அண்மையில் நடந்துமுடிந்த போரில்[போரல்ல, ராணுவ அதிரடி நடவடிக்கை என்கிறார் மோடி] இந்தியாவிடம் அடிமேல் அடி வாங்கிய பாகிஸ்தான் பெட்டிப் பாம்பாக அடங்கிக் கிடக்கிறது.
அந்த நாடு உலக வரைபடத்திலிருந்து காணாமல்போய்விட்டதோ என்று சந்தேகப்படும் அளவுக்குப் பேச்சு மூச்சு இல்லாமல் முடங்கிக் கிடக்கிறது.
உயிர் பிரிந்த சவம் போல் ஆகிவிட்ட பாகிஸ்தானை அவ்வப்போது கடுமையாக எச்சரிக்கை செய்யத் தவறுவதில்லை நம் பிரதமர் மோடி அவர்கள்.
அண்மையில்[சனிக்கிழமை> நேற்று] அவர் நம் பரம்பரை எதிரியான பாகிஸ்தானியனுக்கு எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.
அறிவாற்றலின் உறைவிடமும், எதிரியைச் சொல்லி அடிப்பதில் வல்லவருமான நம் பிரதமரிடம் மிக்கப் பணிவுடன் கோரிக்கை ஒன்றைச் சமர்ப்பிக்கிறோம்.
கோரிக்கை.....
“தலைவரே, வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம்[அண்மையில் ஆற்றிய நாடாளுமன்ற உரை உட்பட] தாங்கள் பாக்கிஸ்தானியனுக்கு விடுக்கும் எச்சரிக்கை வரவேற்கத்தக்கதுதான் என்றாலும், அதைக் கேட்டுக் கேட்டுக் கேட்டுத் திகட்டிவிட்டது. அன்புகொண்டு இனியேனும் அவன்களைத் தவிர்த்து, சீனாக்காரனையோ[அவனும் நம் பரம்பரை எதிரிதான்], அமெரிக்க அதிபர் ‘டொனால்டு டிரம்ப்’பையோ[இவர் நம் அவ்வப்போதைய எதிரி> நம் தன்மானத்திற்குப் பங்கம் நேரும் வகையில் பேசுபவர்] எச்சரித்து உரையாற்றுங்கள், அல்லது அறிக்கைவிடுங்கள். இதைச் செய்தால், நம் மக்கள் மகிழ்வார்கள்: மனப்பூர்வமாகத் தங்களைப் பாராட்டி இன்புறுவார்கள்.”
மோடிஜி வாழ்க! இந்தியா வாழ்க! பாகிஸ்தான் ஒழிக!
* * * * *

