சனி, 30 மே, 2020

'இது’ விசயத்தில் இத்தனை பலவீனமானவரா மகாத்மா காந்தி?!

'மரணமிலாப் பெருவாழ்வு’ குறித்துப் பதிவு எழுதுவது இன்றைய என் நோக்கமாக இருந்தது. கூடுதல் தகவல்களுக்காக இணையத்தில் மேய்ந்தபோது, http://vallalarr.blogspot.com/2016/04/blog-post_8.html என்னும் தளத்தின் மூலம், காந்தியடிகள் பற்றி, அதிர்ச்சி தரும் பல புதிய  செய்திகளை அறிய நேர்ந்தது[கூடுதல் வாசிப்புக்கு: ‘காந்தியும் காமமும்’[https://kadavulinkadavul.blogspot.com/2015/03/blogpost_26.html].

பதிவின் சுருக்கம் கருதி, வாசித்தறிந்த செய்திகளின் அளவை வெகுவாகக் குறைத்திருக்கிறேன்.

தளத்தின் உரிமையாளருக்கு நன்றி.
#காந்திஜி தமது தென்னாப்பிரிக்கா வாழ்க்கையின்போது சத்தியாகிரகம் என்ற அகிம்சை போர்முறையினை அவர் அங்குதான் உருவாக்கினார். சுயநலம் மற்றும் குடும்ப உறவிற்கு அப்பாற்பட்ட ஒரு வாழ்வு முறைக்கு அவர் தயாரானார். அதனால் அவர் ஒரு முக்கியமான இரண்டு முடிவினை அங்கிருந்தபோது எடுத்தார். முதலாவதாக ,குடும்பத்தை விட்டு விலகி முழுமையாகப் பொதுச் சேவைக்குத் தம்மை அர்ப்பணித்துக்கொள்ளுதல், இரண்டாவதாக உடலுறவை மட்டுமின்றி காம உணர்வுகளையும் இச்சைகளையும் முற்றிலும் துறத்தல்.

அவர் கடைசியாக வைத்துக்கொண்ட உடலுறவு மகன் தேவதாசின் பிறப்போடு (1899) முடிவடைகிறது. 1906-ஆம் ஆண்டு முதல் அவர் மிகவும் இறுக்கமான பிரம்மச்சர்யத்தைப் பயிற்சி செய்தார். அது பல்வேறு விமர்சனங்களுக்கு ஆளானது. அவர் தமது வாழ்க்கையில் ஐம்பதாண்டு காலத்தை அவரது இச்சைகளுக்கும் அவர் விரும்பிய லட்சியத் தூய நிலைக்குமான போராட்டத்திற்கே செலவிட்டார்.

தாகூரின் மருமகளான சரளா, அக்காலக்கட்டத்தில் ஒரு மிகப்பெரிய ஆளுமை, பேரழகி, எழுத்தாளர், பத்திரிகை ஆசிரியை, இசை வல்லுநர், வங்கத்தின் 'ஜோன் ஆஃப் ஆர்க்' எனவும், பூமிக்கு வந்த துர்க்கை எனவும் வியக்கப்பட்டவர். கணவருடன் விடுதலை ப்போராட்டத்தில் முன்னணியிலிருந்தவர்.

1901-ஆம் ஆண்டே காந்திஜி சரளாவைச் சந்தித்திருக்கின்றார். தென்னாப்பிரிக்க வாழ்க்கைக்குப் பிறகு 1919-20 ஆம் ஆண்டு காந்திஜி தீவிர அரசியலில் ஈடுபடத் தொடங்கியபோதுதான் இருவருக்குமிடையே நெருக்கமான உறவு ஏற்பட்டது.....  மார்ச் 1920-ஆம் ஆண்டு சபர்மதி ஆசிரமத்திற்கு சரளா வந்திருந்தபோது, இருவருக்குமிடையே காணப்பட்ட நெருக்கமும் ஆசிரமத்தில் சரளாவின் மகன் தீபக்கிற்கு அளிக்கப்பட்ட சிறப்புரிமைகளும் அப்போதே சர்ச்சைக்குள்ளாயின. காந்தியின் வாழ்வில் வந்து சென்ற ஏராளமான பெண்கள் குறித்து எந்தச் சஞ்சலமும் அடையாத கஸ்தூரிபாவே கவலைப்படத்தக்கதாக அவ்வுறவு அமைந்தது.

மகன் தேவதாஸ், மிகவும் நெருக்கமானவர்களும் அலோசகர்களுமான மகாதேவ தேசாய், மதுரதாஸ், ராஜாஜி ஆகியோரின் கடுமையான தலையீட்டின் பேரில் வெகுவிரைவில் காந்திஜி அந்த உறவைத் தீய்த்து அணைக்க வேண்டியதாயிற்று..... 1920-ஆம் ஆண்டு இறுதியில் 'சத்திய சோதனை'யை அவர் எழுதியபோது சரளாவும் அவர் மகனும் உயிருடனிருந்தனர். 

உடலிச்சையைத் துறத்தல், பிரம்மச்சர்யம் அகியவற்றைத் தனது அகிம்சைப்போர் முறை, சத்தியாக்கிரகம் ஆகியவற்றிற்கு மிக உறுதுணையாக இருக்கும் என உளமாற நம்பினார் காந்திஜி. புற உலகைப் பாதிக்கும் திறன் என்பது ஒருவருக்குத் தன் உலகைக் கட்டுப்படுத்துவதிலிருந்தே துவங்குகிறது என்றார்..... 

கடமைக்கும் தாதி நிலைக்கும் காமம் விரோதமானது என்கிற கருத்து அவருக்கு இளமையிலேயே இறுகப் பதிந்தது. ஆனாலும் காமம் அவரை விடவில்லை. தமது தந்தை உடல்நிலை குறைவால் நோயுற்று இருக்க, ஒரு நாள் காந்திஜி தமது மனைவியுடன் கூடிவிட்டு சற்று அகன்றபோது, அவரது தந்தையின் மரணம் நிகழ்ந்தது. இந்தச் சம்பவம் அவரை வெகுவாகப் பாதித்தது.

இச்சைகளைத் துறக்கும் அவரது பிரம்மச்சரியச் சோதனைகள் ஃபோனிக்ஸ் பண்ணைக் காலத்திலிருந்தே தொடங்குகிறது. பருவப் பெண்களுடன் அருகில் உறங்குவதாக அப்பயிற்சி தொடங்கியது. "ஜெகி என்னருகில் படுத்திருந்தார்" என அவர் அதைப் பதிவு செய்தார். தொடர்ந்து அவர் இந்தப் பயிற்சியின் 'வரம்பை' விரிவாக்கிக்கொண்டே சென்றார். அவரது பிரம்மச்சர்யச் சோதனைகளில் பிரபாவதி நாராயணன் (பாலியல் உறவைத் தவிர்த்துக் கொண்ட ஜெயப்பிரகாஷ் நாராயணன் அவர்களின் மனைவி), சுசிலா நய்யார், லீலாவதி அசர், அப்துல் சலாம், பத்மஜா நாயுடு, மீரா பென், ஆபா, மனு காந்தி எனப் பலரும் பல்வேறு வகைகளில் அந்தச் சோதனையில் பங்கு பெற்றனர்.

பிரம்மச்சரியச் சோதனைகளை மனைவியுடன் மட்டும் நிறுத்திக் கொள்வது போதும் என காந்தி நினைக்கவில்லை. அது பெரிய விஷயமில்லை. பிற பெண்கள், குறிப்பாகப் பருவ வயதிலுள்ளோருடன் மேற்கொள்ளப்படுதலே சரியான சோதனை எனக் கருதினார். பழக்கப்பட்ட உடல்களைத் தவிர்த்து புதிய கவர்ச்சிகளுடன் சோதனைகள் தொடர்ந்தன.

"ஊன்றுகோல்களாக", பாதத்தை வருடி விடுபவர்களாக, ஒரு மெல்லிய துண்டுடன் கிட்டத்தட்ட முழு நிர்வாணமான நிலையில் படுத்துள்ள காந்திக்கு 'மசாஜ்' செய்பவர்களாக, இரவில் குறைந்த ஆடைகள் அல்லது ஆடையின்றிப் படுக்கையைப் பகிர்ந்து கொள்பவர்களாக இந்தப் பெண்கள் அவருடைய சோதனைகளில் பங்கு பெற்றனர். சுசிலா அவருக்கு 'மசாஜ்' செய்து வந்தார். லீலாவதி, மனு, ஆபா, மீரா இவர்கள் அவருடன் படுக்கைச் சோதனைகளில் பங்கு பெற்றனர்.

1930-ஆம் ஆண்டுப் பிற்பகுதியும், 1940-ஆம் ஆண்டுப் பிற்பகுதியும் அவருக்கு அரசியல் ரீதியில் சோதனைக்காலங்கள். நாட்டுப் பிரிவினையை அவரால் தடுக்க இயலவில்லை. ஜின்னாவுடன் பேச்சு வார்த்தைகள் தோல்வி அடைகின்றன. இந்நிலையில்தான் கிட்டதட்ட 36 ஆண்டுகளுக்குப் பின் 18-01-1936 மற்றும் 14-04-1938-ஆம் நாட்களில் விழிப்பு நிலையில் அவருக்கு விந்து வெளிப்படுகிறது. கலங்கிப் போய்விடுகிறார் காந்திஜி. 'விந்து வெளிப்பாட்டைக் கட்டுப்படுத்தி ஆற்றல் பெறுவதில் தோற்றுப்போன நான் அரசியல் களத்தில் எப்படி வெல்ல முடியும்?' என வேதனையுற்றார். "என் நிலை என்ன? இத்தகைய ஆசைகளுக்கு ஆட்பட்ட ஒருவன் அகிம்சையையும் சத்தியத்தையும் எப்படிப் பிரதிநிதித்துவப்படுத்த இயலும்" என அம்ரித்லால் நானாவதிக்கு எழுதுகிறார்.


பிரிவினை குறித்த பேச்சு வார்த்தைகளில் தோல்வியுற்ற காந்திஜி, 1946-ஆம் ஆண்டு இறுதியில் தனது உச்சகட்டச் சோதனைகளில் இறங்கினார். இப்போது அவரது சோதனைகளில் பங்கு பெற்றவர்கள் இருபது வயதுக்கும் குறைந்த மனுவும் ஆபாவும். இந்தச் சோதனையில் 'வெப்பம் உச்சமாக இருக்கும்' என்றார். மனு தன்னருகில் முற்றிலும் நிர்வாணமாக உறங்குவதாக பியாரே லாலுவுக்கு கடிதம் எழுதினார். ஒருவேளை இப்போதுதான் முதல்முறையாக முழு நிர்வாணத்துடன் சோதனை மேற்கொள்ளப்பட்டது போலும். 'சோதனையில் வரம்புகள் கடக்கப்படுவது' பற்றிய குறிப்பின் பொருள் இதுவாக இருக்கலாம்.

பேத்தி மனுவின் மீது அவருக்கு மிகப்பெரிய ஈர்ப்பு இருந்தது. தனது சோதனையில் பங்கு பெறுவதற்கான முழுத் தகுதி தான் மட்டுமின்றி, பங்கு பெறுபவரும் இச்சைக்கு ஆட்படாதிருப்பது என்று கருதிய காந்திஜி அத்தகைய திறனுடையவராக 19 வயதுள்ள தன் பேத்தி மனுவை அவர் மதித்தார்.....

அவருடைய உடலில் அருகாமைக்குப் பலரும் போட்டியிடவே செய்தனர், பியாரே லால் உட்பட மனுவைத் திருமணம் செய்ய விரும்பியவராக அவர் இருந்தபோதும் காந்திஜியின் அருகாமைக்கான அவரது ஆவலை ஒரு பால் வேட்கையுடன் ஒப்பிடத் தயங்க மாட்டார் கத்ரீன் டிட்ரிக்.

எனினும் இந்தச் சோதனைகளில் ஆபாவின் கணவர் கனுகாந்திக்கும் மனுவின் தந்தை ஜெய்சுக்லாலுக்கும் ஒப்புதலில்லாததைக் காந்திஜி பொருட்படுத்தவில்லை. ஜெயசுக்லால் இதை வெளிப்படையாக முன்வைத்த போது, அவர் மீது ஊழல் குற்றச்சாட்டைச் சுமத்தவும் காந்திஜி தயங்கவில்லை.

இறுதிச் சோதனைகளின்போது காந்தியின் வயது 75-ஐத் தாண்டியிருந்தது. இந்தக் கிழவரிடம் இருபது வயதிற்கும் குறைவான பெண்கள் என்ன கவர்ச்சியைக் கண்டுவிட முடியும்? எந்த வகையில் இவர்கள் சோதனைக்குப் பொருத்தமானவர்களாக இருக்க முடியும்? இந்து மரபிலிருந்துதான் காந்திஜிக்கு இதற்கும் பதில் கிடைத்தது. தனது பிரம்மச்சர்யத்தின் மூலம், தான் இன்னும் பருவப் பெண்களைக் கிளர்ச்சியுறுத்த முடியும் என அவர் நம்பினார். ஆரோக்கியமான வாழ்முறையின் மூலமான உறுதியான உடற்கட்டு, தொடர்ந்த 'மசாஜ்' மூலமான வழுவழுப்பான சருமம், அகன்ற மார்பு, சராசரி அளவிலேனும் உள்ள ஆண்குறி ஆகியவற்றின் மூலம் எழுபது வயதிலும் கிளர்ச்சியூட்டும் சாத்தியம் மிக்கவராக காந்திஜி இருந்திருப்பார் என்பது கத்ரீன் டிட்ரிக்கின் கணிப்பு.....

ஆனாலும் இறுதியில் அனைத்தும் அவரது கட்டுப்பாட்டிலிருந்து நழுவியது. நாடு பிரிந்தது. இந்துக்களும் முஸ்லிம்களும் ஒருவரை கொன்று கொண்டனர். காந்திஜியின் எதிர்பார்ப்புகள் பலவும் தோல்வியுற்றன. 'அரசியல் தோல்விகளுக்கு அகநிலைப் பிறழ்வுகளே காரணம்' என்கிற அவரது 'லாஜிக்'படிப் பார்த்தால் இதன் பொருளென்ன? காந்திஜி தோற்றார், காமம் வென்றது என்பதா? (நன்றி-அ.மார்க்ஸ்)

இப்படி பல வழிகளில் காமத்தை நீக்க இவ்வுலகில் உள்ளோர் முயல்கின்றனர். சிலர் அதில் வெற்றிபெறுகின்றனர். பலர் அதில் தோல்வி அடைகின்றனர்..... காமத்தை ஒழிக்கக் காந்திஜி பயன்படுத்தியப் பாதை தவறனா பாதையாகும்.

காமத்தை ஒழிக்க நமது சிந்தனையை எந்நேரமும் இடைவிடாமல் இறைவனின் பால் செலுத்துவதே சிறந்த முறையான எளிதான மார்க்கம் ஆகும்.

                                                     - தி.ம.இராமலிங்கம்#
================================================================================ 

வெள்ளி, 29 மே, 2020

சாதனை புரிந்த இளம் ‘சாமியாரினி’[போலி]யின் கதை!

நான் எழுதிய ‘செல்லம்மாதேவி’ என்னும் புதிய புதினம்,  பிரமிப்பூட்டும் அதிரடித் திருப்பங்களையும், வாசகரை இன்ப அதிர்ச்சிக்குள்ளாக்கும் எதிர்பாராத முடிவையும் கொண்டது. 

அதன் முன்னுரை.....

//‘புணர்ச்சி இன்பம் துய்ப்பதே பிறந்ததன் பயன் என்று அலையும் சுகபோகிகளுக்கு.....’ என முத்திரை குத்தப்பட்ட இளம் கைம்பெண் குறித்த புதினம்[Novel] இது. ‘இளசு’களுக்கு மிகவும் பிடிக்கும். வயசாளிகளுக்கு மிக மிகப் பிடிக்கும்.

மறுமணம் புரிந்து, இழந்த இல்லற இன்பங்களை மீட்டெடுப்பதற்கான உரிமை இன்று கைம்பெண்களுக்கு உண்டு. ஆனால், அவர்களில் எத்தனை சதவீதம் பேருக்கு அதற்கான வாய்ப்புக் கிட்டுகிறது? நம்மிடம் புள்ளிவிவரம் ஏதுமில்லை.

புதிய புருசன் வாய்க்காதபோது, வசதி படைத்த ஒருவனுக்கு வைப்பாட்டியாக இருந்து, ‘போதும்’ என்று இல்லாவிட்டாலும், ‘இது போதும்’ என்று காலம் கடத்தும் விதவைகள் உண்டு. அவர்களில் எத்தனை பேரை நாம் அறிந்துவைத்திருக்கிறோம்? பதில், சொல்லிக்கொள்ளும்படியாக இல்லைதானே?

இவர்கள் தவிர, வந்தவன் போனவனுக்கெல்லாம் முந்தானை விரித்து வாழ்க்கையை நரகமாக்கிக்கொண்ட பாவப்பட்ட பெண்களும் இருந்திருக்கிறார்கள்; இருக்கிறார்கள். இந்த நாவல், கல்யாணமாகி ஒன்றரை ஆண்டுகளில் கணவனை இழந்து பரிதவித்த ஒரு கிராமத்துப் பெண்ணைப் பற்றியது. அவள்.....

செல்லம்மா.

செல்லம்மா செல்வாக்கான குடும்பத்தைச் சேர்ந்தவள் அல்ல. சின்னஞ்சிறு வயதிலேயே தந்தையை இழந்த நிலையில் தாயார்க்காரியால் செல்லமாக வளர்க்கப்பட்டவள்; பட்டதாரி; நூல்கள் படிக்கும் பழக்கம் உள்ளவள்; படித்தவற்றை மனதில் சேமித்து ஆழ்ந்து சிந்திக்கவும் கற்றவள்.

ஒரு கைம்பெண், காலமெல்லாம் கைம்பெண்ணாகவே வாழ்வதற்கும் உரிமை உண்டுதானே? அப்படி வாழ நினத்தவள் இந்தச் செல்லம்மா.

கறுத்த தோலும், சிறுத்த மார்பும், சீரற்ற பல்வரிசையும், சொறசொறத்த கன்னமும் வாய்த்த ஒரு வத்தல் உடம்புக்காரியாக இவள் இருந்திருந்தால் இது சாத்தியப்பட்டிருக்கும். சாகசம் புரியும் கண்கள், தொட்டுத் தடவத் தூண்டும் கொழுகொழு கன்னங்கள், சுவைக்கத் தூண்டும் செம்பவழ உதடுகள் என்றிவற்றோடு எடுப்பான மார்பகங்களும், கட்டுடலும் கொண்டவளாக இவள் இருந்ததால் அது இயலாமல்போனது.

இவளைக் கலவி புரிய மனத்தளவில் பலர் ஆசைப்பட்டாலும், களத்தில் இறங்கியவர்கள் மூன்று பேர் மட்டுமே.

மூவரில் அத்தியப்பன் வயது அறுபதைக் கடந்தவர்; நிலச்சுவான்; நிதிநிறுவன அதிபர். தொட்டுவிடாமல் எட்ட நின்றே, கண்களால் காமக் கணைகள் வீசியும் கொச்சை மொழிகள் பேசியும் ஆசைப்பட்டவளைத் தன் இச்சைக்கு இணங்க வைப்பதில் கில்லாடி. ஒருத்தியை எங்கே தொட்டால் இளகுவாள், எப்படித் தொட்டால் மயங்குவாள், என்ன செய்தால் இணங்குவாள் என்பவை போன்ற காமசூத்திரப் பாடமெல்லாம் இவருக்கு அத்துபடி. இவர் ருசி கண்ட பூனை. தினுசு தினுசாய், புதுசு புதுசாய் அலுப்படையாமல் அனுபவிப்பதில் நல்ல அனுபவம் பெற்றவர்.

இரண்டாம் நபர் செந்தில். செல்லம்மாவின் வயதுக்காரர்..... அல்ல, வயதுக்காரன்; அவளுடன் கல்லூரியில் படித்தவன்; காதலித்தவன். ஒரு தடவைகூடப் புணர்ச்சி இன்பம் துய்க்காததால், அதன் அருமை புரியாதவனாகப் பொய்யான காதலைப் புனிதமானது என்று நம்பி மெய்யான வாழ்நாளை வீணடித்துக்கொண்டிருப்பவன்.

இன்னொரு போட்டியாளன் ஆறுமுகம்; லாரி டிரைவர்; அவசரக்காரன். அழகை ரசிக்கவும், ஆரஅமற அழகிகளை ருசிக்கவும் இவனுக்குத் தெரியாது; ‘வயிறு பசித்தால் சோறு’ என்பது போல, ‘அந்த’ நினைப்பு வந்தால் ‘பொம்பள’ தேடுபவன்; ஒன்னுக்கு ரெண்டா இருந்தா வசதி என்று நினைப்பவன்; செல்லம்மாவின் அக்கா அங்கம்மாவின் கணவன் என்பது அறியத்தக்கது.

இந்த மூன்று பேரிடமிருந்தும் தப்பித்து, தான் காணும் கனவுகளை நனவாக்கிடச் செல்லம்மா நடத்திய போராட்டமே இந்த நெடுங்கதையின் ‘கரு’வாகும். போராட்டம் சார்ந்த நிகழ்வுகள் இதன் பின்புலம்.

எளிதில் புரியாத வாழ்க்கைத் தத்துவங்கள், கதைக்கு ஒவ்வாத கதைமாந்தர் உரையாடல்கள், மிகையான வர்ணனைகள் என்றிவற்றைத் தவிர்த்திருக்கிறேன்.

இயன்றவரை, சுவை குன்றாத விறுவிறு நடையைக் கையாண்டிருக்கிறேன்.

புதுமையான கதைக் கருவும், மாறுபட்ட பாத்திரப் படைப்பும் தொய்வில்லாத நடையும் வரிவிடாமல் உங்களை வாசிக்கத் தூண்டும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு//
                                       
                          *                              *                             *
அமேசான் கிண்டிலில் நீங்கள் சந்தாதாரர் எனின், தவறாமல் இந்தப் புதினத்தை [இலவசமாகப்] படித்துச் சுவையுங்கள்; மகிழ்ச்சிக்கடலில் நீந்துங்கள்!

நன்றி.
===============================================================================

வியாழன், 28 மே, 2020

கடவுளும் மூன்று மனிதர்களும்!...‘சுட்ட’ கதை!! நெஞ்சைத் ‘தொட்ட’ கதை!!!

து பெரிய இடத்து மனிதர்களுக்கான ஒயின் கடை.

நேரம்,  நள்ளிரவை நெருங்கிக்கொண்டிருந்தது.

கப்பல் மாதிரியான ஒரு காரில் வந்திறங்கினார் ஒரு தொழிலதிபர்; தனக்குத் தோதான இடத்தில் அமர்ந்தார். தனக்குத் தேவையானதைச் சொல்லிவிட்டுத் தற்செயலாகத் திரும்பியவர் திடுக்கிட்டார். காரணம்.....

நான்கு இருக்கைகள் தள்ளி ஓர் இருக்கையில் அமர்ந்திருந்தவர் கடவுள்! வார்த்தைகளால் வர்ணிக்க இயலாதவராக இருந்தார் அவர்.

கடவுள்கூட இங்கெல்லாம் வருவாரா என்று ஆச்சரியப்பட்டார் தொழிலதிபர்; அவருக்குக் காணிக்கையாக ஏதாவது செலுத்திப் புண்ணியம் தேடிக்கொள்ள விரும்பினார்; பணியாளரைக் கூப்பிட்டு, “அதோ அங்கே அமர்ந்திருக்கும் கடவுளுக்கு ஒரு கோப்பை மது கொடு. பில்லை என் கணக்கில் சேர்த்துவிடு” என்றார். பணியாளரும் அப்படியே செய்தார்.

சிறிது நேரத்தில், இன்னொரு பெரிய மனிதர் வந்தார். அவரும் கடவுளை அடையாளம் கண்டுகொண்டு, பணியாளரிடம், “கடவுளுக்கு அரை பாட்டில் மதுவைக் கொடுத்துவிட்டுப் பில்லை என் கணக்கில் சேர்த்துக்கொள்” என்றார்.

அடுத்து, ஒரு பெரிய அரசு அதிகாரி அங்கு வந்தார்; மற்ற இருவரைப் போல அவரும் கடவுளைப் பார்த்து ஆச்சரியப்பட்டு, “கடவுளுக்கு என் கணக்கில் ஒரு முழு பாட்டில் மதுவைக் கொடு” என்று பணியாளரிடம் சொன்னார்.

நடந்தவற்றைக் கவனித்துக்கொண்டிருந்த கடவுள் இவர்களை அணுக, மூன்று பேரும் எழுந்து நின்று பவ்வியமாகக் கடவுளை வணங்கினார்கள்.

ஒரு கோப்பை மதுவைத் தன் கணக்கில் கொடுத்த தொழிலதிபரின் தலையில் கை வைத்துக் கடவுள் ஆசீர்வாதம் செய்தார்.
“ஆண்டவா, என்னே உன் கருணை! வருடக் கணக்கில் எனக்கிருந்த ஒற்றைத் தலைவலி பறந்துவிட்டது” என்று மகிழ்ச்சியில் ஆனந்தக் கூத்தாடினார் அவர்.

அடுத்ததாக, அரை பாட்டில் மதுவை அளித்த பெரிய மனிதரின் தோள்களில் ஆண்டவன் தம் கைகளை வைக்க, “தேவனே, பிறந்ததிலிருந்து விளங்காமலிருந்த என் ஒரு கை தங்களின் திருக்கரங்கள் பட்டதும் செயல்பட ஆரம்பித்துவிட்டது. என்னே உங்கள் கிருபை!” என்று மேனி சிலிர்த்தார்.

கடவுள் மூன்றாமவருக்கு அருள்பாலிக்கத் தம் கையை உயர்த்தியபோது, “பகவானே, வேண்டாம். தயவு செய்து எனக்கு அருள்பாலிக்க வேண்டாம். நான் ஓர் அரசு அதிகாரி. உயர் பதவியில் இருப்பவன். உடல் ஊனமுற்றவர் கோட்டாவில் எனக்கு வேலை கிடைத்தது. தங்கள் கருணையால் என் கால் ஊனம் சரியாகிவிட்டால் என் வேலை போய்விடும்” என்று சொல்லி எகிறிக் குதித்து ஓடிவிட்டார் அவர்.

“ஒரு அற்ப மனிதனால் எத்தனை பெரிய அவமானம் எனக்கு?” என்று முணுமுணுத்துக்கொண்டே இடத்தைக் காலி செய்தார் கடவுள்!

zzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzz
24.08.2003 ஆனந்த விகடன் இதழில், ‘சுவாமி சுகபோதானந்தா’ எழுதிய தொடர் கட்டுரையிலிருந்து களவாடியது.

விகடனுக்கு நன்றி.

படம்: கூகிள் உதவி.

‘கதைத் தலைப்பு’, நான் தந்தது. வரிகளில் மிகச் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

‘கடைசிப் பத்தி’, என் கற்பனை. சுவாமி சுகபோதானந்தா என்னை மன்னிப்பாராக!

புதன், 27 மே, 2020

ஒரு நடிகையின் நடனத்தைக் காண இந்தியா வந்த அயல்நாட்டுப் பிரதமர்கள்!!

நடனமாடிய நடிகை: மதுபாலா[இந்தி]


காண வந்த பிரமுகர்கள்: முன்னாள் சீனப் பிரதமர் சூ என் லாய், மாஜி பாகிஸ்தான் பிரதமர் புட்டோ.


அக்பரின் வாழ்க்கையைச் சித்திரிக்கும் ‘முகலே ஆஸம்’[150 திரையரங்குகளில் வெளியாகி, 7 நாட்களில் அனைத்து இருக்கைகளும் முன்பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது] என்னும் இந்தித் திரைப்படம் 1959ஆம் ஆண்டு வெளியானது. இரண்டாண்டுக் கால அவகாசத்தில் பிரமாண்டமாகத் தயாரிக்கப்பட்ட இந்தப் படத்தில்.....


இந்திப் படவுலகின் ‘காதல் தேவதை’ என்று பெயர் பெற்ற ‘மதுபாலா’வின் நடனத்தைக் கண்டு இன்புறத்தான் மேற்கண்ட பிரமுகர்கள் இந்தியா வந்தார்களாம்[ஆதாரம்: ‘புதிய பார்வை’, மக்கிய சில தாள்கள் மட்டும்].


பாலிவுட் திரைப்படங்களின் அழகுப் பதுமை என்று வர்ணிக்கப்பட்ட 
மதுபாலாவின் இயற்பெயர் மும்தாஜ் பேகம் ஜெகான் தேஹலவி 
ஆகும். இவர் பிப்ரவரி 14, 1933 ஆம் ஆண்டில் டெல்லியில் பிறந்தார்.  9 வயதில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர், தனது 14வது வயதில் நடித்த ‘நீல் கமல்’ திரைப்படம் வெளியான பிறகு மதுபாலா என்ற பெயரைப் பெற்றார்.


இவர் நடித்து வெளியான ‘மஹால்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்று, 
இவரின் புகழை உயர்த்தியது. தொடர்ந்து பல்வேறு முன்னணி நடிகர்களுடன் நடித்த மதுபாலா பிறப்பிலே இதயம் தொடர்பான நோயுடன் பிறந்தவர்.


இவருடைய ‘முகல்-ஏ-ஆஸம்’ மற்றும் ‘பர்ஸாத் கி ராத்’ மிகப்பெரிய வெற்றிப்படங்களாக விளங்கின. 1969 ஆம் ஆண்டு 
பிப்ரவரி 23ந் தேதி தனது 36வது வயதில் உடல்நிலைக் குறைபாட்டால் மரணத்தைத் தழுவினார்.

செவ்வாய், 26 மே, 2020

சமஸ்தான மன்னர்களின் ‘சல்லாப’ வாழ்க்கை![சில துளிகள்]

ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆண்டபோது, 565 சமஸ்தானங்களை[விக்கிப்பீடியா] மட்டும் பொம்மை அரசர்களை[ஆங்கிலேயருக்குக் கப்பம் செலுத்தி ஆண்டவர்கள்] வைத்து நிர்வகித்தார்கள். அந்த அடிமை அரசர்கள், தாம் நடத்திய ஆடம்பர வாழ்க்கையில் செய்த அட்டூழியங்கள் மனம் பதற வைப்பவை; அனுபவித்த சுகபோகங்கள் விவரிப்புக்கு அப்பாற்பட்டவை. எடுத்துக்காட்டாக.....

*காலஞ்சென்ற ஜோத்பூர் மகாராஜா உடலுறவு சுகத்துக்கென்று 3000 பெண்களை வைப்பாட்டிகளாக[அந்தப்புரத்து ராணிகள்] வைத்திருந்தார்.

*தன் அந்தப்புரத்தில் வெறும் 200 அழகிகள் மட்டுமே இருப்பதாக நிஜாம் வருத்தப்படுவதுண்டாம்.

*‘நீர் உமது கடிதத்தில் குறிப்பிட்டிருந்த அந்த இரண்டு ‘உருப்படி’களும் பேரழகிகள் என்று கேள்விப்பட்டேன். நீர் என்னுடைய விசுவாசம் மிக்க சேவகர் என்பதால் உடனடியாக அவர்களை என்னிடம் கொண்டுவந்து சேர்க்கவும்’ -இது தன் அதிகாரத்துக்கு உட்பட்ட ஒரு திவானுக்கு ஒரு மன்னர் எழுதிய கடிதம்.

*ஒரு சமஸ்தான அந்தப்புரத்தில், வெகு அழகான அடிமைப் பெண் ஒருத்தி இருந்தாள். பிரமிக்க வைக்கிற அழகு. மயங்கினார் மன்னர். தடை ஏதுமின்றி இன்பசாகரத்தில் மூழ்கித் திளைத்தார்.

மன்னரின் மனைவிகளுக்கும் வைப்பாட்டிகளுக்கும் அது பிடிக்கவில்லை. அந்த அடிமைப் பெண் மீது அடுத்தடுத்துத் திருட்டுப் பழி சுமத்தினார்கள். ஒரு கட்டத்தில் மன்னரும் நம்பிவிட்டார். குற்றத்தை ஒப்புக்கொள்ளும்படி அவளை மிரட்டினார். அவள் ஒத்துக்கொள்ளவே இல்லை.

வெகுண்ட மன்னர், குடித்துவிட்டுப் பலவகையிலும் பாலுறவு வக்கிரங்களைக் கையாண்டு  அவளைப் புணர்ந்தார். இப்படிப் புணர்வது தொடர்ந்த நிலையில் ஒரு நாள் அந்த அழகிய அடிமைப் பெண் மடிந்துபோனாள்.

அந்தப்புரங்களில் நடக்கும் அட்டூழியங்களுக்குச் சாட்சியங்கள் கிடைப்பதில்லை என்பதால் ஆங்கில அரசு இவர் மீது நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை.

*சமஸ்தான மன்னர்கள், கவர்ச்சிக் கன்னிகளுடன் நடத்திய ‘ஜலக்கிரீடை’ சரித்திரப்புகழ் பெற்றது.

*அன்று, பெரும்பாலான மன்னர்கள், வாழை இலையில்தான் சாப்பிடுவார்கள்.  அந்த இலையின் கீழ் தங்கம் அல்லது வெள்ளியால் ஆன தட்டு இருக்கும்.

*சில மன்னர்கள் கடவுள் விக்கிரகங்களுக்கு போடப்படுவதை விடவும் அதிக அளவிலான ஆபரணங்கள் போட்டுக்கொள்வார்கள். ஒருவர், 1.5 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள் அணிவதையும் ஆடைகள் உடுத்துவதையும் வழக்கமாகக் கொண்டிருந்தாராம். அதற்கான சிறு பட்டியல்.....

1] 334 வைரக் கற்கள் பதித்த கோட்டு.

2] 172 மரகதக் கற்களும் 1742 வைரக் கற்களும் பதிக்கப்பட்ட பாட்ஜுகள் [தோளில் அணிவது].

3] 8619 முத்துக்களும் 54 மரகதக் கற்களும் 27 மாணிக்கங்களும் பதிக்கப்பட்ட கச்சை[ பெல்ட்].

4] 450 வைரக் கற்கள் பதிப்பிக்கப்பட்ட கடிகாரம்.

5] 596 முத்துக்களும், 612 வைரக் கற்களும், 26 மாணிக்கங்களும், 48 மரகதக் கற்களும் பதிப்பிக்கப்பட்ட ஆடைகள்.

*அயலாருக்கு விருந்தளிக்க நேரின் அவர்களுடன் உடனமர்ந்து உண்ண மாட்டார்கள் மன்னர்கள்.

*உறவினர் அல்லாதவருடன்[அயலார்] உரையாட நேர்ந்தால், பின்னர் ‘தீட்டு’ நீங்குவதற்காகக் குளித்துவிடுவது அவர்களின் வழக்கமாக இருந்தது. -தினமணி கதிர்[30.06.1996] கட்டுரை
                                             
                                           *                           *                       *

*ராஜபுத்திர சமஸ்தானம் அல்வார் பகுதியை ஆண்ட, ஜெய்சிங் தன் அரசவையில் இருக்கும் அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளும் தன்னைப் போலவே உல்லாசம் விரும்பிகளாக இருக்க வேண்டும் என்று எண்ணுவார். அதற்காக, அடிக்கடி விருந்து, கேளிக்கைகளை ஏற்பாடு செய்வார். தன் பட்டத்து மகாராணியைத் தவிர, மற்ற அந்தப்புரத்து ராணிகளை, மற்றவர்களுக்கு விருந்தாக்கவும் முன் வருவார்.

எனவே, விருந்து என்றவுடன், அமைச்சர்கள் உட்பட, தளபதிகள் மற்றும் உயர் அதிகாரிகள் தவறாமல் ஆஜராகி விடுவர்.  -தினமலர்
https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=49955&cat=2&Print=1
========================================================================

திங்கள், 25 மே, 2020

“கடவுள் ஒரு ‘பேப்பர் வெயிட்’ மாதிரி”... கவிப்பேரரசு வைரமுத்து!

#இந்தியக் கலாச்சாரத்தில் கோயில் என்பது ‘கடவுளின் பங்களா’ மட்டுமல்ல; பொருளாதார வாழ்வின் மையம்.

நிர்மாணிக்கும்போது அது[கோயில்] தொழிற்சாலை; நிர்மாணித்த பிறகு அது ஒரு வங்கி.

பாடசாலையும் அதுவே; ஆபத்தான காலங்களில் ஆயுதச் சாலையும் அதுவே; நீதிமன்றமும் அதுவே; வருவாய் திரட்டும் நிறுவனவும் அதுவே; கடவுள் பீடமும் அதுவே; சமுதாயத்தின் கலைக்கூடமும் அதுவே.

இந்த நிறுவனங்களின் மீது எந்தவொரு விமர்சனமும் விழக்கூடாது என்றுதான் கடவுள் என்னும் கருத்தாக்கத்தை அதன் மீது தூக்கி நிறுத்தினார்கள்.  இது, காகிதங்கள் பறக்காமலிருக்க, ‘பேப்பர் வெயிட்’ வைப்பது மாதிரி.

கோயிலில் இயங்கிவந்த நிறுவனங்கள் காலப்போக்கில் ஒவ்வொன்றாய்க் கழன்றுபோன பின்னும் பணமும் பக்தியும் மட்டும் பாதுகாத்துக்கொண்டிருக்கின்றன கடவுள் என்னும் கருத்தாக்கத்தை.

கோயில் கடவுளோடு சம்பந்தப்பட்டது என்பதைவிடப் பொருளாதாரத்தோடுதான் அதிகம் சம்பந்தப்பட்டது. பொருள் வசதியற்ற பல கோயில்கள் புதர்மண்டிக் கிடப்பதே இதற்குச் சாட்சி
=============================================================
‘இந்தியக் கலாச்சாரத்தில் கோயிலுக்கு ஏன் இத்தனை முக்கியத்துவம்?’ என்னும் வாசகர் கேள்விக்கு வைரமுத்து அளித்த பதில் இது[கவிப்பேரரசு வைரமுத்து பதில்கள், 26.11.2007 குமுதம் வார இதழ்].

கவிப்பேரரசுவின் இந்தக் கருத்தாக்கம் வெளியாகி ஏறத்தாழ  13 ஆண்டுகள் ஆகிவிட்டன.

ஆண்டாள் குறித்த அவரின் கருத்தைப் பிரச்சினை ஆக்கிச் சுகம் கண்ட பக்தகோடிகள், கடவுளைப் ‘பேப்பர் வெயிட்’ என்று சொல்லலாமா என்று கேட்டுப் புதியதொரு போராட்டத்தைத் தொடங்கவும்கூடும். அவர்களுக்கு நாம் சொல்ல விரும்புவது.....

‘பேப்பர் வெயிட் மாதிரி’ என்றுதான் கவிப்பேரரசு சொல்லியிருக்கிறார்; ‘கடவுளே ஒரு பேப்பர் வெயிட்தான்’ என்று சொல்லவில்லை. 

இங்கே பேப்பர் வெயிட் என்பது வெறும் உவமை மட்டுமே. கடவுள் உவமேயம். உவமை ஒருபோதும் உவமேயம் ஆகிவிடாது.....

“போதும் நிறுத்தியா” என்று வாசிப்போர் பலரும் முணுமுணுக்கக்கூடும் என்பதை மானசீகமாக உணர்வதால் பதிவுக்கு முற்றுப்புள்ளி வைக்கிறேன்.

நன்றி.

சனி, 23 மே, 2020

ஜக்கி வாசுதேவின் மனைவி விஜி, ‘மகா சமாதி’ ஆன கதை!

ஜக்கி வாசுதேவ் குறித்துக் கணிசமான பதிவுகள் எழுதியிருக்கிறேன். அவற்றில் இதுவும் ஒன்று என்பதைத் தவிர அவரை வம்புக்கு இழுக்கும் நோக்கம் கிஞ்சித்தும் இல்லை.

என்னுடைய தளத்தின் முதன்மை நோக்கங்களுள் ‘மூடநம்பிக்கைகளைச் சாடுவது’ம் ஒன்று என்பதை நினைவுகூர்க.

கீழ்க்காணும் விசித்திர நிகழ்வுகளின் தொகுப்பு, சாட்சாத் ஜக்கி வாசுதேவ் அவர்களின் தளத்திலிருந்து நகல் செய்தது[ https://isha.sadhguru.org/in/ta/sadhguru/man/viji ]. தேவையற்றவை என்று நான் நினக்கும் வரிகளை ஆங்காங்கே நீக்கியிருக்கிறேன். 

சத்குரு அவர்களுக்கு என் நன்றி.
#எல்லோராலும் விஜி என்று வாஞ்சையாக அழைக்கப்பட்டவர் சத்குருவின் மனைவி விஜயகுமாரி. சாமுண்டி மலையில் ஞானோதயம் அடைந்த சத்குரு, அதற்கு இரண்டு வருடம் கழித்து, மைசூரில் முதன்முதலாக விஜி அவர்களைச் சந்தித்தார். மைசூரில் ஒரு மதிய உணவு அழைப்பிற்கு விருந்தினராகச் சென்றிருந்த இடத்தில், இவர்களின் முதல் சந்திப்பு நடந்தது. அதன்பின் இவர்கள் கடிதம் மூலம் ஒருவரை ஒருவர் தொடர்பு கொண்டார்கள். மனம்விட்டு நிகழ்ந்த இந்த பரிமாறல்களுக்குப் பின், ஒரு மங்களகரமான மஹாசிவராத்திரி நாளன்று, 1984ல் இவர்களின் திருமணம் நடந்தது. சத்குருவின் யோகா வகுப்புகள் எப்போதும் போல் முழுவீச்சில் நடந்துகொண்டிருந்தது. தென்னிந்தியாவில் பல இடங்களில் அவர் இடைவிடாது வகுப்புகள் எடுத்துக் கொண்டிருந்தார். விஜியோ ஒரு வங்கியில் பணியாற்றிக் கொண்டிருந்தார். ஆனாலும் அவ்வப்போது சத்குருவுடன் பயணம் செய்து, சத்குருவின் வகுப்புகளில் அவர் தன்னார்வத் தொண்டும் செய்தார்.

1990ல் சத்குருவுக்கும் விஜிக்கும் ராதே என்றொரு மகள் பிறந்தாள்.  

.....நாட்கள் செல்லச் செல்ல, சத்குருவின் கவனம் முழுவதும் தியானலிங்கத்தை பூர்த்தி செய்வதிலேயே இருந்தது. இந்தச் செயலில் விஜியும் முழுமையாக ஈடுபட்டிருந்தார்.

இனி, சத்குருவின் வார்த்தைகளில்..... "1996 ம் வருடம் ஜூலை மாதம் அது. தியானலிங்கப் பிரதிஷ்டையில் நாங்கள் ஈடுபட்டிருந்தோம். அப்போதுதான் தியானலிங்கப் பணிகள் முடிவடைந்ததும், தன் உடலைத் துறக்கப்போவதாக விஜி முடிவெடுத்தாள். 

ஒரு பௌர்ணமியைக் குறிப்பிட்டு, அன்றைய தினத்தில் தன் உடலைத் துறக்கப்போவதாக அவள் அறிவித்தாள். அதற்குத் தேவையான வகையில் தன்னைத் தயார் செய்துகொள்ளவும் ஆரம்பித்தாள். இம்முடிவை மாற்றிக்கொள்ளுமாறு நான் அவளை வலியுறுத்தினேன். “இப்போது இதற்கான அவசியம் என்ன இருக்கிறது..? இன்னும் சிறிது நாள் பொறுத்திரு” என்று கூறினேன். ஆனால் அவளோ, ‘இதுதான் எனக்குச் சரியான நேரம். என் வாழ்வில் இப்போது நான் ஒரு நிறைவை உணர்கிறேன் – வெளிச் சூழலிலும் சரி, என் உள்நிலையிலும் சரி நான் மிக நிறைவாய் உணர்கிறேன். நாளையே ஏதோ நடந்து இந்தச் சமநிலை பாதிக்கப்பட்டால், அதைத் தாங்கும் வகையில் நான் இல்லை. நான் நிறைவாய் உணரும்போதே விடைபெற்றுச் செல்ல நினைக்கிறேன். அதனால் இதுதான் எனக்கு ஏற்ற நேரம். இந்நேரத்தைத் தவறவிட என்னால் இயலாது” என்றாள்.

தன் உடலை நீங்கிச் சென்றாள். அப்போது அவள் முழுமையான ஆரோக்கியத்தோடு இருந்தாள். முப்பத்தி-மூன்றே வயது. உடலில் சிறு சிதைவுகூட ஏற்படுத்தாமல், அத்தனை இலகுவாக அதைப் பிரிந்துசெல்வது ஒன்றும் சுலபமான காரியமில்லை. 

மிக எளிதாக அணிந்திருக்கும் உடையைக் களைந்திடலாம்... ஆனால் நாம் கொண்டிருக்கும் இவ்வுடலை, ஆடையைக் களைவது போல் எளிதாக உதறிவிட்டுச் செல்வது..? அது ஒன்றும் அத்தனை சாதாரண விஷயமல்ல!
தன் தேவைகள் எல்லாம் பூர்த்தி ஆகிவிட்டது, இனி இவ்வுலகில் தான் பார்ப்பதற்கோ, உணர்வதற்கோ ஒன்றுமில்லை என்ற நிலைக்கு ஒருவர் எப்போது வருகிறாரோ, அப்போது அவர் முழு விருப்பத்தோடு இவ்வுடலை உதறிவிட்டுச் செல்கிறார். ஒருவேளை ஏதோ போராட்டமோ, அல்லது உடலிற்கு காயமோ, தீங்கோ விளைவித்தால், அது தற்கொலை. ஆனால் போராட்டங்கள் எதுவுமின்றி, ஏதோ அறையிலிருந்து வெளியே செல்வது போல, மிக சாதாரணமாக உடலைவிட்டு ஒருவர் வெளியேறினால், அது "மஹா சமாதி"[இது, ஜக்கி தன்னிச்சையாய்த் தரும் விளக்கம்]

இதுபோல் ஒருவர் முழுவிழிப்புணர்வுடன், உடலுக்கு எவ்விதப் பாதிப்பும் இல்லாமல், தானாக உடலை உதறிச் சென்றார் என்றால், அதன்பிறகு 'ஒரு உயிராக' அவர் இங்கு இருக்கமாட்டார். சாதாரணமாக ஒருவர் இறந்தால், “அவர் போய்விட்டார். இனி அவர் இல்லை” என்று சொல்வார்கள். ஆனால் அது நிஜமில்லை. நீங்கள் அறிந்திருந்த 'நபராக' அவர் இனி இருக்கமாட்டாரே தவிர்த்து, ஒரு உயிராக அவர் இன்னும் இருப்பார். ஆனால் மஹாசமாதி அடைந்தவர்கள் 'ஒரு உயிராக'க் கூட இங்கு இருக்கமாட்டார்கள். அவர்கள் அப்படியே கரைந்து போய்விடுவார்கள்[?!?!?!]. அவ்வளவுதான்... அவர்களைப் பொறுத்தவரை இந்த நாடகம் முடிவடைந்தது!

எல்லா ஆன்மீக சாதகர்களுக்கும் மஹா சமாதிதான் இறுதிக் குறிக்கோள். அந்தத் தெய்வீகத்தில் கரைந்து போகும்போதுதான், அவர்களின் ஆன்மீக சாதனை முடிவுறும்......

கீழ்வருவது விஜி மஹா சமாதியடைந்தஇருதினங்களுக்கு பிறகு 1997 தைபூசத்தன்று சத்குரு பேசியது.

.....ராதேவை[மகள்] ஊட்டியில் உள்ள பள்ளியில் விட்டுவிட்டு வரும் வழியில் எப்போதும் போல "ஷம்போ" மந்திரத்தை உச்சரித்துக்கொண்டே இருந்தாள். அப்போது கண்ணீர் மளமளவென வழிந்தது. என் கைகளைப் பிடித்து வாகனத்தை நிருறுத்தும்படி கேட்டுக்கொண்டாள். எனக்கு வேறு எந்த ஷம்போவையும் தெரியாது. சில நேரங்களில் நான் உங்களை அந்த வடிவில் கண்டுள்ளேன். நீங்கள் மட்டும்தான் என் மோக்‌ஷத்திற்கு உதவ வேண்டுமென்று கூறி அழுதாள்.  மறுபடியும் மதியம் 3:45 மணிக்கு குளித்துவிட்டு தனது பயிற்சிகளைத் தொடங்குவாள். அவள் சமாதியடைந்த அன்று, அந்த மூன்று வேளைகளிலும் நான் அவளுக்குப் பயிற்சிகளை தொடக்கி வைத்துவிட்டு வகுப்பெடுக்கச் சென்றேன். மாலை 6:15 மணிக்கு "ஷம்போ" என்ற உச்சாடனையில் கலந்துவிட்டாள்; அவனுடையவள் ஆகிவிட்டாள்.....

ஜெய ஷம்போ(?!) மகாதேவா#
========================================================================
ஜக்கியே சொல்லுவதாக அமைந்த இந்தச் செய்தித் தொகுப்பைப் படித்து முடித்து நீண்ட நேரம் பிரமிப்பில் கட்டுண்டு கிடந்தேன். சொற்களை வெகு சாதுரியமாகப் பயன்படுத்துவதில் இவர் மகா மகா கில்லாடி என்பது புரிந்தது.

விஜயகுமாரி பற்றிய இவரின் விவரிப்புகளிலிருந்து [மகா சமாதி அடைவதற்கு முன்பு] அவர் ஒரு சராசரிப் பெண் என்பதாகவே நமக்கு அறிமுகம் ஆகிறார். அந்தச் சராசரிப் பெண், “நான் நிறைவாய் இருக்கும்போதே ‘விடைபெற்றுச் செல்ல நினக்கிறேன்’ என்கிறார்.

நிறைவாக வாழும்போது செல்ல நினைப்பது ஏன்? எங்கு செல்ல விரும்புகிறார்? செல்லும் இடத்தில் எவ்வளவு காலத்துக்குத் தங்கியிருக்கப் போகிறார்? அங்கே அவரின் செயல்பாடு என்ன? என்பன பற்றியெல்லாம் எதுவும் சொன்னதாகத் தெரியவில்லை. ஜக்கியும் வாய் திறக்கவில்லை.

நாமெல்லாம் செத்துப்போனால், குழி தோண்டி, அதில் கிடத்தி மண்ணைத் தள்ளி மூடிவிடுவார்கள். இதற்குச் சமாதி கட்டுதல் என்று பெயர்.

ஞானிகள் என்றும் அவதாரங்கள் என்று சொல்லப்படுபவர்கள் செத்துப்போனால் அவர்களையும் குழி தோண்டிப் புதைத்து மூடுவதுதான் வழக்கத்தில் உள்ளது.

வெள்ளி, 22 மே, 2020

அச்சச்சோ...பாவம் அம்மாக்கள்!

வயசுப் பொண்ணுகளைப் பொருத்தவரை, அப்போதிருந்து இப்போதுவரை  அப்பாக்களுக்கு அவர்கள் ‘செல்லம்’தான். அவர்களின் நடவடிக்கைகளைக் கண்காணித்துத் தப்பான வழியில் சென்றுவிடாமல் தடுக்கும் மெய்க்காப்பாளர்கள் அம்மாக்கள். இதைப் புரிந்துகொள்ளாத அப்பாக்களிடம் அவர்கள்[அம்மாக்கள்] அவ்வப்போது  ‘வாங்கிக் கட்டிக்கொள்வது’ம் உண்டு!

கீழ்க்காணும் கதை நம் அனுதாபத்திற்குரிய அம்மாக்களுக்குச் சமர்ப்பணம்!

இது, ‘குங்குமம்’[17.08.2015] வார இதழில் வெளியானது. ‘நானே நான்’ எழுதியது.

2015ஆம் ஆண்டில் மட்டும் குங்குமத்தில் 05 கதைகள் எழுதினேன். 2016இல் ஒன்று.

எச்சரிக்கை! கைவசம் ‘தரமான சரக்கு’ இல்லாதபோதெல்லாம் இலவசமாய் இவை உங்களுக்குப் வழங்கப்படும்!
=======================================================================

வியாழன், 21 மே, 2020

“சீச்சீ...ஏனிந்த அசிங்க போகம்?!”

என் வாலிப வயதில் ஒரு நாள், மொட்டைமாடியில் மல்லாந்து கிடந்து, கண் சிமிட்டும் விண்மீன்களை எண்ணிச் சலித்து, பழக்கதோசம் காரணமாகப் படைப்பையும் படைத்தவனையும் பற்றி நெடுநேரம் சிந்தித்ததன் விளைவு இந்த உரைநடைக் கவிதை!


நான் வாழப் பிறந்தவன்.

எனக்கு வழங்கப்பட்ட அதிகபட்ச நாட்கள் 36500.
ஆனால்.....
ஒரு முழு ‘ஒருநாள்’கூட
மூச்சு விடாமல் வாழ எனக்கு அனுமதியில்லை.


மண்ணில் ஓடி ஆடியும்
விண்ணில் சிறகடித்துப் பறந்தும்
ஆழ்கடலில் செதில் அசைத்து நீந்தியும் மகிழ்வது
என் பிறவி ஆசை
இருப்பினும்
இரண்டிரண்டு கைகால்களுடன் மட்டுமே 
படைக்கப்பட்டிருக்கிறேன்.

‘பண்டங்கள் கிடைக்கும்போது உண்பது;
கிடக்காதபோது 
உள்ளுறுப்பில் ‘இருப்பு’ வைத்ததை
அசைபோட்டு ஜீரணிப்பது’ என்பது
என் விருப்பம்.
படைப்பதற்கு முன்னால்
என் விருப்பங்களை விசாரிக்கத் தவறியது
படைப்பாளன் செய்த குற்றம்.

என் உடம்பைப் பற்றி எனக்குத் தெரியும்.
எலும்பும் சதையும் நரம்பும் ரணமும் கலந்து செய்த
தோல் போர்த்த  பிண்டம் இது.
என்னவள் சுமந்துகொண்டிருப்பதும்
இப்படியான  ஒரு பிண்டம்தான்
[கலவையில் வித்தியாசம் இல்லை;
கலக்கப்பட்ட மூலங்களின் சதவீதங்களில் மட்டுமே
சில மாற்றங்கள்].
அந்தப் பிண்டத்தைப் பார்க்கும்போதெல்லாம்
என்னுள் உணர்ச்சிப் பிரவாகம்; கடும் காமக் கிளர்ச்சி.

சதையோடு சதை உரசியும் புணர்ச்சி செய்தும்
உணர்ச்சி தணிக்கிறேன்.
அது தணிந்தபின்.....
“சீச்சீ...ஏனிந்த அசிங்க போகம்?” என்று மனம் விசனிக்கிறது.
ஆனாலும்,
அப்படி வாழத்தான் நான் பணிக்கப்பட்டிருக்கிறேன்.

‘இனவிருத்திதான் படைப்பின் அடிப்படைக் கருதுகோள்’
என்பர் இயற்கை ஆய்வாளர்.
அது என்ன கருதுகோளோ, கருமாந்தரமோ?
இந்த வேண்டாத  இனவிருத்திக்காக
நான் ஏன் காலமெல்லாம் ‘விந்துப்பை’ சுமக்க வேண்டும்?


இப்படி, இன்னும் எப்படியெல்லாமோ சிந்தித்து
அல்லல் படுபவன் நான்;
நாளும்  ஆறுதல் பெறும் வகையறியாமல்
அரற்றுபவன்.

என்னைப் படைத்து மண்ணில்  அலையவிட்டு,
மறைந்திருந்து வேடிக்கை பார்க்கும்
அந்த 'அயோக்கியன்’ யார்?


யாரந்த அயோக்கியன்?!
========================================================================

புதன், 20 மே, 2020

‘அது’, வேறெதுவைவிடவும் மேலானது!!

“பரமு” -அப்பா அழைத்தார்.

அவர் படுத்திருந்த அறையை நான் அடைந்தபோது மிகவும் சிரமப்பட்டு எழுந்து உட்கார முயன்றுகொண்டிருந்தார். அவரின் தோள்கள் பற்றித் தூக்கி அமர வைத்தேன். ரொம்பவே வயதாகிவிட்டது. பெரும்பாலான நேரம் படுக்கையில்தான் கழிந்தது. பொழுதுபோக்குக்குத் தொலைக்காட்சி மட்டுமே.

“சொல்லுங்கப்பா, எதுவும் வேணுமா?”

“எதுவும் வேண்டாம். நீ எனக்கு ஒரு காரியம் செய்யணும்.”

“சொல்லுங்க.”

“என் பெட்டியில் கொஞ்சம் ரூபாய் இருக்கு. அதில் ஒரு ஆயிரம் ரூபாய் எடுத்து வா.”

எடுத்துவந்து நீட்டினேன். 

“உன்கிட்டயே இருக்கட்டும். இப்போ ஊரடங்கு நீடிக்கிறதால எதுத்த வீட்டுச் செந்தில் வீட்டுலதான் இருப்பான். அவன்கிட்டே இதைக் குடுத்து நம்ம ஊர் அம்மன் கோயில் உண்டியலில் போட்டுடச் சொல்லு.”
“அவன் எதுக்கு? நானே போறேன்.”

“வேண்டாம்ப்பா. உன் அக்கா புருசனுக்குக் கொரோனா வந்துது இல்லியா? அரசாங்க ஆஸ்பத்திரியில் சிகிச்சை குடுத்தாங்க. நானும் மனசு கேட்காம, நோய் குணமாயிட்டா ஆயிரம் ரூபா உண்டியலில் போடுறதா அம்மனை நேர்ந்துகிட்டேன். அவர் குணமடைஞ்சிட்டார். நேர்ந்துகிட்டதுக்குத்தான் இந்த ஆயிரம் ரூபா.”

“போட்டுடுறேன்பா.” - பணத்துடன் நகர முற்பட்டேன்.

“கொஞ்சம் இருப்பா.” -அப்பாவின் குரல் என்னைத் தேக்கியது. சொன்னார்: “சாமி, சடங்கு, நேர்த்திக்கடன்னு இது மாதிரி விசயங்களில் நம்பிக்கை இல்லாதவன் நீ. செந்தில்கிட்டே குடுத்துப் போடச் சொல்லுப்பா.” 

“இதை நான் எனக்காகச் செய்யல. உங்க மகன்கிற முறையில் செய்யுறேன். இது ஒன்னும் தப்பில்ல. ஒரு மகன் தந்தைக்குச் செய்யுற உதவி. இது உதவி மட்டும்தான்பா” என்று சொல்லிக் கோயிலை நோக்கி நகர்ந்தேன்.

பணத்தை உண்டியலில் சேர்த்துவிட்டுத் திரும்பியபோது, “ஊருக்குத்தான் உபதேசமா?” என்று கேட்டு, எள்ளல் கலந்த புன்னகையுடன் என் எதிரில் நின்றுகொண்டிருந்தான் என் ஒத்த வயதினனும், உடன் பயின்றவனும், அதி தீவிரக் கடவுள் பக்தனுமான அருணகிரி.

நான் உண்டியலில் பணம் செலுத்த வந்ததற்கான காரணத்தைச் சொன்னேன். என் தந்தையின் உடல்நிலை பற்றி அவனுக்குத் தெரியுமாதலால், “சரிதான்” என்பதாகத் தலையசைத்துவிட்டு, “என்ன இருந்தாலும், நீ செய்தது உன் கொள்கைக்கு எதிரானதுதான். இதெல்லாம் மூடநம்பிக்கைதான்னு உன் அப்பாவுக்குப் புரிய வைக்க நீ முயற்சி பண்ணியிருக்கணும்” என்றான்.

“நான் கல்லூரியில் சேர்ந்து படிச்சபோதிருந்தே அவர்கிட்டே இதைப் பத்திப் பல தடவை விவாதிச்சிருக்கேன். ஒரு தடவைகூட அவர் ஜெயிச்சதில்ல. ஒரு கட்டத்தில், ‘உன் பேச்சில் நியாயம் இருக்குங்கிறதை என்னால் புரிஞ்சிக்க முடியுது. ஆனாலும், பரம்பரையாக் கடைபிடிக்கிற மூடப்பழக்கங்களிலிருந்து என்னால முழுசா விடுபட முடியாதுப்பா. எஞ்சியிருக்கிற கொஞ்ச ஆயுசையும் இப்படியே கழிச்சுடுறேன். தயவு பண்ணி இனியும் இது விசயத்தில் நீ தலையிடாதே’ன்னு சொல்லிட்டார். நானும் சரின்னு சொல்லிட்டேன். அதுக்கப்புறம், அவரும் என் நம்பிக்கைகளைக் கொச்சைப்படுத்தும் வகையில் நடந்துகிட்டதில்லை. இப்போதுகூட, எதிர் வீட்டுச் செந்தில்கிட்டதான் இந்தப் பணத்தைக் கொடுத்துப் போடச் சொன்னார். பெத்த அப்பனுக்குச் செய்யுற உதவி மட்டுமே இதுன்னு சொல்லிட்டு வந்தேன். பகுத்தறிவே போற்றத்தக்கது, பக்தி புறக்கணிப்புக்குரியது என்பது என் கொள்கையாக இருந்தாலும்,  சில நேரங்களில் பகுத்தறிவை விடவும் மனிதாபிமானமே மதிக்கத்தக்கதுன்னு தோணுது” என்றேன் நான்.

“மனிதாபிமானமே சிறந்தது, சரி. பக்தி வேண்டாம்னு நீ சொல்லுறது உறுத்துது. இன்னொரு நாள் பேசுவோம்” என்று கை குலுக்கி விடை பெற்றான் அருணகிரி.
========================================================================
என்னில் ஒரு பத்து வயதை குறைத்து, இறந்துவிட்ட என் அப்பாவைப் பிழைக்க வைத்துக் கற்பனையாகப் படைக்கப்பட்டது இந்தக் கதை.