எனது படம்
கடவுள் குறித்த ஆய்வுரைகளோ, மூடநம்பிக்கைச் சாடல்களோ, என் பதிவுகளின் உள்ளடக்கங்களின் தரம் எனக்கு வாய்த்துள்ள அறிவுக்கும் மனப் பக்குவத்துக்கும் ஏற்பவே அமையும். அவற்றை ஏற்பதும் மறுத்துப் புறக்கணிப்பதும், ஆறறிவும் ஆழ்ந்து சிந்திக்கும் திறனும் வாய்க்கப்பெற்ற உங்களின் விருப்பம் சார்ந்தது.

திங்கள், 19 ஜனவரி, 2026

ஆன்மா இல்லை என்றால் கடவுளின் கதி?!

செத்தொழிந்த பிறகு, ஆன்மா என்றோ ஆவி, பூதம், பேய், பிசாசு என்றோ ஏதோ ஒரு வடிவில் மரணம் இல்லாப் பெரு வாழ்வு வாழ்வதுதான் மனிதராய்ப் பிறந்தவர்களின் ஆசை.

மேற்கண்டவற்றில், ‘ஆன்மா’ மீதான நம்பிக்கை மனித மனங்களில் அழுத்தமாகப் பதிந்ததுவிட்டது.

மரணித்த பிறகு, அந்த ஆன்மா வெறுமனே அண்டவெளியில் திரிந்துகொண்டிருப்பதை அவர்கள் விரும்பாததால், பரலோகம்[ஏதோ ஓர் உலகம்], தேவலோகம், சொர்க்கம் எல்லாம் இருப்பதாகவும், புண்ணியம் செய்தால் அங்கெல்லாம் சென்று[ஆன்மாவாக] காலவரையறை இல்லாமல் களித்திருக்கலாம் என்றும் ஆசைப்பட்டார்கள்.

புண்ணியத்திற்கு எதிரான பாவமும் நினைவுக்கு வரவே, பாவம் செய்தவர்கள் நரகம் சேர்ந்து பெரும் துயரத்தில் மூழ்கிக் கிடப்பார்கள் என்று முடிவு செய்தார்கள்.

பாவமோ புண்ணியமோ, நரகமோ சொர்க்கமோ, ஆன்மா இடம் மாறி மாறித் துன்பங்களையும் துயரங்களையும் அனுபவித்தாலும், தங்களுக்கெறு ஓர் ஆன்மா தேவை என்பது மனிதர்களின் விருப்பம். அதன் மூலம் இறந்த பிறகும் இருந்துகொண்டே இருக்க வேண்டும் என்பது அவர்களின் அழிவில்லாத ஆசையாக உள்ளது.

என்றேனும் ஒரு நாள்.....

ஆன்மாவோ, சாகும்போது உடம்புக்குள்ளிருந்து வெளியேறுகிற எதுவுமோ இல்லை என்று அறிவியல் ஆய்வுகளின் மூலம் நிரூபிக்கப்பட்டுவிட்டால்....

கடவுள் என்றொருவர்[ஆன்மாவைச் சொர்க்கத்திற்கு நரகத்திற்கும் அனுப்புபவர்] இருந்தாலும்[அவர் மீதான நம்பிக்கை சிதையவும் வாய்ப்புள்ளது], மற்ற உயிரினங்களுக்கு உள்ளது போல், இன்பத் துன்பங்களுடனான அற்ப ஆயுளை மட்டும் தந்ததற்காக[ஆன்மா, பாவம், புண்ணியம் என்று கதையளந்து பிழைப்பு நடத்தும் ‘சத்துக்குரு’ ஜக்கி போன்றோர் பாடு திண்டாட்டம்] மனிதர்கள் அவரை நிந்திப்பார்கள்.

கோயில் கட்டுதல், விழா எடுத்தல், கொண்டாடுதல் என்று கோடிக்கணக்கில் மனித மண்டூகங்கள் செய்யும் செலவு மிச்சமாகும்! 

ஹி... ஹி... ஹி!!!