பொருள்களோ உயிர்களோ மாறாதவை என்று எவையும் இல்லை[அணுக்கள் உட்பட>https://www.google.com/search] உரு மாறி மாறி ஒரு கட்டத்தில் அழிந்துபோகின்றன.
மாற்றமோ அழிவோ இல்லாத ஒன்று உண்டா என்பது எவருக்கும் தெரியாது[ஆராய்ந்து கண்டறியப்படவில்லை].
ஆனாலும், அழிவே இல்லாத ஒன்று இருந்தால், அதை வழிபட்டுச் செத்தொழிந்த பின்னரும் ஏதோ ஒரு வடிவில்[கண்ணுக்குப் புலனாகாதது] வாழ்ந்திட ஆசைப்பட்டான் மனிதன்.
அதன் விளைவு.....
கற்பனை செய்வதில் முன்னிலை வகித்தவர்களை அவதாரங்கள் என்றும், மகான்கள் என்றும், ஞானிகள் என்றும் புகழ்ந்தான். அவர்களையும் ‘ஏறத்தாழ’ கடவுள்கள் ஆக்கினான்.
உண்மையில் கடவுளையோ ஆன்மாவையோ கண்டவரில்லை; பிறருக்குக் காட்டியவரும் இல்லை; உணர்ந்ததாகச் சொன்னவர் உண்டே தவிரப் பிறருக்கு உணர்த்தியவரும் இல்லை.
ஆசை காரணமாக இவன் கடவுளைக் கற்பித்ததன் விளைவு, குரங்கு[எங்கள் ஊர் குரங்குக் கடவுள் ‘ஆஞ்சநேயர்’ உலகப் புகழ் பெற்றவர். ஹி... ஹி... ஹி!!!], சிங்கம்[நரசிங்கம்] மயில், மாடு, கழுகு, நாய், பன்றி[வராகம்], பாம்பு போன்ற ஆறறிவில்லாத உயிரினங்கள் எல்லாம் கடவுள்களாக ஆக்கப்பட்டுவிட்டன.
மனிதன் மட்டும் ஆறறிவு இருந்தும் மிகப் பெரும்பாலான நேரங்களில் ஐந்தறிவு விலங்காகவே வாழ்ந்துகொண்டிருக்கிறான்.
பாவம் மனிதன்!

