ஒரு நடிகனாக இருந்து, ‘தளபதி’ ஆகி முதல்வராகவும் ஆகியிருக்கிறார் ஜோசப். இதுவே அதிர்ஷ்டத்தின் உச்சம். இன்னும் எதற்குத் தங்கத் தளபதி, வைரத் தளபதி ஆகும் ஆசையெல்லாம்? இந்த ஆசைநாயகனால் மக்களுக்கு என்ன நன்மை விளையப்போகிறது?
வெற்றிக்குப் பிறகு தன்னடக்கம் இல்லாமல் ஆட்டம் பாட்டம் குதியாட்டம் எல்லாம் போடும் ஜோசப் முதல்வர் அல்ல, முதல்வன் .
ஒரு சிறுவனைக் காலில் விழுந்து கும்பிடச் செய்தது[முன்னேற்பாடு] குற்றம். ஜோசப் இதை எதிர்பார்க்கவில்லை என்றாலும், எடுத்த படக் காட்சியைப் பலரறிய வெளியிட்டது மாபெரும் குற்றம்.
தளபதி ஜோசப்பின் இந்த வெறியாட்டக் காணொலி தேர்தலுக்கு முன்பு வெளியானதா, பின்னரா? நிகழ்வு எதுவாயினும் இது இவரின் ரசிகர்களை வன்முறை ஆட்டம் போடத் தூண்டும். இணையத்திலிருந்து இதை நீக்காதது சிறுபிள்ளைத்தனம்.
//தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய் தாராபுரம் இடைத்தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில், தவெக வேட்பாளர் சத்யபாமா உணர்ச்சிவசப்பட்டு அழுதபோது, அவரது தோளில் தட்டிக்கொடுத்து ஆறுதல் கூறியது அரசியல் ரீதியாகச் சமூக ஊடகங்களில் விவாதப் பொருளாகியுள்ளது//>ஊடகம்.
