அதோ ஒரு பூ.
ஒரு முறை அதைக் கடந்து போனேன்;
மீண்டுவந்து
மீண்டுவந்து
பறித்து முகர்ந்தேன்;
தரையில் போட்டு மிதித்தேன்.
தரையில் போட்டு மிதித்தேன்.
சிறு சிறு துகள்களாக்
கிள்ளிக் கிள்ளி வீசினேன்.
பொறுக்கி எடுத்து நசுக்கினேன்;
கசக்கினேன்.
என்ன செய்தும்.....
அதை முகர்ந்தபோது
கமகமத்து மணம் பரப்பியது.
பெற்ற தாயின் நினைப்பு வந்தது!
==================================================================================
==================================================================================
''சிற்றகல்'' என்னும் கவிதைத் தொகுப்பிலிருந்து[கண்ணதாசன் பதிப்பகம்; முதல் பதிப்பு: 2013] சுட்டு, சில மாற்றங்களுடன் பதிவு செய்திருக்கிறேன். கவிதை படைத்த 'நாகூர் ரூமி'[க்கு நன்றி] என்னை மன்னிப்பாராக.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக