புதன், 13 மார்ச், 2013

நீங்கள் ’சாதனை’ ஏதும் நிகழ்த்தாதவரா? உங்களுக்காகவே இந்தக் கதை!!

இது, ’குமுதம்’ இதழின் ‘தரம்’ உயர்த்திய சிறந்த கதைகளில் ஒன்று!!!

கதைப் பெயர்:         சாதனை

எழுதியவர்:             ஒ.ப.கதைப் பிரியனான நான்தான்!

“என்னோட ஸ்கூல்மேட் ஒருத்தருக்குக் கலைமாமணி விருது கிடைச்சிருக்கு.”- செய்தித்தாள் படித்துக்கொண்டிருந்த வாசுதேவன் சொன்னார்.

“அப்படியா? உங்களோட காலேஜில் ஒன்னாப் படிச்ச ஒருத்தருக்கு ஏதோ நாவல் போட்டியில் முதல் பரிசு கிடைச்சிருக்கிறதாச் சொன்னீங்களே?” என்றார் அவர் மனைவி தேவி.

“அது போன மாசம். அதையும் பத்திரிகையில் பார்த்துத்தான் தெரிஞ்சிட்டேன். அது மட்டுமில்ல, என்னோட படிச்ச ஒரு பொண்ணு, இந்த வருசம் செஸ் போட்டியில், ‘கிராண்ட் மாஸ்டர்’ பட்டம் வாங்கியிருக்கு. இப்படி, இன்னும் யாரெல்லாமோ எதையெல்லாமோ சாதிச்சிருக்காங்க. என்னோட படிச்சவங்க சாதனைகள் நிகழ்த்துறது ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு. ஆனா, அவங்களோட படிச்ச நான் எதுவுமே சாதிக்கல.” மிகுந்த வருத்தத்துடன் சொன்னார் வாசுதேவன்.

"வணிகவரித் துறையில் அதிகாரியா இருக்கீங்க. ஏராளமான வாய்ப்பிருந்தும் லஞ்சமே வாங்காம கடமையைச் செய்யுறீங்க. பாராட்டையும் விருதையும் எதிர்பார்க்காத இந்தச் சாதனைக்கு வேறு எந்தச் சாதனையும் ஈடாகாதுங்க.”- தேவியின் குரலில் பெருமிதம் பொங்கி வழிந்தது.

0000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000


23.09.2009 ‘குமுதம்’ இதழில் வெளியானது. பக்கம்: 89.

குமுதம் ஆசிரியருக்கு நன்றி.

வருகை புரிந்த உங்களுக்கும் நன்றி...நன்றி...நன்றி.

0000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000


10 கருத்துகள்:

  1. குமுதத்தில் தரமான கதை எழுதி சாதனை புரிந்த உங்களுக்குப் பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  2. அதமாதிரி ஆட்கலுக்கு ஒரு சல்யூட்

    பதிலளிநீக்கு
  3. புரட்சித் தமிழன்,

    நல்லவர்களப் போற்றும் உங்கள் நல்ல மனதைப் போற்றுகிறேன்.

    பதிலளிநீக்கு
  4. சிறப்பான கதை! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  5. s.suresh,

    உங்கள் பாராட்டுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு