ஜெயலலிதாவுக்குப் பிறகு> இறந்த பிறகு[அதற்கு முன்பு ஜெயலலிதாவும் கருணாநிதியும் மாறி மாறி ஆட்சிபுரிந்தார்கள்] தமிழ்நாட்டை அடுத்தடுத்து ஆண்ட முதலமைச்சர்களின் வரிசை பின்வருமாறு:
ஓ. பன்னீர்செல்வம் (டிசம்பர் 2016 – பிப்ரவரி 2017)
எடப்பாடி கே. பழனிசாமி (பிப்ரவரி 2017 – மே 2021)
மு. க. ஸ்டாலின் (மே 2021 – மே 2026)
முதலமைச்சர் ஜோசப் ‘அம்மா’ என்று சொன்னது ‘செல்வி.ஜெயலலிதா’ அவர்களை.
அவருக்குப் பிறகு மேற்கண்ட மூன்று பேர்களும் தமிழ்நாட்டை ஆட்சி செய்திருக்கிறார்கள்[கருணாநிதி ஆளவில்லை என்பதால் அந்த அப்பா கருணாநிதி அல்ல].
‘அப்பா’ என்று முதல்வர் ஜோசப் குறிப்பிடுவது மூவரில் எவரை?
ஏற்கனவே, ஸ்டாலினை ‘அங்கிள்’[ஸ்டாலின் அங்கிள்] என்று இவர் சொந்தம் கொண்டாடியிருப்பதால், அவர்[ஸ்டாலின்] இவருக்கு[ஜோசப்] அப்பா ஆகமாட்டார்; ஸ்டாலின் ஜோசப்புக்கு ‘அங்கிள்’ என்பதால் கருணாநிதி ‘அப்பா’ ஆகமாட்டார் என்பதும் கவனத்தில் கொள்ளத்தக்கது.
எஞ்சி இருப்பவர்கள் ஓ.பன்னீர்செல்வமும் எடப்பாடி பழனிசாமியும்[இவர்களில் எவரையும் 'அப்பா' என்று மக்கள் அழைத்ததில்லை]. இந்த இருவரில் எவரை ஜோசப் தன்.....
இதுக்கும் மேலே நான் எதுவும் சொல்ல விரும்பலீங்க. வயசான காலத்தில் வம்புதும்புகளில் சிக்கினால் என்னால் மீள முடியுமா என்ன?

