சனி, 31 மார்ச், 2018

'ஆன்மிக அரசியல்வாதி' சொன்னது குட்டிக்கதையா, வெட்டிக்கதையா?!

ஓர் எழுத்தாளருக்கு, உயிர்மைப் பதிப்பகம் சார்பில் சென்னையில்  பாராட்டு விழா நடந்ததாம். அதில் கலந்துகொண்டு பேசிய ஆன்மிக அரசியல்வாதி ஒரு குட்டிக்கதையும் சொன்னாராம். 
[ஆதாரம்: webdunia வெள்ளி, 30 மார்ச் 2018] 

அந்த அரசியல்வாதி சொன்ன குட்டிக்கதை? படியுங்கள்.

#சமீபத்தில் நான் படித்த புத்தகத்தில் இருந்த கதை. ஒரு தனி விமானத்தில் விஞ்ஞானிகள் பயணம் செய்து கொண்டு இருக்கிறார்கள். அப்போது ஒருவர் மட்டும் பைபிளைப் படித்துக் கொண்டு இருந்தார்.

அவரைப் பார்த்து மற்றொரு விஞ்ஞானி, ''இப்போது உள்ள அறிவியல் உலகத்தில் கடவுள், பைபிள் என்று படித்துக் கொண்டு இருக்கிறீரே?'' என்று கேட்டு, தனது முகவரியை கொடுத்து, ''இனியாவது கடவுளைத் தூக்கிப் போட்டுவிட்டு, என்னை வந்து சந்தியுங்கள்'' என்று கூறிவிட்டுச் சென்றார்.

விமானம் தரை இறங்கியவுடன் மீண்டும் அவரைச் சந்தித்த விஞ்ஞானி, ''உங்கள் முகவரியை கொடுங்கள். நான் முடிந்தால் வந்து பார்க்கிறேன்'' என்றார். 

அவரும் தனது விசிட்டிங் கார்டைக் கொடுத்தார். அதில் 'தாமஸ் ஆல்வா எடிசன்' என்று இருந்தது. உடனே அவரிடம் மன்னிப்புக் கேட்டதுடன், அவரைத் தனியாக வீட்டில் சந்திக்க நாளையும் பெற்றுக்கொண்டு சென்றார்.

குறிப்பிட்ட நாளில் அந்த விஞ்ஞானி தாமஸ் ஆல்வா எடிசனின்   வீட்டுக்குச்  சென்றார்.   அங்கு ஏராளமான கண்டுபிடிப்புகள் இருந்தன. அவற்றைப் பார்த்து, ''நீங்கள்தானே இதையெல்லாம் செய்தது?'' என்று கேட்டார். அதற்கு எடிசன்,   ''இல்லை.   நான் ஒரு நாள் வெளியில்   சென்றுவிட்டு,   மீண்டும்வந்து   வீட்டுக்   கதவைத் திறந்தபோது இதெல்லாம் இருந்தது'' என்றார்.

''படைப்பு இருந்தால் கண்டிப்பாகப் படைப்பாளியும் இருப்பார்'' என்று விஞ்ஞானி கூறினார்[ஒப்புக்கொண்டார்]. பின்னர் தாமஸ் ஆல்வா எடிசன், அவற்றைக் கண்டுபிடித்தவர் தான்தான் என்று உண்மையைச் சொன்னார்.

இதைக் கதையாக நினைக்க வேண்டாம். விஞ்ஞானி கூறியதைச் சிந்தித்து பார்க்க வேண்டும். படைப்பு என்று ஒன்று இருந்தால் அதைப் படைத்த படைப்பாளியும் கண்டிப்பாக இருப்பார். எனவே கடவுள் இருப்பது உண்மை. கடவுள் இருக்கிறார் என்பதைக் கூற இந்தக் கதை ஓட்டம் பயன்படுத்தப்பட்டு உள்ளது எ‌ன்று ர‌ஜி‌னிகா‌ந்‌த் கூ‌றினா‌ர்#

ஆன்மிக அரசியல்வாதி ரஜினி அவர்கள் கதையை இன்னும் தெளிவாகச் சொல்லியிருக்க வேண்டும். பரவாயில்லை. நமக்கெல்லாம் தெரிந்த கதைதான் இது.
கதையில், ''விஞ்ஞான யுகத்தில் கடவுள், பைபிள் என்றெல்லாம் படித்துக்கொண்டிருக்கிறீரே'' என்ற விஞ்ஞானியின் பேச்சு அவர் கடவுள் மறுப்பாளர் என்பதை எடிசனுக்குப் புரிய வைக்கிறது.

அவர் தன் வீடு தேடி வந்த நிலையில் அவரிடம், தன் கண்டுபிடிப்புகள் தானாகத் தோன்றின என்று கிண்டலாகச் சொன்னதன் மூலம் எந்தவொரு பொருளும் தானாகத் தோன்றாது என்பதை உணர வைக்கிறார் எடிசன்.

எடிசன் உணர்த்த நினைத்ததை உணர்ந்த அந்த விஞ்ஞானியும், ''படைப்பு என்று ஒன்று இருந்தால் படைப்பாளியும் இருப்பார்'' என்று சொல்லிக் கடவுள் இருப்பதை ஒப்புக்கொண்டதாகக் கதை பின்னப்பட்டிருக்கிறது. நாம் ரஜினிக்குச் சொல்ல நினைப்பது ஒன்று உண்டு.

ரஜினி அவர்களே,.

படைப்புத் தத்துவத்தும்கிறது இன்னிக்கி வரைக்கும் ஒரு பிடிபடாத தத்துவமாவே இருக்கு. பெரிய பெரிய தத்துவ ஞானிகள்னு சொல்லப்பட்டவங்க எல்லாம் இதுக்குக் காற்புள்ளி வெச்சிட்டுப் போயிருக்காங்களே தவிர முற்றுப்புள்ளி வைச்சவங்க யாருமில்ல. எடிசனும் ஒரு காற்புள்ளிதான் வைச்சுட்டுப் போனார். ஆயிரத்துக்கும் மேற்பட்ட கண்டுபிடிப்புகளை நிகழ்த்திய விஞ்ஞானியான அவர் கடவுளை நம்புறார்னா நாமும் நம்பணும்கிறது கட்டாயம் இல்லை. புரிஞ்சுக்குங்க. 

போகிற போக்கில், ''நான் ஒரு தடவை சொன்னா நூறு தடவை சொன்ன மாதிரி''ன்னு சொல்லியெல்லாம் கைதட்டல் வாங்கிட முடியாது. ஒரு தடவை சொன்னது எப்படி நூறு தடவை சொன்னதா ஆச்சுன்னு ஆதாரபூர்வமா விளக்கணும்.

எல்லார்த்தையும் கடவுள் படைச்சார்னா, கடவுளைப் படைச்சவர் யார்ங்கிற கேள்விக்குப் பதில் சொல்லியாகணும். அவர் தாமாகத் தோனறினார்னோ, இருந்துகொண்டே இருக்கார்னோ சொல்லித் தப்பிச்சுட முடியாது. அதெல்லாம் எப்படி சாத்தியமாச்சுன்னு அத்துபடியா விளக்கியாகணும்.

கடவுள் நம்பிக்கை உள்ளவன்தான் யோக்கியன்னு நம்புற சமுதாயம் இது. நீங்களும் யோக்கியர்னு நம்பப்படணும்னா, நான் கடவுளை நம்புறவன்னு சொல்லிக்குங்க. தப்பில்ல. ஆனா, நாலுபேர் அறிய, கடவுள் இருக்கார்னு நிரூபிக்கிற முயற்சியில் நீங்கள் வெற்றி பெற முடியாது என்பதை மறக்க வேண்டாம். இப்போதைக்கு.....

உங்களுக்கு 'ஆன்மிக அரசியல்' போதும்!
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

வெள்ளி, 30 மார்ச், 2018

கி.மு.287 - கி.மு.212இல் ஓர் இரும்பு மனிதன்!!!

கி.மு.287க்கும் கி.மு.212க்கும் இடைப்பட்ட காலத்தில், 'சைரக்யூஸ்'[Syracuse] நாட்டில் வாழ்ந்த அதிசயக் கணித & இயற்பியல் விஞ்ஞானி ஆர்க்கிமெடிஸ்[Archimedes of Syracuse was a Greek mathematician]
சைரக்யூஸ் நாட்டின் மன்னரிடமிருந்து அவசர அழைப்பு வந்தது இவருக்கு. இவரின் திறமையில் மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்தார் மன்னர்.

அவர் சொன்னார்: ''ரோம் நம் மீது படையெடுக்கிறது. அவர்களின் கப்பல் படை நம் கடற்கரையை நெருங்கிவிட்டது. அதைத் தடுத்து நிறுத்தாவிட்டால் நாம் தோல்வியைத் தழுவுவோம்.'' 

அவருக்குத் தைரியம் ஊட்டிய ஆர்க்கிமெடிஸ், கடற்கரையை நெருங்கிக்கொண்டிருந்த எதிரியின் கப்பல் படைகளைக் குறி வைத்து, வளைந்த உலோகத் தகடுகளால் ஆன பிரமாண்டமான குழிந்த கண்ணாடிகளை அமைத்தார்.

எதிரிகளின் கப்பல்கள் கடற்கரையை நெருங்கியதும், அந்தக் கண்ணாடிகளைக் கொண்டு சூரிய ஒளியைக் குவியச் செய்து கப்பல்களின் மீது பாய்ச்சி, அவற்றைத் தீப்பற்றச் செய்தார். ரோம் படை பின்வாங்கியது. சைரக்யூஸ் மன்னர், ஆர்க்கிமெடிசைப் பாராட்டிப் பரிசுகள் வழங்கி மகிழ்ந்தார்.

தோல்வியுற்ற ரோம், சைரக்யூஸ் மீது மீண்டும் படையெடுக்க அடுத்த வாய்ப்புக்காகக் காத்திருந்தது.

ஆர்க்கிமெடிஸ் என்னும் நிலவுக் கடவுளுக்கு விழா எடுத்து சைரக்யூஸ் மக்களும் படை வீரர்களும் களிப்பில் ஆழ்ந்திருந்த தருணத்தில் சைரக்யூஸ் கோட்டைக்குள் புகுந்துவிட்டது ரோமானியப் படை.

ஆர்க்கிமெடிசின் அறிவியல் அறிவை உணர்ந்து அவர் மீது மிக்க மதிப்புக் கொண்டிருந்த ரோமானிய மன்னர், ''ஆர்க்கிமெடிஸ் என்ற அற்புத மனிதரை ஒன்றும் செய்துவிடாதீர்கள்'' என்று ஆணை பிறப்பித்தார்.

ஆனால், அந்த ஆணை அனைத்து வீரர்களையும் சென்றடையாத நிலையில்.....

கடைவீதியில் அமர்ந்து ஒரு கணிதப் புதிரைத் தீர்ப்பதில் கவனம் செலுத்திக்கொண்டிருந்தார் கணித மேதையான ஆர்க்கிமெடிஸ். ரோமானிய அரசர் பிறப்பித்த ஆணையை அறியாத ரோமானிய வீரன் ஒருவன் அவரைக் கொல்வதற்காக[கொல்வதற்கு வேறு காரணமும் சொல்லப்படுகிறது] உருவிய வாளுடன் நெருங்கினான்.

இதைக் கண்ணுற்ற ஆர்க்கிமெடிஸ், ''எனதருமை நண்பனே, கொஞ்சம் பொறு. கணிதப் புதிரை முடித்துவிடுகிறேன்'' என்று அன்புடன் வேண்டினார். அதைக் கண்டுகொள்ளாத ரோமானிய வீரனோ.....

வாளைப் பாய்ச்சி அந்த அதிசயக் கணித அறிவியல் மேதையின் உயிரைக் குடித்தான்.

இது நம் நெஞ்சைக் கனக்கச் செய்யும் ஒரு வரலாற்று நிகழ்வு.

இதை நீங்கள் ஏற்கனவே நிச்சயம் அறிந்திருப்பீர்கள். இருந்தும் இதை இங்கே நான் பதிவிடக் காரணம்.....

கொடூர மரணத்தைத் தழுவவிருந்த அந்தச் சில வினாடிகளில், மரண பயத்துக்குக் கிஞ்சித்தும் இடம் தராமல் ஆர்க்கிமெடிஸ் என்னும் அறிஞனால் எப்படித் தன் ஆராய்ச்சியில் கவனம் செலுத்த முடிந்தது என்னும் பிரமிப்புதான்.

ஆற்றும் வினையின்மீது கொள்ளும் அதீத ஆர்வமும், மனதை ஒருமுகப்படுத்த உதவும் இடைவிடாத மனப்பயிற்சியும்தான் காரணங்களோ?!
=================================================================================
நன்றி: விக்கிப்பீடியா; 'எடையூர் சிவமதியின் 101 விஞ்ஞானிகள்', நேஷனல் பப்ளிஷர்ஸ், சென்னை.


வியாழன், 29 மார்ச், 2018

சீ...சீச்சீ...இந்த AdSense பழம் புளிக்கும்!!!

கீழ்க்காணும் அறிவிப்பின் மூலம், கூகுள் என் வலைப்பக்கத்திற்கு AdSense வழங்க மறுத்துள்ளது.
ca-pub-8675700786155243 என்ற வெளியீட்டாளர் ஐடியுடன் தொடர்புடைய கணக்கு ஏற்கப்படவில்லை. மேலும் அறிக
உங்கள் AdSense விளம்பரத் திரை அமைப்புகள்
 
உங்கள் வருமான விவரங்களுக்காக AdSenseஐப் பார்வையிடவும்AdSense கணக்கை மாற்றுக
கணக்கு ஐடி: pub-8675700786155243
கிளையன்ட் ஐடி: ca-pub-8675700786155243
----------------------------------------------------------------------------------------------------------------------

இதற்கப்புறமும், AdSense பெற, எதையெதையோ 'கிளிக்' செய்து, எதையெதையோ வாசித்து, எதையெதையோ திருத்தம் செய்து, எதையெதையோ நிறைவு செய்தும்.....

'சிரமத்திற்கு வருந்துகிறோம், இப்போது உங்கள் கோரிக்கையைச் செயல்படுத்த முடியவில்லை. எங்கள் பொறியாளர்களின் கவனத்திற்கு இச்சிக்கல் கொண்டு செல்லப்பட்டுவிட்டது, விரைவில் நிவர்த்தி செய்வோம்' என்ற பதில்தான் திரும்பத் திரும்பத் திரும்ப வருகிறது; AdSense வரவில்லை!

ஆனாலும், அடிக்கடி அந்த 'நரிமொழி' மட்டும் நினைவுக்கு வருகிறது.

''சீச்சீ.. இந்தப் பழம் புளிக்கும்!'
****************************************************************************************************







புதன், 28 மார்ச், 2018

திருப்பதி தாங்குமா?!?!?!

'திருமலையில் உள்ள ஏழுமலையான் கோயிலில் நேற்று முன்தினம் ஶ்ரீராம பட்டாபிஷேக நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து உற்சவ மூர்த்திகளான ஶ்ரீதேவி, பூதேவி சமேதரராய் மலையப்ப சுவாமி மாட வீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்குக் காட்சியளித்தார். இரவில், உற்சவ மூர்த்திகளை அர்ச்சகர்கள் கோயிலுக்குள் கொண்டு சென்றனர்.
அப்போது, ஒரு அர்ச்சகரின் கையிலிருந்த பூதேவி சிலை கை தவறிக் கீழே விழுந்தது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இந்தச் சம்பவத்தால் அச்சமடைந்த அர்ச்சகர்கள் உடனடியாக அந்தச் சிலையை எடுத்து, இரவோடு இரவாக யாருக்கும் தெரியாமல் பரிகார பூஜைகள் செய்தனர். வயது முதிர்ந்த அர்ச்சகரின் கை நடுக்கத்தால் அந்தச் சிலை கீழே விழுந்ததாகத் திருப்பதி தேவஸ்தானம் சார்பாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது// - இது இன்றைய 'தி இந்து'[28.03.2018] நாளிதழ்ச் செய்தி.

அர்ச்சகரோ இச்சகரோ நாம் யாவரும் மனிதர்களே,

ஒரு பொருளைக் கையாளும்போது சில வேளைகளில் அது கையிலிருந்து நழுவுதல் தவிர்க்க இயலாதது; இதற்குக் கடவுளர் சிலைகளும் விதிவிலக்கல்ல.

தவறி விழும்போது சிலைக்குச் சேதாரம் ஏற்படலாம். கடவுளுக்குப் பாதிப்பு நேருமா? அர்ச்சகர்கள் யோசித்திருக்க வேண்டும்.

கடவுள் எங்கும் நிறைந்தவர். அணுவிலும் இருக்கிறார்; துரும்பிலும் இருக்கிறார் என்னும் தத்துவத்தைப் புரிந்துகொள்ளாதவர்களுக்காகச் சிலை வழிபாடு ஏற்படுத்தப்பட்டதாகச் சொல்கிறார்கள்.

ஆக, மனிதர்கள் தம் வசதிக்காகவே கடவுளர் சிலைகளை உருவாக்கினார்கள். இவர்களால் உருவாக்கப்பட்ட சிலைகள் பழுதடைவதோ தவறிக் கீழே விழுவதோ இயற்கை.

இதை உணராமல் இந்தப் பகுத்தறிவு யுகத்திலும், அர்ச்சகர்கள் அச்சம் கொள்வதும் பரிகார பூஜை செய்வதும் அறிவுடைமை ஆகாது.

[தெய்வக் குத்தம் நேர்ந்துவிட்டதாக நம்புவது, பரிகார பூஜைகள் செய்வது போன்றவற்றைக் கவனத்தில் கொண்டுதான், கடவுள் நம்பிக்கையை மூலதனமாகக் கொண்டு மூடநம்பிக்கைகள் உருவாக்கப்படுகின்றன என்று நம் போன்றவர்கள் சொல்ல நேர்கிறது].

இதே செய்தியை இன்றைய 'தினகரன்'[28.03.2018] நாளிதழும் வெளியிட்டிருக்கிறது. செய்தியறிந்து, பக்தகோடிகள் அதிர்ச்சி அடைந்ததாகவும் அது குறிப்பிட்டிருக்கிறது.

திருப்பதி மலைக்கோயில் 'பக்தர்களால் 'கலியுக வைகுண்டம்' என்று போற்றப்படுவதாக ஒரு கூடுதல் செய்தியையும் அது வெளியிட்டுள்ளது. 

இது தெரிந்தால் ஊருலகத்திலுள்ள அனைத்துக் குடுகுடு கிழடுகள்[நான் உட்பட] மட்டுமல்லாமல் சாவோடு சடுகுடு விளையாடிக்கொண்டிருக்கும் அத்தனை பாவப்பட்ட ஜென்மங்களும் திருப்பதி சென்று நிரந்தரமாய் 'டென்ட்' அடித்துவிடுமே, திருப்பதி தாங்குமா?!
-----------------------------------------------------------------------
உங்களுக்குப் பிடிக்குமோ பிடிக்காதோ கீழ்வரும் நிமிடக் கதையையும் படிச்சுடுங்க.

கதை:                                            சேணம்

 “வர்றேம்மா...” -புறப்படப்போன வேலைக்காரி தங்கம்மா தயங்கி நின்றாள்.

“என்ன தங்கம்மா?” -முதலாளியம்மா கேட்டாள்.

“என் மகன் முத்துவோட உடுப்பெல்லாம் கிழிஞ்சிடிச்சி. புதுசு எடுக்கணும். ரெண்டாயிரம் ரூபா குடுங்க. மாசா மாசம் சம்பளத்தில் பிடிச்சுக்குங்க” என்றாள் முனியம்மா.

“முத்துக்கு என்ன வயசு?”

“பத்து நடப்புங்க.”

“சொல்றேன்னு தப்பா நினைச்சுடாதே” என்ற பீடிகையுடன் தொடர்ந்தார் முதலாளியம்மா, “எங்க யுவனுக்கு முத்து வயசுதான். அவன் போட்டுக் கழிச்ச பழைய டிரஸ் நிறைய இருக்கு. எதுவும் கிழியல; சாயம் போகல. கொஞ்சம் செட் தர்றேன். முத்து உடுத்துக்கலாம். தரட்டுமா?”

மீண்டும் தயக்கத்திற்குள்ளான தங்கம்மா, “நீங்க சாப்பிடுறதில் மீந்துபோனதை எங்க வீட்டுக்கு எடுத்துட்டுப் போய் நாங்க எல்லோரும் சாப்பிடுறோம். அது மாதிரி இது இல்லீங்க. நீங்க உடுத்துறது உயர்ந்த ரகத் துணி. நாங்க உடுத்துறது படு மட்ட ரகம். உங்க உயர்ந்த ரகத் துணிகளை நாங்க போட்டுகிட்டா, அது குதிரைக்குப் போடுற சேணத்தைக் கழுதைக்குப் போட்ட மாதிரி இருக்கும். என்னை மன்னிச்சுடுங்கம்மா. துணி வேண்டாம். பணம் மட்டும் குடுங்க போதும்” என்றாள்.
=================================================================================





செவ்வாய், 27 மார்ச், 2018

இவர்கள் முட்டாள்களா, மூடர்களா, அடிமடையர்களா?!?!

இந்தப் பூமியின் வயசு [The age of the Earth is approximately] 4.54 ± 0.05 billion years (4.54 × 109 years ± 1%).[1][2][3][4  -Wiki] என்று விஞ்ஞானிகள் அடிச்சி 
விட்டிருக்காங்க. இது இதனுடைய இப்போதைய வயசு. முழு ஆயுள் இன்னும்  அதிகம். 
இவங்க சொல்றதெல்லாம் சரியா தப்பான்னு ஆராயறதுக்கான 
அறிவெல்லாம் நமக்கு இல்ல. கோடி கோடி ஆண்டுகள்னு பொத்தாம் 
பொதுவாச் சொல்ல மட்டும்தான்  நமக்குத் தெரியும்.

பூமியின் ஆயுசு இப்படின்னா, சூரியனுடையது இதைவிடவும் மிகப் பல மடங்கு
[.....This lifespan began roughly 4.6 billion years ago, and will continue for about another 4.5 – 5.5 billionyearsஅதிகமாகத்தான் இருக்கும். கொஞ்சம் பொறுமையைக் கடைப்
பிடியுங்க... நான் சொல்ல வர்ற விசயமே வேற. 
சூரியனை விடவும் பலப்பல மடங்கு பெருசான நட்சத்திரங்களின் ஆயுசு இன்னும் இன்னும் இன்னும் அதிகம். இதுகளுக்கு அப்பன், முப்பாட்டன் கொள்ளுப் பாட்டன், எள்ளுப்பாட்டன் எல்லாம் இருக்காங்க. அதுகளுடைய ஆயுசையும் கணக்குப் பண்ணிகிட்டுப் பொழுதைக் கழிக்கிறாங்க விஞ்ஞானிங்க.

எல்லார்த்தையும் உள்ளடக்கிய ஒன்னுதான் 'அண்டம்'கிறான். அப்புறம் 'பிரபஞ்சம்'கிறான். 'வெளி'[Space]யில் அவ்வப்போது நிகழ்கிற பெருவெடிப்புகள் காரணமா இதுகளெல்லாம் தோன்றுவதும் அழிவதுமாக இருக்கிறதுகளாம்.

கட்டுப்பாடு இல்லாமல் தொடர்ந்துகொண்டே இருக்கும் இந்த நிகழ்வுகளுக்கு 'முற்றுப்பெறுதல்' என்பதே இல்லை என்கிறார்கள். முற்றுப்பெறாத இம்மாதிரி நிகழ்வுகளை உள்ளடக்கிய பிரபஞ்ச[வெளி]த்தின்  ஆயுளோடு மனிதர்களுடைய ஆயுளையும் ஒப்பிட்டுப் பார்த்தா.....இவர்களுடைய ஆயுள் அற்பம்...அற்பம்...வெகு அற்பம்... அற்பத்திலும் அற்பம்[துல்லியமாகச் சொல்ல வார்த்தைகள் இல்லை].

மனுசங்க ஆயுள் நூறு[சிலர் கூடக்குறைய வாழலாம்]. அதுல, தூங்கினது, துக்கிச்சது, பொறாமைப்பட்டது, கலகம் பண்ணினதுன்னு விரயம் பண்ணினதையெல்லாம்  கழிச்சா, எஞ்சியிருப்பதுதான் அவர்களுடைய ஆயுள்.

அது எவ்வளவு தேறும்?

ஒரு அஞ்சு?..... ஊஹூம். பத்து?..... ஊஹூஹூம். 

ஒரு பத்து ஆண்டுன்னே வைச்சுக்குவோம். 

இந்தப் பத்து ஆண்டுகளை எப்படிக் கழிக்கணும்?

தம்மையும் கவனிச்சிக்கணும். தம்மைச் சார்ந்தவங்களுக்கு மட்டுமல்லாம, ஒட்டுமொத்த மனுச குலத்துக்கும் மத்த உயிர்களுக்கும் உதவி செஞ்சி வாழணும். அப்படி வாழ்ந்து கழிச்சிருந்தாத்தான், அந்தப் பத்து வருசமும் மனுசங்க சந்தோசமா வாழ்ந்ததா அர்த்தம்.

சூது வாது வஞ்சகம் பொறாமைன்னு எத்தனையோ கெட்ட கெட்ட குணங்களுக்கு மனசில் இடம் தந்ததோடு, கடவுளைக் கற்பிச்சி[சுத்தி வளைச்சிக் கடவுளுக்கு வந்துட்டான்யான்னு முணு முணுக்க வேண்டாம்]. மதங்களை உருவாக்கி, ஒருத்தனோடு ஒருத்தன் அடிச்சிகிட்டு லட்சம் லட்சமா செத்துத் தொலைஞ்சதுமட்டுமல்லாம, ஆன்மா, மறுபிறப்பு, சொர்க்கம், நரகம்னு எதையெதையோ கற்பனை பண்ணி, கணக்குவழக்கில்லாத மூடநம்பிக்கைகளுக்கு ஆளாகி, அந்தக் கொஞ்சமே கொஞ்சம் வாழ்நாளையும் வீணடிச்சாங்க மனுசங்க. இப்போதும் வீணடிக்கிறாங்க.

இந்தப் புத்தி கெட்ட மனுச ஜென்மங்களை எந்தவொரு வார்த்தையால் திட்டினா பொருத்தமா இருக்கும்?

இவங்கள்ல நீங்க ஒருத்தர் இல்லேங்கிறதால மனம் திறந்து சொல்லுங்க,

முட்டாள்கள், மூடர்கள், அடிமடையர்கள்ங்கிற வார்த்தைகள்ல ரொம்பப் பொருத்தமானது எது?

திங்கள், 26 மார்ச், 2018

பெங்களூரு தமிழ்ச்சங்கமும் கர்னாடகா முதல்வர் சித்தராமையாவும்!

'பெங்களூர்த் தமிழ்ச்சங்கத்துக்குக் கர்னாடகா முதல்வர் சித்தராமையா  2 ஏக்கர் நிலம் வழங்க உத்தரவிட்டிருக்கிறார்' - இது இன்றைய தினமலர்[www.dinamalar.com]ச் செய்தி. தினமலருக்கு நன்றி.

மகிழ்ச்சி தெரிவித்த தமிழ்ச்சங்கம், சித்தராமையா அவர்களுக்கும், ஒத்துழைப்புத் தந்த பிறருக்கும் பாராட்டு விழா நடத்தவிருக்கிறதாம். 

இது குறித்து இணையத் தமிழ் வாசகர்கள் என்ன சொல்கிறார்கள்? கருத்துரைகள் கீழே.....





Muthukrishnan,Ramதமிழனை புடிக்காது அவனுக்கு தவிச்ச வாய்க்கு தண்ணீர் தர மாட்டான் இவங்கள் தமிழ் சங்கத்துக்கு
நிலம் தரங்களாம். எதோ உள்குத்து இருக்கிறது. தமிழா எச்சரிக்கையாக இரு. 
வெளுத்ததெல்லாம் பால் அல்ல. சுண்ணாம்பும் வெள்ளை தான்.

Share this comment


Balaji - bangalore,இந்தியா
26-மார்-201810:43:08 IST Report Abuse
Balaji தமிழர்களின் வோட்டை கவரும் காங்கிரஸ்?

Share this comment


ஏடு கொண்டலு - cupertino,யூ.எஸ்.ஏ
26-மார்-201810:23:41 IST Report Abuse
ஏடு கொண்டலுசித்தர் தேர்தலுக்குத் தயாராகிவிட்டார்.
Rate this:
Share this comment


Agni Shiva - durban,தென் ஆப்ரிக்கா
26-மார்-201810:04:47 IST Report Abuse
Agni Shivaஓட்டிற்கு லஞ்சம் வாங்கும் உலகத்தின் ஒரே இனம் தமிழன் இனம். அதை 
பெருமையாகவும் கூறி கொள்ளும் இனமும் அது ஒன்றே தான். பெங்களூரின் 
மொத்த ஜனத்தொகையில் - ஒரு கோடிக்கும் அதிமான மக்கள் தொகையில் -சுமார் 25 
சதவீதம் அதாவது சுமார் 25 லக்ஷம் தமிழர்களுக்கு இங்கு தமிழனின் ஓட்டிற்கு 
விலைவைத்து அது இரண்டு ஏக்கர் நிலம் என்றாகி விட்டது. இதை மகிழ்ச்சியோடு 
பெற்றுக்கொள்வது மட்டுமின்றி அதற்காக விழா வேறு வைக்க போகிறார்கள் தமிழர்கள் . 
பெங்களூர் நகரத்தை ஆள்வதே தமிழர்கள் தான். மாநகராட்சி தமிழர்களின் கையில் தான் 
இருக்க்கிறது. அவர்கள் நினைத்தால் இரண்டு ஏக்கர் என்ன ஐம்பது ஏக்கர் கூட தமிழ் 
சங்கத்திற்கு ஒதுக்க முடியும். வந்தாரை வாழவைப்பது பெங்களூர் நகரம் என்பதும் அது 
சென்னை இல்லை என்பதை புரிந்து கொள்வதும் கூட சிரமம் தான் இங்கு இருக்கும் 
டுமீளர்களுக்கு.
Rate this:
Share this comment


Indhuindian - chennai,இந்தியா
26-மார்-201809:52:17 IST Report Abuse
Indhuindianஇதை வாங்கிக்கொள்ள கூடாது இவர்கள் உள்குத்து இல்லாமல் எதுவும் 
செய்யமாட்டார்கள். காவேரி பிரச்சினையில் உச்ச நீதி மன்றத்தில் தான் என்னவோ 
எல்லா மாநிலந்திகளுடன் சுமுகமாக இருப்பதைக் காட்டவே இந்த பிச்சை. கிரேக்கர்கள் 
குதிரையை தானம் கொடுத்தால் ஜாக்கிரதையா இருக்க வேண்டும் என்று ஒரு பழமொஷி 
உள்ளது அதுபோல்தான் கர்நாடகக்காரன் தானம் கொடுப்பதும்
Rate this:
Share this comment


natarajan - doha,கத்தார்
26-மார்-201809:08:02 IST Report Abuse
natarajanஓட்டு வாங்க என்னல்லாம் பண்றார் .
Rate this:
Share this comment


ngopalsami - auckland ,நியூ சிலாந்து
26-மார்-201808:59:32 IST Report Abuse
ngopalsamiஇது, தமிழர்களின் ஓட்டுக்களை தம் பக்கம் திருப்ப அஸ்திவாரம். இவ்வளவு நாள் 
இல்லாமல் திடீர்னு தமிழர்கள் மேல எப்படி கரிசனம் வந்தது?
Rate this:
Share this comment


Bhaskaran - chennai,இந்தியா
26-மார்-201808:42:40 IST Report Abuse
Bhaskaranநாளைக்கு கட்டடம் கட்டியபின் காவெரிபிரச்னையில் தகராறு என்றால் உள்ளே 
புகுந்து தாக்கி பொருட்களைவுடைத்து தமிழர்களுக்கு அதிக நஷ்டத்தை 
ஏற்படுத்தவேண்டுமென்கிற நல்ல நோக்கத்துடன் தான் இடம்கொடுத்திருகிறார்
Rate this:
Share this comment


Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
26-மார்-201808:21:03 IST Report Abuse
Srinivasan Kannaiyaஆனால் நீர் மட்டும் கொடுக்க மாட்டீங்க... பகிர்ந்துண்ணும் பழக்கம் கன்னடர்களிடம் 
இல்லை போலும்...
Rate this:
Share this comment


சீனி - bangalore,இந்தியா
26-மார்-201808:54:40 IST Report Abuse
சீனிபோதிய மழை வரும்போது தமிழகத்திற்க்கு நீர் வருகிறது. மழைதான் பிரச்சனை. பெங்களூர்வாசிகளுக்கு போதிய குடிநீர் இல்லை. தமிழகம் வீணாக சுப்ரீம் கோர்ட் வரை போய், கர்நாடகாவுக்குதான் சாதகம் ஆச்சு. எனவே, முறையாக பேச்சுவார்த்தை நடத்தி சாதிக்க வேண்டும். வீணாக போராட்டம் பண்ணி மக்களை பிரிக்க பார்க்க கூடாது. தமிழர்கள் எங்கிருந்தாலும், வாழும் நாட்டிற்க்கு ஆதரவு தெரிவிப்பார்கள். எனவே கர்னாடகாவில் வாழும் தமிழர்கள், பிரித்தாளும் சூழ்ச்சிக்கு அடிபனிய மாட்டார்கள். தமிழக அரசு, சகோதர மனப்பாண்மையுடன் இந்த விசியத்தை அணுகவேண்டும். இந்த வாசகர் மாதிரி ஊடகங்களில் வீணான கருத்தை பரப்பி, தயவுசெய்து கர்நாடக உறவை சீர்குலைக்கவேண்டாம்....
Rate this:
Share this comment


partha - chennai,இந்தியா
26-மார்-201811:16:16 IST Report Abuse
parthaஒரு சிந்திக்கத்தெரிந்த தமிழன் பெங்களூரில்...
Rate this:
Share this comment


VOICE - chennai,இந்தியா
26-மார்-201808:12:06 IST Report Abuse
VOICEமெட்ராஸ் ஸ்டேட் என்பது தமிழ்நாடு கர்நாடக கேரளா ஆந்திரா உள்ளடக்கிய பகுதி. 
அப்பொழுது ஒற்றுமையாக இருந்தவர்கள் வடஇந்திய தூண்டுதலில் காங்கிரஸ் 
சூழ்ச்சியில் மொழி ப்ரிச்சனை ஏற்படுத்தி பிரிந்துவிட்டனர். சிங்கப்பூர் கூட நான்கு மொழி 
கொள்கைகள் உண்டு அங்கு இருக்கும் சூழ்நிலை போன்று மக்கள் புரிந்து கொண்டால் 4 
மாநிலம் மக்கள் கிடைக்கும் பயன் ஏராளம்.
Rate this:
Share this comment