எனது படம்
அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.

வியாழன், 20 நவம்பர், 2025

“தமிழ் தெரியவில்லையே”... துயரத்தின் அடிமட்டம் தொட்ட நரேந்திர மோடி!!!

//கோவை : நவம்பர் 19, 2025 அன்று நடைபெற்ற ‘தென்னிந்திய இயற்கை வேளாண்மை மாநாடு’ & ‘தென்னிந்திய இயற்கை விவசாயச் சிகர மாநாடு 2025’-இல் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு உரையாற்றினார். தமிழில் “வணக்கம்” என்று தொடங்கிய அவர், “சிறு வயதிலேயே தமிழ் கற்றிருந்தால் உங்களுடன் தமிழிலேயே பேசியிருப்பேன்” என்று கூறி அரங்கத்தை மகிழ்வித்தார்// -செய்தி.

தமிழன்: “பிரதமர் ஆன பிறகு கற்றிருக்கலாமே? இந்தி கற்க நேரம் இருந்தது; இதற்கு இல்லையா பிரதமருக்கு?”

//மேலும், தமிழக விவசாயிகளின் உற்சாக வரவேற்பைப் பார்த்து “பீகாரின் காற்று தமிழகத்திலும் வீசுகிறதோ?” என்று குறிப்பிட்டார்// -செய்தி.

தமிழன்: “வீசுது. சகிக்க முடியாத சாக்கடை நாற்றம் கலந்த காற்று அது!

//மாநாட்டில் தமிழக விவசாயத் தலைவர் பி.ஆர். பாண்டியன் தமிழில் உரையாற்றினார். பிரதமர் மோடி, “தமிழ் புரியாவிட்டாலும் அவரது உணர்வு எனக்கு முழுமையாகப் புரிந்தது. அந்த உரையை இந்தியில் மொழிபெயர்த்து எனக்கு அனுப்புங்கள்” என்று கேட்டுக்கொண்டார்// -செய்தி.

தமிழன்: “இங்கிலீசில் அனுப்பினால் புரியாதா மோடிக்கு?”

//பிரதமரின் தமிழ் மொழி மீதான அன்பும், இயற்கை வேளாண்மை மீதான ஆர்வமும் அரங்கில் உள்ள அனைவரையும் உற்சாகப்படுத்தியது// -செய்தி.

தமிழன்: “தமிழ் மொழி மீது நரேந்திரருக்கு அன்புள்ளது... சரி. ‘இந்தி & சமஸ்கிருதம்’ மீதான அன்பைவிடவும் இது எத்தனை மடங்கு அதிகம்?! அன்பாம் அன்பு, அரைக் காசு பொறாத அன்பு!”

                                           *   *   *   *   *

https://www.dinasuvadu.com/news/tamilnadu/it-seems-like-the-wind-from-bihar-is-blowing-in-tamil-nadu-too-prime-minister-modis-speech-975033