எனது படம்
அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.

திங்கள், 8 செப்டம்பர், 2025

இணைதல் இன்பமும் இனவிருத்தியும் மட்டுமே விந்து உற்பத்தியின் பயன்களா?

நாம் அறிந்திருக்கிற ‘விந்து’ விந்துத் திரவத்தையும் விந்தணுவையும் உள்ளடக்கிய ஒரு ‘பொது’ச் சொல்.

விந்துத் திரவமும் விந்தணு[விந்துத் திரவத்தில் உள்ள அணு> உயிரணு]வும் வேறு வேறு. அணுக்களை எடுத்துச்சென்று பாதுகாத்து, அவற்றிற்குத் தேவையான  ஊட்டச்சத்துகளை வழங்குவது விந்துத் ‘திரவம்’. இது யோனியில் உள்ள அமிலத்தன்மையைச் சீராக்கி, விந்தணுக்கள் உயிர்வாழ உதவுகிறது.

விந்துப்பையும்[seminal vesicles>விந்து திரவத்தின் பெரும்பகுதியை உற்பத்தி செய்கிறது], புராஸ்டேட் சுரப்பியும்[குறைந்த அளவுத் திரவத்தை உற்பத்தி செய்கிறது] புல்பர்த்ரல் சுரப்பியுடன்(bulbourethral glands> இணைந்து விந்துத் திரவத்தை உற்பத்தி செய்கின்றன. 

அணுவை[உயிரணு] உற்பத்தி செய்பவை விரைகள்[Testicles].

இவற்றின் முதன்மைப் பயன்பாடு ஆண் & பெண் இணையும்போது இன்பம் நல்குதலும் இனப்பெருக்கம் செய்தலும் ஆகும்.

கூடுதல் பயன்கள்:

விந்துவில் காணப்படும் ஆக்ஸிடாஸின், செரோடோனின் மற்றும் மெலடோனின் போன்ற ஹார்மோன்கள் நம் மனநிலையை ஒழுங்குபடுத்துவதோடு நல்ல  தூக்கத்தையும் நல்குகின்றன. 

துத்தநாகம், செலினியம் & ஆண்டிமைக்ரோபியல் பெப்டைடுகள் விந்து[திரவம் & உயிரணு]வில் இடம்பெற்றுள்ளதால் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கிறது. 

விந்துவானது, தோல் & முடி சிகிச்சைகளுக்குப் பயன்படுவதாகச் சொல்லப்படுகிறது.

குறிப்பிடத்தக்கதொரு தீமை:

உடலுறவின்போது விந்துவை விழுங்குவது, சில நேரங்களில் பாலியல் நோய்த் தொற்றுக்கு வழிவகுக்கும் என்று இளசுகளை எச்சரிக்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள்.

வடக்கன்களின் அடிமைகளுக்கு எதற்கு ஆளுக்கொரு அரசியல் கட்சி?!

‘பாஜக’ தலைவர்களைச் சந்திக்கச் செங்கோட்டையன் தில்லி செல்கிறார்’ என்பது ஊடகங்களில் வெளியான/வெளியாகும் பரபரப்பான[ஆக்கப்படும்] செய்தி.

யார் இந்தச் செங்கோட்டையன்?

பல ஆண்டுகளுக்கு முன்பு, செல்வியும் புரட்சித் தலைவியும் தெய்வத் தாயுமான ஜெயலலிதா தமிழ்நாடு சட்டமன்றத்தில் துகிலுரியப்பட்டபோது[?], அம்மையாருக்குப் பாதுகாப்புக் கவசமாகத் திகழ்ந்தவர் இவர். அதன் மூலம் பிரபலம் ஆனவர்; ‘அதிமுக’வின் முக்கியப் பிரமுகராக ஆக்கப்பட்டவர்.

அம்மையாரின் மறைவுக்குப் பிறகு, எடப்பாடியின் தலைமையில் வடபுலத்துச் சங்கிக் கட்சித் தலைவர்களுக்குச் சேவகம் புரிந்தவர்களில் இவரும் ஒருவர்.

எடப்பாடியால் ஓரங்கட்டப்பட்டு இருந்த இடம் தெரியாமலிருந்த இவர், ஓர் அறிக்கை வெளியிட்டு[கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்]த் தன் இருப்பைப் பகிரங்கப்படுத்திக்கொண்டிருப்பவர்.

தில்லி செல்கிறாராம். எதற்கு?

வடக்கன்களின் தமிழ்நாட்டு அடிமைகள் பட்டியலில் ஒரு ‘தலைவனாக’த் தன்னையும் சேர்த்துக்கொள்வதற்கு.

ஓபிஎஸ், சசிகலா என்னும் புரட்சித் தாய், தினகரன்(அமமுக), அன்புமணி(பாமக), ஜி. கே. வாசன்(த.நா.கா.கட்சி) ஆகியோர் ஏற்கனவே அந்தப் பட்டியலில் இடம்பெற்றவர்கள். 

ஆக, இப்போது நடக்கவிருப்பது, தமிழ்நாட்டு அடிமைகள் அணி தாங்கள் என்றென்றும் வடபுலச் சங்கிகளின் அடிமைகளே என்பதைப் புதுப்பித்துக்கொள்ளும் ஒரு சடங்குதான்.

இந்த அடிமைக் கும்பலுக்கு நாம் அறிவுறுத்த விரும்புவது:

தமிழனின் தன்மானத்தை வ.பு.சுயநலக் கும்பலிடம் விலைபேசிவிட்ட உங்களுக்கு எதற்குத் தனித் தனிக் கட்சி?

எல்லோரும் ஒருங்கிணைந்து, ஒரு புதியக் கட்சியைத் தொடங்கி, அதற்குத் ‘தமிழ்நாட்டு அடிமைகள் கட்சி’ என்று பெயர் சூட்டிக்கொண்டு ஒன்றாகவே தில்லி செல்லுங்கள்.

உங்களின் அடகு வைக்கும் அருங்குணத்தை மெச்சி, உங்களின் எதிர்பார்ப்புகளை ஓரளவிற்கேனும் நிறைவேற்றி ஆசீர்வதிப்பார்கள் ‘அவர்கள்’.

வாழ்க தமிழ்நாட்டு அரசியல் அடிமைகள்! வளர்க அவர்களின் அடிமைப் புத்தி!!