுக்கிளிகள்!!!

சில வகைச் சிலந்திகள், Praying Mantis என்று அழைக்கப்படும் வெட்டுக்கிளிகள், சில வகைப் பாம்புகள் என்றிவ்வாறான உயிரினங்களில், உடலுறவு முடிந்தவுடன் உறவுச் சுகம் தந்த ஆணைப் பெண் தின்று விழுங்கி ஏப்பம் விடுவது[தனக்குப் பிறக்கப் போகும் வாரிசுகளுக்கான நல்ல ஊட்டச்சத்தாம் இது] இயற்கையில் நிகழும் விசித்திரங்களில் ஒன்று என்கிறது உயிரியல் விஞ்ஞானம்.

ஆனால், வெட்டுக்கிளியை[Praying Mantis]ப் பொருத்தவரை, கொலைகாரப் பெண் வெட்டுக்கிளியிடமிருந்து சில சாகசங்களைக் கையாண்டு ஆண் தப்பிப் பிழைத்திடும் அதிசயமும் நிகழ்கிறதாம்.

சாகசம் 1:

'போகம்' முடிந்ததவுடன், பெண்ணின் வயிற்றில் 'நறுக்' என்று ஒரு குத்து விட்டுப் பெண்ணின் திறந்த வாய்க்குள் அகப்படாமல் ஆண் தப்பி ஓடுவது.

சாகசம் 2:

ஆண், ஏதாவதொரு சின்னப் பூச்சியை  எடுத்துச் சென்று[கையில் ரோஜாப் பூ எடுத்துச் செல்லும் காதலன் போல்]பெண்ணுக்குச் சாப்பிடக் கொடுக்கும். அந்தப் பெண் வெட்டுக்கிளி பூச்சியைச் சாப்பிடும்போது புணர்ச்சி சுகத்தை அனுபவித்து முடித்து ஓட்டம் பிடித்தல்[!!!].

சாகசம் 3:

பெண் தன் கால்களை அசைக்க இயலாதவாறு, ஆண் பெண்ணின் கால்களைச் சிலந்தி வலையால் கட்டிவிட்டு[?!]ச் சல்லாபத்தில் ஈடுபடுவது.

                                          *   *   *   *   *

இந்த ஐந்தறிவு ஜீவன் மட்டுமல்ல, ஆறறிவு படைத்த மானுடச் சாதி ஆடவர்களும் இப்படிப் பெண்களை அடித்தும் உதைத்தும், கட்டி வைத்தும், அன்பளிப்புகள் கொடுத்தும் உடலுறவுச் சுகம் அனுபவித்துத் தப்பி ஓடுவது அவ்வப்போது நிகழ்கிறது.

இப்படியெல்லாம் பெண் இனத்தை ஏமாற்றும் இந்தத் தந்திரப் புத்தி ஆண் இனத்துக்கு இயற்கையாய் அமைந்ததா, அனைத்தையும் படைத்த ஆண்டவனால் அருளப்பட்டதா?

"ஆண்டவனால்தான்" என்று நாம் சொன்னால் ஆன்மிகவாதிகள் ஏற்பார்களா?!

=========================================================================

உதவி: Quora.com