எனது படம்
தமிழ்நாடு சட்டமன்றத்திற்கான தேர்தல் நெருங்கிக்கொண்டிருக்கும் வேளையில், நம் கட்சித் தலைவர்கள் மனம்போன போக்கில், நிறைவேற்றுவதற்கான சாத்தியமே இல்லாத வாக்குறுதிகளையெல்லாம் அள்ளி இறைக்கிறார்கள்; நிறையப் பொய் சொல்லுகிறார்கள்; எதிரணியினரை வரம்பில்லாமல் வசைபாடுகிறார்கள். இவற்றால் எல்லாம் மக்களுக்குப் பயன் இல்லை என்பதோடு மக்களின் நேரத்தை இவை வீணடிக்கின்றன என்பதால், தேர்தல் முடிவுகள் வெளியாகும்வரை இவர்களின் பரப்புரைகள் ஊடகங்களில் வெளியாவதைத் தடை செய்வது நல்லதொரு முன்னுதாரணமாக அமையும்.

திங்கள், 30 மார்ச், 2026

‘மோடிஜி’யின் பாலியல் லீலைகள்!!![பகிர்வு]




 

”இலவசமா புள்ள தர்றேன்னா ஏற்பியா”... பெண்களை இழிவுபடுத்தும் பொறுக்கி சீமான்!!!

ணமான பெண்கள் தத்தம் கணவர் மூலமாகவும், மணமாகாத அப்பாவிக் குமரிகள் அவர்களுடைய காதலர்கள் மூலமாகவும்[அரிதாக] பிள்ளை பெறுகிறார்கள்.  

இங்கே கவனத்தில் கொள்ளத்தக்கது, மேற்கண்டவர்களின் மூலம் பிள்ளை பெறுவதற்குப் பெண்கள் பணம் செலவழிப்பதில்லை.

செயற்கைக் கருத்தரிப்பு மையங்களைத் தொடர்புகொண்டு பிள்ளை பெறுபவர்கள் மட்டுமே அதற்கான கட்டணங்களை மையங்களுக்குச் செலுத்துகிறார்கள். 

அரசாங்கமே இலவசக் கருத்தரிப்பு மையங்களைத் தொடங்கி நடத்தினால் இவர்கள் செலவில்லாமல் பிள்ளை பெறுவது சாத்தியமாகும்.

இந்தவொரு கோணத்தில், “இலவசமாகப் பிள்ளை தர்றேன்னு சொன்னா[ஸ்டாலின் அரசு] ஏற்பியா?” என்று பெண்களிடம் சீமான் கேட்டிருந்தால் அதில் விவாதிக்க ஏதுமில்லை.

ஆனால், அவருடைய பேச்சில் எதிர்மறையான விபரீத அர்த்தம் பொதிந்துள்ளது.

அது.....

“கருத்தரிப்பு மையங்களுக்கான செலவைத் தவிர்க்க, நாங்கள் ஏற்பாடு செய்யும் ஆண்களுடன் உடலுறவு கொண்டு பிள்ளை பெற்றுக்கொள்ளலாம்” என்று அரசாங்கம் ஓர் அறிவிப்பைச் செய்து,  அதற்கான ஏற்பாடுகளையும் அது செய்தால் அதை நீங்கள் ஏற்பீர்களா?” என்று பெண்களைப் பார்த்துக் கேட்டிருக்கிறார் சீமான்.

அசாங்கம் இலவசங்கள் வழங்குவது மிகையாகவும்[ஓட்டுக்காக] இருக்கலாம். அது விவாதத்திற்குரியது; கண்டனத்துக்குரியதும் ஆகும்.

கண்டிக்கிறேன் பேர்வழி என்று, சீமான் இலவசங்களையும் பெண்களையும் இணைத்துப் பேசியிருப்பது அநாகரிகத்தின் உச்சம்; அசிங்கமான திமிர்ப் பேச்சு.

இந்தப் பேச்சு கடும் கண்டனத்துக்கு உரியது.

ஸ்டாலின் இவரை வெறுமனே கண்டிப்பதைவிடவும், இந்தப் பொறுக்கி மீது வழக்குத் தொடுத்துத் தண்டனை பெற்றுத் தருதல் ஒரு முதல்வருக்குரிய கடமை ஆகும்.