படைப்புத் தத்துவம் குறித்த விவாதங்களில் இடம்பெறும், எளிதில் புரிந்துகொள்ள இயலாத கருத்துருக்களில் ‘முடிவிலி[Infinite> Infinite refers to something without limits, bounds, or end, representing an immeasurable, boundless, or endless state in time, space, or magnitude> AI] என்பதும் ஒன்று.
அதென்ன ‘முடிவிலி’?‘முடிவு’ என்று ஒன்று இல்லாதது ‘முடிவிலி’. அதாவது, அது எதுவாயினும் எந்த வரம்பும் இல்லாதது[being without limits of any kind].
இதற்கு எடுத்துக்காட்டாக, ஒரு கோட்டில் உள்ள புள்ளிகளை திரும்பத் திரும்ப எண்ணிக்கொண்டிருப்பது; பிரபஞ்சத்திலுள்ள நட்சத்திரங்களைக் கணக்கிடுவது; “ஒன்று... இரண்டு... மூன்று.....” என்றிப்படி எண்களை இடைவிடாமல் எண்ணிக்கொண்டிருப்பது போன்றவற்றைச் சொல்லலாம்.
எண்களை எண்ணுவது ஓர் எளிய எடுத்துக்காட்டு.
“ஒன்று இரண்டு மூன்று நான்கு ஐந்து.....” என்று உண்டு உறங்கிய நேரம் போக வாழ்நாளெல்லாம் எண்ணிக்கொண்டே இருப்பது[இது சாத்தியமா என்று கேள்வி எழுப்ப வேண்டாம்; கற்பனைதான். கற்பனையை அடிப்படையாகக்கொண்டே பல கண்டுபிடிப்புகள் நிகழ்த்தப்பட்டுள்ளன].
‘100000000000000000000000.....’ எண்ணுவது எண்ணுபவர்களின் ஆயுள் உள்ளவரை நிகழும். அப்புறம்?
வாழ்ந்துகொண்டிருப்பவர்களில் சிலரோ பலரோ அதைத் தொடரலாம்.
மனித இனம் உள்ளவரை தொடர்ந்து எண்ணுவது[100000000000000000000000000.....>முடிவில்லை] இயலும்.
இதுவும்கூட மனித இனம் உள்ளவரைதான்.
அப்புறம்?
என்றென்று இருந்துகொண்டே இருக்கிறவர்[‘ஆதி அந்தம்’ இல்லாதவர்] என்று சொல்லப்படுகிற கடவுளிடம் இந்தப் பொறுப்பை ஒப்படைக்கலாம்[கடவுளால் அனுப்பப்பட்ட மோடியோ, கடவுள்களின் குருவான சத்துக்குரு ஜக்கியாரோ சிபாரிசு செய்தால் அவர் சம்மதிப்பார். ஹி... ஹி... ஹி!!!].
கடவுள்[இருந்தால்] எண்ணுகிறார்: “10000000000000000000000000000000000000000000000000.....”
அந்தக் கடவுளின் ‘எண்ணும் செயல்’கூட முடிவு பெறாது” என்பது அறியத்தக்கது.
ஆம், மனிதர்களின் ‘எண்ணுதல்’ நிறுத்தப்பட்ட இடத்திலிருந்து எண்ணத் தொடங்கிய கடவுள், இன்றளவும்[இந்த நொடிவரை] எண்ணிக்கொண்டே இருக்கிறார்; எண்ணிக்கொண்டே இருக்கிறார்; எண்ணிக்கொண்டே இருக்கிறார். எண்ணுவது முற்றுப்பெறவில்லை; முற்றுப்பெறாது. கடவுள் இருந்துகொண்டே இருப்பவர் என்பதால் அவர் எண்ணுவதும் தொடரும்.
இதைத்தாங்க ‘முடிவிலி’[being without limits of any kind] என்கிறார்கள் அறிவியலாளர்கள்.
இந்த ‘எண்ணுதல்’ என்னும் ஒரு செயலைச் செய்து முடிப்பதே மனிதர்களுக்குச்[கடவுளுக்கும்கூட] சாத்தியம் ஆகாத நிலையில், படைப்பு, அல்லது கடவுள் குறித்து, ‘ஏன், எப்போது, எப்படி’ என்றெல்லாம் கேள்விகள் கேட்டு, ஆளாளுக்கு ஒரு கடவுளைக் கற்பித்து மதங்களை உருவாக்கி, ஆதிக்க வெறியராய் அடித்துக்கொண்டு செத்தொழிந்தார்கள் நம் முன்னோர்களில் எண்ணற்றவர்கள்; இன்றளவும் சாதல் நிகழ்ந்துகொண்டிருக்கிறது.
இனியேனும், இம்மாதிரியான தவறுகளைச் செய்யாமல், ஒருவர் மீது ஒருவர் அன்பு செலுத்தி அமைதியாக வாழ்ந்து முடிப்பதே அறிவுடைமை ஆகும்.