ஞாயிறு, 28 ஜூன், 2026

‘திருமா’ என்னும் தன்மானத் தமிழா, நீயுமா தமிழினத் துரோகி ஆனாய்!?!?!

//தமிழ்நாடு முதல்வர் தலைமையிலான அரசால் நியமிக்கப்பட்டுள்ள ‘வெங்கட நாராயணா’வுக்கு, மாநில அமைச்சருக்கு இணையான அந்தஸ்தும் அதிகாரங்களும் வழங்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இது அரசுப் பொறுப்பு என்பதுடன், மத்திய & மாநில அரசுகளுக்கிடையிலான உறவைச் சுமுகமான முறையில் கொண்டுசெல்வதில் முக்கியப் பங்கு வகிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது// -இது செய்தி.

மாநில அரசுக்கும், மத்திய அரசுக்கும் இடையே தடையற்ற தகவல்தொடர்பை ஏற்படுத்தவும், தமிழகத்திற்கான திட்டங்கள் & நிதிகளை விரைந்து பெற்றிட மத்திய அமைச்சகங்களை அணுகவும் இந்த நியமனம் மிக முக்கியமானது ஆகும்.

இருப்பினும், வெங்கட நாராயணா வேறு மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதோடு, அவருக்குத் தமிழே தெரியாத நிலையில் அவர் எப்படித் தமிழ் நாட்டின் நலன் சார்ந்து மத்திய அரசிடம் கோரிக்கைகளை முன் வைப்பார் என்று எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பியிருக்கிறார்கள்.

இந்நிலையில்.....

‘விசிக’ தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் அவர்களிடம் இது குறித்துக் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு அவர் விளக்கம் அளித்தபோது.....

“இந்த நியமனம் என்பது முதல்வரின் உரிமைக்குட்பட்டது” என்று சொல்ல ஆரம்பித்து, இது அரசின் பொறுப்புதான் என்றாலும், அந்தப் பொறுப்பு ஆட்சி அதிகாரத்தில் முக்கிய முடிவுகளை எடுக்கும் முக்கியத்துவம் வாய்ந்தது அல்ல என்பதால், அது அவர்கள் உட்கட்சி விவகாரம் என்றும், முதல்வர் அவரது நம்பிக்கைக்குரிய ஒருவரைத் தேர்ந்தெடுத்திருக்கிறார் என்றும், இதனால் நிர்வாகத்தில் எந்தப் பாதிப்பும் ஏற்படாது என்றும் கூறி முடித்திருக்கிறார்[அமைச்சர் நிர்மல் குமார் பேச்சை ‘மேற்கோள்’ஆக்கியிருக்கிறார்].

தன்னைத் தன்மானமுள்ள தமிழனாக எண்ணித் தலைநிமிர்ந்து வலம் வந்த சிறுத்தைகள் தலைவன் திருமாவளவன், ஜோசப் பிச்சையாகப் போட்ட ஒரேயொரு அமைச்சர் பதவிக்காகக் குப்புறக் கவிழ்ந்தது நம்மைப் பெரும் வேதனைக்கு உள்ளாக்குகியிருக்கிறது.

இந்தப் பதவி முக்கியத்துவம் வாய்ந்தது அல்ல என்றால், இதற்கு எதற்கு ஓர் அமைச்சருக்கான அந்தஸ்து?

இதற்குத் தமிழ் தெரியாத ஒரு நபரைத் தேடிப் பிடிப்பது அவசியமா?

வெங்கட நாராயணா ஜோசப்பின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவர் என்றால், இங்கு அவர் கட்சியில்[தவெக] உள்ளவர்கள் அத்தனைப் பேரும் நம்பத் தகாதவர்களா?

இப்படி இன்னும் பல கேள்விகள் கேட்கலாம். திருமாவளவனாருக்குக் கேட்கத் தோன்றாததற்கு, ஜோசப் போட்ட பதவி[வன்னியரசுக்கு]ப் பிச்சையே காரணம்[‘திமுக’கூட்டணியில் பதவி கிடைக்கவில்லை என்னும் விரக்தியும் காரணமோ?] என்பதால் கேட்க விரும்பவில்லை.

வளவனாரே, இத்தனைக் காலமும் உங்களைத் தன்மானமுள்ள தமிழினத் தலைவர்களுள் ஒருவர் என்று நினைத்தோம். அது எத்தனைப் பெரிய முட்டாள்தனம் என்பது இப்போது புரிந்தது.

நன்றி தலைவரே! 

https://www.nakkheeran.in/24-by-7-news/appointment-of-the-tamil-nadu-governments-special-representative-in-delhi-thirumavalavan-12113897

கட்டிப்பிடித்துக் குஷிப்படுத்திய கவர்ச்சி நடிகைகளுக்குப் பதவி எப்போது ஜோசப்?

//“வெங்கட நாராயணா கர்நாடகாவைச் சேர்ந்தவர் அல்ல. ஆந்திர மாநிலத்தவர்.  முதல்வருக்கும் அரசுக்கும் மிகவும் நம்பகமான & தகுதியான நபர் என்பதால் இந்த வாய்ப்பு[டெல்லிக்கான தமிழ்நாடு அரசுப் பிரதிநிதி> அமைச்சர் பதவிக்கு இணையானது] இவருக்கு வழங்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம் அளித்துள்ளார்// என்பது ஊடகச் செய்தி.

அமைச்சரின் விளக்கம் 100% ஏற்கத்தக்கதே.
கர்னாடகத்தவரோ, ஆந்திரத் தெலுங்கரோ, அயல்நாட்டுக்காரரோ தன் நம்பிக்கைக்குரிய[பல வகையிலும் உதவி செய்பவர்] ஒரு நபருக்கு, அமைச்சருக்கு நிகரான பதவியை ஜோசப் வழங்கியிருக்கிறார்.

பதவி பெற்றவர் தமிழரல்ல என்று ஜோசப் மீது காழ்ப்புணர்ச்சி கொண்டவர்கள் கண்டனக் குரல் எழுப்புகிறார்கள். இது கண்டிக்கத்தக்கது. ‘யாதும் ஊரே, யாவரும் கேளிர்’ என்று நம் முன்னோர்கள் அறிவுறுத்தியதை மறந்துவிட்ட கிணற்றுத் தவளைகள் அவர்கள்.

தமிழ்நாட்டின் முதல்வராகப் பதவி வகிப்பவர் ஜோசப். ஐந்தாண்டுக் காலம் ஆளப்போகிறவரும் அவரே. தேர்தலில் வெற்றி பெறுவதற்கான தந்திரோபாயங்களை அவருக்குக் கற்றுக்கொடுத்தவர் வெங்கட நாராயணா. நன்றிக் கடனாக இவரை டெல்லிக்கான அரசுப் பிரதிநிதி ஆக்கியிருக்கிறார் நம் முதல்வர்.

இவரை உதவி முதலமைச்சர் ஆக்கியிருத்தல் வேண்டும்; மாபெரும் தவறு செய்துவிட்டார் அவர்.

அரசியல் ரீதியாக என்றில்லை; திரைப்படத்துறையில் கதாநாயகனாகிப் பெரும் புகழ் ஈட்ட உதவியவர்களும் நம் முதல்வரின் நம்பிக்கைக்கு உரியவர்களே.

திரைப்படங்களில் நாயகன் ஜோசப் அவர்களைக் கட்டியணைத்து உருண்டு புரண்டு உற்சாகப்படுத்திய கவர்ச்சி நடிகைகளும்கூட{அவர்கள் அதைச் செய்திராவிட்டால் பிரபல நடிகராகி, இன்றைய முதல்வராகவும் உயர்ந்திருக்க வாய்ப்பில்லை] அவரின் நம்பிக்கைக்கும் நன்றிக்கும் பாத்தியப்பட்டவர்கள்தான்.

நன்றிக்குரிய அவர்களில்[ஆந்திரத்து அழகிகளோ, கன்னடத்துக் கிளிகளோ, கேரளத்துக் குட்டிகளோ] ஒருவருக்கோ சிலருக்கோ அமைச்சர் பதவி அளித்து, அவர்களைப் பெருமைப்படுத்துவார் நம் முதல்வர் என்னும் நம்பிக்கை நமக்கு உண்டு.

பதவி பெறும் அந்த நடிகை யார், அல்லது நடிகைகள் யாவர் என்பதை அறிய வெகு ஆவலுடன் காத்திருக்கிறோம்!