எனது படம்
“எல்லாம் அவன் செயல்” என்பவர்கள் ஆறறிவின் வளர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பவர்கள். இவர்களின் எண்ணிக்கை பெருகப் பெருக மூடநம்பிக்கைகளின் அளவும் அதிகரிக்கிறது. நாட்டை ஆள்வதற்கான தகுதியே இல்லாத சுயநலவாதிகள் இதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துகிறார்கள். மூடத்தனங்களிலிருந்து மக்கள் முற்றிலுமாய் விடுபடும்போதுதான் நாடு உண்மையில் சுதந்திரம் பெற்றதாக ஆகிறது.

சனி, 24 ஆகஸ்ட், 2019

ஒட்டுமொத்த மனிதகுலத்துக்கும் ஒரு குட்டு!!!

புலன்களால் அறியப்படுகிற இந்தப் பிரபஞ்சம் எப்போது உருவானது? 

"உருவாக்கப்படவில்லை;  எப்போதும் இருந்துகொண்டே இருப்பது" என்றால், அது எப்படிச் சாத்தியம் ஆயிற்று? 

உருவானது அல்லது உருவாக்கப்பட்டது எதன் பொருட்டு? அதற்கு ஆதாரமாக இருந்தவை எவையெல்லாம்? எவரெல்லாம்?

பிரபஞ்சம் வெறும் காட்சிப் பொருளாகவே இருந்திருக்கலாமே. கணக்கிலடங்காத உயிர்களின் தோற்றங்களும் போராட்டங்களும் அழிவுகளும் ஏன்?

இப்படி எத்தனையோ ‘ஏன்’களுக்கு விடை தெரியாமல் விழி பிதுங்கி நிற்கிறோம்.

இவற்றில் ஏதேனும் ஒன்றே ஒன்றுக்கேனும் இன்றளவும் விடை கிடைத்திடவில்லை. 

ஆக..... 

பருப்பொருள்கள் குறித்த ஆய்வுகளே முற்றுப் பெறாத நிலையில், உணர மட்டுமே முடியும் என்று சொல்லப்படும் நுண்பொருளாம்[???] கடவுளைக்...கடவுள்களைக் கற்பித்ததும், அவருக்காக... அவர்களுக்காக அளவிறந்த பொருளையும் பொழுதையும் வீணடிப்பதும் மனிதகுலம் செய்துவரும் மாபெரும் குற்றங்களாகும்! 

இவை மன்னிக்க இயலாத குற்றங்களும்கூட!!
==============================================================================
இது, புதுப்பிக்கப்பட்ட மிகப் பழைய பதிவு.