1] பெயர்: ...........................................கடவுள்.
2] சிறப்புப் பெயர்கள்:...................சொல்லி மாளாது!
[பக்தர்கள் சூட்டியவை] [’ஆதி மூலன்’, ’ஆபத்பாந்தவன்’
, ‘கருணைக் கடல்’ என்றிவ்வாறான
நாமங்களையும், மதம்
சார்ந்த பெயர்களையும் நினைவு
கூர்க]
3] பிறந்த தேதி:.............................தான் அவதரித்த அந்தப் புனித
மான நாளைக் கண்டறிய, யுக
யுக யுகங்ளாக ...கோடி கோடி
கோடி ஒளி ஆண்டுகளாகச்
சிந்தித்துக் கொண்டிருக்கிறார்
கடவுள்.
4] கல்வித் தகுதி:.........................அனைத்தும் அறிந்தவர்.
5] தொழில்:...................................அளந்தறிய இயலாத, விரிந்து
பரந்த ‘வெளி’யில் கணக்கில்
அடங்காத கோள்களையும்
நட்சத்திரங்களையும் பிற
வற்றையும் படைத்து உலவச்
செய்து, அவ்வப்போது அவற்றை
மோத விட்டு, அவை வெடித்துச்
சிதறும் கண்கொள்ளாக் காட்சி
யைக் கண்டுகண்டு ரசிப்பது.
மண்ணுலகில், உயிர்கள் ஒன்றோடு
ஒன்று மோதித் துன்புற்று அழிவதை
யும், வறுமை, நோய் போன்றவற்றால் சித்திரவதைக்கு உள்ளாவதையும் வேடிக்கை பார்ப்பது.
6] நண்பர்கள்:................................காணிக்கை செலுத்தியும், நேர்த்திக்
கடன்களை நிறைவேற்றியும், “இதைக்
கொடு...அதைத் தா” என்று தொல்லைக்கு
உள்ளாக்காதவர்கள்.
7] நல்ல நண்பர்கள்:..................அடுக்கடுக்கான வேதனைகளுக்கு
உள்ளானாலும் கடவுளை ஏசாமல்
“எல்லாம் என் தலைவிதி” என்று
தன்னைத்தானே நொந்து கொண்டு
நடைப் பிணமாய்க் காலம் கழிப்ப
வர்கள்.
8] எதிரிகள்:..................................கடவுள் இல்லை என்று சொல்லி,
மூடநம்பிக்கைகளைச் சாடும்
நாத்திகர்கள் அல்ல.
கடவுளைக் காப்பதாகச் சொல்லிக்
கொண்டு, மாற்று மதத்தவர்களைக்
கொன்று குவித்து, அவர்களின்
சொத்துகளை நாசப்படுத்தி, மிருகங்
களாய்த் திரியும் மதவெறியர்கள்.
9] நிரந்தர எதிரிகள்:.................“நானே கடவுள்” என்று சொல்லித்
தினவெடுத்து அலையும் புதுப்
புது ‘அவதாரங்கள்’.
10] இப்போதைய கவலை:..... தம் படைப்பில் நேர்ந்த தவறுகளை
நீக்குவதற்காக, மனிதனுக்குத் தந்த
ஆறாவது அறிவை, அவன் தன்
சுயநலத்துக்காகப் பயன்படுத்துவது.
11] நிரந்தரக் கவலை:.............படைத்தல், காத்தல், அழித்தல்
ஆகிய தமக்குரிய முத்தொழிலை
இன்னும் எவ்வளவு காலத்துக்குச்
செய்வது?
*******************************************************************************************************************************