கடந்த ஆண்டு[2024] நடைபெற்ற சுதந்திரத் தின விழாவில் கலந்துகொண்ட, மக்களவை எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்தி மோடி நிர்வாகத்தால் அவமதிக்கப்பட்டதே, 2025ஆம் ஆண்டுச் சுதந்திரத் தின விழாவில் அவர் கலந்துகொள்ளாததற்கான காரணம்[கடைசி வரிசைக்கு முந்தைய வரிசையில் அவருக்கு இருக்கை ஒதுக்கப்பட்டது] என்பது ஒட்டுமொத்தச் சங்கிக் கூட்டத்திற்குத் தெரியும்.தெரிந்திருந்தும், விழாவில் கலந்துகொள்ளாதது ‘குற்றம்’ என்கிறார்கள், பிரதமர் உட்பட. மேலும்,
“இது[சுதந்திரத் தின விழா] ஒரு பிறந்த நாள் கொண்டாட்டமோ, ஒரு கட்சி நிகழ்வோ அல்ல” என்று பேசிய மோடி, அதே விழாவில் ‘ஆர்.எஸ்.எஸ்’ சங்கிக் கட்சியினரைப் புகழ்ந்திருக்கிறார்[கீழே உள்ள ‘நகல் படம்’ காண்க].
“ஒரு பெரிய தேசத்தை வழிநடத்தும் பிரதமரா இப்படி!?” என்று நாம் கேள்வி எழுப்பவில்லை. காரணம், இவரின் முரண்பட்ட பேச்சும், வெறுக்கத்தக்க நடவடிக்கையும் நம்மைக் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கின்றன!


