எனது படம்
அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.

திங்கள், 12 மே, 2025

இந்தக் கேள்வியைக் கேட்பது தேசத் துரோகமா?

‘ஆபரேஷன் சிந்தூர்: ஐசி-814, புல்வாமா குற்றவாளிகள் உட்பட 100 பயங்கரவாதிகள் பலி' என்னும் தலைப்பில் செய்தி வெளியிட்டுள்ளது நம் ராணுவம்[மோடி அரசின் அனுமதியுடன்][https://tamil.indianexpress.com/india/]

பலியான 100 தீவிரவாதிகளில், லஷ்கர்-இ-தொய்பாவைச் சேர்ந்த முடாஸர் காடியன்காஸ் & காலித் என்ற அபு அகாஷா; ஜெய்ஷ்-இ-முகமதுவைச் சேர்ந்த முகமது யூசுப் அசார், ஹபீஸ் முகமது ஜலீல் & முகமது ஹசன் கான் ஆகியோர் கொல்லப்பட்ட 5 பயங்கரவாதிகள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

செய்தியில், புல்வாமா குற்றவாளிகள் உட்பட’[இது பழைய[2019] நிகழ்வு. இது பற்றி இப்போது குறிப்பிடத் தேவையில்லை> 19 குற்றவாளிகளை அடையாளம் கானப்பட்டனர். ஆகஸ்ட் 2021 வாக்கில், முக்கிய குற்றவாளியும் ஆறு பேரும் கொல்லப்பட்டனர்> விக்கிப்பீடியா] என்று குறிப்பிடப்பட்டுள்ளதே தவிர, பஹல்காமில் 26 பேரைப் படுகொலை செய்த நான்கு தீவிரவாதிகள் பற்றிய தகவல்கள் இடம்பெறாதது ஏன் என்பது நம் கேள்வி.

[நன்றி: https://suvanappiriyan.blogspot.com/2025/05/blog-post_11.html]

போர் முடிவடைந்துவிட்ட நிலையில் அரசின் இயலாமையை மறைத்து.....

100 பேர்களில் அவர்களும் அடக்கம் என்பது போல் செய்தி வெளியிட்டு, மோடி தான் மேற்கொண்ட சபதத்தை[“அவர்கள் பிடிக்கப்பட்டு நினைத்துப் பார்க்க இயலாத அளவுக்குத் தண்டனை வழங்கப்படும்”> மோடி] நிறைவேற்றப்பட்டுவிட்டதாக மக்களை நம்பச் செய்வதன் உள்நோக்கம் என்ன?

உள்நோக்கத்தை அனுமானித்துச் சொல்ல நாம் விரும்பவில்லை.

சொல்வது தேசத் துரோகமாகக் கருதப்படக்கூடும்!

* * * * *

அந்த நான்கு பேர்.....

* * * * *

https://tamil.indianexpress.com/india/ic-814-and-pulwama-perpetrators-among-100-terrorists-killed-on-day-1-of-op-sindoor-9058845

இதுவும் ‘அவதாரி’ மோடியின் ஆட்சிக்காலச் சாதனைதான்!!!

டவுள் அவதாரமான மோடி தன் ஆட்சிகாலத்தில் நிகழ்த்தியுள்ள சாதனைகள் அநேகம்[பட்டியலிட இடுகை ஒன்று போதாது].

அவற்றில் ஊடகங்கள் மீது ஆதிக்கம் செலுத்துவதும் ஒன்று//உலகில் வேறெங்கும் இல்லாத அளவுக்கு இந்தியாவில்[இதர சில நாடுகள் உட்பட]உள்ள ஊடகங்கள் மிகத் தவறான தகவல்களைப் பரப்புவதாகத் ‘தெற்காசியப் பத்திரிகைச் சுதந்திர அறிக்கை’யில் கூறப்பட்டுள்ளது// என்பது ஊடகச் செய்தி.

அதன் விளைவாக.....

*ஊடகங்களின் மீதான நம்பிக்கை குறைந்துவருகிறது.

*சுதந்திரமாகச் செயல்பட வேண்டிய டிஜிட்டல் தளங்கள் மீது ஒடுக்குமுறைகள் கையாளப்படுகின்றன.


*போலித் தகவல்கள் அதிக அளவில் வெளியாகின்றன.


*ஊடக ஊழியர்கள் கடமையாற்றும் சூழல் மிக ஆபத்தானதாக உள்ளது.


*பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இலங்கை, பங்களாதேஷ், நேபாளம், பூட்டான் மாலத்தீவு போன்ற நாடுகளில் உள்ள ஊடக நிறுவனங்களைப் பலவீனப்படுத்தும் முயற்சியிலும் இந்திய அரசு ஈடுபடுகிறது.


* * * * *


https://www.maalaimalar.com/news/world/south-asia-press-freedom-report-on-india-772227 -மாலை மலர்11 மே 2025 5:54 AM [செய்திகள் எளிதாகப் புரிந்துகொள்ளும் வகையில் திருத்தியமைக்கப்பட்டுளன].