எனது படம்
கடவுள் குறித்த ஆய்வுரைகளோ, மூடநம்பிக்கைச் சாடல்களோ, என் பதிவுகளின் உள்ளடக்கங்களின் தரம் எனக்கு வாய்த்துள்ள அறிவுக்கும் மனப் பக்குவத்துக்கும் ஏற்பவே அமையும். அவற்றை ஏற்பதும் மறுத்துப் புறக்கணிப்பதும், ஆறறிவும் ஆழ்ந்து சிந்திக்கும் திறனும் வாய்க்கப்பெற்ற உங்களின் விருப்பம் சார்ந்தது.

வெள்ளி, 7 பிப்ரவரி, 2025

திருத்தந்தையின் திருவாக்கும் நம் கோரிக்கையும்!

“தீமைகளை எதிர்த்துப் போரிட நாம் பலம் பெறுவது கடவுளிடமிருந்தே”[திருத்தந்தை[https://www.vaticannews.va/ta/pope/news/2025-02/pope-message-ambassadors-of-hope-human-trafficking-11-world-day.html].

திருத்தந்தையின் வாக்கு மிகச் சரியானதே.

கடவுளிடமிருந்து பலம் பெற்றுக் காலங்காலமாகத் தீமைகளை எதிர்த்துப் போராடி, அவற்றை ஓரளவுக்குக்கூட ஒழிக்க இயலாததால் சலிப்புற்றுச் சோர்ந்து கிடக்கிறது மனித இனம்.

ஆகவே,

கடவுளிடமிருந்து பலம் பெறுவதைவிடவும், கடவுளானவர் ஒட்டுமொத்தத் தீமையையும் அழித்து, மனிதர்கள் மன அமைதியுடன் வாழ்வதற்கு அருள்புரியுமாறு அவரை வேண்டிக்கொள்வது நல்லது.

திருத்தந்தை அவர்கள் மனித இனத்திற்கு இதை அறிவுறுத்த வேண்டும் என்பது நம் கோரிக்கை.