//தமிழ்நாடு முதல்வர் தலைமையிலான அரசால் நியமிக்கப்பட்டுள்ள ‘வெங்கட நாராயணா’வுக்கு, மாநில அமைச்சருக்கு இணையான அந்தஸ்தும் அதிகாரங்களும் வழங்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இது அரசுப் பொறுப்பு என்பதுடன், மத்திய & மாநில அரசுகளுக்கிடையிலான உறவைச் சுமுகமான முறையில் கொண்டுசெல்வதில் முக்கியப் பங்கு வகிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது// -இது செய்தி.
மாநில அரசுக்கும், மத்திய அரசுக்கும் இடையே தடையற்ற தகவல்தொடர்பை ஏற்படுத்தவும், தமிழகத்திற்கான திட்டங்கள் & நிதிகளை விரைந்து பெற்றிட மத்திய அமைச்சகங்களை அணுகவும் இந்த நியமனம் மிக முக்கியமானது ஆகும்.இருப்பினும், வெங்கட நாராயணா வேறு மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதோடு, அவருக்குத் தமிழே தெரியாத நிலையில் அவர் எப்படித் தமிழ் நாட்டின் நலன் சார்ந்து மத்திய அரசிடம் கோரிக்கைகளை முன் வைப்பார் என்று எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பியிருக்கிறார்கள்.
இந்நிலையில்.....
‘விசிக’ தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் அவர்களிடம் இது குறித்துக் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு அவர் விளக்கம் அளித்தபோது.....
“இந்த நியமனம் என்பது முதல்வரின் உரிமைக்குட்பட்டது” என்று சொல்ல ஆரம்பித்து, இது அரசின் பொறுப்புதான் என்றாலும், அந்தப் பொறுப்பு ஆட்சி அதிகாரத்தில் முக்கிய முடிவுகளை எடுக்கும் முக்கியத்துவம் வாய்ந்தது அல்ல என்பதால், அது அவர்கள் உட்கட்சி விவகாரம் என்றும், முதல்வர் அவரது நம்பிக்கைக்குரிய ஒருவரைத் தேர்ந்தெடுத்திருக்கிறார் என்றும், இதனால் நிர்வாகத்தில் எந்தப் பாதிப்பும் ஏற்படாது என்றும் கூறி முடித்திருக்கிறார்[அமைச்சர் நிர்மல் குமார் பேச்சை ‘மேற்கோள்’ஆக்கியிருக்கிறார்].
தன்னைத் தன்மானமுள்ள தமிழனாக எண்ணித் தலைநிமிர்ந்து வலம் வந்த சிறுத்தைகள் தலைவன் திருமாவளவன், ஜோசப் பிச்சையாகப் போட்ட ஒரேயொரு அமைச்சர் பதவிக்காகக் குப்புறக் கவிழ்ந்தது நம்மைப் பெரும் வேதனைக்கு உள்ளாக்குகியிருக்கிறது.
இந்தப் பதவி முக்கியத்துவம் வாய்ந்தது அல்ல என்றால், இதற்கு எதற்கு ஓர் அமைச்சருக்கான அந்தஸ்து?
இதற்குத் தமிழ் தெரியாத ஒரு நபரைத் தேடிப் பிடிப்பது அவசியமா?
வெங்கட நாராயணா ஜோசப்பின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவர் என்றால், இங்கு அவர் கட்சியில்[தவெக] உள்ளவர்கள் அத்தனைப் பேரும் நம்பத் தகாதவர்களா?
இப்படி இன்னும் பல கேள்விகள் கேட்கலாம். திருமாவளவனாருக்குக் கேட்கத் தோன்றாததற்கு, ஜோசப் போட்ட பதவி[வன்னியரசுக்கு]ப் பிச்சையே காரணம்[‘திமுக’கூட்டணியில் பதவி கிடைக்கவில்லை என்னும் விரக்தியும் காரணமோ?] என்பதால் கேட்க விரும்பவில்லை.
வளவனாரே, இத்தனைக் காலமும் உங்களைத் தன்மானமுள்ள தமிழினத் தலைவர்களுள் ஒருவர் என்று நினைத்தோம். அது எத்தனைப் பெரிய முட்டாள்தனம் என்பது இப்போது புரிந்தது.
நன்றி தலைவரே!