எனது படம்
இந்தத் தளத்தின் பதிவுகளில் இடம்பெறும் கருத்துகளும் விமர்சனங்களும் வாசிப்பாளர்களைத் திருத்துவதையோ, அவர்தம் மனங்களை நோகடிப்பதையோ நோக்கமாகக் கொண்டவை அல்ல. இவை அவர்களைச் சிந்திக்கத் தூண்டுவனவாக அமைதல் வேண்டும் என்பது என் விருப்பம். நான் பதிவுகள் எழுதுவது என் நினைவாற்றலைத் தக்கவைப்பதற்காகவும், ஓய்வு நேரத்தைப் பயனுடையதாக ஆக்குவதற்காகவும் என்பதும் அறியத்தக்கது.

புதன், 17 டிசம்பர், 2025

‘ஹிஜாப்'ஐ இழுத்த நிதிஷ்குமார்! இஸ்லாமியர்கள்[+எதிர்க்கட்சிகள்] கோழைகளா?!

//ஆயுஷ் மருத்துவர்களுக்குப் பணி ஆணை வழங்கும் நிகழ்வில், இஸ்லாமியப் பெண் ஒருவர் ஹிஜாப் அணிந்துகொண்டு, தனது பணி ஆணையைப் பெறுவதற்கு வந்தார். அப்போது அந்த பெண்ணின் ஹிஜாபை நிதிஷ் குமார் சுட்டிக்காட்டினார். தொடர்ந்து ஹிஜாபை அவர் விலக்க முயன்றார். இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டது[2 நாட்களுக்கு முன்பு]//.

இந்தச் சம்பவத்தின்போது நிதிஷ்குமாருடன் இருந்த பிஹார் துணை முதல்வர் சம்ரத் சவுத்ரி, நிதிஷைத் தடுக்க முயன்றார். இருந்தபோதும், அதற்குள் ஹிஜாபைப் பிடித்த நிதிஷ், அதை விலக்க முயன்றார். அப்போது மேடையில் சுகாதாரத் துறை அமைச்சர் மங்கள் பாண்டே, முதல்வரின் முதன்மைச் செயலர் தீபக் குமார் ஆகியோர் சிரித்தபடி நின்றனர்.

“நிதிஷ் குமாருக்கு என்ன ஆனது? அவரது மனநிலை மோசமடைந்துள்ளதா, அல்லது இப்போது அவர் நூறு சதவீதச் சங்கி ஆகிவிட்டாரா?” என ராஷ்ட்டிரிய ஜனதா தளம் எக்ஸ் தளத்தில் வீடியோவைப் பகிர்ந்து விமர்சித்துள்ளது.

காங்கிரஸ் கட்சி அவரின் இழி செயலுக்குக் கண்டனம் தெரிவித்து, அவர் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று சொன்னதோடு நிறுத்திக்கொண்டது.

தமிழ்நாட்டின் இஸ்லாமிய அமைப்பு ஒன்றும் கண்டனம் தெரிவித்துள்ளதாகத் தெரிகிறது.

“பெண்ணின் ஹிஜாபை விலக்கியதன் மூலம் இஸ்லாமிய சமூகத்தின் மீது ‘என்டிஏ’ கூட்டணி கொண்டுள்ள மனப்பான்மை வெளிப்படுகிறது. பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தை வெளிப்படுத்தும் வகையில் நிதிஷின் அரசியல் அமைந்துள்ளது...” என ஆர்ஜேடி செய்தித் தொடர்பாளர் இஜாஸ் அகமது தெரிவித்துள்ளார்.

ஆக,

அரைலூசன் ‘நிதிஷ்’இன் அசிங்கமான இந்தச் செயல் சமூக ஊடகங்களில் ஓரளவிற்கே பகிரப்பட்ட நிலையில், அடங்கியும்விட்டது. இது நமக்குப் பெரும் ஏமாற்றத்தைத் தந்துள்ளது. கொஞ்சமே கொஞ்சம் நேரமேனும் இந்தக் கிறுக்கனின் ஆடைகளை உருவியெடுத்து நிர்வாணப்படுத்தியிருந்தால், இது மாதக்கணக்கில் பகிரப்படும் பெரும் பரபரப்பூட்டும் சுவாரசியமான நிகழ்வாக அமைந்திருந்திருக்கும்; மீண்டும் மீண்டும் வாசித்து மகிழலாம்.

ஹூம்... இனி வருந்துவதால் பயனேதும் இல்லை.

https://www.hindutamil.in/news/india/bihar-cm-nitish-kumar-removed-muslim-woman-s-hijab-rjd-criticized-as-sanghi