ஞாயிறு, 30 ஜூன், 2019

மலரும் மணமும்!

அதோ ஒரு பூ.

ஒரு முறை அதைக் கடந்து போனேன்;

மீண்டுவந்து 

பறித்து முகர்ந்தேன்;

தரையில் போட்டு மிதித்தேன்.

சிறு சிறு துகள்களாக்

கிள்ளிக் கிள்ளி வீசினேன்.

பொறுக்கி எடுத்து நசுக்கினேன்;

கசக்கினேன்.

என்ன செய்தும்.....

அதை முகர்ந்தபோது

கமகமத்து மணம் பரப்பியது.

பெற்ற தாயின் நினைப்பு வந்தது!
==================================================================================
''சிற்றகல்'' என்னும் கவிதைத் தொகுப்பிலிருந்து[கண்ணதாசன் பதிப்பகம்; முதல் பதிப்பு: 2013] சுட்டு, சில மாற்றங்களுடன் பதிவு செய்திருக்கிறேன். கவிதை படைத்த 'நாகூர் ரூமி'[க்கு நன்றி] என்னை மன்னிப்பாராக. 

வெள்ளி, 28 ஜூன், 2019

அடேய்!...திருந்துங்கடா!! திருந்த விடுங்கடா!!!

27.06.2019 இல் ஒரு நாளிதழில் வெளியான, ஒரு  வாசகியின் கேள்விக்கான பதில் இது.

விரல் நுனியில் லட்சுமி; உள்ளங்கையில் சரஸ்வதி; மணிக்கட்டில் பார்வதி எனப்படும் பெண் தெய்வங்கள் தங்கியிருக்காங்களாம். எந்த மகான் இதையெல்லாம் கண்டுபிடித்துச் சொன்னார்? புருடா விடுகிற புண்ணியவானே, சொல்லுவீரா?

மனிதர்களின் மூக்கு நுனியில் முருகப் பெருமானும், காது மடலில் யானைக் காது கொண்ட பிள்ளையாரும், நெற்றிப் பொட்டில் மகாவிட்ணுவும், கழுத்துக் குழியில் பிரம்மதேவனும், கால் பாதங்களில் அனைத்துக்கும் மூலகாரணமானவனான சிவபெருமானும் தங்கியிருக்கிறார்கள் என்று பழைய புராணம் ஒன்று சொல்வதாக நான் சொல்கிறேன். மறுக்க முடியுமா உம்மால்?

உம்மைப் போன்றவர்கள்ஆயிரக் கணக்கில் பொய்க் கதைகளைப் பரப்பித்தான் மக்களை அடிமடையர்கள் ஆக்கியிருக்கிறார்கள். இந்த அறிவியல் யுகத்திலும் இவ்வாறான புனைகதைகளை நீங்கள் பரப்புரை செய்வதன்  உள்நோக்கம்தான் என்ன?

மக்கள் மூடநம்பிக்கைகளிலிருந்து விடுபட்டுவிடக் கூடாது என்பதுதானே?

போலி ஆன்மிகம் பேசிப் பிழைப்பு நடத்துவதுதானே?

பாவிகளா, இனியேனும் திருந்துங்கள்; மக்களிடமிருந்து விலகிச் செல்லுங்கள். அவர்கள் சுதந்திரமாகச் சிந்திக்கட்டும்; மூடநம்பிக்கைகளிலிருந்து விடுபடட்டும்.
=======================================================







வியாழன், 27 ஜூன், 2019

வருது வருது...படம் எடுத்தால் மொழிபெயர்க்கும் 'கூகுள் லென்ஸ்' வருது!!!

நீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது உங்களுக்குக் கொஞ்சமும் புரியாத ஒரு மொழியின் வரிவடிவமா? அதைப் புரிந்துகொள்வது அப்போதைக்கு மிக அவசியம் என்றிருந்து, மொழிபெயர்த்துச் சொல்லவும் அருகில் எவரும் இல்லையாயின்.....

கவலைப்படத் தேவையில்லை. கூகுள் லென்ஸ் உங்களுக்கு உதவக் காத்திருக்கிறது. நீங்கள் செய்ய வேண்டியது, அதற்கான செயலியைப் பதிவிறக்கம் செய்து உங்கள் பேசியில் நிறுவுவது மட்டுமே.

தகவல் உதவி:

புதன், 26 ஜூன், 2019

அமேசான் கிண்டிலில் நான் எழுதிய புதிய நூல்.....

அமேசான் கிண்டிலில் இன்று[26.06.2019] நான் பதிப்பித்துள்ள [18 ஆவது] நூல்:

வாருங்கள்...சாகும்வரை சிந்திக்கலாம்!!!: ஆகச் சிறந்த 17 நூல்களின் முன்னுரைத் தொகுப்பு (Tamil Edition)
Free with Kindle Unlimited membership
Or ₹49 to buy
---------------------------------------------------------------------------------------


செவ்வாய், 25 ஜூன், 2019

ஒரு பின்னூட்டமே பதிவாக.....

திரு.GMB[பதிவர்] அவர்களின் 'கடவுள்' குறித்த ஒரு பதிவு[http://gmbat1649.blogspot.com/]க்கு நான் எழுதிய பின்னூட்டம்[கருத்துரை], தனிப்பதிவாக வெளியிடுதற்கு ஏற்புடையது என்பதால் அதை இங்கு பதிவு செய்கிறேன்.

ந்தவொரு அளவுகோலுக்கும் கட்டுப்படாத பிரபஞ்சம்[கோள்கள், நட்சத்திரங்கள், உயிர்கள் என்று எதையெதையோ உள்ளடக்கியது] இயங்கிக்கொண்டிருக்கிறது என்பது மட்டுமே மனித அறிவால் அறியப்பட்டுள்ளது.

இந்தப் பிரபஞ்சத்தின் தோற்றம் எப்போது தொடங்கியது? தோன்றவெல்லாம் இல்லை; எப்போதும் இருந்துகொண்டே[இயங்கிக்கொண்டே] இருக்கிறது என்றால் அது எப்படிச் சாத்தியமாயிற்று?

இதன் தோற்றம், அல்லது இருந்துகொண்டே இருப்பது எதற்காக?

இனி எப்போதும் இதற்கு அழிவே இல்லையா?

இந்தப் பிரபஞ்சத்திலுள்ள பூமியில் உயிர்கள் தோன்றுவதும் வாழ்வதும் அழிவதுமாக இருப்பது ஏன்?

இப்படி, இன்னும் பல விடை தெரியாத கேள்விகளுக்கிடையே, கடவுள் என்று ஒருவரைக் கற்பித்து, அவர் அளப்பரிய ஆற்றலும் கருணையும் கொண்டவர் என்றெல்லாம் கொண்டாடுவது அறியாமையின் உச்சம். 

அடுக்கடுக்கான துன்பங்களை எதிர்கொள்ள இயலாத நிலையில், மரணத்திற்குப் பின்னர் என்ன என்பது புரியாமல் மயங்கும் மனிதர்களுக்குக் கடவுள் தேவைப்படுகிறார் என்பது மட்டுமே உண்மை.
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

ஞாயிறு, 23 ஜூன், 2019

இதுவல்லவோ கவிதை!

வை செல்வந்தர் வீட்டில் வளரும் கொழுகொழு நாய்களல்ல; ஒரு வேளை உணவுக்கே வழியில்லாமல் போவோர் வருவுவோர் பின்னே வாலாட்டிக் குழையும் தெரு நாய்கள். அவ்வப்போது கண்ட கண்ட பேர்வழிகளிடம் கல்லடி வாங்கும் பாவப்பட்ட ஜீவன்கள்.

'கிளு கிளு' கன்னியரை வர்ணித்துக் கவிதை எழுதாத கவிஞர்களே இல்லை. இந்தத் தெரு நாய்களைப் பற்றி யாரேனும் கவிதை படைத்திருக்கிறார்களா?

காசாவயல் கண்ணன் எழுதிய, 'நடைபாதை நண்பர்கள்' என்னும் தலைப்பிலான ஒரு கவிதையை['காமதேனு'30 ஜூன் 2019] வார இதழில் வாசித்து மனம் நெகிழ்ந்தேன். உங்களுக்காக இங்கு பதிவு செய்கிறேன்.
#வீட்டு நாய்களைப் போல
விருப்பப் பெயரெல்லாம் இருக்காது.
தெருநாய் என்ற பொதுப்பெயர்
மட்டும்தான் அவற்றுக்கு.
பல நாள் கழித்துப் பார்த்த
பால்ய நண்பனைப் போல்
வாஞ்சை காட்டும் ஒரு நாய்.
முன்னாள் காதலியாய்
ஓரக்கண்ணால் பார்த்து
ஒதுங்கிப்போகும் மற்றொரு நாய்.
தாயிடம் முட்டி முட்டிப்
பால் குடித்த ஞாபகத்தில்
என் கால் விரல்களை
விருட் விருட்டென்று
சப்பும் குட்டிநாய்.
நாய்கள் இல்லாத 
வீதிகள் இல்லை.
நாய்கள் இல்லாத வீதிகள்
வீதிகளே அல்ல#
==================================================================================
நன்றி: காசாவயல் கண்ணன்
ன்றி: 'காமதேனு' வார இதழ்


வெள்ளி, 21 ஜூன், 2019

உலக மகா.....புருடா மன்னர்கள்![சுட்டது]

தற்செயலாக, நேற்று[14.02.2018] 'கலைமகள்'[பிப்ரவரி,2018]' மாத இதழை வாசிக்க நேர்ந்தது. 'தாமிரவருணி கேள்வி-பதில்' பகுதியில் இடம்பெற்றிருந்த ஒரு கேள்வியும் அதற்கான பதிலும் என் கவனத்தை வெகுவாகக் கவர்ந்தன. வாசியுங்கள்.....


நம் முன்னோர்கள் எழுதி வைத்தது நாடி ஜோதிடமாம். சரி.

பிற்கால மனிதர்கள் பற்றி எழுதியிருப்பதாகச் சொல்கிறார்கள். 'பிற்காலம்' என்பதற்கு வரையறை என்ன? அத்தப் பிற்காலம் எத்தனை ஆண்டுகளை உள்ளடக்கியது? அவை கோடானுகோடி ஆண்டுகளா? கோடானுகோடி யுகங்களா?

நிலவுலகம் உள்ளவரை பிறந்து வாழ்ந்து மடிகிற அத்தனை மனிதர்களைப் பற்றியும்[ஆயுள், மனைவி, வாரிசுகள், சாதனைகள், வேதனைகள் என்றிப்படி] எழுதி வைத்திருக்கிறார்களா?

பிற்கால மனிதர்களுக்கு என்று 'பொத்தாம் பொதுவா' அடித்துவிட்டு, வாழ்ந்துகொண்டிருகிற அத்தனை பேர்களையும் மூடர்கள் ஆக்குகிறார்கள்.

வாழ்ந்துகொண்டிருக்கிற, இனி பிறந்து வாழவிருக்கிற அவ்வளவு பேருக்கும் சுவடிகள் உள்ளனவென்றால், அவற்றின் எண்ணிக்கை என்ன? அவை யாரிடமெல்லாம் உள்ளன? எங்கெல்லாம் சேமித்து வைக்கப்பட்டுள்ளன?

இந்த விவரங்கள் எல்லாம், அனைத்து உலகங்களையும் உயிர்களையும் படைத்தவர் என்று சொல்லப்படும் கடவுளுக்காவது தெரியுமா?

'பிரபஞ்சம் முழுமைக்கும்' என்கிறார்கள். எந்தவித அளவுகோல்களால் யாரெல்லாம் இந்தப் பிரபஞ்சத்தின் பரப்பைக் கணக்கிட்டிருக்கிறார்கள் என்பதற்கு இவர்கள் ஒரு பட்டியல் தருவார்களா?

இவர்கள் அள்ளி இறைக்கும் புளுகுகளுக்கு அளவே இல்லையே!!!

இவர்களின் இழி செயலைத் தட்டிக் கேட்பார் எவருமில்லையா?

ஆன்மிக வேடம் புனைந்து பொய் சொல்லி, மக்களை மூடர்கள் ஆக்கிப் பிழைப்பு நடத்தும் இவர்கள் மீது நடவடிக்கை எடுத்துத் தண்டனை வழங்க அரசியல் சட்டத்தில் இடமேதும் இல்லையா?

புதன், 19 ஜூன், 2019

மனைவி போட்ட தலையணை மந்திரம்!!

என் நண்பனுக்குத் திருமண ஆன புதிதில் நடந்த சுவைமிகு  நிகழ்ச்சி. அவனே சொன்னது!

ன்று ஞாயிற்றுக் கிழமை. புலால் வாங்கிவரப் புறப்பட்ட என்னைத் தேக்கி, “அத்தைக்கும் மாமாவுக்கும் மட்டும் வாங்கி வாங்க” என்றாள் என் மனைவி.

“ஏன்.....நமக்கு?” 

“வேண்டாம்.”

இன்னொரு ‘ஏன்?’ஐ முன்வைத்தேன் நான்.

“நீங்க ரொம்ப வருசமா அசைவம் சாப்பிடாம இருந்தீங்களாம். நான் வந்ததும் தலையணை மந்திரம் போட்டு உங்களைச் சாப்பிடப் பண்ணிட்டேனாம். என் மேல அபாண்டமா பழி சுமத்துறாங்க. நீங்க சைவத்துக்கே மாறிடுங்க” என்றாள் என்னவள், வருத்தமும் கோபமும் விரவிய குரலில்.

“பழி போட்டது யாரு?”

“உங்க அம்மாவும் அப்பாவும்தான்.” 

“வத்தி வெச்சது யாரு?”

“யாரும் வைக்கல. அவங்க பேசினதை நானே ஒட்டுக் கேட்டேன்.”

“‘அது’ விசயத்தில் அலைபாயுற மனசைக் கட்டுப்படுத்துறதுக்காகக் கல்யாணம் ஆகும்வரை அசைவம் சாப்பிடுறதில்லேன்னு முடிவு பண்ணியிருந்தேன். அவங்க காரணம் கேட்டாங்க. பெத்தவங்ககிட்ட இதைச் சொல்ல முடியுமா?  வெறுமனே பிடிக்கலேன்னு சொல்லி மழுப்பிட்டேன். நீ வந்தப்புறம் கட்டுப்பாடு இல்லாம சாப்பிட ஆரம்பிச்சுட்டேன். என் மன மாற்றத்துக்கான உண்மைக் காரணம் தெரியாததால உன்னைத்  தப்பப் புரிஞ்சுகிட்டாங்க. மத்தபடி, உன் மேல ரொம்பவே பாசம் உள்ளவங்க. நடந்ததை மறந்துடு” என்றேன்.

“சரிங்க” என்றாள் என் இல்லத்தரசி, தெளிந்த மனதுடன். 
=================================================================================

ஞாயிறு, 16 ஜூன், 2019

அமேசான் கிண்டிலில் 'பசி'பரமசிவம் நூல்கள்

48. சிற்றின்பமும் சிறு சிறு இன்பங்களும்!: [சிந்திக்கத் தூண்டும் வாழ்வியல் கட்டுரைகள்] (Tamil Edition)

Tamil Edition | by ‘பசி’பரமசிவம்  | Sep 23, 2023


1. காமம் பொல்லாதது: பாலுணர்வுச் சிறுகதைகள் (Tamil Edition)


2. கானல்நீர்க் கடவுள்கள்!!!: பக்திவெறியரைப் பகுத்தறிவாளராக்கும் பதிவுகள் (Tamil Edition)

3. அடடா இந்தப் பெண்கள்!!!: சிலிர்ப்பூட்டும் சிறுகதைகள் (Tamil Edition)

4. சிரிக்கச் சிரிக்கச் சிரிப்பு வருது!: புத்துணர்ச்சிக் கதைகள் (Tamil Editio

5. பத்து ரூபாயில் கடவுள்: சிறுகதைகள் (Tamil Edition)

6. உள்ளுறை காமம்: குறும்புதினம் (Tamil Edition)

7. மசுரு விதி (Tamil Edition)

8. ஜோதிடச் சனி!: ஜோதிடம் குறித்த அசத்தல் ஆராய்ச்சி (Tamil Edition)

9. 100% உண்மைக் கதைகள்: சிறுகதைகள் (Tamil Edition)

10. விந்து சுமப்பவன்: பிரபஞ்சப் புதிர்கள் குறித்த சாமானியனின் சிந்தனைகள் (Tamil Edition)

11. 'சுருக்'...'நறுக்' வாழ்வியல் கதைகள் (Tamil Edition)

12. ஓடி ஒளியும் ஆன்மாவும் தேடி அலையும் மனிதகுலமும் (Tamil Edition)

13. சாகாத சாமிகளும் சாகப் பிறந்த மனிதர்களும்: அறிவுஜீவிகளுக்கான ஓர் அறிவுஜீவியின் ஆய்வுரைகள் (Tamil Edition)

14. மூடர் யுகம்: மூடர் யுகம் மூடர் யுகம் மூடர் யுகம் (Tamil Edition)

15. பொல்லாத மரணமும் புரியாத உயிரின் இருப்பும் (Tamil Edition)

16. நான் இன்னொரு ஹிரண்யன்!!!: சுய சிந்தனைத் தொகுப்பு (Tamil Edition)

17. வாருங்கள்...சாகும்வரை சிந்திக்கலாம்!!!: ஆகச் சிறந்த 17 நூல்களின் முன்னுரைத் தொகுப்பு (Tamil Edition)

18. மருட்டும் மகான்களும் அச்சுறுத்தும் அவதாரங்களும்!: சிந்திக்கத் தூண்டும் ‘சுரீர்’ விமர்சனங்கள்! (Tamil Edition)

19. செல்லம்மா தேவி: [நாவல்] (Tamil Edition)

20. அம்மம்மா...அம்மா!!!: குறுநாவல் (Tamil Edition)

21. கிளு கிளு’...‘குளு குளு’ கதைகள் (Tamil Edition)

22. நான் மூடன்! நீங்கள்? (Tamil Edition)

23. கொங்குநாட்டுப் பங்காளிகளின் கதைகள்: நான்கு சிறு கதைகளின் தொகுப்பு (Tamil Edition)

24. சாத்தானே என் கடவுள்!!! (Tamil Edition)

25. ஒரு பக்கக் கதைகளில் ஒரு புரட்சி!!! (Tamil Edition)

26. நான் கேள்வியின் நாயகன்! (Tamil Edition)

27. சிலிர்ப்பூட்டும் 20ஆம் நூற்றாண்டுத் தமிழ்ச் சிறுகதைகள்! (Tamil Edition)

28. தமிழா தூங்குடா! தூங்கு!! (Tamil Edition)

29. சதையும் கதையும் (Tamil Edition)

30. பக்தி படு[ம்]த்தும் பாடு! (Tamil Edition)

31. அற்ப ஆயுளில் ‘கற்பு’ !!! (Tamil Edition)

32. நாத்திகம் போற்றுவோம்! (Tamil Edition)

33. காமத்திலிருந்து தியானத்திற்கு! (Tamil Edition)







41.

ஒரு தாசி தாரம் ஆன கதை!!!: [1 கதையும் 4 கட்டுரைகளும்] (Tamil Edition)


42. 

கருணைக் கடவுள்களும் முதுகு சொறிதலும்! (Tamil Edition)

Tamil Edition | by 'பசி'பரமசிவம்  | Aug 25, 2022

43. 

காமம் கற்பீர்!!!: [பாலுறவில் விழிப்புணர்வூட்டும் புதினம்] (Tamil Edition)

Tamil Edition



46. 
47. 

அவனும் அவளும் ஒரு முறை உடலுறவும்!: [சிறுகதைகள்] (Tamil Edition)

Tamil Edition | by ‘பசி’பரமசிவம் | Jun 

48. 

சிற்றின்பமும் சிறு சிறு இன்பங்களும்!: [சிந்திக்கத் தூண்டும் வாழ்வியல் கட்டுரைகள்] (Tamil Edition)

Tamil Edition | by ‘பசி’பரமசிவம்  | Sep 23, 2023




48. 

சிற்றின்பமும் சிறு சிறு இன்பங்களும்!: [சிந்திக்கத் தூண்டும் வாழ்வியல் கட்டுரைகள்] (Tamil Edition)

Tamil Edition | by ‘பசி’பரமசிவம்  | Sep 23, 2023

48. சிற்றின்பமும் சிறு சிறு இன்பங்களும்!

48. 


48. 

48. சிற்றின்பமும் சிறு சிறு இன்பங்களும்!

48. 

சிற்றின்பமும் சிறு சிறு இன்பங்களும்!: [சிந்திக்கத் தூண்டும் 

வாழ்வியல் கட்டுரைகள்] (Tamil Edition)

Tamil Edition | by ‘பசி’பரமசிவம்  | Sep 23, 2023

48. 

சிற்றின்பமும் சிறு சிறு இன்பங்களும்!: [சிந்திக்கத் தூண்டும் வாழ்வியல் கட்டுரைகள்] (Tamil Edition) Kindle Edition


48.

சிற்றின்பமும் சிறு சிறு இன்பங்களும்!: [சிந்திக்கத் தூண்டும் வாழ்வியல் கட்டுரைகள்] (Tamil Edition)

Tamil Edition | by ‘பசி’பரமசிவம்  | Sep 23, 2023

48.

சிற்றின்பமும் சிறு சிறு இன்பங்களும்!: [சிந்திக்கத் தூண்டும் வாழ்வியல் கட்டுரைகள்] (Tamil Edition)

Tamil Edition | by ‘பசி’பரமசிவம்  | Sep 23, 2023

48.

சிற்றின்பமும் சிறு சிறு இன்பங்களும்!: [சிந்திக்கத் தூண்டும் வாழ்வியல் கட்டுரைகள்] (Tamil Edition)

Tamil Edition | by ‘பசி’பரமசிவம்  | Sep 23, 2023

48.

சிற்றின்பமும் சிறு சிறு இன்பங்களும்!: [சிந்திக்கத் தூண்டும் வாழ்வியல் கட்டுரைகள்] (Tamil Edition)


48. 

சிற்றின்பமும் சிறு சிறு இன்பங்களும்!: [சிந்திக்கத் தூண்டும் வாழ்வியல் கட்டுரைகள்] (Tamil Edition)












நூல்களுக்கான மேற்கண்ட இணைப்புகளைச்[Link] சொடுக்கி, நூல்களின் முன்னோட்ட உரைகளை[Free Sample] நீங்கள் வாசிக்கலாம்.

நன்றி.