வியாழன், 25 ஜூன், 2026

விஜய் மாமாவும் விஜயா என்னும் கர்ப்பிணிப் பெண்ணின் வைராக்கியமும்!!![சிறப்புச் சிறுகதை]

விஜயாவுக்கு அன்று அதிகாலையில் லேசான பிரசவ வலி தலைகாட்டியது.

அவளுடைய மாமியார் தன் மகன் மணவாளனிடம் விசயத்தைச் சொல்ல, இருவரும் ‘கோகுலம் தாய் சேய் மருத்துவமனை’ என்னும் பிரபலமான தனியார் மருத்துவமனைக்கு விஜயாவை அழைத்துச் செல்வதென்று முடிவெடுத்தார்கள்.

விசயத்தை அறிந்த விஜயா, “நம்ம ஊர் அரசு மருத்துவமனைக்கே போகலாம்” என்றாள்.

“மத்த ஊர் அரசு மருத்துவமனை எப்படியோ, நம்ம ஊர் அரசு மருத்துவமனை ரொம்ப மோசம். அங்கே சேர்க்கப்படும் கர்ப்பிணிப் பெண்கள் உயிர் பிழைப்பதே நிச்சயமில்லை” என்றான் மணவாளன்.

“என் உயிரைப் பத்தி எனக்குக் கவலை இல்லை. நல்லபடியா ஒரு குழந்தையை நான் பெத்துட்டா, நம் முதல்வர் விஜய் நேரில் வந்து நம் குழந்தைக்குத் தங்க மோதிரம் அணிவிச்சி வாழ்த்துச் சொல்லுவார். அது எவ்வளவு பெரிய அதிர்ஷ்டம். நீங்க என்னை அடிச்சே கொன்னுடுறதா இருந்தாலும், அந்த அதிர்ஷ்டத்தை இழக்க நான் ஒருபோதும் சம்மதிக்கமாட்டேன்” என்றாள் விஜயா அழுத்தம் திருத்தமான குரலில்!

விஜயாவின் புருஷன்காரனும் மாமியார்க்காரியும் நீண்ட நேரம், இருந்த இடத்திலேயே சுயநினைவில்லாமல்  நின்றுகொண்டிருந்தார்கள்! 

“முதல்வராகவே இருங்கள்; ‘மாமா’வாக மாற வேண்டாம் ஜோசப்”!

[தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் ஒரு நாளில் தோராயமாக 1,200 முதல் 1,230 குழந்தைகள் பிறக்கின்றன[தகவல் இணையத்தில் பெறப்பட்டது]. தினமும் இத்தனைக் குழந்தைகளுக்கு முதல்வர் தங்க மோதிரம் அணிவிப்பது சாத்தியமா? செலவு?]        

தாய்மாமன் என்பவர் யார்? 

//தாய்மாமன் என்பவர் குழந்தையைப் பெற்றெடுக்கும் ஒரு தாயின் உடன் பிறந்த சகோதரர்(அண்ணன் அல்லது தம்பி) ஆவார். தமிழ்க் கலாச்சாரத்தில் இவர் தாய்க்கு நிகரானவராகக் கருதப்படுபவர்.

*தமிழர் பண்பாட்டில் தாய்மாமனின் பங்கு மிகவும் முக்கியமானது.

*காதணி விழா, பூப்புனித நீராட்டு விழா, திருமணம், வளைகாப்பு போன்ற அனைத்துக் குடும்பச் சுப நிகழ்ச்சிகளிலும் தாய்மாமனுக்கு முக்கிய இடமுண்டு.

*குழந்தைகளின் அனைத்து முக்கிய நிகழ்வுகளுக்கும் முதல் சீர்(பரிசுப் பொருட்கள்) கொண்டுவரும்[கொடுத்து அனுப்புதல் அல்ல] வழக்கம் இவரிடம் உள்ளது.

தாய்க்கு அடுத்தபடியாகக் குழந்தைகளின் மகிழ்ச்சிக்கும், பாதுகாப்பிற்கும் உறுதுணையாக இருப்பவர் தாய்மாமன்//.

ஆக, சகோதரி மகளின்[+மகன்] அனைத்துப் புனித நிகழ்வுகளிலும் கலந்துகொண்டு பரிசு[சீர் வரிசை] வழங்குபவரே தாய்மாமன் ஆவார்.

முதல்வர் ஜோசப், ஒவ்வொரு பெண்மணியும் குழந்தையைப் பெற்றெடுக்கும்போது[அரசு மருத்துவமனைகளில் மட்டும்] நேரில் வந்து வாழ்த்துச் சொல்லி, ஒரு கிராம் மோதிரத்தை அணிவிக்கப்போவதில்லை[ஒரு முறை மட்டும் நிகழ்வைப் புகைப்படம் எடுத்து அனைத்து ஊடகங்களிலும் வெளியிடச் செய்வார்].

வெளிப்படையாகச் சொன்னால்.....

சொகுசு மாளிகையில் இருந்துகொண்டு எடுபிடியை[அதிகாரிகளாகவும் இருக்கலாம்] ஒரு போலியான தாய்மாமனாக மருத்துவமனைக்கு அனுப்பி இந்த நாடகத்தை நடத்தப்போகிறார் ஜோசப்.

முதல்வர் ஜோசப் அவர்களுக்கு நாம் வழங்கும் பரிந்துரை.....

கடந்த தேர்தலில் வெற்றி பெற்று முதல்வர் ஆகும்வரை வெறும் ‘விஜய்’ ஆக இருந்த நீங்கள், முதல்வர் ஆனபோது ‘ஜோசப்’ஐ இணைத்துக்கொண்டீர்கள்[மதப் பற்றின் வெளிப்பாடு & பரப்பும் நோக்கம்]. அதைப் போலவே, முதல்வராக மட்டுமே இருந்த/இருக்கும் நீங்கள் ‘தாய்மாமா’வை இணைக்கிறீர்கள்.

மக்கள் எப்போதுமே முட்டாள்களாக இருப்பதில்லை; சில நேரங்களில் சிந்திக்கவும் செய்கிற அவர்கள், உங்களின் இந்த ‘மாறும் ஆசை’ வரும் தேர்தல்களில் பெண்களின் வாக்குகளை அள்ளுவதற்கான தந்திரம் என்பதைப் புரிந்துகொள்வார்கள். நீங்கள் எதிர்பார்ப்பது நடக்காது.

ஆகவே ஜோசப் அவர்களே,

முதல்வருக்குரிய கடமைகளை மட்டுமே செய்யுங்கள்[சிறப்பாகச் செய்தால் மக்கள் தொடர்ந்து ஆதரிப்பார்கள்]; ‘மாமா’வாக எல்லாம் மாற வேண்டாம்.

வேண்டவே வேண்டாம்!