எனது படம்
அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.

வியாழன், 2 மே, 2024

‘பாஜக’ செத்துக்கொண்டிருக்க மோடி அழுதுகொண்டிருக்கிறார்!!!

மதாபாத்தில்[குஜராத்] நடைபெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில், ''பலவீனமடைந்துவரும் காங்கிரஸ் செத்துக் கொண்டிருக்கிறது[Dying], அங்கே பாகிஸ்தான் அழுதுகொண்டிருக்கிறது[Crying]. பாகிஸ்தான் தலைவர்கள் காங்கிரசுக்காகப் பிரார்த்தனை செய்கிறார்கள். அவர்கள் ராகுலைப் பிரதமராக்கத் துடிக்கின்றனர்'' என்று பிரதமர் மோடி பேசியுள்ளார்[சில மணி நேரங்களுக்கு முன்பு> தினமலர்].

பரப்புரையில், ‘..... பாகிஸ்தான் தலைவர்கள் ராகுலைப் பிரதமராக்கத் துடிக்கிறார்கள்’, அவர்கள் அழுதுகொண்டிருக்கிறார்கள்[Crying] என்றெல்லாம் குறிப்பிட்டிருப்பது, அவர்கள் நம் பரம்பரை எதிரிகள் என்பதால். அது நமக்கு ஒரு பொருட்டல்ல.

‘காங்கிரஸ் செத்துக்கொண்டிருக்கிறது[காணொலி காண்க] என்று தோல்வி பயத்தில் தன் உள்ளக் குமுறலைக் கக்கியிருப்பதுதான் மோடி மீதான நமக்குள்ள வெறுப்பை அதிகரித்திருக்கிறது.

காங்கிரஸ் 100% தோல்வியைச் சந்திக்கக் காத்திருக்கிறது என்று பேசியிருக்கலாம். ‘செத்துக்கொண்டிருக்கிறது’ என்பது பிரதமராகவும் ஒரு பெரிய கட்சியின் அதிபதியாகவும் இருப்பவரின் மதிப்பைத் தாழ்த்தும் செயலாகும்.

குறைந்தபட்ச நாகரிகம்கூடத் தெரியாதவர் இந்த நாட்டின் பிரதமராக இருந்ததும் இருந்துகொண்டிருப்பதும் மிகப் பெரிய அவமானம்.

தொடர்ந்து இவ்வாறெல்லாம் அநாகரிகமாக இவர் பேசுவாரேயானால், தேர்தலில் தோல்வியைச் சந்திப்பது மட்டுமல்ல, காலப்போக்கில் இவர் கட்சி காணாமல் போகும் என்பது உறுதி.

‘காணாமல் போகும்’ என்று நாம் குறிப்பிட்டது நம் இனப் பண்பாடு கருதி.

நாகரிகம், பண்பாடு என்றிவற்றைப் புறம் தள்ளி, மோடியின் அநாகரிக உரைக்கு நாம் தரும் பதிலடி.....

“பாஜக செத்துக்கொண்டிருக்கிறது! மோடி அழுதுகொண்டிருக்கிறார்” என்பதே!

மோடி மீண்டும் இந்த நாட்டின் பிரதமராக[நீடிக்க] ஆசைப்பட்டால், அதற்குரிய தகுதியை அவர்  வளர்த்துக்கொள்ள மிக மிக மிகப் பல ஆண்டுகள் ஆகலாம்!

காணொலி:

                                        *   *   *   *   *

https://www.dinamalar.com/news/india-tamil-news/congress-is-dying-pakistan-is-crying-pm-modi-criticism--/3614262

637 ஒளியாண்டுத் தொலைவில் ‘ஒளி வளையங்கள்[glory]'... அசத்தும் அறிவியலாளர்கள்!!!

வானவில்? 

மேகங்களில் உள்ள நீர்த்துளிகளுக்கு இடையே, அவற்றின் குறுகலான இடுக்குகளில் ஒளி கடந்து செல்லும் போது,  வளையம் போன்ற வடிவத்தில் காட்சியளிக்கிற அதனை ‘வானவில்’ என்கிறார்கள்[இன்னும் தெளிவான விளக்கம் தேவை]].

அண்டவெளியில் உள்ள நம் சூரியக் குடும்பத்திற்குள்[சூரியனும், கோள்கள்களும்[8?], மில்லியன் கணக்கான நட்சத்திரங்கள் எனப்படும் விண்மீன்களும், விஞ்ஞானிகளால் கண்டறியப்படாத ‘ஏதோ’க்களும் உள்ளடங்கியது. அண்டவெளியில் ஐந்து முதல் ஏழு கோள்களை உள்ளடக்கிய சூரியக் குடும்பம் ஒன்றை வானியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர் என்பது பழைய செய்திஅவ்வப்போது காணப்படுவது இந்த வானவில்.

நம் சூரியக் குடும்பத்தில் உள்ள பூமியிலிருந்து 637 ஒளியாண்டுத்[//ஒளி ஓர் ஆண்டில் சென்றடையும் தூரம் ஒரு ஒளி ஆண்டு. ஆகவே, இது காலத்தின் அளவு கிடையாது, தூரத்தின் அளவாகும். ஒரு நொடியில் ஒளியானது சுமார் மூன்று லட்சம் கிலோமீட்டர் செல்லும். ஆம் மூன்று லட்சம்!!!//]  தொலைவில்[சூரியக் குடும்பதிற்கு அப்பால்] ஏதோ ஒரு கோளிலிருந்து[WASP-76b] வானவில் போன்ற செறிவான ஒளி வளையங்களை[மகிமை>rainbow-like ‘glory’ என்கிறார்கள்] முதன்முறையாக அறிவியலாளர்கள் கண்டறிந்தார்களாம். 

இவை ஒரே மாதிரியானவை; இதுவரை அறியப்படாத பொருளால் ஆன மேகங்களில் ஒளி பிரதிபலிக்கும்போது தோன்றுபவை என்கிறார்கள்[இதற்கு மேலும் அவர்கள் சொல்வதைப் புரிந்துகொள்ள இந்தப் பிறவி போதாது அடியேனுக்கு. ஹி... ஹி... ஹி!!!] அவர்கள்.

எது எப்படியோ, நம்மைப் பிரமிப்புக்கு உள்ளாக்கும் விரிந்து பரந்து கிடக்கும் அண்டவெளியிலுள்ள சூரியக் குடும்பத்திற்கு வெளியே  இதைப் போல பல கலப்பினத் தொகுப்புகள்[குடும்பங்கள்?] உள்ளன என்றும், அவை எவரும் அறிந்திடாத புதிர்களையும் மர்மங்களையும் உள்ளடக்கியவை என்றும் அந்த அறிஞர்கள் கூறுகிறார்கள்.

அவர்கள் அதி புத்திசாலிகள்!

அவர்களை வாழ்த்துவதற்கு நமக்குப் போதிய அடிப்படை அறிவியல் அறிவு இல்லை எனினும் வாழ்த்துவோம்.

இப்போதைக்கு இல்லை என்றாலும், இம்மாதிரியான ஆராய்ச்சிகள் எதிர்காலத்திலேனும் மனித இனத்துக்குப் பயன் தரும் வகையில் அமைந்திடல் வேண்டும் என்பது நம் விருப்பம்.

      The strange phenomenon looks similar to a rainbow (Picture: Warwick University/SWNS)

                                            *   *   *   *   *

Mysterious lights detected on distant planet (msn.com)