அமைச்சரும் துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின், சனாதன தர்மத்தை[அதர்மம்] விமர்சித்தது தொடர்பான ஒரு வழக்கில்[அதை விவரிப்பது இங்குத் தேவையற்றது], சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி*** வழங்கியுள்ள தீர்ப்பின் சில அம்சங்கள் இங்கு ஆய்வுக்கு உட்படுத்தப்படுகின்றன.
+++//அமைச்சரின்[உதயநிதி] பேச்சு 80 சதவீத இந்துக்களுக்கு எதிரானது> நீதி[துறை] அதிகாரி[நீதிபதி]//
எந்தவொரு புள்ளிவிவரத்தையும் ஆதாரமாகக்கொண்டு இந்தச் சதவீதக் கணக்கை நீதி(துறை) அதிகாரி[நீதி‘பதி’ அல்ல]முன்வைக்கவில்லை. இது அவரின் விருப்பம் சார்ந்தது.
நடுநிலையாளர் குழு அமைத்துக் கணக்கெடுத்தால், இந்துக்கள் பலரும் மூடநம்பிக்கைகளிலிருந்து விடுபட்டிருப்பது அறியப்படக்கூடும். அவர்கள் பெரும்பாலும் தங்களின் கோரிக்கைகள் நிறைவேற மட்டுமே கடவுளை வழிபடுபவர்கள். இதை நீதி(துறை) அதிகாரி அறிந்திருக்கவில்லை.
அவர் தன் தீர்ப்பில், “சனாதனியான மனுதாரர்..... சனாதன தர்மத்தைப் பாதுகாத்துள்ளார்” என்று குறிப்பிட்டிருப்பதும் கவனிக்கத்தக்கது.
நம் கேள்வி: சாதி மதம் போன்ற தற்சார்பு நிலைகளிலிருந்து விடுபட்டுத் தீர்ப்பு வழங்குவதைக் கடமையாகக் கொள்ள வேண்டிய இந்த நீதி(துறை) அதிகாரி, சனாதனப் பாதுகாப்பில் இத்தனை அக்கறை காட்டியிருப்பது ஏன்?
காரணத்தை அவர் மட்டுமே அறிவார்.
உதயநிதி கருத்துச் சொன்னது, சனாதனம் என்னும் பெயரில் அளவு கடந்த மூடநம்பிக்கைகளை மக்கள் மீது[இந்து மதத்தின் பெயரால்] திணிக்கும் கூட்டத்தாரைத்தானே[சனாதனவாதிகள்] தவிர, அனைத்து இந்து மதம் சார்ந்தவர்களையும் அல்ல என்பதையும் அறிந்துணரத் தவறிவிட்டார் அவர்.
எனவே,
நீதி வழங்கும் நீதிமன்ற அதிகாரிகளிடம் நாம் வேண்டிக்கொள்வது, சட்டப் புத்தகங்களை நீங்கள் ஆழ்ந்து படிப்பது போலவே, சிந்திக்கத் தூண்டுகிற அறிஞர்களின் நூல்களையும் படித்துத் தெளிதல் வேண்டும் என்பதுதான்.
தொடர்புடையதொரு செய்தி:
'Judge' என்னும் சொல்லை, ‘நீதிபதி’ என்று மொழியாக்கம் செய்வது தவறு, அவர்கள் நீதியின் தலைவர்[பதி]கள் அல்ல என்பதால். அவர்களை நீதி அதிகாரி என்று அழைக்கலாம், அமலாக்கத்துறை அதிகாரி, வருவாய்த்துறை அதிகாரி என்பன போல.
* * * * *
***நீதி அதிகாரி[நீதிபதி> Judge) என்பவர் சட்டப்படி நீதியை வழங்கும் அதிகாரம் பெற்ற, நீதிமன்றத்தில் வழக்குகளை விசாரித்து, சான்றுகளை ஆராய்ந்து தீர்ப்புகளை வழங்கும் ஒரு பொது அதிகாரி[The word "judge" has multiple meanings, referring to a legal official in a court] ஆவார்.
===========================

