கீழ்க்காண்பது, 'இனிது' இணைய இதழில் வெளியான தமிழ்ப் பருவ இதழ்களின் விற்பனை[2017 கணக்கெடுப்பின்படி] குறித்த ஒரு புள்ளிவிவரம்.
இனிது
இணைய இதழ்
தமிழ் நாளிதழ்கள்
இந்திய அளவில் அதிக வாசகர்களைக் கொண்ட முதல் பிராந்திய நாளிதழ் தினத்தந்தி ஆகும்.
| வ. எண் | தமிழ் நாளிதழ் | வாசகர் எண்ணிக்கை |
| 1 | தினத்தந்தி | 2,31,49,000 |
| 2 | தினகரன் | 1,20,83,000 |
| 3 | தினமலர் | 1,16,59,000 |
| 4 | மாலை மலர் | 30,74,000 |
| 5 | தி இந்து (தமிழ்) | 28,90,000 |
தமிழ் வார இதழ்கள்
இந்திய அளவில் அதிக வாசகர்களைக் கொண்ட இரண்டாவது பிராந்திய வார இதழ் ஆனந்த விகடன் ஆகும்.
| வ. எண் | தமிழ் வார இதழ் | வாசகர் எண்ணிக்கை |
| 1 | ஆனந்த விகடன் | 27,08,000 |
| 2 | குமுதம் | 22,69,000 |
| 3 | குங்குமம் | 21,72,000 |
| 4 | புதிய தலைமுறை | 16,23,000 |
| 5 | அவள் விகடன் | 11,04,000 |
'இனிது' இணைய இதழுக்கு நன்றி சொல்லி, தமிழ் இதழ்களுக்கான ஒரு கேள்வியை முன்வைக்கிறோம்.
லட்சம் லட்சமாய் விற்பனையாகும் மேற்கண்ட இதழ்கள் 'ஆன்மிகம்' என்னும் தலைப்பில் [இணைப்புகள் வெளியிட்டு], அளவில்லாமல் மூடநம்பிக்கைகளைப் பரப்பும் பழம் பொய்க்கதைகளைத் தொடர்ந்து வெளியிடுவது அநியாயம் அல்லவா?!?!
