2026 தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு, ஆட்சி அமைப்பதற்கான காலக்கெடு முடிவடையும் நிலையில், ‘அதிமுக’, ‘தவெக.’ ஆகிய இரு அணிகளுக்கிடையே, பற்றாக்குறை[தேவை 118 உறுப்பினர்கள்] ஆதரவாளர்களைப் பெறுவதில் மிக மிக மிகக் கடும் போட்டி நிலவுகிறது.
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி ‘தவெக’க்கு ஆதரவு அளிப்பதாக அறிவித்துள்ளது.
மார்க்ஸ் கம்யூனிஸ்டுகளின் ஆதரவும் அதற்குக் கிடைக்கவுள்ளதாகத் தெரிகிறது.
திருமாவளவனின் ‘விசிக’வின் ஆதரவைப் பெற்றால் மட்டுமே நடிகர் ‘விஜய்’யால் ஆட்சியமைக்க இயலும்.
அதைத் தடுக்கும் வகையில், ஆட்சியமைக்க முயலும் ‘அதிமுக’ அணி திருமாவளவனின் கட்சிக்கு அமைச்சரவையில் இடம் தருவதாக ஆசை காட்டியுள்ளது.
அந்தப் பதவிக்குத் திருமாவளவன் ஆசைப்படுவதைத் தடுத்துத் தங்களின் ஆதரவாளராக்க, அவருக்குத் துணை முதல்வர் பதவி தருவதாக உறுதியளித்திருக்கிறது ‘தவெக.’ கட்சி.
234 உறுப்பினர் அடங்கிய தமிழ்நாடு சட்டமன்றத்தில் இரண்டே இரண்டு உறுப்பினர்களைப் பெற்றுள்ள திருமாவளவனுக்கு[வேறு யாராக இருந்தாலும்] இத்தனை முக்கியத்துவமா?
இப்படியொரு கேள்வியை எழுப்பி விடை தேடுவது நம் நோக்கமல்ல.
‘எத்தனை எத்தனையோ உயர் பண்பாளர்களும் நேர்மையாளர்களும் கடமையுணர்வு படைத்தவர்களும் நிறைந்திருந்த தமிழ்நாட்டு அரசியலில், பதவிக்காக எப்படியெல்லாமோ பேரம் பேசும் கழிசடைகள் வந்து புகுந்துவிட்டார்களே’ என்னும் நம் வேதனையை வெளிப்படுத்தவே இந்தப் பதிவு.
தமிழ் மக்களைக் காப்பாற்ற எல்லாம் வல்ல இறைவனை[இருந்தால்] வேண்டுகிறோம்!
.jpg)