'பிரபஞ்சத் தோற்றம்' குறித்து ஆழ்ந்து சிந்தித்தால், 'ஏதும் புரியவில்லை' என்பது புரியும். தோற்றுவித்தவர் கடவுள் என்பது வெறும் அனுமானம்தான்!

Tuesday, June 27, 2017

சூரியக்குடும்பம் அழியும்! மனிதன்?!

ஒரு சூரியனும் அதைச் சுற்றி ஏ...ரா...ள நட்சத்திரங்களும் கிரகங்களும் ஒருங்கிணைந்து ஒரு குழுவாய்ச் சுழன்றுகொண்டிருக்கின்றன. இந்த ஒரு குழுவைச் ‘சூரியக் குடும்பம்’ என்கிறார்கள்.
அண்டவெளியில் இம்மாதிரிச் சூரியக் குடும்பங்கள் கணிக்க இயலாத அளவுக்குப் பெரும் எண்ணிக்கையில் இருப்பதாகச் சொல்கிறது அறிவியல்.

மா...மா...மாபெரும் சக்தியின் இருப்பிடமாக உள்ளது சூரியன். அதிலிருந்து ‘சக்தி’ வெளிப்பட்டு, வெளியெங்கும் பரவிக்கொண்டே இருக்கிறது. சூரியனில் உள்ள ‘வாயு’ அணுக்களில் ஏற்படும் வேதியியல் மாற்றங்களால்தான் இந்தச் சக்தி உருவாகிறதாம்.

இன்னும் பல பல பல கோடி ஆண்டுகளுக்கு இந்தச் சக்தியை உருவாக்கத் தேவையான அணுக்கள் சூரியனில் உள்ளன என்றும் விஞ்ஞானிகள் பகர்கிறார்கள். ஆயினும் அந்தோ.....

என்றே.....[சில நிமிடங்களுக்கு நீட்டி முழக்கி வாசிக்கவும்]னும் ஒரு நாள் இந்த அணுக்கள் முற்றிலுமாய் எரிந்து அழிந்துவிட, சூரியனிலிருந்து  சக்தி வெளியாவது நின்றுவிட, சூரியக்குடும்பத்திலுள்ள அத்தனை நட்சத்திரங்களும் கிரகங்களும் படிப்படியாய் அழிந்துபோகுமாம்.

இந்த அழிவைத்தான் ‘நட்சத்திர மரணம்’[Death of Star] என்கிறார்கள்.

இச்செய்தி, என்னைப் போலவே நீங்களும் படித்தோ கேட்டோ அறிந்ததாக இருக்கக்கூடும்.

ஆனால், கீழ்வரும் செய்தி நீங்கள் அறிந்திருப்பதற்கான வாய்ப்பு மிகவும் குறைவாக இருக்கலாம்.

அது.....

#இந்தச் சூரியக்குடும்பம் அழியும்போது நாம் வாழும் பூமியும் சேர்ந்து அழிந்துவிடும்; மனித இனமும் காணாமல் போகும் என்று நீங்கள் நினைத்தால் அது தவறு. பூமி அழியும்.  மனித இனம் அழியாது. மனிதர்கள் வெகு தொலைவிலுள்ள இன்னுமொரு சூரியக்குடும்பத்தின் ஓர் உறுப்பான பூமியில் குடியேறியிருப்பார்கள்# என்பதாகும்.

கடைசிப் பத்திச் செய்தி வெறும் கதையா, கற்பனையா? நம்புவதும் நம்பாமலிருப்பதும் உங்கள் விருப்பம்!

கொசுறு: “மனுச ஜாதி எங்கேயோ இருந்துட்டுப்போகட்டும். அப்போது என் ஆன்மா எங்கே இருக்கும்?” என்று கேட்கிறார் இதை வாசித்த என் எதிர்வீட்டுப் பெரியவர்!!
=====================================================================

14 comments :

 1. உலகம் இன்னும் முழுமையாக அறிந்து கொள்ள முடியாத புரியாத பிம்பம் யாரும் எதையும் ஆணித்தரமாக சொல்லி லிடமுடியாது.

  நாம் நம்புகிறோமோ... இல்லையோ.... நமது சந்ததிகளுக்கு நிச்சயம் விடை கிடைத்து விடும் நண்பரே....

  ReplyDelete
  Replies
  1. நம்மைவிடவும் நம் சந்ததியர் வாழ்வு சிறப்பானதாக அமையட்டும்.

   நன்றி நண்பர் கில்லர்ஜி.

   Delete
 2. இந்த மரணத்தைக் காண நாம் இருக்கப் போவதில்லை :)

  ReplyDelete
  Replies
  1. நானும் இதைச் சொல்ல நினைத்தேன்.[அவசரப் பணி காத்திருக்கிறது. உங்கள் தளத்திற்குப் பின்னர் வருவேன்].

   நன்றி பகவான்ஜி.

   Delete
 3. இருக்கும் வரை மகிழ்வோடு இருப்போம்...

  ReplyDelete
  Replies
  1. என்னுடைய எண்ணமும் இதுவே.

   நன்றி DD.

   Delete
 4. இன்னொருன் சூரிய குடும்பத்துக்கு போக எல்லார்கிட்டயும் பைசா இருக்குமா?!

  வசதி இருக்குறவன் பறந்து போவான். நம் நிலைமை?! ருத்ரா 2012ன்னு ஒரு ஆங்கில டப் படம் வந்துச்சே நினைவிருக்காப்பா. அதுமாதிரிதான் நடக்கும்.

  பூமி அழிந்தால் ஏழைகள் மட்டும் அழிவர். பணக்க்க்க்க்க்க்க்க்காரர்களும் அவர்தம் வேலையாட்கள் மட்டுமே பிழைத்திருப்பர்

  ReplyDelete
  Replies
  1. சினிமா பார்க்கிற பழக்கம் விட்டுப்போய்ப் பல ஆண்டுகள் ஆயிடிச்சி. ருத்ரா 2012 படம் நினைவில் இல்லை.

   //பணக்க்க்க்க்க்க்க்க்காரர்களும் அவர்தம் வேலையாட்கள் மட்டுமே பிழைத்திருப்பர்//

   உண்மைதான்மா. எத்தனைதான் அறிவியல் வளர்ந்தாலும் ஏழைகளின் நிலை பரிதாபம்தான். மேலே சொல்லப்பட்டது போன்ற கால மாறுதலின்போது ஏழைகளே இருக்க மாட்டார்களோ என்னவோ!

   நன்றி ராஜி.

   Delete
 5. பணக்காரர்களுக்கு இப்பொழுதே வேறு கிரகத்தில் தங்குவதற்கு ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறார்களே

  ReplyDelete
  Replies
  1. அறிவியல் கண்டுபிடிப்புகளின் பயன்களைப் பெறுவதற்குப் பணக்காரர்கள் முந்திக்கொள்கிறார்கள்.

   அவர்களுக்குத்தான் அரசுகளும் முன்னுரிமை தருகின்றன.

   நன்றி ஜெயக்குமார்.

   Delete
 6. தகவலுக்கு நன்றி நண்பரே

  ReplyDelete
 7. மனித இனம் அழியாதில்ல... அதுவரை சந்தோஷம் பரமசிவம் ஐயா

  ReplyDelete
  Replies
  1. மனித இனம் அழியாது என்றால் மகிழ்ச்சிதான். அதே வேளையில், நடக்கப்போவதையெல்லாம் பார்த்து ரசிக்கும் பேறு நமக்கு இல்லையே என்று நினைத்தால் வருத்தமாகவும் இருக்கிறதே!

   ஏதேதோ நடக்கிறது. ரொம்பவும் யோசித்தால் மிஞ்சுவது குழப்பம்தானே?

   நன்றி றஜீவன்.

   Delete