பக்கங்கள்https://kadavulinkadavul.blogspot.com/p/blog-page_1.html
சனி, 30 ஜனவரி, 2021
'கொரோனா'...குணமடைந்தோர்க்கான மிக மிக மிக நல்லதொரு தகவல்!
வெள்ளி, 29 ஜனவரி, 2021
கலியுக 'நிம்போமேனியா'[???] காமுகிகள்!!!
'நிம்போமேனியா' என்றால் இது என்ன?
பெண்களிடம் காணப்படும் கட்டுப்படுத்த முடியாத பாலியல் உணர்வுகளை “நிம்போ மேனியா”[ஆணுக்கு செக்ஸ் உணர்வு அதிகமாக உள்ள நிலை Satyriasis - சட்டைரியாஸிஸ் எனப்படும். பெண்ணுக்கு அதிகமாக இருத்தல், "Nymphomania" - நிம்போ மேனியா எனப்படும்] என்பார்கள்.
பெண்களின் பாலியல் விருப்பம் இல்லாமை என்பது எப்படி ஒரு செக்ஸ் குறைபாடோ, அது போல அதிகக் காம உணர்வும் ஒரு குறைபாடுதான். இதற்கு ஹோமியோபதி மருத்துவத்தில் அற்புதமான தீர்வுகள் உண்டு[இது குறித்த பதிவு பின்னர் வெளியாகக்கூடும்!].
வரலாற்று ஆய்வு ஏடுகளைப் புரட்டிப் பார்த்தால், பழங்காலம் தொட்டே இந்த நிம்போமேனியாக்கள் இருந்திருக்கிறார்கள்.
அதிக ஆண்களைப் படுக்கையில் வீழ்த்திய முதல் பெண்ணாகக் கருதப்படுபவர் ரோமப் பேரரசர் அகஸ்டசின் மகள் ஜூலியாதான். அழகு, அறிவு, படிப்பு என்று எல்லாத் திறமையும் இருந்தும் இவர் காம சுகத்தின் மீதும் மிக மிஞ்சிய ஆர்வம் கொண்டிருந்தார். ஒன்றிரண்டாக ஆரம்பித்த இவரது காதலர்களின் எண்ணிக்கை கணக்கிடமுடியாமல் சென்றது. ரோம் நகரில் வாழும் இளைஞர்களில் பாதிக்கு மேல் இளவரசியோடு இரவைக் கழித்தவர்களாகவே இருந்தார்கள். இவரோடு படுக்கையைப் பகிர்ந்துகொண்டவர்களின் எண்ணிக்கை 80 ஆயிரத்தைத் தாண்டியதாம்!!!
இரண்டாவது இடத்தில் 18ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பிரெஞ்ச் நடிகையான மெல்லி துபோய்ஸ் வருகிறார். 20 ஆண்டுகளில் தான் சந்தித்த எல்லா ஆண்களைப் பற்றிய விவரங்களையும் டைரியில் எழுதி வைத்திருக்கிறார். அவரது காதலர்களின் எண்ணிக்கை 16, 527. சராசரியாக ஒரு நாளைக்கு மூன்று ஆண்களுடன் பஞ்சணையைப் பகிர்ந்துகொண்டிருக்கிறார்.
இந்தப் பட்டியலில் மூன்றாம் இடம் பிடிப்பவர் ரோமப் பேரரசி வலேரியா மெசலீனா. இவர் பேரரசர் கிளாடியசின் மனைவி. தொடக்கத்தில் அரசி என்ற அதிகாரத்தைப் பயன்படுத்தி அரண்மனை ஊழியர்களைப் படுக்கைக்கு அழைத் தார். இவர் ஒரு முறை விலைமாது ஒருவருடன் போட்டி வைத்து ஆண்களுடன் உறவு கொண்டார். அதில் 24 மணி நேரத்தில் 25 ஆண்களுடன் உறவு கொண்டுள்ளார்.
நான்காவது இடத்தில் வருபவர் 1934இல் புகழ்பெற்று விளங்கிய பிரெஞ்ச் நடிகை பிரிஜிட்டி பார்டட். ஒவ்வொரு இரவும் எனக்கு ஒரு புதுத் துணை வேண்டும் என்று வெளிப்படையாகவே பத்திரிக்கைக்குப் பேட்டி கொடுத்தவர். 20 வயது முதல் 40 வயதுவரை இவர் சந்தித்த ஆண்களின் எண்ணிக்கை மட்டும் 5 ஆயிரத்தை தாண்டியது.
கலிகாலம்!!!!!
============================================================================
வியாழன், 28 ஜனவரி, 2021
நீதிதேவதையைக் கண் கலங்க வைக்கும் ஒரு நீதிமன்றத் தீர்ப்பு!?
போக்சோ எனப்படும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்ற தடுப்புச் சட்டத்தை மேற்கோள்காட்டி, இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. இதற்கு, குழந்தைகள் நல அமைப்பான, ஐ.பி.பி.எப்., எனப்படும் சர்வதேசத் திட்டமிட்ட பெற்றோர் அமைப்பின் தெற்காசியப் பிரிவு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இது குறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது: தோலுடன் தோல் தொடர்பு இல்லாதது பாலியல் அத்துமீறலாகாது என்பதை ஏற்க முடியாது. இது ஒப்புதல் தொடர்பானது. இது போன்ற சம்பவங்களில், வயதில் மூத்தவரான ஒரு ஆண், தன்னைவிட வலு குறைந்த சிறுமியிடம் நடத்தும் அத்துமீறல் இதுவாகும்.
தனது வலுவைக் காட்டும் வகையிலேயே[வக்கிர உணர்ச்சியைத் தணிப்பதற்காக என்பதே சரி], இதுபோன்ற செய்கையில் ஈடுபடுகின்றனர். அதை ஒரு குழந்தையால் எப்படித் தடுக்க முடியும். குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகளைத் தடுக்க எடுத்து வரும் முயற்சிகளுக்கு எதிராக, இந்தத் தீர்ப்பு அமைந்துள்ளது. இதை உயர்நிலை நீதிமன்றம் ரத்து செய்யும் என எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும், குழந்தைகள் உரிமைப் பாதுகாப்புக்கான தேசியக் கமிஷன், மஹாராஷ்டிர அரசுக்குக் கடிதம் ஒன்று எழுதியுள்ளது. நாக்பூர் கிளையின் தீர்ப்பை எதிர்த்து அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கும்படி, அதில் குறிப்பிடப்பட்டுள்ளது#
இது, நேற்றைய நாளிதழ்ச் செய்தி[https://m.dinamalar.com/detail.php?id=2697262].
குழந்தைகள் நலப் பாதுகாப்பு, குழந்தைகள் உரிமைப் பாதுகாப்பு ஆகியவற்றிற்கான அமைப்புகள் மேற்கண்ட தீர்ப்புக்கு எதிர்ப்புத் தெரிவிப்பதில் நியாயம் இருக்கிறது என்பதில் சந்தேகத்திற்கு இடமில்லை.
'பாலியல் இச்சையுடன், உடலுறவு இல்லாமல், தோலும் தோலும் தொடர்பு கொள்ளாமல், சிறுமியின் மார்பகத்தைத் தொடுவது, பாலியல் அத்துமீறலாகாது' என்பது தீர்ப்பு.
தோலும் தோலும் தொடர்பில்லாத நிலையில் சிறுமியின் மார்பகத்தைத் தொடுவது தவறில்லை என்றால்.....
ஒரு முறை என்றில்லாமல், ஆடை மறைத்த மார்பகத்தை எத்தனை தடவையும் தொடுவதோ, கையை அகற்றாமல் விரும்பும்வரை தொட்டுக்கொண்டே இருப்பதோ, ஆடையுடன் சேர்த்து மார்பகத்தை வாயால் கவ்வுவதோ, ஆடை சிறிதும் விலகாத வகையில் கட்டி அணைப்பதோகூடத் தவறில்லை என்றாகிறது.
சிறுமியை நெருங்கக்கூட வேண்டாம்; எட்ட நின்று பாலியல் இச்சையுடன் உற்று நோக்குவதும், ஆபாசமாகச் சைகைகள் செய்வதும்கூட, சிறுமியின் மன உணர்வைச் சிதைக்கும்தானே?
'அவன் அவளைப் பார்வையால் விழுங்கினான்; பார்வையாலேயே கற்பழித்தான்' என்றெல்லாம் கதாசிரியர்கள் எழுதுவார்கள். இப்படிப்பட்ட வக்கிர எழுத்துகளை நீதியரசர் படித்ததில்லையா, படித்தவர்கள் சொல்லக் கேட்டதில்லையா?
'பாலியல் இச்சையுடன், தோலும் தோலும் தொடர்பு கொள்ளாமல் மார்பைத் தொடுவது தவறில்லை' என்று இன்று தீர்ப்பு வழங்கும் நீதியரசர், நாளை 'பாலியல் இச்சை இல்லாமல் தோலோடு தோல் உரசினாலும் தவறில்லை' என்று தீர்ப்பு வழங்குவாரோ என்னும் அச்சமும் நம்முள் எழுகிறது.
நம் நீதியரசர்கள் மக்களால் பெரிதும் மதிக்கப்படுபவர்கள். சிறுமியர் நல அமைப்புகளின் கோரிக்கையை ஏற்று, இத்தீர்ப்புக்கு மாற்றாக ஏற்கத்தக்கதொரு தீர்ப்பை வழங்குவாராயின் அவர்கள் மீதான மதிப்பு பன்மடங்கு அதிகரிக்கும் என்பதில் சிறிதளவும் ஐயத்திற்கு இடமில்லை.
===================================================================================
புதன், 27 ஜனவரி, 2021
பெரியாரை இழிவுபடுத்தி இன்புறும் ஈனப்பிறவிகளுக்கு.....
செவ்வாய், 26 ஜனவரி, 2021
பகுத்தறிவுப் பெண் சிங்கம் 'தஸ்லிமா நஸ்ரின்'!!!
உலகறிந்த பெண் எழுத்தாளர் 'தஸ்லிமா நஸ்ரின்'. இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் அச்சுறுத்தப்பட்டு, 1994ஆம் ஆண்டு முதல் அமெரிக்கா, ஐரோப்பா, இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இடம்பெயர்ந்து வாழ்ந்துவருபவர்.
வங்கதேசத்தை இஸ்லாமிய நாடாக மாற்ற மதசார்பற்ற அரசியலமைப்புச் சட்டம் கைவிடப்பட்டபோது, அதைக் கண்டித்து 69,70-களில் நடந்த போராட்டங்களில் இவரும் பங்கேற்றார்.
இவர், அனைத்து மதங்களையும் விமர்சிப்பவர். குஜராத்தில் இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டபோதும் எதிர்த்தார். இந்து மதச் சாமியார்களையும் எதிர்த்தார். வங்கதேசத்தில் இந்துக்கள் மீது அடக்குமுறை நடந்தபோதும் எதிர்த்தார்.
கிறிஸ்தவர்கள் மீது பாகிஸ்தானில் தாக்குதல் நடத்தப்பட்டபோதும் எதிர்த்துக் கண்டனம் தெரிவிக்கத் தவறவில்லை.
இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் அச்சுறுத்தலுக்கு இவர் ஆளானது ஏன்? அதிரவைக்கும் காரணங்களைப் பலரும் அறிந்திருக்கக்கூடும். அறியாதவர்களுக்காக இந்தப் பதிவு.
*என்னை யாரும் இஸ்லாமியர் என்று அழைக்காதீர்கள். நான் ஒரு நாத்திகர்.
*மதம் பெண்களைத் துன்புறுத்துகின்றது. சட்டங்கள் சமத்துவத்தின் அடிப்படையில் இருக்க வேண்டும். மதத்தின் அடிப்படையில் இருக்கக் கூடாது.
*கல்வி, திருமணம், குழந்தை வளர்ப்பு மற்றும் சொத்துரிமை ஆகியவற்றில் பெண்களுக்குச் சம உரிமை தேவை. மதத்தின் பேரில் பெண்கள் மீது கல்லெறிவதை நிறுத்த வேண்டும்.
*நாகரீகமடையும் நாடுகள் அனைத்தும் மத்தையும் நாட்டையும் பிரித்தே பார்க்கின்றன. மற்ற மதங்களுக்கு இருக்கும் இந்த நிலை இஸ்லாமியத்துக்கு மட்டும் விதிவிலக்கானது அல்ல.
*இஸ்லாமியர்களுக்குச் சுயமான சிந்தனை இருக்கக் கூடாதா? இஸ்லாமியத்தை அந்த மதத்தைச் சேர்ந்தவர்களே எதிர்க்கக் கூடாதா? மதத்தை விமர்சனம் செய்வதற்கு முஸ்லிம் அல்லாத அறிவுஜீவிகள்தான் தகுதிபடைத்தவர்களா?
*மதங்களைவிடவும் மேலானது மதசார்பற்ற மனிதாபிமானம். அதை வலியுறுத்துவது நம் அனைவரின் கடமை.
இவ்வகையிலான கருத்துகளை அழுத்தம் திருத்தமாக வலியுறுத்தியதொடு.....
நாத்திகரான எழுத்தாளர் தபா பாபா என்ற பிரபல இணையப் பதிவர் கடந்த 2013-இல் நடந்த ஷபாக் போராட்டத்துக்குப் பின்னர் படுகொலை செய்யப்பட்டதையும்,
1915ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் அமெரிக்க வாழ் வங்கதேச எழுத்தாளர் அவிஜித் ராய்[அவிஜித் ராய் ஒரு அறிவியல் எழுத்தாளர், சுதந்திர சிந்தனையாளர், நாத்திகவாதி மற்றும் பகுத்தறிவு கொண்டவர். அனைத்துப் பிரச்சினைகளுக்கு விவாதங்கள் மற்றும் முறையான அணுகுமுறையுடனே தீர்வு காண வேண்டும் என்று எண்ணியவர். வங்கதேசத்தில் சுதந்திரச் சிந்தனையாளர்களுக்கான இடம் பறிக்கப்பட்டபோது, அவர்களுக்கான பாதையை ஏற்படுத்தியவர் அவிஜித் ராய். வங்கதேச எழுத்துலகத்துக்கு அவரது பங்களிப்பு எடை போட முடியாதது] தனது சொந்த நாட்டில் நடந்த புத்தகக் கண்காட்சியில் பங்கேற்கச் சென்றபோது சந்தேக அடிப்படைவாதிகளால் படுகொலை செய்யப்பட்டதையும் கண்டித்தார் தஸ்லிமா நஸ்ரின்.
"அறிவுஜீவிகளையும் சுதந்திரச் சிந்தனையாளர்களையும் அவர்கள்[அடிப்படைவாதிகள்] கொலை செய்கின்றனர். பாகிஸ்தான், முற்றிலும் இஸ்லாமியமயமான நாடு. ஆனால் வங்கதேசத்தின் அரசியல் சாசனம் மதச் சார்பற்றது.
மதச் சார்பற்ற கல்வியே இந்தச் சமூகத்துக்கு தேவை. மதராஸாக்களின் போதனை அல்ல. மதப் பிரிவினைவாதிகளின் இருப்பிடமாக வங்கதேசம் மாறுவதை அனுமதிக்கக் கூடாது" என்றும் வலியுறுத்தினார்.
தொடர்ந்து இவை போன்ற சீர்திருத்தக் கருத்துகளைக் கிஞ்சித்தும் அஞ்சாமல் பரப்புரை செய்கிறார்.
தஸ்லிமா நஸ்ரின் அவர்களை மனமாறப் போற்றுவோம்.
==================================================================================
https://www.hindutamil.in/news/india/36368--9.html இல் வெளியான, தஸ்லிமா நஸ்ரின் அளித்த பேட்டியை ஆதாரமாகக் கொண்டு உருவாக்கப்பட்டது இப்பதிவு.
திங்கள், 25 ஜனவரி, 2021
'இங்கே' கடவுள்களுக்கு அனுமதி இல்லை!!!
#'விதர்பா சாஹித்ய சங்' என்கிற அமைப்பு, மராத்தி எழுத்தாளர் யஸ்வந்த் மனோகருக்கு 'ஜீவன்வ்ரதி' என்கிற வாழ்நாள் சாதனையாளர் விருதை கடந்த ஜனவரி 14-ம் தேதி நாக்பூரில் நடக்கும் தங்களின் 98-ம் ஆண்டு விழாவில் வழங்கவிருந்தது.
ஒரு மாத காலத்துக்கு முன்பே எழுத்தாளர் மனோகருக்கு விருது கொடுப்பது தொடர்பான அழைப்பிதழ் கொடுக்கப்பட்டது. விழா மேடையில் சரஸ்வதியின் படம் வைக்கப்படும் என மனோகரிடம் அப்போது கூறப்படவில்லை என்று தெரிகிறது.
இந்த நிலையில், இந்த விருதுக்கு மறுப்பு தெரிவித்து விதர்பா சாஹித்ய சங்கத்துக்கு கடிதம் எழுதியுள்ள எழுத்தாளர் யஸ்வந்த் மனோகர், "பெண்கள் மற்றும் சூத்திரர்களுக்கு கல்வியும் அறிவும் மறுக்கப்பட்டு சுரண்டப்பட்டதன் அடையாளம் சரஸ்வதி. இலக்கிய நிகழ்ச்சிகளில் மதத்தை என்னால் அனுமதிக்க முடியாது. ஒரு எழுத்தாளராக என் பங்கையும், என் சிந்தனைகளையும் விதர்பா சாஹித்ய சங்கத்துக்குத் தெரியும். சரஸ்வதியின் உருவப்படம் மேடையில் இருக்கும் என என்னிடம் கூறப்பட்டது. என் மதிப்புகளை விட்டுக் கொடுத்துவிட்டு என்னால் இந்த விருதை ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே பணிவோடு இந்த விருதை மறுத்தேன்" என்று உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன#
*மனோகரைப் போல, விருதுக்கென, கொண்ட கொள்கையைக் கைவிடாத 'மனோதிடம்' நம் எழுத்தாளர்களுக்கு இருந்ததா? இருக்கிறதா?!
==================================================================================
https://www.bbc.com/tamil/india-55700477 -18 ஜனவரி 2021
ஞாயிறு, 24 ஜனவரி, 2021
'கோமா'வில் கடவுள்!!!
சனி, 23 ஜனவரி, 2021
வீரமணியா[தி.க.தலைவர்] 'விவேக' மணியா?!?!
இன்று, தற்செயலாக, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்களின் 'விடுதலை'[https://www.facebook.com/viduthalaidaily/நாளிதழை வாசிக்க நேர்ந்தது.
இதழில் இடம்பெற்றுள்ள பதிவுகளுக்கான கருத்துரைகளை வாசித்தபோது, பெரும் எண்ணிக்கையிலான கருத்துரைகள் என்னைக் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கின.
ஒரு பதிவில் இடம்பெறும் கருத்துகளுக்கு எதிராக மாறுபட்ட கருத்துரைகள் இடம்பெறுவது வரவேற்கத்தக்கதே. ஆனால், அக்கருத்துரைகளில் அநாகரிகமானதும் ஆபாசமானதுமான சொற்களோ வாசகங்களோ இடம்பெறுதல் கூடாது என்பது பதிவர் அனைவருக்கும் ஏற்புடையதாகும்.
விடுதலையில், மேற்குறிப்பிட்ட வகையிலான கருத்துரைகள்[அநாகரிகம், ஆபாசம்] பெரும் எண்ணிக்கையில் இடம்பெற்றுள்ளன[வீரமணி அவர்கள் இவற்றிற்கு மறுப்புரை வழங்கவோ, இவற்றை மட்டுறுத்தல் செய்யவோ இல்லை என்பது பெரும் வியப்புக்குரியதாகும்]. எடுத்துக்காட்டாகக் கணிசமான கருத்துரைகளை[பிழைதிருத்தம் செய்யாமல்] இங்கு தொகுத்திருக்கிறேன்.
*Vivek Ssr
பொறுக்கி போட்டாலே உன் அமைப்புல 50 ஆயிரம் பேர் கூட இருக்க மாட்டானுக இதுல அமெரிக்கா வரைக்கும் அறிக்கையா 🤣🤣🤣 இது எல்லாம் உனக்கே ஓவரா தெரியவில்லையா ஓசிசோறு
*சூனா பானா
Congress aatchi la daily namma meenava sahothirarkalai kollum pothu yaarodatha koombikittu iruntha
*முருகன் வேல்
ஏண்டா ஓசி சோறு வீரமணி, அப்புறம் எதுக்கு மேன் அண்ணாவுக்கு மெரினா கடற்கரையில் சமாதி அதற்கு குண்டு முழங்க புதைக்கும் இறுதி ஊர்வலம். கருணாநிதிக்கு? தினமும் தயிர் வடை வேற சமாதி மேல வச்சிடடு போக அவரும் வந்து சாப்பிடுகிற உண்மை சம்பவம் நடக்குது அந்த சமாதியில். அதுசரி ஏமாந்தவன் பொண்டாட்டி தாலி அறுத்து வாழும் உனக்கு திமுக குடும்பத்து பகுத்தறிவுக் காட்சிகளில் தலை இட்டால் உன் சோரியான் சொத்துக்கள் உன் குடும்பத்தை விட்டு கைமாறி போய் விடும் என்ற உன்னுடைய அந்த பயம் எனக்கு பிடித்து இருக்கிறது
*முண்ட கலப்பை
அவுசாரி வீட்டுல கழகத்தை தொடங்குன நாயெல்லாம்
கற்பை பற்றி பேசுது..!… மேலும் காட்டு
*Seshadri Ramesh
என்ன பயன்.. புண்ணாக்கு பயலே
*Sakthivel Gounder
தெலுங்கு கட்டுமரத்து சூழ்ச்சியில் வளர்ந்த திம்மவாலனுலு..
#திருமாவளவன் என்ற பெயரில் நடமாடிக்கொண்டு இருக்கும் தமிழின விரோதியின் உண்மையான பெயர் #திம்மவாலனு
#அவனே சூட்டிக்கொண்டது தான் *திருமாவளவன்*
#உண்மையான சாதி தெலுங்க #சக்கிலி.!
அவனே சூட்டிக்கொண்டது #பரையர்
இந்த திம்மவாலனு வின் அப்பா பெயர் #இராமசாமி
உலகிலேயே அப்பனுக்கு பெயர் வைத்தவன் இவனாகத்தான் இருக்க முடியும், அப்படி #தொல்காப்பியன் என்று அப்பனுக்கு பெயர் சூட்டி தமிழனாக்கிய மகனும் இந்த திம்மவாலனுவே தான்.!
#இவனது அம்மா பெயர் சின்னத்தாயி இல்லை #சவுடம்மா...
#இவைத்து அக்கா பெயர் கூட திலகவதி இல்லை #நார்த்தம்மா என்கிற பிற்கால திரேஸ்ராணி
திம்மவாலனுவின் உண்மையான மதம் பௌத்தம் அல்ல #கிறித்துவம்.!
*Govind Raj
மூடிட்டு போங்கடா
*Ayyanar Pandian
தமிழர் திருநாள் தெரியும் அது என்னடா தேவிடியா திருநாள் ஸாரி திராவிடியா திருநாள்
*Vijay Vijay Viran
தமிழர் திருநாளை இந்த ஈனபயல்கள் திரவிட திருநாள் என்கிறானுங்கதமிழனை தமிழை தமிழன் பன்பாடு கலாச்சாரம் வழிபாடை அழிக்கவந்தவனே திரவிடன் என்னும் எச்சி பயல்கள்
*Karthik IN
மதவெறிய தூண்டிவிடுறதே நீ தான் ஆனா கொஞ்சம் கூட வெக்கமில்லாம இப்படி பேசுற பாரு ..அறிவாலயத்துக்கு பின்னடி பொறங்கைய நக்கி திங்குறதுக்கு நீ என்னவேணாலும் செய்வ.. ஆனா நீ வெக்கப்படமாட்ட.
*Muhilan Chandru
ஜெயலலிதாவை சட்டசபையிலே சேலையை ஊருவின கோஷ்டி தானே நீங்க
*Muhilan Chandru .அதைவிட எம்.ஜி.ஆர் படங்களில் பாரு நீச்சல் உடையில் வருவார் உங்க அம்மா.அவளே சேலையை கிழித்து நாடகம் போட்ட சினிமாக்காரி. வந்துட்டான் வரலாறு சொல்ல.
*Muhilan Chandru ஜெயலலிதா கற்பின் அரசிதானே
*Sami Nathan
ஏண்டா முட்டா கூதி உ.பி யில் எங்கு கற்பழிப்பு நடந்தாலும் மோடி, யோகி , BJP ன் கிளப்பி விடுற நாய. இந்தியாவில் உ.பி தாண்டா பெரிய மாநிலம் 26 கோடி மக்கள் தொகை, 70 க்கும் மேல் MP உள்ள பெரிய மாநிலம். பல சாதி, பல மதம், பல கலாச்சாரம் உள்ள மாநிலம்.. கடல் என்ற இயற… மேலும் காட்டு
*முருகன் வேல்
மஞ்சள் துண்டு போட்டு கடவுள் பக்தியோடு கடைசி காலத்தை கழித்த அந்த கருணாநிதியா? தயிர் வடை கூட வச்சி அவர் சமாதியில் படையல் போட்டார்களே அவரா? பெரிய புழுத்தி மாதிரி பேசின அந்த சொரிமுத்து மூட சமாதி மேலே குடிக்கும் பாலை ஊற்றி பகுத்தறிவுக்கு எதிராக செய்த அந்த ச… மேலும் காட்டு
*முருகன் வேல்
ஆமாம் தினமும் சுயமரியாதை உடன் கருணாநிதி எப்படி திருட்டு ரெயில் ஏறி கக்கூஸ் இல் ஒளிந்து சென்னை வந்தார், சுய மரியாதையுடன் எப்படி ஊரை கொள்ளை அடித்து ஆசியாவில் தனது குடும்பத்தை பெரும் பணக்காரர்களாக ஆக்கினார், எப்படி வீரமணி சுயமரியாதை ஆக ஓசி சோறு என்று பெயர… மேலும் காட்டு
*Kesavan Durai
மோடி கும்பல் திருட்டு கும்பல் அய்யோக்கிய கும்பல் பிராடு பயல்கள் அவர்களிடம் பேச என்ன இருக்கு
*Rajesh Kumar Shathriyan
உங்களுக்கு எவ்வளவு கேட்டாலும் ஆசை தீராத தேவ்டியா பசங்களா
===============================================================
*மேற்கண்ட கருத்துரைகள் பற்றி, பண்பாடு பிறழாமல் 'கருத்துரை' வழங்குவது என் விருப்பமாக இருந்தது. எத்தனை யோசித்தும் அது சாத்தியப்படவே இல்லை.
வெள்ளி, 22 ஜனவரி, 2021
'உடலுறவுப் போட்டி'...ஆன்லைன் ஊடகத்தின் அண்டப்புளுகு!!!
சில ஊடகங்கள் விளம்பர நோக்கத்துடன், அவ்வப்போது அநியாயத்துக்குப் பொய்ச் செய்திகளை வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளன. இது விசயத்தில் தினமலர், காலைக்கதிர் போன்றவை குறிப்பிடத்தக்கவை.
இவற்றையெல்லாம் மிஞ்சும் வகையில் 'செய்திப்புனல்' என்னும் இணைய இதழ் கீழ்க்காணும் வகையில் ஒரு செய்தியை[22.01.2021] வெளியிட்டுள்ளது.
#செக் குடியரசு, பிராக் நகரில் உள்ள ஒரு விபச்சார விடுதியில் வினோதமான விளையாட்டு ஒன்று நடத்தப்பட்டுள்ளது. 24 மணி நேரத்தில் ஓர் ஆண் பல பெண்களுடன் உடலுறவு கொள்ளும் போட்டி அது.
இதற்கான நிபந்தனைகள்:
* சத்தூட்டும் மருந்துகளைப் பயன்படுத்தல் கூடாது.
* இயற்கை மருந்துகளைப் பயன்படுத்தலாம்.
* ஒரு போட்டியாளர் ஒரு முறை ஒரு பெண்ணுடன் கொள்ளும் உடலுறவில் 5 மில்லி லிட்டர் விந்துவை மட்டுமே வெளியேற்ற வேண்டும். இது துல்லியமாக அளவிடப்படும்.
21.09.2018இல் நடந்த ஒரு உடலுறவுப் போட்டியில், சிங்கப்பூரைச் சேர்ந்த ஒருவர் 24 மணி நேரத்தில் 57 பெண்களுடன் புணர்ச்சி செய்து சாதனை நிகழ்த்தினார்[இவரின் பெயர் வெளியிடப்படவில்லை].
அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு ஆபாசப் பட நடிகர், 1983ஆம் ஆண்டில் 24 மணி நேரத்தில் 55 பெண்களுடன் உடலுறவு கொண்டதே சாதனையாக இருந்தது#
இது முற்றிலும் ஒரு பொய்யான செய்தி என்றே எண்ணவேண்டியுள்ளது.
உடலுறவில் ஈடுபடும் ஆண்கள், குறைந்த அவகாசத்தில் விந்து வெளியேறுவதைத் தடுக்கப் பல்வேறு வழிகளைக் கையாளுகிறார்கள். கணிசமானவர்கள் வெற்றி பெறுவதும் சாத்தியமாகக்கூடும்.
ஆலால், விந்து வெளியேறாமல் தடுப்பதற்கே அவனவன் படாதபாடு படும் நிலையில், விந்து முழுவதும் வெளியேறிவிடாமல் கட்டுப்படுத்தி, கொஞ்சம் கொஞ்சமாக வெளியேற்றுவது எளிதான செயலல்ல.
மிக மிக மிகக் கடினமான மனக் கட்டுப்பாட்டுப் பயிற்சியின் மூலம் அது சாத்தியப்பட்டாலும்கூட, இங்கே குறிப்பிடப்பட்டுள்ளது போல், துல்லியமாக, மிகப் பல தடவை[57 தடவை!!!] 5 மில்லி லிட்டர் அளவில் மட்டுமே விந்துவை வெளியேற்றுவது இயலக்கூடிய ஒன்றல்ல; அல்லவே அல்ல.
இம்மாதிரியான அசிங்கச் சாதனை நிகழ்ச்சி, 'செக்[ஸ்]' நாட்டில் இடம்பெற்றதாகச் செய்தி வெளியிடுவது அந்நாட்டிலுள்ள விபச்சார விடுதிகளின் கைங்கரியமாக இருக்கலாம். அதிகம் வாசிக்கப்படாத ஊடகங்கள் வெளியிடும் புளுகுச் செய்தியாகவும் இருக்கலாம்.
இதனால், அம்மாதிரியான விடுதிகளுக்கும் ஊடகங்களுக்கும் பயன் விளையலாம். செய்தியை வாசிப்பவர்களுக்கு எந்தவொரு பயனுமில்லை என்பதை அறிக.
"பிறர் அறிவது இருக்கட்டும், பயனற்ற இந்தச் செய்தியைப் பதிவாக நீ வெளியிட்டிருக்கிறாயே, இதனால் விளையும் பயன் என்ன?" என்று கேட்கிறீர்களா? அது வந்து...வந்து...
ஹி...ஹி...ஹி!!!
===============================================================
https://www.seithipunal.com/relationship/world-record-for-55-women-one-day
புதன், 20 ஜனவரி, 2021
கொதிக்கும் எண்ணையில் குளிப்பார்களா ஐயப்ப பக்தர்கள்?!?!
செவ்வாய், 19 ஜனவரி, 2021
எழுத்தாளர் 'சாரு'[நிவேதிதா]வின் 'சரடு'கள்!!!
சாருநிவேதிதா மிகச் சிறந்த எழுத்தாளர். இன்றைய சில முன்னணி எழுத்தாளர்களில் முன்னிலை வகிப்பவர்.
எதைப் பற்றியும் எழுதுகிறார்; எவ்வளவும் எழுதுகிறார். அவ்வளவையும் சலிப்பில்லாமல் படிக்கலாம். ஆனால், அவரிடமுள்ள குறிப்பிடத்தக்கதொரு பலவீனம்.....
தான் எழுதும் கட்டுரைகளில், தவறாமல் 'சரடு'கள் சேர்ப்பது(அதுகளையும்கூட ரசிக்கும்படி எழுதுவது அவரின் தனித் திறமை).
13.01.2021 குமுதம் வார இதழில், அவருடைய கட்டுரையில் விவரிக்கப்பட்டுள்ள ஒரு நிகழ்வு கீழே.
#தஞ்சாவூர்க் கவிராயர் என்று ஒரு எழுத்தாளர். அவர் வீட்டில் ஒரு வாதநாராயண மரம். அதன் கிளை தங்கள் வீட்டில் வந்து கார், தரை எல்லாம் இலையாகிவிடுகிறது என்று மரத்தை வெட்டச் சொல்லி அடுத்த வீட்டிலிருந்து ஒரே டார்ச்சர்.
ஒரு கட்டத்தில், டார்ச்சர் தாங்க முடியாமல் கவிராயர் அருவாளை எடுத்துக்கொண்டு மரத்தை வெட்டப் போய்விட்டார். அந்த நேரம் பார்த்து மின்வாரிய அதிகாரிகள் ஏதோ மின் பிரச்சினை என்று வந்துவிடுகிறார்கள்.
மின்சாரம் நம் உயிர் இல்லையா, இவரும் அருவாளைப் போட்டுவிட்டு அவர்களிடம் போய்விடுகிறார்.
மறுநாள் மரத்தை வெட்ட வந்தால் மரம் பட்டுப்போய்க் கிடக்கிறது. உயிரே இல்லை. இவருக்கு ஒன்றுமே புரியவில்லை. இவரின் மனைவி சொன்னாராம், "அந்த மரத்தைக் குழந்தை மாதிரி பராமரித்தோம். அதை வெட்ட அருவாளை ஓங்கினீர்கள். அதற்குப் பொறுக்குமா? செத்துவிட்டது" என்று.#
சாரு செத்துவிட்டதாகச் சொல்லும் தாவரம், சின்னஞ்சிறு செடியல்ல; பெரிதாக வளர்ந்துவிட்ட மரம். மரமோ செடியோ வெட்டும் நோக்கத்துடன் அருவாளை ஓங்கியதால் அது செத்துவிட்டது என்பது(அதுவும் ஒரே நாளில்) 100% நம்பும்படியாக இல்லை.
என் ஆயுளில், கிராமத்தில் வசித்தபோது எத்தனையோ செடிகளையும் மரக்கிளைகளையும் வெட்டியிருக்கிறேன். அவற்றில் எந்தவொன்றும் சாரு சொல்வதுபோல் பட்டுப்போனதே இல்லை(வேறோடு பிடுங்கினால்தானே சாகும்?). உங்களின் அனுபவமும் இவ்வாறானதாகத்தான் இருக்கும் என்று எண்ணுகிறேன்.
இப்படியொரு அனுபவம் உண்மையில் தஞ்சாவூர்க் கவிராயருக்கு ஏற்பட்டிருந்தால் அதற்கான ஆதாரத்தைச் சாரு தந்திருக்கலாம். செய்யவில்லை.
'நீங்கள் யாரும் நம்ப மாட்டீர்கள். எனக்கு நூறு முறை இப்படி நடந்திருக்கிறது' என்று வேறு அடித்துவிடுகிறார். ஆயிரக்கணக்கான வாசகரால் மதிக்கப்படுகிற எழுத்தாளர் சாருவால் எப்படி இப்படியெல்லாம் மனமறியப் பொய் சொல்ல முடிகிறது?
'நம்முடைய ஆதி மருத்துவமான ஆயுர்வேதத்தில் எந்த மூலிகையை எடுக்க நினைத்தாலும், அதற்கான சில மந்திரங்களைச் சொல்லி அனுமதி பெற்றுக்கொண்டுதான் அதைப் பறிக்க வேண்டும்' என்றும் தன் கட்டுரையில் சொல்லியிருக்கிறார்.
மந்திரங்கள் சொல்வது இருக்கட்டும், மூலிகை நமக்கு அனுமதி தந்துவிட்டது என்பதை அறிவது எப்படி?
எப்படி? எப்படி சாரு அவர்களே?!
சாருவுக்கு நாம் சொல்ல விரும்புவது ஒன்றே ஒன்றுதான். அது.....
உங்களுக்கு வெகு சுவையாகப் பொய் சொல்லத் தெரிகிறது. ஆனால், அதில் கொஞ்சமே கொஞ்சமேனும் நம்பகத்தன்மை இருத்தல் வேண்டும் என்பதை அன்புகொண்டு நினைவில் கொள்ளுங்கள்!
உங்கள் படைப்புகளை மிகப் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் வாசிக்கிறார்கள். அவரகளிடையே இவ்வாறான மூடநம்பிக்கைகளைப் பரப்பவது உங்களின் தகுதிக்கு ஏற்றதல்ல என்பதை உணருங்கள்.
நன்றி சாரு அவர்களே.
===============================================================
கைபேசி(செல்போன்)யில் வெளியிடப்பட்டது இப்பதிவு.
https://www.kumudam.com/magazines/open_magazine/535 ஜனவரி -13, 2021
ஞாயிறு, 17 ஜனவரி, 2021
அம்மாடியோவ் திருவேங்கடவனும் ஐயோ பாவம் ஐயப்பனும்!!!
கீழ்க்காண்பவை, சில நாட்களுக்குள் வெளியான ஊடகச் செய்திகள்:
#திருப்பதி ஏழுமலையான் கோவில் வைகுண்ட ஏகாதசி நிகழ்வில் 29 கோடி ரூபாய் பக்தகளின் உண்டியல் காணிக்கை மூலம் வருமானமாகக் கிடைத்துள்ளதாகக் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
வைகுண்ட ஏகாதசியை ஒட்டிக் கடந்த மாதம் 25ஆம் தேதி இங்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. வழக்கத்திற்கு மாறாக இந்த ஆண்டு, முதல் முறையாக 10 நாட்கள் சொர்க்கவாசல் திறக்கப்பட்டுப் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் 10 நாட்களில் 4 லட்சத்து 25 ஆயிரத்து 596 பக்தர்கள் சுவாமியைத் தரிசனம் செய்திருப்பதாகவும், 29.0 கோடி ரூபாயைக் காணிக்கையாக அவர்கள் உண்டியலில் செலுத்தியுள்ளதாகவும் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது# -இது திருப்பதி வேங்கடவன் எனப்படும் ஏழுமலையான் பற்றிய தகவல்.
கீழ்வருவது, சபரிமலை ஐயப்பன் பற்றியது:
#ஐயப்பன் கோவிலில் வருமானம் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருப்பதால், கொரோனா குறைந்த பின் மாதாந்தர நடை திறக்கும் நாட்களை அதிகரிக்கத் தந்திரியுடன் ஆலோசிக்கப்படும் என்று திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் வாசு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாகப் பேசிய அவர், மார்ச் முதல் சபரிமலை வருமானம் நின்றுவிட்டதால், கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது என்றார்.#
ஏழுமலையான், ஐயப்பன் என்னும் இந்த இரண்டு சாமிகளுமே சக்தி வாய்ந்தவைதான் என்கிறார்கள். காணிக்கை பெறுவதில் ஏனிந்த ஏற்றத்தாழ்வு? இது விசயத்தில் மனிதர்களுக்கும் கடவுள்களுக்கும் என்ன வேறுபாடு?
திருவேங்கடவன் கணக்கில் கோடி கோடி கோடியாய்ப் பணம். எப்படிச் செலவு செய்வதென்றே தெரியவில்லை போலிருக்கிறது. ஏற்கனவே தங்கத்தகடு பதிக்கப்பட்ட ஏழுமலையான் கோயில் நுழைவு வாயில், கொடிமரம், பலிபீடம் எல்லாம் பொலிவிழந்து காணப்படுகிறதாம். அதனால, அதுகளுக்கெல்லாம் புதிதாகத் தங்கத் தகடுகள் பதிக்கும் பணி தொடங்கப்போகிறதாம்.
இதற்காக, 3 கோடியே 13 லட்சம் ரூபாயில் 625 கிலோ தங்கம் பயன்படுத்தப்படும்; 8 கிலோ செம்புடன் சேர்த்துத் தயார் செய்யப்படும் இந்தப் பணிகள் 2 மாதத்தில் முடிக்கப்படும் என்கிறார்கள்.
ஐயப்பன் கோயிலிலோ பணியாளர்களுக்கு ஊதியம் கொடுக்கவே காசில்லை.
கடவுள், தான் படைத்த மனிதர்களுக்குள்ளே, ஆண்டான் அடிமை, ஏழை பணக்காரன் என்று பாரபட்சம் காட்டியது ஏன் என்று கேட்டால், அதற்குக் கடவுள் காரணமல்ல; அது அவரவர் செய்த பாவபுண்ணியங்களின் விளைவு என்கிறார்கள்.
கடவுள்களுக்கிடையேயான இம்மாதிரி ஏற்றத்தாழ்வுகளுக்கு எது காரணம்?
கொரோனா காலத்திலும் கோயில் கோயிலாய் அலைகிற பக்தர்களைக் கேட்டால் பதில் ஏதும் கிடைக்காது. ஏனென்றால், கும்பிடத் தெரிந்த அளவுக்கு அவர்களுக்குச் சிந்திக்கத் தெரியாது.
இனியேனும் சிந்திப்பார்களா?!
===============================================================
சனி, 16 ஜனவரி, 2021
கடவுளைக் கலாய்க்கும் எழுத்தாளர் கல்கி!!!
கடவுளைப் பற்றிய பிரச்னைகளில் மிகவும் முக்கியமானது. கடவுள் உண்டா. இல்லையா என்பதுதான். மனிதன் தோன்றின காலத்திலிருந்து இந்தப் பிரச்னையும் இருந்துவருகிறது. ஒரு சாரார் கடவுள் இல்லை என்கிறார்கள். மற்றொரு சாரார் உண்டு என்கிறார்கள்.
ஆனால் இருசாராரும் கடவுள் இல்லாதது போலவே காரியம் செய்கிறார்கள்.
கடவுள் இருந்தாலும் சரி, இல்லாமல் போனாலும் சரி அவர் மனிதனுடைய காரியங்களில் தலையிடுவதாகத் தெரியவில்லை. அப்படித் தலையிட்டாலும் தம் இஷ்டப்படி தலையிடுறாரேயன்றி, மனிதனுடைய வேண்டுகோளை முன்னிட்டுத் தலையிடுவதாகக் காணப்படவில்லை.
சுவாமிக்கு வேண்டுதல் செய்துகொள்வதில் எவ்வாளவோ, விநோதங்கள் இருக்கின்றன. "திருப்பதி வேங்கடாசலபதி என் பிள்ளைக்கு நூறு ரூபாய் சம்பளத்தில் உத்தியோகம் ஆகட்டும், உன் உண்டியலில் ஒரு ரூபாய் போடுகிறேன்" என்று தாயார் வேண்டிக்கொள்கிறாள். இங்கே கடவுள் உத்தியோகத் தரகர் ஆகிறார். ஒரு சதவிகிதம் அவருக்குக் கமிஷன். உத்தியோகஸ்தர் ஒருவர் தமக்கு வரும் மேல் வரும்படிக்கெல்லாம் ரூபாய்க்குக் காலணா வீதம் உண்டியலில் சேர்ப்பிக்கிறார். இதன் மூலம் லஞ்சம் வாங்குகிற பாவத்தை முழுவதுமாகப் பகவான் மேலேயே போட்டு விடுவதாக அவர் எண்ணம்.
இதனாலெல்லாம் கடவுள் வேண்டாம் என்று நான் சொல்வதாகத் தயவு செய்து நினையாதீர்கள். அதற்கு மாறாக, கடவுள் நம்பிக்கையுள்ளவர் ஆயுள் இன்ஷியூரென்ஸ் செய்ய வேண்டியதில்லை. இது எவ்வளவு பெரிய சௌகரியம் பாருங்கள். எத்தனையோ இன்ஷியூரென்ஸ் ஏஜெண்டுகளுக்கு நான் டிமிக்கி கொடுத்து வந்திருப்பதெல்லாம் கடவுளிடம் எனக்குள்ள நம்பிக்கையினால் தான். கடவுளின் மற்றொரு பெரிய உபயோகம் என்னவென்றால் அவருடைய பெயரால் பொய்யையும் மெய்யாக்கி விடலாமென்பதே. முக்கியமாக, கோர்ட்டுகளில் பொய் சாட்சி சொல்வோருக்குப் பகவானுடைய திருநாமம் இன்றியமையாத சாதனமாக இருக்கிறது. உண்மையில் கடவுள் பேரலான்றித் தற்காலக் கோர்ட்டுகளில் பொய்யே சொல்லக்கூடாது. அப்படிச் சொன்னால் அது சாக்ஷியாக ஒப்புக்கொள்ளப்படமாட்டாது.
===============================================================
நன்றி: கல்கி இதழ்
வெள்ளி, 15 ஜனவரி, 2021
20ஆம் நூற்றாண்டுக் கற்பு!!![புதுமைச் சிறுகதை]
'ஒருவனுக்கு ஒருத்தி' என்னும் கொள்கை அவனுக்குப் பிடித்திருந்தது. ‘ஒருத்தி’யுடன் மட்டும் அவன் ‘உறவு’ வைத்திருந்தான். ஆனால், அவள்...?!
வியாழன், 14 ஜனவரி, 2021
நம் கடவுள்களின் 'விலைமதிப்பு' மிகப் பல லட்சம் ரூபாய்!!!
'கடவுள்களின் சிலைகள் திருடிக் கடத்தப்படுவது குறித்து, ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ நாளேடு (ஜூன் 26) ஒரு பக்க அளவில் விரிவான கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது.'
இந்தச் சிலைகளைத் திருடுவது யார்? நாத்திகர்களா? பெரியார் இயக்கத்தினரா? அல்ல. மாறாக ‘இந்து’வாகத் தங்களைக் கூறிக் கொள்ளும் கூட்டம்தான், இந்தத் திருட்டுகளை நடத்திக் கொண்டிருக்கிறது. 12ஆம் நூற்றாண்டுக் காலத்தின் ‘கடவுள்களுக்குத்தான்’ வெளிநாட்டுச் சந்தையில் அதிகக் கிராக்கி. எல்லா மாவட்டத்திலும் கடவுள்களைக் கடத்தும் கும்பல்கள் தீவிரமாகச் செயல்படுகின்றன. இதில் மிகப் பெரிய சந்தை காரைக்குடிதான். இதற்கு அடுத்ததாகச் சென்னை, மதுரை, புதுவையிலும் கடவுள் வியாபாரம் நடக்கிறது.
2008ஆம் ஆண்டில் அரியலூர் மாவட்டத்தில் 18 கடவுள்களும், 2007ஆம் ஆண்டில் கடலூர் மாவட்டத்தில் 3 கடவுளர்களும், திருவாரூர் மாவட்டத்தில் 7 கடவுளர்களும், தஞ்சை மாவட்டத்தில் 3 கடவுளர்களும் திருட்டுப் போய்விட்டனர்.
முதலில் திருடப்பட்ட கடவுளர்கள் மும்பை அல்லது டெல்லி நகருக்குக் கடத்தப்படுகிறார்கள். அங்குச் சில காலம் வைக்கப்பட்டு, பாங்காக் நகருக்குக் கொண்டு போகப்படுகிறார்கள். பாங்காக்கிலிருந்து கப்பலில் ஏற்றி அய்ரோப்பா, அமெரிக்கா உள்ளிட்ட உலகநாடுகளுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகிறார்கள். அங்கு பெரும் வசதி படைத்தவர்கள் வீட்டில் அலங்காரப் பொருள்களாகத் தமிழகப் பக்தர்களின் வழிபாட்டுக்குரிய கடவுள்கள் மாறிப் போய்விடுகின்றனர். திருடர்கள் திருடும்போதும், கடத்தும்போதும் சமஸ்கிருத மந்திரத்தால் ‘பிரதிஷ்டை’ செய்யப்பட்டு, ‘உயிரூட்டப்பட்ட’ கடவுள்கள், சக்தியற்றவைகளாகி, விற்பனைப் பண்டங்களாகவே ஆகிவிடுகிறார்கள்.
முதலில் கோயிலில் ‘பகவான்’களைத் திருடும் திருடர்கள் அந்தக் கடவுள்களை இடைத்தரகர்களிடம் ஒப்படைக்கிறார்கள். இடைத்தரகர்கள் காரைக்குடியில்தான் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். இடைத்தரகர் இந்தச் சிலையைப் படம் பிடித்து, அதன் வரலாற்றுக் குறிப்புகளை எழுதி, தனக்கு அடுத்த நிலையில் உள்ள தரகருக்கு அனுப்புகிறார். அவர் பகவானுக்கான விலையை மதிப்பீடு செய்து நிர்ணயிக்கிறார்.
மூன்றவாது நிலையில் உள்ள தரகர் பணம் கொடுத்து வாங்கி, பம்பாய் அல்லது டெல்லிக்குக் கடத்துகிறார். திருடனிடமிருந்து முதலில் 10 ஆயிரம் அல்லது 15 ஆயிரத்துக்குக் கைமாறும் கடவுள் முதல் தரகரிடம் ரூ.1 லட்சமாக விலை உயர்ந்து, இரண்டாவது தரகரிடம் 10 அல்லது 15 லட்சமாகி, மூன்றாவது தரகர் வழியாக 50 லட்சம், ஒரு கோடிக்கு வெளிநாட்டுக்கு ஏற்றுமதியாகிறார். சிலை செய்யப்பட்ட காலம், எடை, அளவு ஆகியவற்றின் அடிப்படையில் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.
12ஆம் நூற்றாண்டு கடவுள்களுக்குத்தான் சர்வதேசச் சந்தையில் விலை அதிகம் என்பதால் திருடர்கள் தஞ்சை, திருவாரூர், மதுரை, காஞ்சிபுரம் பகுதிகளிலேயே அதிகம் குறிவைக்கிறார்கள்.
100 ஆண்டுகளுக்கு மேற்பட்ட ‘கடவுளர்களுக்கு’ச் சரக்கு லாரிகளில் ஏற்ற வேண்டுமானால், மாநில அரசின் அனுமதி தேவை. ஆனாலும் சரக்குகளை ஏற்றிச் செல்வோர் இது பற்றிக் கவலைப்படுவதில்லை. அரசு அனுமதியின்றியே குறுக்கு வழிகளில் கடத்தல் நடக்கிறது.
இந்தத் தகவல்களையெல்லாம் தமிழகக் காவல் துறையில் சிலைத் திருட்டுக் கண்டுபிடிப்புக்காக உள்ள தனிப் பிரிவு அதிகாரிகளிடமிருந்து பெற்று ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ நாளேடு வெளியிட்டுள்ளது.
இந்தப் பிரிவில் 25 காவல் துறை அதிகாரிகள் பணிபுரிகிறார்கள். தமிழ்நாடு முழுதும் 33000 கோயில்கள் உள்ளன. இந்தக் கடவுள் திருட்டுகள் பற்றித் தகவல் தெரிவிப்பதற்காகக் காவல்துறை, சில நபர்களை வைத்திருக்கிறது. பொதுவாகப் பணக்கார மார்வாடிகள் போல் காவல்துறையினர் வேடம் போட்டு, தரகர்களிடம் பேரம் பேசி, பணம் தரும்போது, குற்றவாளிகளைப் பிடிக்கிறார்கள்.
===============================================================
உதவி: http://www.keetru.com/
புதன், 13 ஜனவரி, 2021
விவேகானந்தரின் 'விளங்காத' கடவுள் கொள்கை!
ராமகிருஷ்ணர், ‘உன்னை எப்படிப் பார்க்கிறேனோ, உன்னிடம் எப்படிப் பேசுகிறேனோ; அதே போல, கடவுளை உனக்கும் காட்டுகிறேன்" என்றார்.
********************************************************************************************
செவ்வாய், 12 ஜனவரி, 2021
வாழ்க்கை வாழ்வதற்கே! கடவுள், மதம், ஆன்மா, ஆவி, மறுபிறப்பு, சாதிபேதம் என்றெல்லாம் விவாதித்து வீணடிக்க அல்ல!!
கடவுள், படைப்பு நோக்கம், பிரபஞ்சத் தோற்றம் என்று புரியாத எதைப்பற்றியெல்லாமோ புரியாமலே பேசப்படுவது தத்துவம். அதென்ன வாழ்க்கைத் தத்துவம்?
எளிதாகப் புரிவதும், சுவாரசியமானதும் ஆன பயனுள்ள பதிவு இது. வாசியுங்கள்.
இந்தப் பூமியின் வயசு ஏறத்தாழ[The age of the Earth is approximately] 4.54 ± 0.05 billion years (4.54 × 109 years ± 1%).[1][2][3][4 [-Wiki] என்று விஞ்ஞானிகள் அடிச்சிவிட்டிருக்காங்க.
இவங்க சொல்றதெல்லாம் சரியா தப்பான்னு ஆராயறதுக்கான அறிவெல்லாம் நமக்கு இல்ல. கோடி கோடி ஆண்டுகள்னு பொத்தாம் பொதுவாச் சொல்ல மட்டும்தான் நமக்குத் தெரியும்.
பூமியின் ஆயுசு இப்படின்னா, சூரியனுடையது இதைவிடவும் மிகப் பல மடங்கு அதிகம் என்கிறார்கள்.
சூரியனைவிடவும் பலப்பல மடங்கு பெருசான நட்சத்திரங்களின் ஆயுசு இன்னும் இன்னும் இன்னும் அதிகம். இதுகளுக்கு அப்பன், முப்பாட்டன் கொள்ளுப் பாட்டன், எள்ளுப்பாட்டன் எல்லாம் இருக்காங்க. அதுகளுடைய ஆயுசையும் கணக்குப் பண்ணிகிட்டுப் பொழுதைக் கழிக்கிறாங்க விஞ்ஞானிங்க.
எல்லார்த்தையும் உள்ளடக்கிய ஒன்னுதான் 'அண்டம்'கிறான்; அப்புறம் 'பிரபஞ்சம்'கிறான். 'வெளி'[Space]யில் அவ்வப்போது நிகழ்கிற பெருவெடிப்புகள் காரணமா இதுகளெல்லாம் தோன்றுவதும் அழிவதுமாக இருக்கிறதுகளாம்.
கட்டுப்பாடு இல்லாமல் தொடர்ந்துகொண்டே இருக்கும் இந்த நிகழ்வுகளுக்கு 'முற்றுப்பெறுதல்' என்பதே இல்லை என்கிறார்கள். முற்றுப்பெறாத இம்மாதிரி நிகழ்வுகளை உள்ளடக்கிய பிரபஞ்ச[வெளி]த்தின் ஆயுளோடு மனிதர்களுடைய ஆயுளையும் ஒப்பிட்டுப் பார்த்தா.....
மனிதர்களுடைய ஆயுள் அற்பம்...அற்பம்...வெகு அற்பம்... அற்பத்திலும் அற்பம்[துல்லியமாகச் சொல்ல வார்த்தைகள் இல்லை].
மனுசங்க ஆயுள் நூறு[சிலர் கூடக்குறைய வாழலாம்]. அதுல, தூங்கினது, துக்கிச்சது, பொறாமைப்பட்டது, கலகம் செய்ததுன்னு இப்படி விரயம் பண்ணினதையெல்லாம் கழிச்சா, எஞ்சியிருப்பதுதான் அவர்களுடைய ஆயுள்.
அது எவ்வளவு தேறும்?
ஒரு அஞ்சு ஆண்டு?..... ஊஹூம்... பத்து?..... ஊஹூ...ஊஹூம்......
ஒரு பத்து ஆண்டுன்னே வைச்சுக்குவோம்.
இந்தப் பத்து ஆண்டுகளை எப்படிக் கழிக்கணும்?
தம்மையும் கவனிச்சிக்கணும். தம்மைச் சார்ந்தவங்களுக்கு மட்டுமல்லாம, ஒட்டுமொத்த மனுச குலத்துக்கும் மத்த உயிர்களுக்கும் உதவி செஞ்சி வாழணும். அப்படி வாழ்ந்து கழிச்சிருந்தாத்தான், அந்தப் பத்து வருசத்தையும் பயனுள்ள வகையில் வாழ்ந்ததா அர்த்தம்.
எனவே, அடியேன் வலியுறுத்த விரும்புவது.....
சூது, வாது, வஞ்சகம், பொறாமைன்னு எத்தனையோ கெட்ட கெட்ட குணங்களுக்கு மனசில் இடம் தந்ததோடு, கடவுளைக் கற்பிச்சி மதங்களை உருவாக்கி, ஒருத்தனோடு ஒருத்தன் அடிச்சிகிட்டு லட்சம் லட்சமா செத்துத் தொலைஞ்சது மட்டுமல்லாம, ஆன்மா, மறுபிறப்பு, சொர்க்கம், நரகம்னு எதையெதையோ கற்பனை பண்ணி, கணக்குவழக்கில்லாத மூடநம்பிக்கைகளுக்கு ஆளாகி, அந்தக் கொஞ்சமே கொஞ்சம் வாழ்நாளையும் வீணடிச்சாங்க மனுசங்க; இப்போதும் வீணடிக்கிறாங்க.
நாமும் வீணடிக்கலாமா?
கூடாதுங்க...கூடவே கூடாதுங்க!
வருகைக்கு நன்றிங்க!
===========================================================================