எனது படம்
குற்றங்கள் செய்து அகப்பட்டுக்கொண்டால், மிகக் கடுமையாகத் தண்டிக்கப்படுவோம் என்னும் பயத்தில் தற்கொலை செய்பவர்களைவிடவும், செய்த குற்றம் சொந்தபந்தங்களுக்குத் தெரிந்தால் பெரிதும் அவமானப்படுவோம் என்றஞ்சி, உயிரை மாய்த்துக்கொள்வோர்[கிழவர்கள் உட்பட] எண்ணிக்கை மிக அதிகம் ஆகும்!

சனி, 11 ஏப்ரல், 2026

‘குழப்பல்’ தத்துவம் பேசிக் கோடிகளை அள்ளும் ஆன்மிக வியாபாரி ஜக்கி வாசுதேவன்!!!

"மகிழ்ச்சி என்பது நாம் வெளியில் தேட வேண்டிய ஒன்றல்ல. 
நீங்கள் ஏற்கனவே உள்ளுக்குள் மகிழ்ச்சியாக இருக்கும்போது[எப்படி?], அந்த மகிழ்ச்சி இயல்பாக வெளிப்படும்போது ஏற்படுபவை[து]. பலர் மகிழ்ச்சி என்பது பணம், வெற்றி, உறவுகள் அல்லது சாதனைகளிலிருந்து வருகிறது என்று நினைக்கிறார்கள். அதனால், இவை கிடைத்தவுடன் நான் மகிழ்ச்சியாக இருப்பேன் என்று நினைத்து ஓடிக்கொண்டே இருக்கிறார்கள்."

மேற்கண்ட வாழ்க்கைத் தத்துவத்தை வழங்கியருளிய ‘ஆசாமி’ மேற்காண்பது போன்ற மாந்திரீக மாயாஜாலங்கள் செய்து மக்களை மூடர்கள் ஆக்கி, கோடி கோடிகள் சம்பாதித்துச் சொர்க்கத்தில் சுகபோகம் துய்க்கும் சத்துக்குரு எனப்படும் ஜக்கி வாசுதேவன்.

இந்த ஆள் சொல்லியிருக்கும் ‘குழப்பல்’ தத்துவம்:

“குடும்பத்துடன் தரமான நேரத்தைச் செலவிடுவது, நண்பர்களுடன் சிரிப்பது, எதையும் எதிர்பார்க்காமல் ஒருவருக்கு உதவுவது, அல்லது தனியாக ஒரு அமைதியான தருணத்தை அனுபவிப்பது போன்றவை உண்மையான மகிழ்ச்சியான தருணங்கள்”[இவற்றின் மூலம்தான் நாம் மகிழ்ச்சியைப் பெறுகிறோம் என்பது சிந்திக்கத் தெரிந்த  அத்தனைப் பேருக்கும் தெரியும்].

இப்படிச் சொன்ன இந்த போலி ஆன்மிகவாதி, “மகிழ்ச்சி என்பது நாம் வெளியில் தேட வேண்டிய ஒன்றல்ல” என்றது ஏன்?

அதென்ன உள்ளுக்குள்? உள் மனதில் நுழைந்து தேடி இந்த நபர் கண்டறிந்ததா ‘மகிழ்ச்சி’?

“நீங்கள் மகிழ்ச்சியைத் தேடும்போது, ​​ஏதோ ஒன்று[அதென்ன ஏதோ ஒன்று?!] குறைவதாக உணர்கிறீர்கள் என்று அர்த்தம். ஆனால் நீங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும்போது, ​​நீங்கள் ஏற்கனவே நிறைவாக உணர்கிறீர்கள் என்று அர்த்தம். அதுதான் வித்தியாசம்”[ஒரு கருமாந்தரமும் புரியவில்லை].

இப்படியெல்லாம் நம்மைக் குழப்பத்தில் ஆழ்த்தித் தான் மட்டுமே அனைத்தும் அறிந்த மேதை என்று உலகோரை நம்பச் செய்யும் தந்திரவாதி இந்த ஜக்கி.

காணொலிப் பதிவுகளில் புரியவே புரியாத வகையில் கண்டதைப் பேசிப் பேசி மக்களை ஏமாற்றுவதுதான் இந்த முன்னாள் கஞ்சா வியாபாரியின் தொழில்!

இந்த ஏமாற்றுப் பேர்வழியைத் தேடிப் போய் லட்சங்களில் ரூபாயைக் கட்டணமாகச் செலுத்தி ஏமாறுகிறார்கள் நம் மக்கள்.

இவர்கள் கொஞ்சமேனும் சிந்திக்கும் அறிவைப் பெறுவது எப்போது? 

https://www.moneycontrol.com/lifestyle/quote-of-the-day-by-sadhguru-the-most-beautiful-moments-in-life-are-moments-when-you-are-expressing-article-[11.04.2026]