எனது படம்
அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.

சனி, 31 மே, 2025

‘டாக்டர் ராமதாசா, அன்புமணியா?’... எவருடைய சேவை தமிழினத்திற்குத் தேவை?

டாக்டர் ராமதாஸ் ஆகிய தந்தைக்கும் அவரின் மகனான அன்புமணிக்கும் இடையேயான, 'பாமக' கட்சியின் தலைமைப் பதவிக்கான மோதல் நீடிக்கும் நிலையில், நம் முன்னே எழும் கேள்வி.....

“மோதலின் முடிவு எதுவாகவோ இருக்கட்டும், இந்த இருவரில் எவருடைய சேவை தமிழ் மக்களுக்குத் தேவை?”

டாக்டர் ராமதாசு(சாதிப் பற்று உள்ளவர் எனினும்> இல்லாதவர் எவர்?)அளப்பரிய தமிழ் மொழிப் பற்றும் தமிழினப் பற்றும் கொண்டவர்[அவருடையை தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள் ஒரு பொருட்டல்ல> அவற்றால் பாதிப்புக்குள்ளாவது அவரின் சொந்தபந்தங்கள் மட்டுமே]; தமிழினம் எக்காலத்திலும் எக்காரணத்தைக்கொண்டும் தன் சுயமரியாதையை இழத்தல் கூடாது என்று எண்ணுபவர்.

அன்புமணி[டாக்டர்தான்] சுயநலவாதி; இந்தச் சுயநலம்தான், ஆளுநன் மூலம் அடாத செயல்களில் ஈடுபட்டு, தமிழர்களின் வளர்ச்சியைத் தடுத்து, தமிழினத்தை அடிமைப்படுத்த முயலும் ‘பாஜக’வுடன், பதவிக்காகக் கூட்டணி சேர்ந்து, அதற்குச் சேவகம் செய்ய அவரைத் தூண்டுகிறது.

இருவருக்கும் இடையேயான இந்த மலையளவு வேறுபாடு, நம் இனப் பாதுகாப்புக்குப் பாடுபடுபவர் மருத்துவர் ராமதாசுதான் என்பதை உறுதிப்படுத்துகிறது.

வெல்க தமிழின உணர்வாளர் மருத்துவர் ராமதாசு!

ஆளுநன் என்னும் ‘அரை லூசன்’க்கு எதற்குத் திருக்குறள் ஆராய்ச்சி!?!?!

ல்லாத ‘ஆன்மா’வைப் பற்றியும் அதனுடன் தொடர்புடைய கடவுள் குறித்தும் கதையளப்பதுதான் ஆன்மிகம்.

இதன் பெயரால் மக்கள் மனங்களில் திணிக்கப்பட்ட மூடநம்பிக்கைகளுக்கு அளவே இல்லை.

அவற்றிலிருந்து விடுபட்டு வாழ்வாங்கு வாழ்வதற்குத் தேவையான சிந்திக்கும் அறிவைத் தூண்டுவதே திருக்குறள் என்னும் உலகம் போற்றும் திறனாய்வு நூல்.

அடிக்கல் நாட்ட வந்த ஆளுநன் ஆர்.என்.ரவி திருக்குறள் ‘முக்தி’ பற்றிப் பேசுகிறது என்றும், ஆன்மிகத்திலிருந்து திருக்குறளைப் பிரிக்க முடியாது என்றும் பேசியிருப்பது அடாவடித்தனம்; கடும் கண்டனத்திற்குரியதும் ஆகும். 

மனம்போன போக்கில் உளறிக்கொட்டுவதை வழக்கமாக்கிக்கொண்டுள்ள இந்த நபர்[தமிழ் தெரியாது], தன் தாய்மொழியான பீகாரியில் உள்ள, சனாதனம் போற்றும் ஆன்மிக நூல்கள் பற்றிக் கதையளக்கலாம். எவரும் கண்டுகொள்ளமாட்டார்கள்.

இனியும் திருக்குறள் போன்ற அரிய நூல்கள் குறித்து, சனாதனிகள்கள் எழுதிக்கொடுப்பதை மேடையேறி ஒப்பித்துத் தமிழர்களின் வெறுப்புக்கு ஆளாக வேண்டாம் என்பது இந்த ஆளுக்கான நம் அறிவுறுத்தல்.

விவாதத்திற்குரிய கருத்துகள்[கடவுள், மறுபிறப்பு> சம்பந்தப்பட்டவை] வெகு அரிதாக இடம்பெற்றிருந்தாலும், திருக்குறள் ஆன்மிக நூல் அல்ல; உலக அறிஞர்களால் போற்றப்படும் ஆகச் சிறந்த வாழ்வியல் நூல் என்பதே உண்மை.