எனது படம்
கடவுள் குறித்த ஆய்வுரைகளோ, மூடநம்பிக்கைச் சாடல்களோ, என் பதிவுகளின் உள்ளடக்கங்களின் தரம் எனக்கு வாய்த்துள்ள அறிவுக்கும் மனப் பக்குவத்துக்கும் ஏற்பவே அமையும். அவற்றை ஏற்பதும் மறுத்துப் புறக்கணிப்பதும், ஆறறிவும் ஆழ்ந்து சிந்திக்கும் திறனும் வாய்க்கப்பெற்ற உங்களின் விருப்பம் சார்ந்தது.

திங்கள், 10 நவம்பர், 2025

உலக அளவில் அறிவுஜீவிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு! இந்தியாவில்?

மூடநம்பிக்கை வளர்த்துப் பிழைப்பு நடத்தும் அரசியல்வாதிகளின்[குறிப்பாகச் சங்கிகள் எனப்படும் ‘பாஜக’வினர்]  அடாவடித்தனங்களால், இருப்பில் உள்ள கொஞ்சம் பகுத்தறிவையும் இந்த நாட்டு மக்கள் இழந்துவரும் நிலையில், ஐஸ்லாந்து, பிரான்ஸ், ஆஸ்டிரியா, ஃபின்லாண்டு, அமெரிக்கா, கனடா, டென்மார்க், நார்வே, ஜப்பான், சீனா, ஃபிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் மதநம்பிக்கை இல்லாத அறிவுஜீவிகளின் எண்ணிக்கை அதிகரிக்கிறது என்கிறது கீழ்க்காணும் காணொலிச் செய்தி.

ஆதிக்கம் செலுத்தும் சங்கிக் கூட்டத்தை ஆட்சிப் பீடத்திலிருந்து அகற்றினால் மட்டுமே, அறிவுடையார் எண்ணிக்கை அதிகரிக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியா இடம்பெறுவது சாத்தியம் ஆகும்.

காணொலி[விரிவான விளக்கங்கள் எளிய ஆங்கிலத்தில்] :