புவி தோன்றி ஒரு பில்லியன்[100 கோடி] ஆண்டுகளுக்குள் உயிரினங்கள் தோன்றின. நவீன மனிதன்(Homo sapiens) தோன்றியது சுமார் 2-3 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு.
'மனிதர்கள், விலங்குகள், பறவைகள், நீர்வாழ் உயிரினங்கள் என அனைத்து உயிரினங்களுமே சில நுண்ணுயிரிகளிலிருந்துதான் தோன்றின' என்றார் டார்வின்{கலபகோஸ் தீவுகள் சென்றபோது வெவ்வேறு தீவுகளில் பலவிதமான தனித்துவப் பண்புகளோடு ஆமைகள் திகழ்வதை டார்வின் கண்டார். நிறைய உணவு கிடைக்கும் தீவுகளில் சிறிய கழுத்துடனும், வறண்ட தீவுகளில் நீளமான கழுத்துடனும்[தொலைவில் உள்ள உணவைத் தேடியதில் கழுத்து நீண்டது> இது பரிணாம வளர்ச்சி] ஆமைகள் காணப்பட்டன. பரிணாம வளர்ச்சியின் விளைவு இது என்பதை அவர் புரிந்துகொண்டார்}.
'அனைத்து உயிரினங்களுமே தொடர்ந்து பரிணாம வளர்ச்சி அடைந்துவருகின்றன. இனியும் புதிய புதிய உயிரினங்கள் தோன்றுவது சாத்தியம்தான்' என்று அவர் சொல்லியிருப்பதும் கவனத்தில் கொள்ளத்தக்கது.
பல உயிரினங்களில் ஓர் உயிரினமாக இருந்த மனிதன் சுமார் 2-3 லட்சம் ஆண்டுகளுக்கு முன்புதான் பரிணாம வளர்ச்சியின் மூலம் ஆறறிவு பெற்ற வனாக மாறினான் என்றால்.....
இன்னும் சில லட்சம் ஆண்டுகளில், வேறு ஏதேனும் ஓர் உயிரினம்{சிம்பன்சி(Chimpanzee), கபூசின்(Capuchin) மற்றும் ஓராங்குட்டான்(Orangutan) போன்ற குரங்குகளாகவும் இருக்கலாம்], பரிணாம வளர்ச்சியின் மூலம் மனிதனைப் போலவே ஆறறிவு பெற்ற, அல்லது அவனினும் மேலான அறிவு பெற்ற இனமாக மாறலாம்.
மேலான அறிவு பெற்ற உயிரினமாக மாறினால்.....
பிற உயிரினங்களை அடக்கியும் அழித்தும் அட்டூழியம் புரிகிற மனிதன் அடக்கப்படுவான், அல்லது அழிக்கப்படுவான் என்பது உறுதி!
இம்மாதிரி அதிசயங்கள் நடக்கும்போது நாமெல்லாம் உயிருடன் இருக்கப்போவதில்லை.
மீண்டும் மீண்டும் பிறந்து[மறுபிறவிகள் இருந்தால்], அந்தப் புதிய இனத்தின் அடிமையாக வாழ நேருமோ என்று பயந்தால்.....
“இனியும் பிறக்காமலிருக்க அருள்புரிய வேண்டும்” என்று அவதாரி மோடியின் ராமச்சந்திர மூர்த்தியையோ, கடவுளின் குருவான சத்துக்குரு ஜக்கி வாசுதேவனாரையோ வேண்டிக்கொள்ளுங்கள்!
=====================
.jpg)