பக்கங்கள்https://kadavulinkadavul.blogspot.com/p/blog-page_1.html
- 'பசி'பரமசிவம்
- எந்தவொரு கட்சி சார்பாகவும் தேர்தலில் போட்டியிடுகிறவனின் தனிப்பட்ட குறை நிறைகளைப் பொருட்படுத்தாமல், இந்நாளில் அவன் சார்ந்திருக்கும் கட்சியின் கொள்கைகளுக்காவே வாக்குரிமை பெற்ற நம் மக்கள் அவனைத் தேர்ந்தெடுக்கிறார்கள். கட்சித் தலைமைக்குக் கட்டுப்படாமல், ஆதாயம் கருதிப் பிறிதொரு கட்சிக்கு[குறிப்பாக ஆளுங்கட்சி] ஆதரவாகச் செயல்பட்டால், தன் கட்சிக்கு மட்டுமல்லாமல், வாக்களித்த மக்களுக்கும் துரோகம் செய்தவன் ஆகிறான் அவன். அந்த அயோக்கியன் தாலி கட்டிய தன் பெண்டாட்டிக்குக்கூடத் துரோகம் செய்யத் தயங்கமாட்டான்!
ஞாயிறு, 17 மே, 2026
‘தவெக’ ஆட்சி தப்பிப் பிழைக்குமா?[காணொலி> நம்பகத்தன்மை 100%]
வாருங்கள் ரஜினி! வெற்றி 100% உறுதி!!
சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார் ரஜினி. அப்போது அவர்…..
தலைவரே, மாபெரும் தப்புப் பண்ணிட்டீங்க. நீங்கள் முன்கூட்டியே அரசியலுக்கு வருகைபுரிந்து, முதல்வராகியிருந்தால் தமிழ்நாடு ‘சுபிட்சம்’ பெற்றிருக்கும்.
இப்போதும் ஒன்றும் கெட்டுவிடவில்லை. இன்றே பெரும்பான்மை இந்துக்களின் சார்பாக, 100% இந்துவான நீங்கள் ஒரு கட்சி தொடங்குங்கள்.
தொடங்கினால், சிறுபான்மைக் கிறிஸ்தவர்களின் பிரதிநிதியான விஜய் கட்சி[தவெக]யின் 100% தொண்டர்கள் உங்கள் கட்சியில் இணைவது 100% உறுதி.
விரைவில் ‘தவெக’ ஆட்சி கவிழ்க்கப்படுவது 100% உறுதி[25 ‘அதிமுக’வினர் பதவி நீக்கம் & ‘விசிக’, இடதுசாரிக் கட்சிகளின் ஆதரவு திரும்பப்பெறல் காரணம்] என்னும் நிலையில், ஆறு மாதங்களுக்குள் மறு தேர்தல் வரும். போட்டியிட்டு 100% தொகுதிகளைக் கைப்பற்றி, நீங்கள் தமிழ்நாட்டின் முதல்வர் ஆவது 100% உறுதி.
ஒருவேளை, விஜய் ஆட்சி கவிழ்க்கப்படாவிட்டால்.....
தொண்டர்களுக்கு நீங்கள் ஆணையிட்டுத் தமிழ்நாட்டைப் போராட்டக் களமாக்கி, ‘விஜய்’யை ராஜினாமா செய்ய வைத்து, நடக்கும் தேர்தலில் வென்று ஆட்சிபீடம் ஏறலாம்.
இன்றே ஒரு கட்சி தொடங்குங்கள் தலைவரே.
100% வெற்றி உறுதி! வாழ்த்துகள்!!
.jpg)