எனது படம்
அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.

வியாழன், 29 ஜூன், 2023

பாதயாத்திரை போகவிருக்கும் அண்ணாமலைக்கு ஒரு பச்சைத் தமிழனின் பரிந்துரை!!!


அண்ணாமலை அவர்களே,

2024இல் நடபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலை மனதில்கொண்டு தமிழ்நாடெங்கும் ‘நடைப்பயணம்’[பாதயாத்திரை] செல்ல நீங்கள் முடிவெடுத்திருப்பதாகச் சற்று முன்னர் ‘மாலைமலர்’ இதழில் செய்தி படித்தேன்.

முதல் கட்டப் பயணம் ராமேஸ்வரத்தில் தொடங்கிக் கன்னியாகுமரியில்  முடிவடையவிருப்பதையும் அறிந்தேன்.

“என் மண். என் மக்கள்” என்னும் முழக்கத்துடன் பயணம் அமைவது குறித்து அளவிறந்த மகிழ்ச்சி எய்தினேன்.

நான் உங்களுக்குச் சில பரிந்துரைகளை வழங்கவிருப்பதற்குக் காரணமே, இந்த “என் மண். என் மக்கள்” என்னும் முழக்கம்தான்.

இங்கே, ‘என் மண்’ என்பது இந்திய மண்ணைக் குறிக்குமே தவிர, தமிழ் மண்ணை அல்ல. காரணம், “நான் தமிழ் நாட்டவன்” என்னும் குறுகிய மனப்பான்மை கொண்டவராக நீங்கள் எப்போதும் இருந்ததில்லை. 

அதைப் போலவே, உங்கள் நோக்கில் ‘என் மக்கள்’ என்பது இந்திய மக்கள் அனைவரையும் குறிக்குமே தவிர, தமிழ் மக்களை[மட்டும்]க் குறிக்காது.

‘கடைசி மூச்சு உள்ளவரை பெருமைமிகு கன்னடன்’ எனக் கூறியவர் நீங்கள். தமிழகத்தில் பா.ஜ.க-வில் இணைந்து “நான் என்றும் தமிழன்” என்று முழங்கினீர்கள். இதைத் தமிழர்கள் ஏற்கவில்லை. இந்த இரு பேச்சுகளையும் குறிப்பிட்டு நேரத்திற்கும், இடத்திற்கும் தகுந்தபடி பேசுவதாக உங்களை விமர்சித்தார்கள்.

நீங்கள் ஓர் இந்தியர்; இந்தியாதான் உங்களின் மண் என்பது உறுதிப்பட்டுவிட்ட நிலையில் நான் உங்களுக்கு வழங்கும் பரிந்துரையாவது.....

நீங்கள் மேற்கொள்ளவிருக்கும் நடைப்பயணத்தின் மூலம், நடபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டு மக்களின் வாக்குகளை அறுவடை செய்வது உங்களின் ‘உள்நோக்கம்’ என்பதால், நடைப்பயணத்தின்போது மறந்தும் “தமிழ் மண் என் மண்” என்றோ, “தமிழ் மக்கள் என் மக்கள்” என்றோ முழங்கிவிடாதீர்கள்.

அப்படி முழங்கினால், ஓட்டுக்காக நீங்கள் இப்படி முழக்கமிடுவதாகச் சொல்லி தமிழ் மக்கள் உங்களை எள்ளி நகையாடுவார்கள்.

எனவே, “இந்தியா என் மண்” என்றும், “இந்திய மக்கள் என் மக்கள்” என்றும் முழக்கமிடுங்கள்.

தமிழ்நாட்டு மக்கள் அதிபுத்திசாலிகள் என்பதால், ‘தமிழ் மண் இந்திய மண்ணுக்குள் அடங்கும் என்பதையும், தமிழ் மக்களும் இந்திய மக்களே என்பதையும் மனதில் கொண்டுதான் நீங்கள் இவ்வாறு பேசியிருக்கிறீர்கள் என்பதை மிக எளிதாகப் புரிந்துகொள்வார்கள்.

உங்களின் இந்திய ‘மண்’ பற்றுதலுக்காகவும், இந்திய மக்களின் மீதான உங்களின் பற்றுதலுக்காகவும் தவறாமல் உங்கள் கட்சியான ‘பாஜக’வுக்கு வாக்களிப்பார்கள் என்பது உறுதி.

மீண்டும் நினைவுபடுத்துகிறேன்.....

ஓட்டுக்காக, “தமிழ் மண் என் மண்” என்றோ, “தமிழ் மக்கள் என் மக்கள்” என்றோ முழக்கமிட்டுப் பிரிவினைக்கு வழிவகுத்துவிடாதீர்கள்! உங்கள் ‘நடைப்பயணம்’ நல்லதொரு வெற்றிப் பயணமாக அமைந்திட என் வாழ்த்துகள்!

மருத்துவப் பணிகளைச் சீரழிக்க முயலும் இஸ்லாம் மத வெறியர்கள்!!!

லகில் உள்ள ‘பெரிய’ மதங்களில் ‘இஸ்லாம்’ மதமும் ஒன்று என்பது யாவரும் அறிந்ததே. அந்த மதம் விதித்துள்ள கட்டுப்பாடுகள் அம்மதம் தழுவியோரை மட்டுமே கட்டுப்படுத்துவதற்கு உரியன.

அல்லாவை வழிபடும் அந்த மதத்தவர்கள் 'புர்கா’ மட்டுமல்லாமல்  ‘ஹிஜாப்’[அவர்களின் ஆடை குறித்த விவரம் இங்கு முழுமையாகத் தரப்படவில்லை] அணிவதும் வழக்கப்படுத்தப்பட்டுள்ளது.

அதைத் தவறு என்று சொல்ல எவருக்கும் உரிமையில்லை.

அதை விரும்பாத பெண்கள் ஹிஜாப் உடுத்தும்படி அச்சுறுத்தப்படுகிறார்கள் என்பது ஊடகங்கள் வாயிலாக அவ்வப்போது அறியப்படும் செய்தி.

அது உண்மையா பொய்யா என்று ஆராய்வதும், அது விசயத்தில் பிறர்[மதத்தவர் உட்பட]  தலையிடுவதும் தேவையற்றவை. 

ஆனால்.....

பொதுமக்கள் அனைவருக்குமான பொதுநிறுவனங்களில், மதச் சார்புள்ளவர்கள் தங்களின் தனிப்பட்ட மதம் சார்ந்த பழக்கவழக்கங்களைத் திணிக்கும் முயற்சி கண்டிக்கத்தக்கதாகும்.

கண்டிக்கத்தக்கதொரு செயலை, திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரியில் படிக்கும் 6 மாணவிகள் மூலமாகச் செய்துமுடிக்க முயன்றிருக்கிறார்கள் இஸ்லாமிய மத வெறியர்கள்.

அவர்களின் தூண்டுதலால், அறுவைச் சிகிச்சை நடைபெறும் அறைகளில்[ஆப்ரேசன் தியேட்டர்] தலையையும் கைகளையும் மறைக்கும் விதத்தில் உடை அணிய அனுமதி கேட்டு, கல்லூரி முதல்வரிடம் மனு கொடுத்திருக்கிறார்கள் மாணவிகள்.

உயிருடன் போராடுபவர்கள் மனிதர்கள். அவர்களைக் காப்பாற்றப் போராடும் மருத்தவர்களும் மனிதர்களே. இங்கே தேவைப்படுவது மனிதாபிமானம்தான். மத அடையாளங்கள் அல்ல.

மேற்கண்ட நிகழ்வு மாணவிகளின் விருப்பத்தால் அல்ல என்பதையும், பின்னணியில் இஸ்லாம் மத வெறியர்கள் உள்ளனர் என்பதையும் மிக எளிதாக நம்மால் அனுமானிக்க முடிகிறது.

உலக அளவில் பெரும் எண்ணிக்கையினராக இருக்கும் தைரியத்திலோ என்னவோ, உயிர் காக்கும் மருத்துவமனைகளில் தங்களின் மதச் சடங்குகளைத் திணிக்க முயலும் இஸ்லாம் வெறியர்களின் முயற்சி கடுமையாகக் கண்டிக்கத்தக்கது.

ஆப்ரேசன் தியேட்டர்களில் ஆடை அணிவதில் உலக அளவிலான பொது வரன்முறை உள்ளது. எனவே, உங்களின் கோரிக்கை ஏற்கத்தக்கதல்ல” என்று மாணவிகளுக்கு அறிவுறுத்திய கல்லூரி முதல்வரின் செயல்பாடு பெரிதும் மெச்சத்தக்கதாகும். 


[இந்தப் பெண்கள் அறுவைச் சிகிச்சையின்போதும் மதம் வளர்க்கிறார்கள். இது நிகழ்ந்த ஒன்றா? எந்த நாட்டில்?... அறிய இயலவில்லை]