எனது படம்
அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.

புதன், 9 ஜூலை, 2025

இன்பம் பயக்கும் இயக்குநீர்[கள்] சுரக்க... குதிக்கலாம்! கூத்தாடலாம்!! கட்டியணைக்கலாம்!!!

யக்குநீர்கள்[ஹார்மோன்கள்] நாளமில்லாச் ‘சுரப்பி’களால் உற்பத்தி செய்யப்படுகின்றன. 

இவை உடலின் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்தவும், சீராக வைத்திருக்கவும் உதவுகின்றன. 

இவை பல வகையின. இவற்றால் நாம் மிகப் பல நன்மைகளைப் பெறுகிறோம் என்கிறார்கள் மருத்துவ அறிவியலாளர்கள்.

இவற்றில் சிலவற்றை அறிந்திடக் கீழ்க்காணும் நகல் பதிவை வாசியுங்கள்.