எனது படம்
அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.

சனி, 26 நவம்பர், 2022

ஆஸ்திரேலியா கடற்கரை... ஆயிரக்கணக்கில் ‘அம்மண’ மனிதர்கள்!!!

ஸ்திரேலியாவில் உள்ளது ‘போண்டி’ கடற்கரை. இங்கு அதிகாலை 03.30 மணிக்கு 2500 பேர் அம்மணக் கோலத்தில் வந்து கூடினார்கள்.[‘டைம்ஸ் நவ்’ சில மணி நேரங்களுக்கு முன்பு]

அம்மணமாக என்றதும் அவசரப்பட்டுத் தவறான முடிவுக்கு வரவேண்டாம்.

ஸ்பென்சர் டூனிக்’ என்னும் புகைப்படக் கலைஞரின் கலைப்படைப்புக்குக் ’காட்சி’[போஸ்] தருவதற்குத்தான் இத்தனைப் பிறந்த மேனியர்கள் அங்கு கூடினார்களாம்.


நிர்வாண மனிதர்களை வைத்து எதற்காகக் கலைப்படைப்பை[ஓவியமா, புகைப்படமா, மனற்சிற்பமா எதுவென்பதும் தெரியவில்லை] உருவாக்குகிறார் அந்தக் கலைஞர்?


தோல் புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஊட்டுவதற்காகவாம்.


இந்த விழிப்புணர்வூட்டல் அவசியமானதுதான். மனதாரப் பாராட்டலாம்.


ஆனால், சில சந்தேகங்கள்.....


*அதென்ன கணக்கு 2500 பேர்? எண் கணிதச் சோதிடர் பரிந்துரைத்திருப்பாரோ?


*முழு நிர்வாணம் எதற்கு, சில அங்குல ஜட்டிகூட இல்லாமல்?


*ஆண்களுக்குத்தான் வெட்கம் மானம் என்று எதுவும் இல்லை. ஆஸ்திரேலியப் பெண்களுக்குமா?!


ஹி... ஹி... ஹி!!!


2,500 நிர்வாண தன்னார்வலர்கள் ஆஸ்திரேலியாவின் பாண்டி கடற்கரையில் தோல் புற்றுநோய்க்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் கலைப்படைப்புகளுக்கு போஸ் கொடுத்தனர்

[ஊன்றிக் கவனித்தால், நீள்கூந்தலுடன் பெண்மணிகளும் நிற்பது தெரிகிறதா?]

======================================================================================

https://kingwoodsnews.com/australia-nude-photoshoot-for-skin-cencer/


கணவன் கொலையுண்டதைக் கொண்டாடும் 'டிக் டாக்’[Tik Tok] குத்தாட்டக்காரி!!!

க்கள் சமூக ஊடகங்களுக்கு அடிமை ஆகிவருகிறார்கள்[குறிப்பாகச் சில/பல பெண்கள்]. அவற்றில் தங்களின் அந்தரங்க விசயங்களைக்கூடப் பகிர்ந்துகொள்ள அவர்கள் தயங்குவதில்லை.

'Tik Tok’  பலராலும் அறியப்பட்ட ஊடகம்.

அதன் காணொலி ஒன்றில், தன் கணவர் எப்படிக் கொலை செய்யப்பட்டார் என்பதை இளம் பெண்ணொருவர் விவரிப்பதான நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

அந்தக் கொடூர நிகழ்வைக் கண்ணீரும் கம்பலையுமாக, காண்போர் நெஞ்சம் கரைந்து உருகும் வகையில் அவர் சொல்லியிருப்பார் என்றுதானே நினைப்போம்?

அவ்வாறு நாம் நினைப்பது எத்தனை அடிமுட்டாள்தனம் என்பதை  அவரின் அந்த ‘டிக் டாக்’ காணொலி நம்மை உணர வைக்கிறது.

அந்தப் பெண்ணின் பெயர் ஜெசிகா அயர்ஸ்[Ayers].

நடனமாடிக்கொண்டே கணவர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டதை விவரிக்கிறார்.

முகத்தில் வேதனை பரவ, குரல் தழுதழுக்க அவர் பேசாதது பெரிய குற்றமில்லை. புன்சிரிப்புடன், கொங்கை குலுக்கிக் குத்தாட்டம் போட்டுக்கொண்டே  நடந்த கதையைச் சொல்லுவதுதான் நம்மை அதிர்ச்சியில் உறையச் செய்கிறது.

இந்த வீடியோ ட்விட்டரில் தீயாக பரவியதாம்;  கடும் கண்டனங்களுக்கும் அவர் உள்ளாகியிருக்கிறாராம்.

காணொலிக்கு அவர் தந்துள்ள தலைப்பு: 

‘பாடும் விதவை’[The Singing Widow]

காணொலிப் பெண் நம் கண்ணுக்குப் ‘பாடும் விதவை’யாகத் தெரியவில்லை. பார்வையாளரைக் கவர அவர் ஆடும் கவர்ச்சி நடனம் வேறு ‘எதையெல்லாமோ’ எதிர்பார்க்கிறாரோ என்றுதான் எண்ணத் தூண்டுகிறது!

கலிகாலம்டா சாமி!!

***** காணொலி சரிவர இயங்காததால் பதிவு செய்யப்பட்ட அதன் முகவரி நீக்கப்பட்டது.

=========================================================================