எனது படம்
அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.

செவ்வாய், 22 அக்டோபர், 2024

மறவாதீர்! உயிருள்ளவரை உடல்நலமும் மனநலமும் காக்கும் உடற்பயிற்சி!!

உடற்பயிற்சி என்பது ஒட்டுமொத்த உடல் நலனையும்  மன நலனையும் மேம்படுத்துவதற்கான ஒரு சக்திவாய்ந்த கருவியாகும். 

*புதிய செல்களின் வளர்ச்சி:

BDNF(மூளையில் இருந்து பெறப்பட்ட நியூரோட்ரோபிக் காரணி) என்ற புரதத்தின் உற்பத்தியை உடற்பயிற்சி அதிகரிக்கிறது, இது மூளைச் செல்களுக்கு உரமாக அமைகிறது.

*ஆரோக்கியமான மனநிலை:

உடற்பயிற்சி செய்யும்போது, ​​​​மூளை எண்டோர்பின்கள், செரோடோனின் மற்றும் டோபமைன் உள்ளிட்ட நல்ல இரசாயனங்களின் காக்டெய்லை வெளியிடுகிறது. இவை மன அழுத்தத்தைக் குறைக்கவும், பதட்டத்தைத் தணிக்கவும், பயன்படுகின்றன.

*நினைவாற்றல் அதிகரிப்பு:

உடற்பயிற்சி மூளைக்கான இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. இதன் மூலம் நினைவாற்றல் விரிவடைகிறது. ஒரு பொருளை எங்கே வைத்தோம் என்று தேடுகிற ஞாபக மறது நோய் உருவானால், அதை வளரவிடாமல் தடுக்கிறது உடற்பயிற்சி.

*கவனச் சிதறல் தவிர்ப்பு:

முக்கியமான பணிகளின்போது னம் அலைபாய்வதைத் தடுப்பதற்கான அரிய சாதனம் உடற்பயிற்சியே.  

*மூளையின் இளமைத்தன்மை:

வயதாகும்போது ஏற்படும் மூளையின் இயற்கையான சுருக்கத்தை மெதுவாக்குவற்கு உதவுகிறது உடற்பயிற்சி.

*விரிவடையும் படைப்பாற்றல்:

உடற்பயிற்சி காரணமாக உடல் முழுதும் அதிகரிக்கும் ரத்த ஓட்டமும், சிந்திக்கும் ஆற்றலை வலுப்படுத்துவதற்கான ரசாயன உற்பத்தியும் படைப்பாற்றலை மேம்படுத்துகின்றன.

*நரம்பு இணைப்புகள் உருவாதல்:

புதிய நரம்பியல் இணைப்புகள் உருவாவதற்கு[நியூரோபிளாஸ்டிசிட்டி] உடற்பயிற்சி உதவுகிறது. இது புதியனவற்றை விரைவாகக் கற்றுக்கொள்ளவும், மூளைக் காயங்களிலிருந்து விரைவாக மீளவும், எதிர்மறைச் சிந்தனை வடிவங்களை மாற்றவும் உதவுகிறது. 

*உடல் வலி தணிதல்:

உடற்பயிற்சி மிகக் கடினமான உடல் வலியைத் தணிக்கவும் பயன்படுகிறது. உடற்பயிற்சிக்குப் பிறகு வலி நீங்கி மனதில் அமைதி நிலவுகிறது.

*நல்ல உறக்கம்:

உடற்பயிற்சி அடினோசின் உற்பத்தியை அதிகரிக்கும். இது ஆழ்ந்த  தூக்கத்தை ஏற்படுத்துகிறது; உடல் வெப்பநிலையைச் சீராக்குகிறது.

*மூளையின் சிந்திக்கும் ஆற்றல் அதிகரிப்பு;

உடற்பயிற்சி சிந்திக்கும் ஆற்றலை அதிகரிப்பதோடு மறதி நோய்[டிமென்ஷியா] அபாயத்தைக் குறைக்கிறது.

*நிர்வாகத் திறன் மேம்படுதல்:

விரைந்து முடிவெடுத்தல், கட்டுப்படுத்துதல் போன்ற நிர்வகித்தலுக்கான திறன்களைப் பெற்றிட உதவுகிறது உடற்பயிற்சி.

இவை தவிர மேலும் பல நன்மைகள் உடற்பயிற்சியால் விளைகின்றன என்பது கருத்தில் கொள்ளத்தக்கது.

                                     *   *   *   *   *

***மிக விரிவானதும் துல்லியமானதும் ஆன தகவல்களுக்குக் கீழ்க்காணும் முகவரியைச் சொடுக்குக.

15 Surprising Things That Happen to Your Brain During Exercise