எனது படம்
அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.

திங்கள், 13 அக்டோபர், 2025

போட்டாரே ஐயர்[மணிசங்கர்] ஒரு போடு!!!

‘தமிழ்நாடு தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடத்திற்கும் குறைவான காலமே உள்ள நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் மணிசங்கர் அய்யர் ஞாயிற்றுக்கிழமை ஒரு துணிச்சலான அறிவிப்பை[ஒரு நிகழ்வில் பேசும்போது] வெளியிட்டார்’ என்று தொடங்கி, அதன் உள்ளடக்கத்தையும் வெளியிட்டிருக்கிறது ஒரு முன்னணி ஊடகம்*

அறிவிப்பின் சாரம்: 

=திராவிட அரசியல் என்பது தமிழர்களுக்கென்று தனி நாடு[திராவிட நாடு] அமைவதை முதன்மை நோக்கமாகக் கொண்டது.

=திராவிடச் சக்திகளின் உதவியின்றி நானோ, ப.சிதம்பரமோ தமிழ்நாட்டிலிருந்து தேர்ந்தெடுக்கப்படுவது சாத்தியமில்லை.

=இந்தியா-பாகிஸ்தான் பிரிவினைக்கு முன்னரே, இந்தத் திராவிடச் சக்திகள்' இந்தியாவை இந்துஸ்தான், பாகிஸ்தான், திராவிடநாடு என்று மூன்றாகப் பிரிக்கப்படுதல் வேண்டும் என்றன. 

=இவர்களின் இந்தப் பிரிவினைக் கொள்கைக்கு, அலுவல் மொழிப் பிரச்சினை மையமாக இருந்துவருகிறது[1963 ஆம் ஆண்டு அலுவல் மொழி மசோதா நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டபோது, ​​திமுக நிறுவனர் சி.என். அண்ணாதுரை[ஆதரவாளர்களால் அன்புடன் அண்ணா என்று அழைக்கப்பட்டார்] மாநிலங்களவை உறுப்பினராக இருந்தார். ஜனநாயகம் என்பது பெரும்பான்மையை அடிப்படையாகக் கொண்டதல்ல[பெரும்பான்மையோரால் பேசப்படுவதாகச் சொல்லப்படும் ‘இந்தி’ மறைமுகமாகச் சுட்டப்படுகிறது].

=அண்ணாதுரை மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது, ​​அவர் ஒரு பிரிவினைவாதியாக வந்தார். அவர் அடல் பிஹாரி வாஜ்பாயிக்கு எதிராக வாதிட்டது குறிப்பிடத்தக்கது. நீங்கள் என் மீது இந்தியைத் திணித்தால், நான் இந்த நாட்டை விட்டு வெளியேறுவேன் என்று அவர் கூறியது அனைவருடைய சிந்தனையையும் தூண்டியது.

=இன்றும் கூட, உங்களில்[ஆட்சியாளர்கள்] எவரும் தமிழர்களைச் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை. தமிழ்நாடு நாட்டின் வேறு எந்தவொரு மாநிலத்தையும் போன்றதொரு மாநிலம் அல்ல. அதனால்தான், நானோ ப.சிதம்பரமோ திராவிடச் சக்திகளின் உதவிஉயின்றித் தேர்ந்தெடுக்கப்பட முடியாது என்கிறேன் நான்." 

                                          *   *   *   *   *

***எஞ்சியுள்ள, ஐயரின் கருத்துகளையும் வாசிக்கக் கீழ்க்காணும் முகவரியைச் சொடுக்குக.

*https://www.msn.com/en-in/money/topstories/neither-me-nor-chidambaram-can-get-mani-shankar-aiyar-says-dravidian-forces-sought-a-separate-nation/ar-AA1Omqju?ocid=winp2ftaskbar&cvid=68ecf041b9fe4b40a81a486ed4ce791d&ei=41 > 3h

தலீபான் தறுதலைகளுடன் உறவாடித் தாய்க்குலத்தைச் சிறுமைப்படுத்தும் மோடி!!!

ஆப்கானிஸ்தானில் பெண்களின் வேலை, கல்வி மற்றும் பொது வெளியில் அவர்கள் நடமாடுவது தொடர்பான பல தடைகளை தாலிபன்கள் விதித்தனர்.

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் மற்றும் பிற முக்கிய நகரங்களில் 'உணவு, வேலை, சுதந்திரம்' என உரிமைகளைக் கோரிய அவர்கள் தாலிபன்களால் மிகக் கடுமையாகத் தாக்கப்பட்டனர்.

போராடிய பெண்கள் ‘பிபிசி’யிடம் தாங்கள் தாக்கப்பட்டதாகவும், துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாகவும், சிறையில் அடைக்கப்பட்டதாகவும், 'கல்லெறிந்து கொல்லப்படுவீர்கள்' என மிரட்டப்பட்டதாகவும் கூறினார்கள்.

2021-ஆம் ஆண்டு, ஆகஸ்ட்15-ஆம் தேதி, ஆப்கானிஸ்தான் தாலிபன்களால் கைப்பற்றப்பட்டதைத் தொடர்ந்து பெண்களின் சுதந்திரத்திற்குக் கட்டுப்பாடுகளை விதிக்கத் தொடங்கினார்கள் அவர்கள்.


போராடிய பெண்களுக்கு எதிரான மிக மோசமான வன்முறை மூடிய கதவுகளுக்குப் பின்னால் நடக்கவில்லை; தலைநகர் காபூலின் தெருக்களில், மக்கள் அனைவரும் பார்க்கும் வகையில் நடந்தது" என்றார் தலிபான் தறுதலைகளின் அட்டூழியங்களால் வெகுவாகப் பாதிக்கப்பட்ட ஓர் இளம் பெண்.


"அவர்கள் கோபமடைந்து, என் தலைமுடியைப் பிடித்து இழுத்தார்கள். பின்னர் என் கைகளையும் கால்களையும் பிடித்து, என்னை அவர்களது வாகனத்தின் பின்புறத்தில் வீசினார்கள்; என்னை ஒரு வேசி என்று திரும்பத் திரும்ப அழைத்தனர். என் கைகளில் விலங்கிட்டு, தலையில் ஒரு கருப்பு பையைக்கொண்டு மூடினார்கள். என்னால் மூச்சுவிட முடியவில்லை. அவர்கள் என்னைப் பல முறை அறைந்ததால் என் முகத்தில் உணர்ச்சியே இல்லாமல்போனது. நான் மிகவும் பயந்திருந்தேன், என் உடல் முழுவதும் நடுங்கியது” என்றார் அவர்களால் கொடூரமாகத் தாக்கப்பட்ட, ஏப்ரல் 2023இல் காபூலில் நடத்தப்பட்ட போராட்டம் கலந்துகொண்ட இன்னொரு பெண்[https://www.bbc.com/tamil/articles/crggpy7ypvzo -பிபிசி ஆப்கன், 17 ஜூன் 2024]


இத்தனைக் கொடூரக் குணமுள்ள ஆப்கன் தலீபான்கள் சார்பாக, அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் இங்கு வருகைபுரிய, அவரை வரவேற்று விருந்தளிப்பது, ஆப்கன் தூதரகத்தில் நடந்த அமைச்சரின் பத்திரிகையாளர் சந்திப்பில், பெண் பத்திரிகையாளர்களுக்கு அனுமதி வழங்காமல் அவமதித்தது போன்ற தலீபான்களின் அடாவடித்தனங்கள் மோடி அறியாதவை அல்ல[ராகுல் காந்தி அவரைக் கடுமையாகக் கண்டித்திருக்கிறார்[https://www.hindutamil.in/news/tamilnadu/1379434-women-journalists-denied-entry-to-taliban-minister-event-rahul-gandhi-slams-pm.html].


‘நம் எதிரிக்கு எதிரி நமக்கு நண்பர்’ என்பார்கள். உலகிலேயே பெண் இனத்துக்கு எதிராகத் தாம் அறிந்த அத்தனை வன்முறைகளையும் கையாண்டு, வீட்டோடு அவர்களை முடக்குகிற இந்தத் தலிபான்களை நண்பர்களாக்கி நம் நாடு பெறும் பயன் ஏதுமில்லை[பாகிஸ்தான்காரன் நம் பிரதமர் மோடியின் பாதக்கமலங்களின் சரணடைந்துவிட்டான். அவன் எழுந்து நிற்க மிக மிகப் பல ஆண்டுகள் ஆகும். அவனைப் பலவீனப்படுத்தத் தலீபான் உதவி நமக்குத் தேவையில்லை].


இந்த நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி இனியும் நீடிக்க வேண்டுமா என்பது இம்மண்ணின் மக்கள் அனைவரும் கேட்க வேண்டிய கேள்வி.