அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.
//கொலுவில் வைக்கப்படும் பொம்மைகள் பெரும்பாலும் களிமண்ணால் செய்யப்பட்டு, அடர்ந்த நிறங்களால் வர்ணம் பூசப்பட்டவையாக இருக்கும்//
கொலு வைப்பதன் நோக்கம் பொம்மை வடிவில்அம்பாளை வழிபடுவது[மனித உருவில் நடமாடும் அனைத்துப் பெண்களும் அம்பாள்களே. அவர்களையே வழிபடலாமே?]என்கிறார்கள். இதன் உண்மை நோக்கம், கொலுவைப்பவர்கள் தங்களின் மண்டையில் களிமன்தான் உள்ளது என்பதை அடையாளப்படுத்துவதே.
இதைச் செய்வது[தனிப்பட்ட முறையில்] அவரவர் விருப்பம் சார்ந்தது.
பல ஏக்கர் நிலப்பரப்பில், பல கோடிகள் செலவு செய்து உருவாக்கப்பட்ட மாளிகையில், ராஜபோகியாக வாழ்ந்துகொண்டிருக்கும் ஆளுநன் ஆர்.என்.ரவி[அரசுப் பணியாளர்]கொலு விழா கொண்டாடுகிறார் என்பது செய்தி[காணொலி].
தமிழ்நாட்டில் நல்லாட்சி நடைபெறுவதைச் சீர்குலைப்பதற்கென்றே அனுப்பப்பட்ட இந்த நபர், அவ்வப்போது தமிழர்களின் சிந்திக்கும் அறிவைச் சிதைத்திடும் அடாவடித்தனங்களையும் செய்துகொண்டிருக்கிறார்.
அவற்றில் இதுவும் ஒன்று.
மூடநம்பிக்கைகளை வளர்த்து அரியணை ஏறும் சங்கிகளின் ஆட்சி இந்த மண்ணில் நீடிக்கும்வரை, இம்மாதிரியான ஆளுநன்களுக்குக் கொண்டாட்டம்தான்; தமிழர்களுக்கோ திண்டாட்டம்!