எனது படம்
இந்தத் தளத்தின் பதிவுகளில் இடம்பெறும் கருத்துகளும் விமர்சனங்களும் வாசிப்பாளர்களைத் திருத்துவதையோ, அவர்தம் மனங்களை நோகடிப்பதையோ நோக்கமாகக் கொண்டவை அல்ல. இவை அவர்களைச் சிந்திக்கத் தூண்டுவனவாக அமைதல் வேண்டும் என்பது என் விருப்பம். நான் பதிவுகள் எழுதுவது என் நினைவாற்றலைத் தக்கவைப்பதற்காகவும், ஓய்வு நேரத்தைப் பயனுடையதாக ஆக்குவதற்காகவும் என்பதும் அறியத்தக்கது.

சனி, 20 டிசம்பர், 2025

‘புடின்’இன் அதிரடி அறிவுரை மோடியின் மண்டையில் உறைத்திருக்குமா?


இந்தியாவின் மொழி, கலாச்சாரம் குறித்துப் பேசியுள்ள அதிபர் புடின், "நான் சில தினங்களுக்கு முன் இந்தியா சென்றேன், சுமார் 150 கோடி மக்கள் வசிக்கும் நாட்டில் அனைவரும் இந்தி பேசுவதில்லை; 50-60 கோடி மக்களைத் தவிர பிறர் வெவ்வேறு மொழிகள் பேசுகின்றனர். இந்த ஒற்றுமையையும் பன்முகத்தன்மையையும் பாதுகாப்பது அவசியம்[https://www.dinakaran.com/news/hindi-putin-india-russia/amp/?utm=relatedarticles].

பரந்து விரிந்து பெரியதொரு நாடாக இருந்த ‘சோவியத் யூனியன்’, பல நாடுகளாக உடைந்து சிதறியதற்குக் காரணம், ரஷ்யருக்கு மட்டும் உரியதான ‘ரஷ்ய மொழி’யைப் பிற இனத்தவர்[உள்ளடங்கியிருந்த சிறு சிறு நாட்டினர்] மீது திணித்ததுதான் என்று, புடின் தன் பேச்சில் மறைமுகமாகச் சொல்லியிருப்பது நம் மோடியின் மண்டையில் உறைத்திருக்குமா?

‘காந்தியின் பெயர் இருட்டடிப்பு’... செய்தவர்கள் அவரின் கால் தூசுக்கு ஒப்பாகாத கயவர்கள்!!!

சத்திய நெறி பிறழாமல் வாழ முயன்று, அதில் பெருமளவில் வெற்றியும் பெற்ற உலகின் ஒரே அதிசய மனிதர் காந்தியடிகள்; தமக்குள்ள பலவீனங்களை ஒளிவுமறைவில்லாமல் உலகுக்கு அறிவித்த பெருந்தகை அவர்.

எதிரியை வெல்ல ஆயுதம் ஏந்திப் போராடும் வன்முறைக்கு மாற்றாகத் தம்மைத் தாமே துன்புறுத்திக்கொள்வதன் மூலம், அந்த எதிரியைச் சரணடையச் செய்யும் அகிம்சை நெறியை உலகுக்கு அறிமுகப்படுத்தியவரும் அவரே.

அதனால்தான், இன்றளவும் ஒட்டுமொத்த உலகமும் அவரைப் போற்றுகிறது.

அந்த அதிசய மனிதரின் பெருமைகளையும் சாதனைகளையும் வருங்காலச் சந்ததியினரும் அறிந்து, அவரைப் பின்பற்றத் தூண்டும் வகையில் செயல்பட வேண்டியவர்கள், அதற்கு முரணாக, அவரை நினைவுட்டும் வகையிலான திட்டங்கள், மசோதாக்கள், அமைப்புகள் போன்றவற்றிற்குச் சூட்டப்பட்ட அவரின் பெயரை நீக்கி, புரியாத சமஸ்கிருத & இந்திப் பெயர்களைத் திணிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கிறார்கள். சில கணங்களேனும் தாமதிக்காமல், இந்த நாட்டைவிட்டே விரட்டியடிப்பதற்கு உரியவர்கள் அந்த அயோக்கியர்கள்.

அகிம்சையின் நாயகனை மறவாமலிருக்கும் மக்கள் அதைச் செய்யாமல் வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பது வினோதமானது.

இவர்கள் மக்களா, மானம் ரோஷம் எல்லாம் இல்லாத உயிரற்ற வெறும் பிண்டங்களா என்று சந்தேகிக்கத் தோன்றுகிறது!

‘தீய சக்தி’ பற்றிப் பேசும் எடப்பாடி ஒரு படு பயங்கரத் தீய சக்தி!!!

//தீய சக்திகளிடம் நாம் ஏமாந்துவிட்டால் தமிழகம் இருளில் சிக்கிவிடும்//*[எடப்பாடி பேச்சு]

இவர் தமிழ்நாட்டு முதல்வராக இருந்த ஐந்து ஆண்டுகளும் தமிழ்நாடு இருளில்தான் மூழ்கிக் கிடந்தது. தீய சக்திகளான ஆதிக்க வெறியன்களிடம் தமிழினத்தை அடமானம் வைத்த இவருக்கு இணையான தீய சக்தி உலகில் வேறு எதுவும் இல்லை.

‘திமுக’ தீய சக்தியாகவே இருந்தாலும் அக்கட்சி குறித்து விமர்சிக்கும் யோக்கியதை, சங்கிகளுடன் தேர்தல் கூட்டணி அமைத்திருக்கும் இந்தக் கொத்தடிமைக்கு இல்லவே இல்லை.

இந்த ஆள் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றினால் மட்டுமே தமிழ்நாடு நிரந்தரமாக இருளில் மூழ்கும் என்பது 100% உறுதி.

தீய சக்தி என்று ஒன்று இருந்தால், தீய சக்திகளின் பிடியில் சிக்குண்டு கிடக்கும் இந்தத் தீய சக்தி, தீய சக்தி பற்றிப் பேசுவதறிந்து அது வாய்விட்டுச் சிரிக்கும்!
                                      
                                            *   *   *   *   *