வெள்ளி, 23 ஜனவரி, 2026

தமிழா தூங்காதே! கோடிகளுக்கு விலைபோகும் கெடுமதியாளர்கள் ஜாக்கிரதை!!

தமிழ்நாட்டின் மிகப் பல கட்சிக்காரர்களுக்குக் கொள்கை, லட்சியம் எல்லாம் இல்லை; கோடிகளுக்கு[நன்கொடையாகப் பெற்ற கறுப்புப் பணம்***] அதிபதிகளான ஆட்சியாளர்களிடம் ‘பேரம்’[கூட்டணியில் இணைய] பேசிக் கோடிகளை அள்ளுவதுதான் இவர்களின் நோக்கம்.

இந்த நோக்கத்துடன் இயங்கும் கட்சித் தலைவர்களில் முதலிடம் வகிப்பவர், எடப்பாடியார் எனப்படும் பழனிசாமியார். இவர் ‘பாஜக’வின் பழைய நிரந்தரக் கூட்டாளி. முன்பே பேசிமுடித்த பேரத்தின்படி, சுணக்கமில்லாமல் கோடிகளைப் பெற்றுக்கொள்ளும் கில்லாடி இவர்.

தேவைக்கும் சூழ்நிலைக்கும் ஏற்ப, இணைவதும் பிரிவதும் மீண்டும் இணைவதுமாக உள்ள கூட்டாளிகளில் ‘அமமுக’ தினகரன் ஒருவர். ஏதேதோ காரணங்களால் ‘பிகு பண்ணிக்கொண்டிருந்தவர், அண்மையில் ‘பேரம்[கோடிகளில்]’ படிந்ததால் அவர்களிடம் சரணடைந்துவிட்டார்.

ஓபிஎஸ், பிரேமலதா[காசு கொடுத்துக் கூட்டம் சேர்ப்பதில் வல்லவர்], சசிகலா, ஜி.கே.வாசன், ஜான் பாண்டியன் என்று தொண்டர்கள் இல்லாமல் தண்டத்துக்குக் கட்சி நடத்துபவர்களும் விரைவில் பேரம் முடிந்து அவர்களுடன் இணைய இருக்கிறார்கள்(அன்பு மணி ஏற்கனவே அடிமை மணி ஆகிவிட்டவர்). 

விசில் சின்னம் வழங்கப்பட்டதைக் கருத்தில் கொண்டு ஆராய்ந்தால், கோடி கோடிக்கு அதிபதியான கூத்தாடியும், ஆதிக்கச் சக்திகளுடன் மறைமுக ஒப்பந்தம் மூலம் தேர்தலில் போட்டியிட[‘திமுக’ கூட்டணியைத் தோற்கடிப்பதே இவர்கள் அனைவரின் லட்சியம்] வாய்ப்புள்ளது.

ஆக, கூட்டிக் கழித்துப் பார்த்தால், தமிழர்களின் தன்மான உணர்வை வேரறுக்க ‘அவர்கள்’ வகுத்துள்ள வியூகம் மிக வலிமையானது என்றே சொல்லலாம்.

தமிழர்கள் தீவிரமாகச் சிந்தித்துச் செயல்பட மறந்து தூங்கிக்கொண்டிருந்தால், தங்களின் சுயமரியாதையையும் தன்மானத்தையும் இழந்து, ஆதிக்க வெறியர்களுக்கு அடிமையாவது தவிர்க்கவே இயலாதது.

அதனால்தான் எச்சரிக்கிறோம்.....

தமிழா தூங்காதே! தேர்தல் நேரத்தில் குறட்டைவிட்டுத் தூங்கிவிடாதே!!

                                     ========================

***பா.ஜ.க விற்கு ஒரே ஆண்டில் 4340 கோடி அளவுக்கு நன்கொடை கிடைத்திருக்கிறது. காங்கிரஸ் கட்சிக்கு முந்தைய ஆண்டையவிட 171 சதவீதம் நன்கொடை கிடைத்திருக்கிறது> https://www.vikatan.com/government-and-politics/bjp-received-rs-4340-crore-as-donations-in-a-single-year-congress-donation-increased-by-171.