ஆங்கிலக் கட்டுரைகளைத் தமிழாக்கம் செய்யும்போது அவற்றில் கணிசமான அளவில் நம் மொழி மரபு சிதைக்கப்படுகிறது. சிதைவுகளைச் சரி செய்தல் முக்கியம். கூறியது கூறல் என்னும் தவறும்[+தமிழ்க் கட்டுரைகள்] இடம்பெறுகிறது. தேவையற்ற தொடர்களை நீக்கி, இயன்றவரை எளிய & தெளிவான நடையில் கட்டுரைகளைப் பதிவு செய்ய முயல்கிறேன். இந்நிலையில், அரிதாகச் சில பிழைகளும் நேரலாம் என்பதை நினைவில் கொள்க.

புதன், 11 நவம்பர், 2026

அணுக்களால் ஆன நம் உடம்பில் ‘ஆன்மா’ ஆற்றும் அரிய பணி என்ன?!

+++மரபணு அமிலம்[டி.என்.ஏ> DNA] அணுக்களை[செல்கள்] உரிய முறையில் செயல்படச் செய்கிறது; எந்த உறுப்பு எப்படி வளர வேண்டும் என்பதை இது தீர்மானிக்கிறது; புரதத்தை  உற்பத்தி செய்வதற்கு அணுக்களுக்கு இது கற்றுக்கொடுக்கிறது.

+++மூளை உடலின் மற்ற உறுப்புகளுக்குக் கட்டளைகளைத் தருகிறது.


+++பெருமூளை[மூளையின் முக்கியப் பகுதி பெருமூளை(Cerebrum) ஆகும்] முன்மூளையின் மிக முக்கியமானதும் மிகப்பெரியதுமான பகுதியாகும். இதுவே சிந்திக்கப் பயன்படுகிறது.


+++சுரப்பிகள்[ஹார்மோன்கள்] ரத்தத்தின் வழியாகச் செய்திகளைப் பரப்புகின்றன.


+++அணுக்கள்[செல்கள்] அனைத்தும் குழுவாக இணைந்து உடலைக் காக்கின்றன. 


***பெருமூளையின் குறிப்பிட்ட பகுதிகளும் அவற்றின் செயல்பாடுகளும்:

முன் மூளை[முன் மடல்> Frontal Lobe): பெருமூளையின் முன் பகுதியில் உள்ள இந்த மடல்தான் திட்டமிடுதல், பகுத்தறிதல், முடிவெடுத்தல், ஆக்கப்பூர்வமாகச் சிந்தித்தல் போன்ற உயர்நிலைச் செயல்பாடுகளுக்குப் பயன்படுகிறது.

முன்முகப்புப் புறணி(Prefrontal Cortex): இது முன் மடலின் முன்பகுதியில் அமைந்துள்ள ஒரு முக்கிய பகுதியாகும். நமது புத்திசாலித்தனம், தர்க்கரீதியான சிந்தனை(Logical thinking), சிக்கல்களுக்குத் தீர்வு காணும் திறன்(Problem-solving) ஆகியவற்றை மேம்படுத்துவதற்கு இது பயன்படுகிறது.

சுருக்கமாகக் கூறின், நாம் சிந்திப்பது, கற்பனை செய்வது, புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்வது போன்ற அனைத்து அறிவுசார் செயல்பாடுகளும் மூளையின் பெருமூளை, அதன் பகுதியான முன் மூளை[மடல்] ஆகியவற்றால்தான் கட்டுப்படுத்தப்படுகின்றன. 

மேற்கண்டவையெல்லாம் அறிவியல் நமக்களித்துள்ள கொடை.

‘ஆன்மா’ என்று ஒன்று இருப்பதாக ஆன்மிகவாதிகள் உறுதிபடச் சொல்கிறார்களே, நம் உடம்பில் இடம்பெற்றுள்ள[மூளையிலோ வேறு எங்கோ] அதன் செயல்பாடு[கள்] என்ன?

உரிய நம்பத்தக்க ஆதாரங்களுடன் ஆன்மிகவாதிகள் நிரூபித்திருக்கிறார்களா?