எனது படம்
“எல்லாம் அவன் செயல்” என்பவர்கள் ஆறறிவின் வளர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பவர்கள். இவர்களின் எண்ணிக்கை பெருகப் பெருக மூடநம்பிக்கைகளின் அளவும் அதிகரிக்கிறது. நாட்டை ஆள்வதற்கான தகுதியே இல்லாத சுயநலவாதிகள் இதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துகிறார்கள். மூடத்தனங்களிலிருந்து மக்கள் முற்றிலுமாய் விடுபடும்போதுதான் நாடு உண்மையில் சுதந்திரம் பெற்றதாக ஆகிறது.

சனி, 16 ஆகஸ்ட், 2025

ஐயோ பாவம் அந்தக் கள்ளக் காமுகி!!!

//கள்ளக்காதலனுடன் உல்லாசமாக வாழ, உணவில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்து, கணவனைத் தலையணையால் அமுக்கி மூச்சை நிறுத்தி[இது கள்ளக் காமுகனின் கைங்கரியம்]க் கொன்ற இளம்பெண்.....//[தினத்தந்தி].

கணவனிடம் பெறும் உடலுறவுச் சுகம் ‘கட்டுபடி’ ஆகாததால், அவனைக் கொல்லுவதற்கு, அச்சுகத்தை வாரி வாரி வாரி வழங்கிய கள்ளக் காமுகனின் உதவியை நாடிய இந்த மங்கையர் திலகம், கையாலாகாத கணவனுக்குக் கொடுத்த தூக்க மாத்திரைகளோடு பத்தோ பதினைந்தோ சேர்த்துக் கொடுத்திருந்தால்.....

ஆழ்ந்த தூக்கத்திலேயே அவன் சொர்க்கலோகம் சென்றிருப்பான்[தலையணையால் அமுக்கியதால் சுயநினைவு பெற்று உயிர் பிழைக்கப் போராடியிருக்கக்கூடும்]. இவளும் புண்ணியவதி[சொர்க்கத்துக்கு அனுப்பியதால்] ஆகியிருப்பாள்.

அதைச் செய்யத் தவறியதால் இவள் கொலைகாரி ஆனதோடு, ‘அது’ விசயத்தில் உதவ வந்த அந்தக் கருணாமூர்த்தியையும் கொலைக் குற்றவாளி ஆக்கிவிட்டாள்.

கம்பி எண்ணும்போது கள்ளக் காமுகனுடன் காம சுகம் அனுபவிப்பது சாத்தியமா என்ன?

பாவம், ஊடகங்களால் ‘கள்ளக் காதலர்கள்’ என்றழைக்கப்படும் கள்ளக் காமுகர்கள்!

* * * * *

https://www.dailythanthi.com/news/india/wife-paramour-arrested-for-killing-husband-in-srikakulam-1174436


ராகுல் காந்தியை அவமதித்த ஆதிக்க வெறியர் நரேந்திர மோடி!!!

கடந்த ஆண்டு[2024] நடைபெற்ற சுதந்திரத் தின விழாவில் கலந்துகொண்ட, மக்களவை எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்தி மோடி நிர்வாகத்தால் அவமதிக்கப்பட்டதே, 2025ஆம் ஆண்டுச் சுதந்திரத் தின விழாவில் அவர் கலந்துகொள்ளாததற்கான காரணம்[கடைசி வரிசைக்கு முந்தைய வரிசையில் அவருக்கு இருக்கை ஒதுக்கப்பட்டது] என்பது ஒட்டுமொத்தச் சங்கிக் கூட்டத்திற்குத் தெரியும்.
தெரிந்திருந்தும், விழாவில் கலந்துகொள்ளாதது ‘குற்றம்’ என்கிறார்கள், பிரதமர் உட்பட. மேலும்,
“இது[சுதந்திரத் தின விழா] ஒரு பிறந்த நாள் கொண்டாட்டமோ, ஒரு கட்சி நிகழ்வோ அல்ல” என்று பேசிய மோடி, அதே விழாவில் ‘ஆர்.எஸ்.எஸ்’ சங்கிக் கட்சியினரைப் புகழ்ந்திருக்கிறார்[கீழே உள்ள ‘நகல் படம்’ காண்க].
“ஒரு பெரிய தேசத்தை வழிநடத்தும் பிரதமரா இப்படி!?” என்று நாம் கேள்வி எழுப்பவில்லை. காரணம், இவரின் முரண்பட்ட பேச்சும், வெறுக்கத்தக்க நடவடிக்கையும் நம்மைக் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கின்றன!