திங்கள், 8 டிசம்பர், 2025

இப் பகிர்வு ‘நீதிப்பேரரசர்’ ஜி.ஆர்.சாமிநாதன் பார்வைக்குப் பணிந்தனுப்பப்படுகிறது!

மிகப் பெரும்பான்மை மக்களை[மெத்தப் படித்துச் சட்டத்திட்டங்களை அறிந்தவர்கள் உட்பட] எவ்வாறெல்லாமோ ஆட்டிப்படைத்துப் பெரும் தீங்கு விளைவிக்கும் மூடநம்பிக்கைகளை, சாமானியர்கள் சாடி எழுதினால் கண்டுகொள்வாரில்லை.

ஏதேனும் ஒரு வகையில் பிரபலமாகிப் பலராலும் அறியப்பட்டவர்கள் அவற்றைக் கண்டித்தால், அது மிக எளிதாக மக்களைச் சென்றடையும்.

நாளிதழில் வெளியான, மிகு மதிப்பிற்குரிய ஒரு முன்னாள் நீதிபதியின் இது குறித்த உரை[நகல் பதிவு] இங்கே பகிரப்படுகிறது, கணிசமான அளவிலேனும் இது முட்டாள்களைத் திருத்தும் என்னும் நம்பிக்கையுடன்.